என் நடிப்பை பார்த்து கண் கலங்கிட்டாங்க.; வியப்பில் ‘கபாலி’ விஷ்வந்த்

என் நடிப்பை பார்த்து கண் கலங்கிட்டாங்க.; வியப்பில் ‘கபாலி’ விஷ்வந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ரன் பேபி ரன்’ படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பில் படக்குழுவினர் பேசியதாவது…

நடிகர் விஷ்வந்த் பேசும்போது…

இந்த படம் வெற்றி பெற பத்திரிகையாளர்களாகிய நீங்கள் முக்கிய காரணம். நான் இப்படத்தில் கால் டாக்சி டிரைவராக ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். பலரும் என்னை படத்தின் இடைவெளியிலேயே பாராட்டினீர்கள். சிலர் கண் கலங்கியதாகவும் தெரிவித்தார்கள். அதற்கு முக்கிய காரணம், இந்த வாய்ப்பளித்த ஜிஎன் கிருஷ்ண குமார் சார் தான்.

என்னிடம் கதை வரும் போது என்ன நடக்கிறது என்பது தெரியும். ஆனால், திரையில் தான் படத்தின் ஆரம்ப காட்சிகளை பார்த்தேன். அப்போது, படம் ஆரம்பித்த 10வது நிமிடம் முதல் திரையரங்கு முழுவதும் அமைதியாகவே இருந்தது.

அந்த அளவிற்கு கதையை ஆர்.ஜே. பாலாஜி சுமக்க ஆரம்பித்து விட்டார். அது தான் இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் கூட. மேலும், ஐஸ்வர்யா ராஜேஷ் மேடம் மற்றும் ஆர்.ஜே. பாலாஜி சார் இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர்.

பலரும் என்னிடம் பேசியது, படத்தின் இறுதி காட்சியில் வரும் கருத்து தான். படம் பேசிய விஷயம் பெரிதாக இருந்தது என்றார்கள். இந்த வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி” என்றார்.

Kabali viswanth emotional speech at run baby run event

ஓவர்சீஸ் முதல் ஓடிடி வரை.; ‘ரன் பேபி ரன்’ படத்திற்கு குவியும் வரவேற்பு

ஓவர்சீஸ் முதல் ஓடிடி வரை.; ‘ரன் பேபி ரன்’ படத்திற்கு குவியும் வரவேற்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ரன் பேபி ரன்’ படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பில் படக்குழுவினர் பேசியதாவது…

படத்தொகுப்பாளர் G.மதன் பேசும்போது…

இந்த படம் எனக்கு சிறப்பான படம். இப்படத்தின் கதை கேட்டதும் மிகவும் ஆர்வமாக இருந்தது. கதை கூறியதுபோல் படம் எடுத்துவிட்டால் நிச்சயம் வெற்றிபெறும் என்று நினைத்தேன்.

அதேபோல், படமும் நன்றாக வந்திருந்தது. படத்தொகுப்பிற்கு 2 வாரங்கள் ஆனது. முடிந்ததும் இயக்குநரிடம் காட்டினேன், அவருக்கு பிடித்திருந்தது. அதேபோல் தயாரிப்பாளருக்கும் பிடித்திருந்தது.

பின்பு ஆர்.ஜே.பாலாஜியிடம் படம் நன்றாக வந்திருக்கிறது, மக்கள் என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை என்றேன். ஆனால், மக்கள் படத்தை வெற்றியடைய செய்துவிட்டார்கள்.

இந்த வாய்ப்பு கொடுத்த லக்ஷ்மன் சாருக்கு நன்றி, துரைக்கு நன்றி என்றார்.

தயாரிப்பாளர் எஸ்.லக்ஷ்மன் குமார் பேசும்போது…

நன்றி தெரிவிக்கும் சந்திப்பு மிகவும் முக்கியம் என்று கருதுகிறேன். இந்த படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், நிர்வாக தயாரிப்பாளர் அனைவருக்கும் நன்றி. சொன்ன நேரத்தைவிட விரைந்து படத்தை முடித்தார்கள்.

இப்படத்தை பார்த்துவிட்டு ஓவர்சீஸ் முதல் ஓடிடி, அமேசான் வரை அனைத்து தளங்களில் வாங்கி இருக்கும் அனைவருக்கும் நன்றி. சிறந்த கதை, கலைஞர்களை கொண்டு எடுக்கப்படும் படங்களுக்கு அனைத்து தளங்களிலும் வரவேற்பு இருக்கிறது.

நானும் பாலாஜி சாரும் இன்னொரு படத்தில் பணியாற்றவிருக்கிறோம். அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார்.

இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமார் பேசும்போது…

இதுபோன்ற ஒரு படம் எடுப்பதற்கு லக்ஷ்மன் சார் தான் காரணம். அவருடைய பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் கொடுத்த ஊக்கத்தில் இப்படம் சிறப்பாக வந்திருக்கிறது.

இப்படம் வெற்றிபெற முக்கிய காரணம் நடிகர், நடிகைகள் தான். இப்படத்தில் நடித்த ஒவ்வொரு கலைஞர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இப்படம் வேகமாக முடித்ததற்கு நான் மட்டும் காரணம் அல்ல.

நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் என்னோடு வேகமாக பயணித்து பணியாற்றினார்கள். ஆர்.ஜே.பாலாஜி சார் எனக்கு உறுதுணையாக இருந்தார். அவரிடம் நேர்மறையான உணர்வு இருக்கிறது.

Run baby Run gets massive response from audience

சினிமாவில் அடுத்த நிலைக்கு செல்வதற்கு முன் அதிரடி முடிவெடுத்த ஆர்ஜே பாலாஜி

சினிமாவில் அடுத்த நிலைக்கு செல்வதற்கு முன் அதிரடி முடிவெடுத்த ஆர்ஜே பாலாஜி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா மற்றும் பலர் நடித்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

‘ரன் பேபி ரன்’ படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பில் படக்குழுவினர் பேசியதாவது…

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பேசும்போது…

இந்த படம் எடுப்பதற்கும், திட்டமிட்டபடி வெளியிட்டதற்கும் நன்றி தெரிவிக்க வேண்டியது அவசியம். இப்படம் வெளியாகி ஒரு வாரம் ஆகப்போகிறது. பல முன்னணி திரையரங்குகளில் ஒரு நாளைக்கு 4 காட்சிகள் ஓடுகிறது. இந்த வாரம் வெளியாகும் படங்கள் இருந்தாலும், இந்த படத்திற்கான திரைகள் அதிகமாக இருப்பதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது.

இப்படம் தொடங்கும்போது திரில்லர் படத்திற்கு திரையரங்கில் வரவேற்பு இருக்குமா? ஓடிடி தளங்கள் இருக்கும்போது, திரையரங்கில் மக்கள் வரவேற்பார்களா? என்ற தயக்கம் இருந்தது. ஆனால், நினைத்ததைவிட படம் வெற்றியடைந்திருக்கிறது.

சிறு வயதில் பேட்மின்டன் சேர்ந்தேன். படிப்படியாக முன்னேறி அந்த கோச்சிங் மையத்திலேயே நான் தான் வெற்றியாளனாக இருந்தேன்.

சிறிது காலம் சென்றதும், வெளியில் சென்றால்தான் அடுத்த நிலைக்கு உயர முடியும் என்று அந்த மையத்தில் இருந்து வெளியேறினேன். அப்போது என்னுடைய கோச் மிகவும் வருத்தமடைந்தார்.

ஆனால், சில வருடங்களுக்குப் பிறகு நீ அன்று எடுத்த முடிவு தான் சிறந்தது. அதற்கு மேல் உனக்கு கற்றுக் கொடுக்க எதுவுமில்லை என்றார்.

அதுபோல் சினிமாவில் அடுத்த நிலைக்கு செல்வதற்கு, நான் இதற்கு முன் எடுத்த மூன்று படங்கள் போல் அடுத்தடுத்த படங்கள் இருக்கக் கூடாது என்று தான் இப்படத்தில் நடிக்க முடிவு செய்தேன். இப்படத்தை பார்த்த அனைவரும் பாராட்டி வருகிறார்கள். குறிப்பாக சண்டைக் காட்சிகளைப் பார்த்து யதார்த்தமாக இருக்கிறது என்று பாராட்டினார்கள் என்றார்.

Actor – Director RJ Balaji’s bold decision

பிரபாஸ் – கிருத்தி திருமண நிச்சயம் குறித்த அப்டேட்

பிரபாஸ் – கிருத்தி திருமண நிச்சயம் குறித்த அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் பிரபாஸ்- பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் இடையே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் அனைத்தும் பொய் என்றும், இவை வதந்தி என்றும், இவர்கள் இருவரும் ‘ஆதிபுருஷ்’ எனும் திரைப்படத்தில் பணியாற்றும் சக நடிகர்கள் மட்டுமே என்றும் பிரபாஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

‘பாகுபலி’ படத்தின் மூலம் பான் இந்திய அளவிலான நட்சத்திர நடிகராக உயர்ந்திருப்பவர் நடிகர் பிரபாஸ்.

இவர் தற்போது இயக்குநர் ஓம்ராவத் இயக்கத்தில் தயாராகி வரும் ‘ஆதி புருஷ்’ எனும் திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் பிரபாசும், நடிகை கிருத்தி சனோனும் காதலித்து வருவதாகவும், இருவரும் டேட்டிங்கில் ஈடுபட்டிருப்பதாகவும் இதற்கு முன் செய்திகள் வெளியானது.

இதற்கு நடிகை கிருத்தி சனோன் மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயம் விரைவில் நடைபெறவிருக்கிறது என சில இணையதளங்களில் தகவல்கள் வெளியானது.

இது தொடர்பாக பிரபாஸின் நெருங்கிய நட்பு வட்டாரம் விளக்கமளித்து பேசுகையில்…

” இந்த செய்தி முற்றிலும் பொய். இந்த செய்தியில் உண்மை இல்லை. இது வதந்தி. இவர்கள் இருவரும் ‘ஆதி புரூஷ்’ படத்தில் நடிக்கும் சக நடிகர்கள் மட்டும்தான். பரபரப்பாக பேசப்படும் இந்த கதையில் சிறிதளவும் உண்மை இல்லை.

இது யாரோ ஒருவரின் கற்பனை. இவர்கள் பரப்பும் செய்தியை யாரும் நம்ப வேண்டாம்.” என்றனர்.

பாலிவுட் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ‘ஆதி புரூஷ்’ எனும் திரைப்படத்தில் நடிகர் பிரபாசும், நடிகை கிருத்தி சனோனும் இணைந்து நடித்து வருகிறார்கள்.

இவர்களுடன் சையீப் அலி கான், சன்னி சிங் மற்றும் வத்ஸல் ஷெத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 16ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

The rumors about Prabhas Kriti Sanon getting engaged are all false

மீண்டும் RBR பட டைரக்டருக்கு வாய்ப்பளித்த பிரின்ஸ் பிக்சர்ஸ்

மீண்டும் RBR பட டைரக்டருக்கு வாய்ப்பளித்த பிரின்ஸ் பிக்சர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடாக ஆர்ஜே பாலாஜி – ஐஸ்வர்யா நடிப்பில் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி வெளியான படம் ‘ரன் பேபி ரன்’.

இந்த பாக்ஸ் ஆபிஸில் பாசிட்டிவான விமர்சனங்களையும் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கிய இந்த படம் விறுவிறுப்பான கதை, த்ரில் மற்றும் எதிர்பாரா திருப்பங்களுடன் ஒரு முக்கியமான செய்தியையும் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்துள்ளது.

எனவே படக்குழு நேற்று ‘ரன் பேபி ரன்’ வெற்றி விழா சந்திப்பையும் நிகழ்த்தினர்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் மீண்டும் இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமாருடன் இன்னொரு உற்சாகமான படத்திற்காக ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தப்படம் குறித்த மேலதிக விபரங்கள் வெளியிடப்படாவிட்டாலும், நிச்சயமாக இயக்குனரிடம் இருந்து இன்னொரு உற்சாகமான படைப்பாக அது இருக்கும்.

இயக்குனர்கள் FIR மனு ஆனந்த், ‘வதந்தி’ ஆண்ட்ரூ லூயிஸ் ஆகியோர் இயக்கும் படங்கள் உட்பட மற்றும் சில படங்கள் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் வரிசை கட்டி நிற்கின்றன.

எதிர்காலத்தில் நல்ல படைப்புகளை தருவதில் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தன்னுடைய உறுதியை தெரிவிக்கிறது.

Prince Pictures teams up with Run Baby Run director

சிம்பு – தனுஷ் – சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக பிக் பாஸ் கவின்….

சிம்பு – தனுஷ் – சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக பிக் பாஸ் கவின்….

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில், பிக் பாஸ் புகழ் நடிகர் கவின் நடித்திருக்கும் படம் ‘டாடா’.

இப்படத்தில் கவின் மற்றும் அபர்ணாதாஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க பாக்யராஜ், ஐஷ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் கே, ஃபெளஸி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ். அம்பேத் குமார் தயாரித்துள்ளார்.

‘டாடா’ திரைப்படம் நாளை பிப்ரவரி 10-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில், ‘டாடா’ படத்தை தமிழ்நாட்டில் 400+ திரைகளைப் பெற்றுள்ளது மற்றும் கவின் நடித்து ரிலீசான படங்களில் இதுவே மிகப்பெரிய ரிலீஸ் ஆகும்.

சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களின் படங்களே அதிக திரையரங்குகளில் வெளியிடப்படும். அந்த வரிசையில் கவினின் ‘டாடா’ படமும் இணைந்துள்ளது.

Kavin’s ‘Dada’ to release on over 400 screens in Tamil Nadu

More Articles
Follows