பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியவர்கள் சந்திப்பு..; ரமேஷ் ஷனம் சுசீ நிஷா மிஸ்ஸிங்

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியவர்கள் சந்திப்பு..; ரமேஷ் ஷனம் சுசீ நிஷா மிஸ்ஸிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாக தொடங்கி 60 நாட்களை கடந்துவிட்டது.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, ரேகா, வேல்முருகன் ஆகியோர் வெளியில் சந்தித்துக் கொண்டனர்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ரேகா, வேல்முருகன் ஆகியோர் இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

இது தொடர்பாக ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார் ரேகா.

அதில்… ரமேஷூம், நிஷாவும் இப்போதுதான் வெளியே வந்துள்ளனர். அவர்கள் ஓய்வு எடுக்கட்டும்.

சுசித்ரா, சனம் ஆகியோர் பிஸியாக இருக்கிறார்கள். சனம் ஷெட்டியை போனில் பிடிக்க முடியவில்லை. எனவே அவர்கள் வரவில்லை.

பிக்பாஸ் வீட்டுக்குள் எங்களுக்கு போட்டி. வெளியே வந்தால் நாங்கள் எல்லோரும் ஒன்றுதான்.” என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் ரேகா.

Bigg Boss 4 reunion Rekha shares video

Bigg boss 4 reunion

மீண்டும் அரசியலில் விஷால்..; தன் நண்பர்களுடன் இணைந்து தேர்தலில் போட்டி?

மீண்டும் அரசியலில் விஷால்..; தன் நண்பர்களுடன் இணைந்து தேர்தலில் போட்டி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vishalதமிழ் சினிமாவில் சீரியல் நடிகர்கள் தற்போது தான் அரசியலுக்கு வருகின்றனர். ஆனால் இளம் வயதிலேயே அரசியலுக்கு வர ஆசைப்பட்டவர் நடிகர் விஷால்.

கடந்த 2017ம் ஆண்டு நடைப்பெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தார் விஷால்.

ஆனால் அவரது மனு நிராகரிக்கப்பட்டதால் அரசியலில் ஈடுபடவில்லை.

அதுபோல நடிகர் சங்கத்திலும் சரி தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் சரி இவரது ஆதரவு அணிகள் தான் முன்பு பதவியில் இருந்தன.

இந்த நிலையில் 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிட விஷால் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த முறை விஷால் மக்கள் நல இயக்க நண்பர்களுடன் இணைந்து இத்தேர்தலை சந்திக்கவிருக்கிறாராம் விஷால்.

Actor Vishal to contest in TN assembly election

நடிகை சித்ரா மரணம்..: தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத் கைது

நடிகை சித்ரா மரணம்..: தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத் கைது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

chithra husband hemanth kumarகடந்த 9 தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார் பாண்டியன் ஸ்டோர்ஸ் டிவி சீரியல் நடிகை சித்ரா.

அவரது மரணம் தற்கொலைதான் என முதற்கட்ட விசாரணையில் போலீசார் தெரிவித்தனர்.

அவர் தற்கொலைக்கு என்ன காரணம்? யார் காரணம்? என்பது தொடர்பாக அவரை பதிவு திருமணம் செய்த கணவர் ஹேம்நாத்திடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் ஒரு பெண் திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் உயிரிழந்தால் வரதட்சணை தடுப்புச்சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் விசாரணை செய்வது வழக்கம் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

எனவே அதன்படி சித்ராவின் தாயார் விஜயா, தந்தை காமராஜ் மற்றும் அக்கா சரஸ்வதி ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இவர்கள் மூவரும் ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ விசாரணை மேற்கொண்டார்.

விசாரணைக்கு பின்னர் வெளியே வந்த சித்ராவின் தாயார் விஜயா.. தனது மகள் சித்ராவின் தற்கொலைக்கு, அவரின் கணவர் ஹேம்நாத்தான் காரணம் என மீண்டும் குற்றம் சாட்டினார்.

மேலும் தனக்கும், தன் மகள் சித்ராவுக்கும் எந்தவொரு மனக்கசப்பும் இல்லை எனவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் சித்ரா கணவர் ஹேம்நாத்.

Chennai police arrested Chitra’s husabnd Hemanath Kumar

சீமானுக்கு விவசாயி… தினகரனுக்கு குக்கர் கிடைத்தது..; கமலுக்கு டார்ச் லைட் கிடைக்கல

சீமானுக்கு விவசாயி… தினகரனுக்கு குக்கர் கிடைத்தது..; கமலுக்கு டார்ச் லைட் கிடைக்கல

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasan torch lightஅடுத்தாண்டு தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

இதனால் அனைத்து அரசியல் கட்சியனரும் தேர்தல் பிரச்சாரத்துக்கு தயாராகி வருகின்றனர்.

தமிழக அரசியல் களமும் பரபரப்பாக காணப்படுகிறது.

திமுக அதிமுக காங்கிரஸ் பாஜக உள்ளிட்ட பெரிய கட்சிகள் வழக்கம்போல தங்கள் பணிகளில் மும்முரமாக உள்ளனர்.

நாம் தமிழர், மக்கள் நீதி மையம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் கடந்த தேர்தல்களில் ஒதுக்கப்பட்ட சின்னத்தையே அடுத்த தேர்தலிலும் ஒதுக்கவேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி வருகின்றன.

அதன்படி தினகரனின் அமமுகவிற்கு குக்கர் சின்னமும், நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், கமலின் மக்கள் நீதி மையம் கட்சிக்கு அவர்கள் கேட்ட டார்ச் லைட் சின்னம் தமிழகத்தில் ஒதுக்கப்படவில்லை. ஆனால் புதுவையில் ஒதுக்கப்பட்டுள்ளது.

டார்ச் லைட்டையே முன்னிறுத்தி பிரச்சாரத்தில் கமல்ஹாசன் ஈடுபட்டு வருவது இங்கே குறிப்பிடத்தக்கது.

Election Commission denies Torchlight to Kamal Haasan’s MNM

JUST IN ம சே க என்ற பெயரில் ரஜினி புதிய கட்சி.? கட்சி சின்னம் ஆட்டோ.?

JUST IN ம சே க என்ற பெயரில் ரஜினி புதிய கட்சி.? கட்சி சின்னம் ஆட்டோ.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக மக்களின் பெரும் எதிர்பார்ப்புக்களுக்கிடையே விரைவில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவுள்ளார்.

2021 ஜனவரி கட்சி தொடங்கவுள்ளதாகவும் 2020 டிசம்பர் 31ஆம் தேதி கட்சி அறிவிப்பை வெளியிடவுள்ளதாக அண்மையில் அறிவித்தார்.

சாதியற்ற வெளிப்படையான ஊழலற்ற ஆட்சி மக்கள் பேரன்பில் அமையும். அற்புதம் அதிசயம் நடக்கும் என அறிவித்தார்.

மேலும் மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்… இப்போ இல்லேன்னா எப்பவுமே இல்ல அவரது ஸ்டைல் பாணியில் தெரிவித்தார் ரஜினிகாந்த்.

டிசம்பர் 12ஆம் தேதி அவரின் பிறந்தநாள் கேட் கில் கூட NOW OR NEVER என்ற வாசகத்தை வைத்தே அந்த கேக்கை வெட்டினார்.

நேற்று டிசம்பர் 14 முதல் அண்ணாத்த பட சூட்டிங்கில் கலந்துக் கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் அவர் தனது கட்சியை இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

அதில் ரஜினி கட்சிக்கு மக்கள் சேவை கட்சி என்ற பெயரிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் ரஜினிகாந்த் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது உறுதியான தகவல்தானா? என ரஜினி அறிவித்த பிறகே தெரியும். அதுவரை அமைதியாக இருக்கவும் என அவரது நெருங்கிய நண்பர் கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Makkal Sevai Katchi

Is this the name and symbol of Rajinikanth’s political party?

ரஜினியை வைத்து பாஜக அரசியல் செய்கிறதா..? கமல் தந்த நெத்தியடி பதில்

ரஜினியை வைத்து பாஜக அரசியல் செய்கிறதா..? கமல் தந்த நெத்தியடி பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Modi Rajini
அடுத்தாண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தன் அரசியல் பிரசாரத்தை மதுரையில் தொடங்கி வைத்தார் கமல்ஹாசன்.

மதுரையில் பல்வேறு இடங்களுக்கு சென்றார். பொதுக்கூட்டம் நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்திப்பை நிகழ்த்தினார் கமல்.

அவர் பேசும்போது…” இந்த சட்டசபை தேர்தலில் நான் கட்டாயம் போட்டியிடுவேன். எந்த தொகுதி என்பது பின்னர் அறிவிக்கப்படும்.

மேல்மட்டத்தில் இருந்து தொடரும் ஊழலை ஒழிப்போம். எனக்கு வரும் கூட்டத்தை பார்த்து அமைச்சர்கள் உறக்கம் இல்லாமல் உள்ளனர்.

ரஜினியை வைத்து பாஜக அரசியல் செய்கிறதா? என்ற கேள்விக்கு கமல் பதிலளிக்கையில்… ” ரஜினியை வைத்து பாஜக அரசியல் செய்யமாட்டார்கள்.

ரஜினியை வைத்து சினிமா வேண்டுமானால் செய்வார்கள்” என பதிலளித்தார் கமல்ஹாசன்.

Kamal responds to Rajini and BJP politics

More Articles
Follows