தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சினிமாவில் நடிக்கும் பலருக்கும் ரஜினிகாந்துடன் நடிப்பது ஒரு மிகப்பெரிய கனவாக இருக்கும்.
இப்படியான பலரின் கனவை ‘கபாலி’ படத்தின் மூலம் நிறைவேற்றினார் இயக்குனர் ரஞ்சித்.
தன்னுடைய முதல் இரண்டு படங்களில் பணிபுரிந்த பலருக்கும் கபாலியில் வாய்ப்பு கொடுத்தார்.
இதில் கபாலி படத்தில் ஒரு காட்சியில் சென்னைக்கு ரஜினி வரும்போது, அவருக்கு விஸ்வநாத் என்பவர் உதவி செய்வார்.
தற்போது இவர் முதன்முறையாக பாலிவுட் படத்தில் நடிக்கவிருக்கிறாராம்.
இப்படத்தை ‘காக்கா முட்டை’ மணிகண்டன் மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர்களிடம் உதவி இயக்குனராக இருந்த சாஜோஸ் என்பவர் இயக்குகிறார்.
இப்படத்தில் தமிழ் பேசும் ஐடி ஊழியராக நடிக்கிறார் விஸ்வந்த்.
இதன் பெரும்பாலான காட்சிகள் வட இந்தியாவில் படமாக்கப்பட உள்ளது.