தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 சீசன்களை சிறப்பாக நடத்திய நடிகர் கமல்ஹாசனே நான்காவது சீசனையும் நடத்தவுள்ளார்.
இந்த நிகழ்ச்சி அக்டோபர் முதல் வாரம் முதல் ஒளிப்பரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சீசனில் சஞ்சனாசிங், சனம் செட்டி, ஷாலு ஷம்மு, ஷிவானி நாராயணன், ரக்சன், ரியோ ராஜ், கரன், பாலாஜி முருகதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொள்வார்கள் என சொல்லப்படுகிறது.
எனவே போட்டியாளர்கள் குறித்த செய்திகள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் பிரபல பின்னணிப் பாடகரும் கிராமிய பாடகருமான வேல்முருகன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
’நாடோடிகள்’ படத்தில் இடம்பெற்ற ’ஆடுங்கடா’ ’ஆடுகளம்’ படத்தில் இடம்பெற்ற ’ஒத்த சொல்லால’ உள்பட பல திரைப்பட பாடல்களை பாடியவர் வேல்முருகன்.
ஓரிரு படங்களில் சிறிய வேடங்களில் தோன்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் இணைந்தால் பிக்பாஸ் வீட்டில் இனி பாட்டுக்கு பஞ்சமிருக்காது என நம்பலாம்.
Singer Vel Murugan is part of Bigg Boss 4 Tamil