சாமானியனை சாதனையாளராக மாற்றும் ‘இயல்’ குறும்படத்துக்கு சர்வதேச விருது

சாமானியனை சாதனையாளராக மாற்றும் ‘இயல்’ குறும்படத்துக்கு சர்வதேச விருது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் இப்போது பிரபலமாக இருக்கும் பல இயக்குநர்களுக்கு முகவரி கொடுத்தது குறும்படங்கள்தான்.

அந்த வரிசையில் ‘இயல்’ குறும்படத்தின் மூலம் திரைத்துறையின் பார்வையை தன் பக்கம் விழச் செய்துள்ளார் இயக்குநர் அரவிந்த் குமரன்.

இந்த குறும்படத்தில் நாயகனாக அதுல் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ‘நிழல்கள்’ ரவி, பிரதீப் கே.விஜயன், மணிமேகலை நடித்துள்ளார்கள்.

பி.சி.ஸ்ரீராமின் உதவியாளர் ஜயத் தன்வீர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரோஷன் விஷால் இசையமைத்துள்ளார். சண்டை காட்சியை பில்லா ஜெகன் வடிவமைத்துள்ளார்.

தியேட்டரில் வெளியிடுமளவுக்கு பிரம்மாண்டமாக இந்த குறும் படத்தை ஏ.கே.பிலிம் புரொடக்‌ஷன் சார்பாக ஆர்.குமரன், கே.சுமதி தயாரித்துள்ளனர்.

இந்த உலகத்தில் சாதாரண மனிதர்கள் தான் சாதனையாளர்களாக ஆகின்றனர் என்பது இந்த குறும்படத்தின் மையக்கரு.

சமீபத்தில் இந்த குறும்படம் சர்வ தேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது.

டோரோண்டோ இண்டர்நேஷனல் ஃபிலிம் பெஸ்டிவல், பாரீஸ் திரைப்பட விழா மற்றும் வேர்ல்ட் பிலிம் கர்னிவால் விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருது வாங்கியுள்ளது.

விருதுகள் மூலம் கிடைத்த அங்கீகாரம் எங்களை அடுத்த நகர்வுக்கு அழைத்து சென்றுள்ளன என்கிறது படக்குழு.

சமீபத்தில் இதன் டிரைலர் வெளியிடப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் அதற்கான வரவேற்பு அமோகமாக கிடைத்த நிலையில் முழு படத்தையும் விரைவில் ரசிகர்களின் பார்வைக்கு கொண்டு வர முழு வேகத்தில் இறங்கியுள்ளது தயாரிப்பு நிறுவனம்.

தொழில் நுட்ப கலைஞர்கள் & நடிகர், நடிகைகள்:

நாயகன் : அதுல்
முக்கிய நடிகர்கள் : நிழல்கள் ரவி, பிரதீன் கே.விஜயன், மணிமேகலை
இசை : ரோஷன் விஷால்
ஒளிப்பதிவு : ஜயத் தன்வீர்
எடிட்டிங் : பி.கே – மனோஜ் கிரண்
சண்டை : பில்லா ஜெகன்
காஸ்டியூம்ஸ் : சுரேந்திரன்
புரொடக்‌ஷன் டிசைனர் : சி.பிரகாஷ்
சவுண்ட் டிசைன் : தனுஷ் நாயனார்
மிக்ஸிங் : ரிபிஷ் – நிக்ஹைல் – செபஸ்டின்
DI : கார்த்திக் சந்திரசேகர்

Director Arvind Kumaran wins award at Toronto film festival for Iyal short film

முதன் முறையாக இந்திய சினிமாவில் நுழைந்த உலக குத்துச்சண்டை வீரர் மைக் டைசன்.; யாருடன் நடிக்கிறார் தெரியுமா.?

முதன் முறையாக இந்திய சினிமாவில் நுழைந்த உலக குத்துச்சண்டை வீரர் மைக் டைசன்.; யாருடன் நடிக்கிறார் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அவர்களின் பன்மொழி இந்திய திரைப்படமான
LIGER (Saala Crossbreed ) படத்தில் இணைகிறார்.

கமர்ஷியல் படங்களின் ராஜாவாக திகழும் திறமைமிக்க இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கும் விஜய் தேவரகொண்டா அவர்களின் முதல் பன்மொழி இந்திய திரைப்படமான “LIGER” படத்தை, ஒவ்வொரு கட்டமாக மெருகேற்றுவதில், எந்த வாய்ப்பையும் தவறவிடாமல் பிரமாண்டமாக உருவாக்கிவருகிறார்.

மொத்த படக்குழுவிற்கும், ஆக்‌ஷன் ரசிகர்களுக்கும், மற்ற அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் முக்கியமான படமான இந்த படம் இருக்கும்.

அகிலம் அதிரும்படியான ஒரு அட்டகாச தகவலை LIGER படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த படக்குழு மிகப்பெருமையுடன் கூறுவது என்னவென்றால்…

“இந்திய திரைப்படங்களில் முதன்முறையாக, உலக அளவில் வரலாறு படைத்த ஒரு நபர், யாராலும் அசைக்க முடியாத ஜாம்பவான், மைக் டைசன், பெருமைமிக்க பன்மொழி திரைப்படமான LIGER படத்தில் இணைகிறார்.

Mixed Martial Arts நிபுணர் பற்றிய இந்த கதையில், ‘Iron Mike’ எனும் முக்கியமான கதாபாத்திரத்தில், அவர் நடிக்கிறார்.

இந்த தீவிரமான ஆக்‌ஷன் கதை, அவரது வரவால் இன்னும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. மற்றும் இந்திய அளவில் மிகப்பிரமாண்டமான பன்மொழி படமாக இப்படம் மாறியுள்ளது.

விஜய் தேவரகொண்டா டிவிட்டர் வாயிலாக இது குறித்து கூறியது…

“நாங்கள் கொடுத்த வாக்கை, நிறைவேற்ற துவங்கியுள்ளோம். இந்திய திரையுலகில் முதன்முறையாக, LIGER படத்தில் இணையும் முக்கிய பிரபலம்.

இந்த பிரபஞ்சத்தின் சக்திமிக்க மனிதர், குத்து சண்டையின் கடவுள், லெஜண்ட், பீஸ்ட், காலத்தால் அழிக்கவியலா புகழ் கொண்ட நாயகன், MIKE TYSON. அவர்களை இந்திய திரையுலகிற்கு வரவேற்கிறோம்.

#NamasteTYSON.

LIGER படத்தில் மேலும் பல வெளிநாட்டு குத்து சண்டை வீரர்கள் நடிக்கின்றனர். இன்னும் சில நாட்களுக்கு , உங்கள் ஆர்வத்தை கட்டுப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். LIGER தியேட்டர்களில் வெளியாக தயாராகி கொண்டிருக்கிறது.

கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள் அதிரடியான, “இரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன்” சண்டை காட்சிகள், கோவாவில் தற்போது படமாகி கொண்டிருக்கிறது என படக்குழு தெரிவித்துள்ளது.

இந்திய அளவில் பன்மொழி திரைப்படமாகவும், உலகப்புகழ் நாயகன் மைக் டைசன் பங்கேற்கும் இப்படத்தினை Puri connects மற்றும் Dharma Productions நிறுவனங்கள் சார்பில் பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அபூர்வா மேத்தா இணைந்து மிகப்பெரும் பட்ஜெட்டில் மிகப்பிரமாண்டமான படைப்பாக இப்படத்தினை உருவாக்குகின்றனர்.

மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவினை விஷ்ணு சர்மா செய்கிறார். தாய்லாந்தை சேர்ந்த ஸ்டண்ட் கலைஞரான Kecha சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் மிக முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். லைகர் (Liger) படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில் உருவாகிறது.

நடிகர்கள் : விஜய் தேவரகொண்டா, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி, ஆலி மகரந்த் தேஷ் பாண்டே, மற்றும் கெட்டப் ஶ்ரீனு.

இயக்கம் : பூரி ஜெகன்நாத்
தயாரிப்பாளர்கள் : பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அபூர்வா மேத்தா
தயாரிப்பு நிறுவனங்கள் : Puri connects and Dharma Productions
ஒளிப்பதிவாளர்- விஷ்ணு சர்மா
கலை இயக்கம்- ஜானி சையிக் பாட்ஷா
படதொகுப்பாளர்- ஜுனைத் சித்திக்
சண்டை காட்சிகள் இயக்குனர்- Kecha

Boxing legend Mike Tyson joins this top star film

இரட்டை குதிரையில் சவாரி செய்யும் ‘கின்னஸ் சாதனை’ பாடகர் வேல்முருகன்

இரட்டை குதிரையில் சவாரி செய்யும் ‘கின்னஸ் சாதனை’ பாடகர் வேல்முருகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 13 வருடங்களாக பல வெற்றிப் பாடல்களை பாடி நாட்டுப்புறம் மற்றும் திரைப்பட பாடல்களில் தனக்கென தனியிடம் பிடித்துள்ள பாடகர் வேல்முருகன் தற்போது நடிகராக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

இதுவரை ஏறக்குறைய 500 திரைப்படங்களுக்கு மேல் வேல்முருகன் பாடியுள்ளார்.

மதுர குலுங்க குலுங்க, ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா, ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம், வேணாம் மச்சான் வேணாம், சங்கிலி புங்கிலி கதவ தொற, போட்டது பத்தலை, கத்திரி பூவழகி, ஒத்த சொல்லால, சண்டாளி, அட கருப்பு நிறத்தழகி… உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் பாடல்களை அவர் பாடியுள்ளார்.

இது மட்டுமின்றி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் நாட்டுப்புற பாடகர் என்ற பெருமையும் வேல்முருகனுக்கு உண்டு.

அது வரை வேல்முருகனின் குரலை மட்டும் கேட்ட மக்களுக்கு வேல்முருகனின் முகமும் பரிச்சயம் ஆனது.

கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வேல்முருகன் வென்றுள்ளார். இதை தவிர, 5,000 நாட்டுப்புற கலைஞர்களை வைத்து கின்னஸ் உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

நாட்டுப்புற பாடல்களுக்காக வேல்முருகன்
முனைவர் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி உள்ளிட்ட படங்களில் பாடல்களில் மட்டுமே இதுவரை நடித்து வந்த வேல்முருகன் தற்போது குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகராக வலம் வர உள்ளார்.

இவர் ஏற்கனவே கவுண்டமணி நடிப்பில் வெளியான ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.

ப்ரஜின் நடிக்கும் சங்கரலிங்கத்தின் சைக்கிள் வண்டி, மிர்ச்சி சிவா நடிப்பில் சலூன், படைப்பாளன், அன்னக்கிளி ஆர்கெஸ்ட்ரா, யோகி பாபுவுடன் இன்னும் பெயரிடப்படாத படம் ஆகிய பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

அதே நேரத்தில் பாடல்கள் பாடுவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். வேலன், காஞ்சனா உள்ளிட்ட படங்களில் பாடல்களை எழுதியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

நடிகராக வேல்முருகனின் சமீபத்திய புகைப்படங்கள் பலரின் பாராட்டுதல்களை பெற்றுள்ளன.

“இனி பாடல், நடிப்பு ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்துவேன். நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறேன். பாடகராக எனக்கு அங்கீகாரம் அளித்தது போல், நடிகனாகவும் மக்கள் என்னை ஏற்றுக்கொள்வார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்குள்ளது.

எனது குரலை ஏற்றுக்கொண்டதுப் போல் எனது நடிப்பையும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது,” என்று வேல்முருகன் கூறுகிறார்.

Famous Kollywood singer Vel Murugan turns Actor

வடிவேல் சந்தானம் யோகிபாபு சதீஷ் சூரி வரிசையில் ஹீரோவானார் ‘போண்டா’ மணி

வடிவேல் சந்தானம் யோகிபாபு சதீஷ் சூரி வரிசையில் ஹீரோவானார் ‘போண்டா’ மணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வடிவேல், விவேக், சந்தானம், சூரி, சதீஷ், யோகிபாபுவை போல் கதையின் நாயகனாக போண்டா மணி நடித்துள்ள படம் தான் “சின்ன பண்ண பெரிய பண்ண”

மேலும் இதில் ஷர்மிலி, ஆர்.சுந்தர்ராஜன், பயில்வான் ரங்கநாதன், ஆதேஷ் பாலா, முத்துக்காளை, சிசர் மனோகர், பெஞ்சமின், வெங்கல்ராவ், கிங்காங், சுப்புராஜ், விஜய்கணேஷ், ஜான்சன், இன்னும் பலர் நடித்துள்ளனர்.

ரங்கதுரை, கவிதா குப்புசாமி இருவரும் பாடல்களையும்,
பிரேம்ஜி இசையையும், லட்சுமணன் எடிட்டிங்கையும், தீப்பொறி நித்யா சண்டை பயிற்சியையும், பவர் சிவா நடன பயிற்சியையும் கவனித்துள்ளனர்.

கிராம நிர்வாக அதிகாரியாக வரும் போண்டாமணி , அந்த கிராமத்தில் அக்கிரமம் புரியும் சின்ன பண்ண யிடம் மோதுகிறார். விளைவு? யாரும் எதிர்பாராதது.

சின்ன சின்ன விஷயங்களில் கூட கவனமாக இருக்க வேண்டும். அதனால் பெரும் அசம்பாவிதங்களை தடுக்கலாம்” என்பதை காமெடியுடன் கொஞ்சம் ஆக்சனையும் கலந்து தந்துள்ளேன்” என்று கதையை பற்றி கூறியுள்ள பகவதி பாலா இந்தப் படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கி உள்ளார்.

இவர் பத்து படங்களுக்கு மேல் இயக்கி உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூர், மைசூர், ஓசூர், திருச்சி, சென்னை பகுதிகளில் வளர்ந்துள்ள ” சின்ன பண்ண பெரிய பண்ண” படத்தை சி.ப. தனசேகரன்
பகவதி பாலா இருவரும் இணைந்து எஸ். பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளனர்.

Comedy actor Bonda Mani turns hero

பேச முடியாமல் தவித்த ரஹ்மான்.; விட்டுக் கொடுத்து உதவிய ராதிகா

பேச முடியாமல் தவித்த ரஹ்மான்.; விட்டுக் கொடுத்து உதவிய ராதிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரஹ்மான் மலையாளத்தில் ஹீரோவாக நடித்து வரும் படம் ‘சமாறா’.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, ரஹ்மான் தவிர அனைவரும் டப்பிங் பேசி விட்டார்கள்.

கேரளாவில் கொரோனா அதிகம் இருப்பதால் அங்கு சென்று டப்பிங் பேச முடியாத சூழ்நிலை.

மேலும் தீபாவளி சமயம் என்பதால் சென்னையில் அனைத்து டப்பிங் ஸ்டுடியோவும் பிசியாக உள்ளது.

இதை கேள்விப்பட்ட ராதிகா, தனது ராடன் டப்பிங் தியேட்டரில் வந்து டப்பிங் செய்து கொள்ளுமாறு ரஹ்மானுக்கு உதவினார்.

பொதுவாக ராடன் தயாரிக்கும் படம் அல்லது டிவி சீரியல் டப்பிங் மட்டும் தான் அங்கு நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Radhika’s help to Actor Rahman

ஆக்சன் ஹீரோவாக மாறும் ‘நடன புயல்’ பிரபுதேவா

ஆக்சன் ஹீரோவாக மாறும் ‘நடன புயல்’ பிரபுதேவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் ‘நடனப்புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்கிறார்.

இவருடன் நடிகர்கள் ஜான் விஜய், விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியான், மலையாள நடிகர் பினு பப்பு, அருள்தாஸ், நடிகர் ரியாஸ் கானின் வாரிசும், நடிகருமான ஷாரிக் ஹாஸன், ‘பழைய ஜோக்’ தங்கதுரை, மகேஷ், மலையாள நடிகை லியோனா லிஷாய் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

விக்னேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, எஸ். என். பிரசாத் இசையமைக்கிறார். படத்தின் கலை இயக்கத்தை மாய பாண்டி கவனிக்க, ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

இந்த படத்தை ஜாய் ஃபிலிம் பாக்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் என்ற பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் பேசுகையில்….

” பிரபுதேவா நடிப்பில் மாஸான முழு நீள ஆக்சன் படமாக தயாராகிறது. இந்த படத்தின் உச்சக்கட்ட காட்சி, ரசிகர்களின் கண்களுக்கு புதுமையானதாக இருக்கும்” என்றார்.

Prabhu Deva turns action hero for his next

More Articles
Follows