பிக்பாஸ் ட்விஸ்ட்.. இந்த வாரம் டபுள் எவிக்சன்..; பற்ற வைத்த கமல்ஹாசன்

பிக்பாஸ் ட்விஸ்ட்.. இந்த வாரம் டபுள் எவிக்சன்..; பற்ற வைத்த கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் வழங்கும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி இன்றுடன் 70 நாட்களை நிறைவு செய்கிறது.

இந்த நாட்களில் ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சம்யுக்தா, சுசித்ரா, சனம் ஷெட்டி உள்ளிட்ட 6 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த வாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் சோம், நிஷா, ரமேஷ், கேப்ரியல்லா, ஷிவானி & ரம்யா பாண்டியன் பெயர்கள் உள்ளது.

இவர்களில் யாராவது ஒருவர் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர்..

ஆனால் இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட உள்ளனர்.

இந்த தகவலை இன்று வெளியான முதல் ப்ரோமோவில் கமல்ஹாசன் உறுதி செய்துள்ளார்.

இந்த வாரம் ஜித்தன் ரமேஷ் மற்றும் அறந்தாங்கி நிஷா இருவரும் வெளியேறலாம்.

2 contestants evicted this week in Bigg Boss Tamil 4 ?

கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகும் பிசாசு பட நடிகை..?

கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகும் பிசாசு பட நடிகை..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனாவினால் பெரிதும் பாதிக்கப்பட்ட திரையுலகிற்காக நிதி திரட்ட, ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி எடுக்கப்படும் என இயக்குநர்கள் மணிரத்னம், ஜெயேந்திரா தெரிவித்தனர்.

காதல், சிரிப்பு, பரிவு, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அதிசயம், சாந்தம் என 9 நவரசங்களையும் வைத்து 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்குகின்றனர்.

இந்த ஆந்தாலஜியை கே.வி.ஆனந்த், கெளதம் மேனன், பிஜாய் நம்பியார், கார்த்திக் சுப்புராஜ், ஹலிதா ஷமீம், பொன்ராம், கார்த்திக் நரேன், ரதிந்தீரன், அரவிந்த்சாமி ஆகிய 9 இயக்குநர்கள் இயக்கவுள்ளனர்.

ஜஸ்ட் டிக்கெட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் உருவாகும் இந்தத் திரைப்படத்தில் ஏபி இண்டர்நேஷனல், ஆங்கிள் க்ரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் நிர்வாகத் தயாரிப்புப் பணிகளை மேற்கொள்கின்றன.

இதில் பணியாற்றவுள்ள கலைஞர்கள் திரைத்துறைக்கு ஆதரவு தர இலவசமாகப் பணியாற்றியுள்ளனர்.

கௌதம் மேனன் இயக்கும் படத்தில் சூர்யா நடிக்க பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த நிலையில் சூர்யாவுக்கு ஜோடியாக மிஷ்கினின் பிசாசு படத்தில் நடித்த பிரயாகா மார்டின் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

இதில் சூர்யா பாடகராக நடிக்கிறாராம்.

இந்த ஆந்தாலஜி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

Prayaga Martin to play the female lead in Suriya’s next film

Prayaga Martin

ரசிகர்களுக்கு நியூ இயரில் டபுள் ட்ரீட் தர தயாராகும் தளபதி

ரசிகர்களுக்கு நியூ இயரில் டபுள் ட்ரீட் தர தயாராகும் தளபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thalapathy 65 Vijayவிஜய் & விஜய்சேதுபதி நடித்துள்ள ’மாஸ்டர்’ திரைப்படம் 2021 பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது.

இதனால் 2021 பிறக்கும் சமயத்தில் மாஸ்டர் பட டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து விஜய்யின் தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

நெல்சன் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

’தளபதி 65’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இந்த நிலையில் இப்பட டைட்டில் வரும் புத்தாண்டு தினத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

2021 புத்தாண்டு தினத்தில் ’தளபதி 65’ டைட்டில் & ’மாஸ்டர்’ பட டிரைலர் வெளியானால் தளபதி ரசிகர்களுக்கு டபுள் சந்தோஷம் தானே..

Thalapathy Vijay’s double treat on New Year to his fans

ஆன்மிகத்தை காட்டி திமுகவை வீழ்த்த நினைக்கின்றனர்..; ரஜினியை வாழ்த்திய சில மணி நேரங்களிலேயே அவரை தாக்கிய ஸ்டாலின்

ஆன்மிகத்தை காட்டி திமுகவை வீழ்த்த நினைக்கின்றனர்..; ரஜினியை வாழ்த்திய சில மணி நேரங்களிலேயே அவரை தாக்கிய ஸ்டாலின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MK Stalin Rajinikanthசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று 12-12-2020 தனது 70வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

அவரை கண்டு வாழ்த்து சொல்ல போயஸ் கார்டனில் ரசிகர்கள் திரண்டனர்.

ஆனால் ரஜினி வீட்டில் இல்லை என்பதால் அவரது குடும்பத்தாரிடம் வாழ்த்துக்களை சொல்லி திரும்பினர்.

பிரதமர் மோடி, தமிழக முதல்வர், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அவரை வாழ்த்திய சில மணி் நேரங்களிலேயே ரஜினி விரைவில் தொடங்கவுள்ள ஆன்மிக அரசியலை மறைமுகமாக தாக்கியுள்ளார் திமுக தலைவர் முக ஸ்டாலின்.

ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளுடன் திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.

அவர் பேசியதாவது…

திமுக-வை வீழ்த்த எந்த சக்தியாலும் முடியாது. ராமநாதபுரத்தில் குடிநீர் திட்டத்தை, நிறைவேற்றியது திமுக ஆட்சி தான்.

“ஆன்மிகத்தை காரணம் காட்டி திமுகவை வீழ்த்தலாம் என சிலர் நினைக்கின்றனர்

மக்களுக்கு சேவை செய்வதுதான் மகத்தான ஆன்மிகம் என சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார்.

ஏழைகளை காக்க கூடியவர்கள்தான் உண்மையில் ஆன்மிகத்தை நேசிப்பவர்கள்

ஏழைகள் முன்னேற்றத்திற்கு உருவாக்கப்பட்ட கட்சிதான் திமுக.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

MK Stalin slams Rajiniaknth’s party Ideology

பிறந்த‌நாளில் வாழ்த்திய பிரதமர் முதல்வர் எதிர்கட்சி தலைவர் & உலகளாவிய ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி

பிறந்த‌நாளில் வாழ்த்திய பிரதமர் முதல்வர் எதிர்கட்சி தலைவர் & உலகளாவிய ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthசூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இன்று 12-12-2020 தனது 70வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

அவரை கண்டு வாழ்த்து சொல்ல போயஸ் கார்டனில் ரசிகர்கள் திரண்டனர்.

ஆனால் ரஜினி வீட்டில் இல்லை என்பதால் அவரது குடும்பத்தாரிடம் வாழ்த்துக்களை சொல்லி திரும்பினர்.

மேலும் ரஜினிக்கு வாழ்த்து சொல்லாதவர்களே இல்லை என்னுமளவுக்கு அனைத்து துறையினரும் ரஜினியை வாழ்த்தி வருகின்றனர்.

பிரதமர் மோடி, தமிழக அரசியல் தலைவர்கள், சச்சின் டெண்டுல்கர், மோகன்லால் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் விரைவில் அரசியம் களம் காணவுள்ளதால் அவரது ரசிகர்கள் இம்முறை படு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் பாரத பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு ரஜினி நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் தன் பிறந்தநாளை உற்சாகத்துடன் கொண்டாடி வரும் உலகமெங்கும் உள்ள ரசிகர்களுக்கும் தன்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழக மக்களுக்கும் மனமார்ந்த நன்றி என ரஜினிகாந்த் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Rajinikanth thanked politicians and all for birthday wishes

ரஜினி தூய்மையானவர்.. அவர் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் வளம் பெறும்..; ரஜினி தத்தெடுத்த தந்தை ‘பாலம்’ கல்யாணசுந்தரம் பேட்டி

ரஜினி தூய்மையானவர்.. அவர் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் வளம் பெறும்..; ரஜினி தத்தெடுத்த தந்தை ‘பாலம்’ கல்யாணசுந்தரம் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthபாலம் என்ற சமூக சேவை அமைப்பை நடத்தி வருபவர் கல்யாணசுந்தரம்.

தான் வைத்திருந்த சொத்துகள் அனைத்தையும் ஏழை மக்களுக்கு எழுதிக் கொடுத்தவர்.

இவரின் சேவைகளை பலரும் பாராட்டி வந்தனர்.

ஆனால் ரஜினி ஒரு படி மேலே சென்று இவரை தந்தையாக தத்தெடுத்தார்.

அதாவது… 1999ம் ஆண்டு காமராஜர் அரங்கில் நடைபெற்ற பாலம் கல்யாண சுந்தரம் பாராட்டு விழாவில் ரஜினி பங்கேற்றார்.

தான் வாழும்போதே தன் சொத்துகளை எழுதித் தரும் மகானுக்கு நான் மகனாக வேண்டும். எனக்கு 2 மகள்கள் உள்ளனர், தந்தை இல்லை.

எனவே, நீங்கள் எனக்குத் தந்தையாக இருக்க வேண்டுமென போயஸ் கார்டன் இல்லத்திற்கு பாலம் கல்யாண சுந்தரத்தை அழைத்துச் சென்றார் ரஜினி.

“போயஸ் கார்டன் இல்லத்தில் ராஜா போல வாழ்ந்தாலும் வசதியான சிறையில் இருப்பதைப் போல உணர்ந்தேன்.

என் சமூக சேவைக்கு அது தடையாக இருந்தது. பொது மக்களுக்கு உதவிசெய்ய நேரம் ஒதுக்க முடியவில்லை” என கூறி ரஜினி வீட்டில் இருந்து வெளியேறினார் கல்யாண சுந்தரம்.

இந்த நிலையில் இன்று ரஜினிகாந்த் 70வது பிறந்த பிறந்தநாளையொட்டி அவரைச் சந்திக்க வந்துள்ளார் கல்யாணசுந்தரம்.

ரஜினி வீட்டில் இல்லாததைத் தெரிந்துகொண்டு அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து விட்டு புறப்பட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம்…

“ரஜினி நல்ல மனிதர், தூய்மையானவர். அவர் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் நன்றாக இருக்கும், வளம் பெறும் என “பாலம்” கல்யாணசுந்தரம் தெரிவித்தார்.

Paalam Kalyana Sundaram praises Rajinikanth

More Articles
Follows