‘கபாலி’ விஸ்வந்த் – வேல்முருகன் பங்கேற்ற ‘அறமுடைத்த கொம்பு’ பட பாடல் வெளியீடு

‘கபாலி’ விஸ்வந்த் – வேல்முருகன் பங்கேற்ற ‘அறமுடைத்த கொம்பு’ பட பாடல் வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருநெல்வேலி ஸ்ரீ செந்தில் வேல் திரையரங்கில் ‘நெல்லை கீதம்’ ஜாக்சன்ராஜ் அவர்கள் இயக்கிய ‘அறமுடைத்த கொம்பு’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

படத்தின் தயாரிப்பாளர் தங்கதுரை அனைவரையும் வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் அறமுடைத்த கொம்பு படத்தின் நான்கு பாடல்கள் ஒரு தொகுப்பாக வெளியிடப்பட்டது.

சிறப்பு விருந்தினர்கள் ஆவுடையப்பன், கபாலி விஸ்வந்த் அவர்கள் இசை ஆல்பத்தை வெளியிட பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

விழாவில் ‘அறமுடைத்த கொம்பு’ படத்தின் இயக்குனர் ஜாக்சன் ராஜ் அவர்கள் தொழில்நுட்ப கலைஞர்களை அறிமுகப்படுத்தி அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கி நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் அல்-ருபியான், எடிட்டர் மணிக்குமரன், கதாசிரியர் வினோத்சிங், கதாநாயகன் ஆனந்த், கதாநாயகி ஜெசி மற்றும் கார்த்திக், கலைவாணன், ராஜா மற்றும் படக்குழுவினர்கள் அனைவரும் பங்கு பெற்றனர்.

Aramudaitha Kombu audio launch

யூடியூபர் இர்பான் கார் விபத்தில் ஒருவர் பலி; கொலை வழக்குப்பதிவு செய்த போலீஸ்..?

யூடியூபர் இர்பான் கார் விபத்தில் ஒருவர் பலி; கொலை வழக்குப்பதிவு செய்த போலீஸ்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல யூடியூபர் இர்பான் உணவு வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானவர்.

இவர் தற்போது வெவ்வேறு நாடுகளுக்கு சென்று அங்குள்ள உணவு, பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளையும் விவரித்து வீடியோ போட்டு வருகிறார்.

இவரது யூடியூப் சேனலுக்கு 3.64 மில்லியன் சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர்.

சமீபத்தில்தான், இவருக்கு திருமணமானது. இந்த திருமண போட்டோக்களை எல்லாம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஷேர் செய்து வருகிறார்.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே இர்பானின் கார் வந்துள்ளது.

அப்போது, அந்த கார் எதிரே வந்த பத்மாவதி(55) மீது மோதியதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவர் பொத்தேரில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாகனத்தில் youtuber இர்ஃபான் இருந்ததாக கூறப்படுகிறது.

முதற்கட்ட தகவலின்படி, இர்பானின் காரை அசாரூதின் என்பவர் ஓட்டி வந்ததாக தெரிய வந்துள்ளது.

மேலும், இதுகுறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Woman dies after youtuber Irfan’s car hits her near Chennai

4 மாதங்களுக்கு முன்பு காணாமல் நடிகர்; மரப்பெட்டிக்குள் இருந்து பிணமாக மீட்பு

4 மாதங்களுக்கு முன்பு காணாமல் நடிகர்; மரப்பெட்டிக்குள் இருந்து பிணமாக மீட்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரேசில் தலைநகர் ரியோடி ஜெனிரோவில் வசித்துவந்த நடிகர் ஜெபர்சன் மச்சாடோ.

இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார்.

கடந்த ஜனவரி மாதம் 29-ந்தேதி முதல் ஜெபர்சன் மச்சாடோவை காணவில்லை என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் ஜெபர்சன் மச்சாடோ செல்போனில் இருந்து குறுஞ்செய்திகள் வந்ததாகவும் அதில் எழுத்துப்பிழைகள் அதிகம் இருப்பதால் எனது மகன் அனுப்பியது இல்லை என்றும் அவரது தாய் மரியா தாஸ் போலீசில் தெரிவித்தார்.

இதையடுத்து 4 மாதங்களாக தீவிர தேடுதலில் ஈடுபட்ட போலீசார் நடிகர் ஜெபர்சனின் உடலை அந்த நடிகருக்குச் சொந்தமான ரியோ தோட்டத்தில் இருந்து கண்டெடுத்துள்ளனர்.

நடிகர் ஜெபர்சன் மச்சாடோவுக்கு சொந்தமான தோட்டத்தில் ஒரு மரத்தடியின் கீழ் 6.5 அடி ஆழத்தில் ஒரு மரப்பெட்டிக்குள் உடலை வைத்து சங்கிலியால் பிணைத்து இருந்ததாக கூறப்படுகிறது.

அதே தோட்டத்தில் வாடகைக்கு குடியிருந்தவர் இந்த கொலையை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து அவரை தேடி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் பிரேசிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Missing Brazilian Actor Jefferson Machado Found Dead In Wooden Trunk Buried

இதெல்லாம் ஒரு படமா? ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை கழுவி ஊற்றிய கமல் !!

இதெல்லாம் ஒரு படமா? ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை கழுவி ஊற்றிய கமல் !!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.

கேரளாவிலேயே பல திரையரங்குகள் பட வெளியீட்டுக்கு முன்வரவில்லை.

தமிழகத்திலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.இதன் ஒரு பகுதியாக ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு மேற்கு வங்க அரசு விதித்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.

அபுதாபியில் இந்திய திரையுலக நட்சத்திரங்கள் பலர் பங்கேற்கும் IFFA Awards 2023 எனும் திரைப்பட திருவிழா நடைப்பெற்று வருகிறது.

இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு இந்திய சினிமாவின் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

பிறகு அவர், செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவரிடம் ‘தி கேரளா ஸ்டோரி’ படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

இந்த நிலையில், ‘தி கேரளா ஸ்டோரி’ படம் குறித்து பேசிய கமல், “அந்த படம் உண்மை கதையை வைத்து எடுக்கப்பட்டது அல்ல என்று கூறினார். மேலும், டைட்டில் கார்டில் “உண்மை கதையை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம்” என்று பாேடும் அளவிற்கு படத்தில் உண்மை இல்லை” என்று காட்டமாக கூறியுள்ளார்.

அப்படி போடுவதனால் மக்களை இதுதான் உண்மை கதை என ஏமாற்றிவிட முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

kamal haasan ‘the kerala story’ this story is not true says

கார் விபத்தில் சிக்கிய நடிகர் சர்வானந்த்; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

கார் விபத்தில் சிக்கிய நடிகர் சர்வானந்த்; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2011ம் ஆண்டு வெளியான ‘எங்கேயும் எப்போதும்’ படம் மூலம் தமிழ் திரையுலக ரசிகர்களை கவர்ந்தவர் தெலுங்கு நடிகரான ஷர்வானந்த்.

சாப்ட்வேர் என்ஜினீயர் ரக்ஷிதா ரெட்டி என்பவருடன் கடந்த ஜனவரி மாதம் 26-ந்தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்த நிச்சயதார்த்தம் சில காரணங்களால் நின்று போனதாக தெலுங்கு இணைய தளங்களில் கடந்த சில நாட்களாக பரபரப்பு தகவல் பரவி வந்தது.

இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமீபத்தில் திருமண தேதியை சர்வானந்த் அறிவித்து இருந்தார்.

ஜெய்ப்பூரில் உள்ள லீலா பேலசில் அடுத்த மாதம் (ஜூன்) 3-ந்தேதி சர்வானந்த், ரக்ஷிதா ரெட்டி திருமணம் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், நேற்று இரவு 2 மணி அளவில் ஹைதராபாத்தில் இருக்கும் ஃபிலிம் நகர் ஜங்க்ஷனில் தனது ரேஞ்ச் ரோவர் காரில் சென்றிருக்கிறார் ஷர்வானந்த்.

காரை அவரே ஓட்டிச் சென்றிருக்கிறார். அப்பொழுது தவறான பாதையில் வந்த பைக்குடன் மோதுவதை தவிர்க்க முயற்சி செய்தாராம் ஷர்வானந்த். அந்த நேரத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து டிவைடரில் மோதியது.

ஷர்வானந்த் சென்ற கார் விபத்துக்குள்ளாகியிருக்கிறது.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தக்க சமயத்தில் ஷர்வானந்தை மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

மேலும், நடிகர் ஷர்வானந்துக்கு விபத்தின் போது காயம் எதுவும் இல்லை. ஷர்வானந்த் நலமாக இருக்கிறார். அவரை பற்றி வதந்தி பரப்ப வேண்டாம் என்று ஷர்வானந்தின் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

Actor Sharwanand mets with car accident in Hyderabad

சிரஞ்சீவியை அறிமுகம் செய்த இயக்குநர் வாசு காலமானார்

சிரஞ்சீவியை அறிமுகம் செய்த இயக்குநர் வாசு காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் கே.வாசு.

கே.வாசு தெலுங்கு முன்னணி கதாநாயகன் சிரஞ்சீவியை முதன் முதலில் ‘பிராணம் கரீது’ என்ற படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார்.

சிரஞ்சீவி முதலில் நடித்தது ‘புனிதக் ரால்லு’ என்ற படமாக இருந்தாலும் அதற்கு முன்பாகவே கே.வாசு இயக்கிய ‘பிராணம் கரீது’ படம் திரைக்கு வந்து விட்டது.

கே.வாசு இயக்கிய ‘ஸ்ரீ சீரடி சாய்பாபா’ படம் இந்தியா முழுவதிலும் உள்ள சாய்பாபா பக்தர்களின் மனதை கவர்ந்தது.

இவரது தந்தை பிரத்தியேகாத்மா, சகோதரர் ஹேமாம்பதராவ் ஆகியோரும் இயக்குனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோத்தல ராயுடு, இண்டிலோ ஸ்ரீமதி வீதிலோ குமாரி உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில், இயக்குனர் கே.வாசு உடல் நலக்குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். இவருக்கு வயது 72.

இயக்குனர் கே.வாசு மறைவுக்கு திரையுலகினர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Filmmaker K Vasu, who introduced Chiranjeevi passes away

More Articles
Follows