‘கபாலி’ ரீ-ரிலீஸ்.; க்ளைமாக்ஸை மாற்றியமைக்க ரஜினி போடும் பிளான்.?!

‘கபாலி’ ரீ-ரிலீஸ்.; க்ளைமாக்ஸை மாற்றியமைக்க ரஜினி போடும் பிளான்.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2016 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் இந்திய சினிமாவை அதிர வைத்த திரைப்படம் ரஜினி நடித்த ‘கபாலி’.

கலைப்புலி தாணு தயாரித்த இந்த படத்தை இயக்குனர் ரஞ்சித் இயக்க சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார்.

இந்த படம் வெளியீட்டிற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது.

இந்தப் படத்தின் விளம்பர யுக்திகள் பெரிய அளவில் பேசப்பட்டன.. சாக்லேட் முதல் விமானம் வரை கபாலி பட விளம்பரங்கள் வரையப்பட்டது.

படத்தின் எதிர்பார்ப்பு எகிர எகிற இயக்குனர் ரஞ்சித் பதறிவிட்டார். பெரும் எதிர்பார்ப்பு உருவானதால் தனக்கு பயம் வந்து விட்டதாகவே அவர் தெரிவித்திருந்தார்.

‘கபாலி’ படத்தின் வசூலும் பட்டையைக் கிளப்பியது.

மேலும் பல ஐடி நிறுவனங்கள் கபாலி பட ரிலீஸின் போது தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு விடுமுறை அளித்தனர்.

ஆனாலும் ‘கபாலி’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரஜினிக்கு திருப்திகரமாக இல்லை.. மேலும் ரசிகர்களும் கலவையான விமர்சனங்களை சொல்லி இருந்தனர்.

இந்த நிலையில் ‘கபாலி’ பட க்ளைமாக்‌சில் மாற்றங்களை செய்து மீண்டும் வெளியிட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதன் கிளைமாக்ஸ் காட்சியில் ரஜினியை ஒருவர் சுடப்படுவதாக காட்டப்படும்.. அவர் சுட்டாரா.? ரஜினிகாந்த் இறந்தாரா? என்ற காட்சிகள் இருக்காது.

இந்தப் படம் உருவாகும் போதே இடைவேளைக்குப் பிறகு ரஜினிக்கு படத்தின் திரைக்கதை பிடிக்கவில்லை. நாயகன் மனைவியைத் தேடுகிறார்.. தேடுகிறார்… தேடிக் கொண்டே இருக்கிறார்.! இது எப்படி ஒர்க் அவுட் ஆகும்.. என் ரசிகர்களுக்கு இது செட்டாகாது.. என ரஜினி தெரிவித்து இருந்தார்.

ஆனாலும் கலைப்புலி தாணு வற்புறுத்தவே ஒப்புக்கொண்டார் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.

‘கபாலி’ ரீ-ரிலீஸ் உறுதியாகும் பட்சத்தில் விரைவில் இது தொடர்பான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

ஏற்கனவே பாபா படத்தின் தோல்வியை 20 வருடங்களுக்கு பிறகு ரீ-ரிலீஸ் செய்து வெற்றி படமாக்கியவர் ரஜினி என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

கூடுதல் தகவல்…

நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர், ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம், ஞானவேல் இயக்கத்தில் ஒரு படம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படம் (உறுதியாகவில்லை) என வரிசையாக படங்களை ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார் ரஜினிகாந்த் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Super star Rajini plans for Kabali Rerelease

பனையூரில் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசித்த நடிகர் விஜய்

பனையூரில் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசித்த நடிகர் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது உறுதி ஆகிவிட்டது. இதன் முன்னோட்டமாக தான் தன்னுடைய விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வேட்பாளர்களை உள்ளாட்சித் தேர்தலில் நிறுத்தினார்.

ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்டவர்கள் வெற்றிபெற்றார்கள்.

வெற்றிக்கு பின்னர் வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து போட்டோ எடுத்துக் கொண்டார் விஜய்.

கடந்த ஆண்டு நவம்பர் டிசம்பர் மாதங்களில் விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட நிர்வாகிகளை தன்னுடைய பனையூர் இல்லத்தில் சந்தித்தார் நடிகர் விஜய்.

இதுவரை விஜய் மக்கள் இயக்கத்தில் அவரது ரசிகர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருக்கின்றனர். எனவே பொது மக்களையும் இந்த அமைப்பில் சேர்க்க விஜய் ஆலோசனை கூறியுள்ளார்.

அதன் முதற்கட்டமாக மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், பட்டதாரிகள், ஐடி ஊழியர்கள் என பன்முகம் கொண்டவர்களையும், உறுப்பினர்களாக இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான பணிகளை விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கவனித்து வருகிறார்.

அடுத்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனை குறி வைத்து தற்போது அரசியல் நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருக்கிறார் விஜய் என்ற தகவலை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று ஏப்ரல் 28ஆம் தேதி மாலையில் தன்னுடைய பனையூர் இல்லத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை விஜய் சந்தித்து வருகிறார்.

விரைவில் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து விஜய் ஆலோசித்தாகவும் தகவல்கள் வந்துள்ளன.

ஒவ்வொரு நிர்வாகிகளையும் தன்னுடைய அலுவலகத்திற்கு உள்ளே அழைத்து அவர்களுடன் ஆலோசித்து போட்டோ எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

LIVE 🟣Vijay’s Politics விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் அரசியல் கட்சி தொடங்குவது பற்றி தளபதி ஆலோசனை filmistreet 🔥

https://youtube.com/shorts/DtDYxM7n5Uo?feature=share

Actor Vijay met district administrators in Panayur

கலைஞர் பேனா.. பிரதமர் சீமான்.. சூப்பர் ஸ்டார் மன்சூர்.. விஜய் அஜித்தை கலாய்க்கும் ‘அடியே’ வீடியோ

கலைஞர் பேனா.. பிரதமர் சீமான்.. சூப்பர் ஸ்டார் மன்சூர்.. விஜய் அஜித்தை கலாய்க்கும் ‘அடியே’ வீடியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாதத்திற்கு இரண்டு படம்.. மாதத்திற்கு ஒரு படம்.. இரண்டு மாதங்களுக்கு ஒரு படம்.. 6 மாதங்களுக்கு ஒரு படம்.. என படிப்படியாக தன் நடிப்பில் உருவாகும் படங்களில் ரிலீஸ்சை குறைத்துக் கொண்டார் ஜிவி பிரகாஷ்.

தற்போது இசை அமைப்பதில் முழு கவனம் செலுத்தி வருகிறார். இவரது இசையில் வெளியான சமீபத்திய படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது.

அசுரன், சூரரைப் போற்று.. முதல் நேற்று வெளியான மார்க் ஆண்டனி பட டீசர் வரை ஜீவி பிரகாஷின் இசை பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது ஜிவி பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள ‘அடியே’ என்ற படத்தில் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு

இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ஜெயம் ரவி அவருடைய இணையதள பக்கத்தில் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார்.

‘திட்டம் இரண்டு’ படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘அடியே’.

இதில் ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக, 96 புகழ் கௌரி கிஷன் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் இயக்குநரும், நடிகருமான வெங்கட் பிரபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். புதுமுக நடிகர் மதும்கேஷ் சிறப்பு தோற்றத்தில் அறிமுகமாகிறார். மேலும் மிர்ச்சி விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார்.

பட தொகுப்பு பணிகளை முத்தையன் கவனிக்க, கலை இயக்கத்தை சிவசங்கர் மேற்கொண்டிருக்கிறார்.

இந்த திரைப்படத்தை மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம் குமார் தயாரித்திருக்கிறார்.

தயாரிப்பாளரான பிரபா பிரேம்குமார்- ஏராளமான குழந்தைகளின் கல்விக்காக நிதியுதவி அளித்திருக்கும் இவர், திரைப்படத்துறையின் மீதான ஆர்வத்தால் மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் எனும் பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ‘கிளாப்’ எனும் திரைப்படத்தின் மூலம் இணை தயாரிப்பாளராக அறிமுகமானார். இவர் தற்போது ‘அடியே’ படத்தின் மூலம் நேரடியாக திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

மேலும் இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்தையும் தயாரித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து ஐந்திற்கும் மேற்பட்ட பிரம்மாண்டமான பட்ஜெட் படைப்புகளையும் தயாரிக்கும் திட்டத்திலும் ஈடுபட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில்…

” தமிழில் ஏராளமான அறிவியல் புனைவு கதைகள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் அறிவியல் புனைவு சார்ந்த கதைக்களத்துடன் மல்ட்டி வெர்ஸ் தொழில்நுட்ப பின்னணியில் காதலை சொல்வதில் ‘அடியே’ திரைப்படம் தான் முதல் படைப்பு.

இத்திரைப்படத்தின் ஒரு நிமிடத்திற்கு மேலான மோஷன் போஸ்டர் வெளியிடப்படுகிறது. இதன் இறுதியில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வித்தியாசமாக தோன்றுவது ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை அளிக்கும் ” என்றார்.

‘அடியே’ படத்தின் மோசன் போஸ்டரில்… இலங்கை பிரதமர் சீமான் மெட்ராஸ் வருகை… ‘யோகன் அத்தியாயம் 1’ 150 நாள் போஸ்டர்.. ‘தல’ அஜித் குமார் ஆஸ்திரேலியன் கிராண்ட் பிரிக்ஸ் ஃபார்முலா 1 பந்தயத்தில் 5வது முறையாக வென்றிருப்பது.

தமிழ்நாடு திரைப்பட நடிகர் சங்கம் புது கட்டிட திறப்பு விழா.. விஷால் தலைமையில் ராதாரவி திறந்து வைக்கிறார்..

சூப்பர் ஸ்டார் மன்சூர் அலிகான் நடிக்கும் 3.0… கலைஞர் பேனா.. என மல்ட்டி வெர்ஸ் உலக கலாட்டாவை.. புதிய தொழில்நுட்ப பின்னணியுடன் விவரித்திருப்பதும், இதனூடாக நாயகன் ஜீ வி பிரகாஷ் தோன்றுவது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

Adiyae – Motion Poster

GV Prakash’s Adiyae movie Motion Poster relesaed

மாஸ்டருக்கு 500… லியோவுக்கு 2000..; விஜய் ரசிகர்களை ஆட்டி வைக்கும் லோகேஷ்

மாஸ்டருக்கு 500… லியோவுக்கு 2000..; விஜய் ரசிகர்களை ஆட்டி வைக்கும் லோகேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து ‘லியோ’ படத்தை இயக்கி வருகிறார்.

‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுகிறது.

இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மே முதல் வாரத்தில் சென்னையில் தொடங்க உள்ளது.

த்ரிஷா, சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் சர்ஜா ஆகியோர் சென்னையில் அடுத்த ஷெட்யூலில் விஜய்யுடன் இணைகிறார்கள்.

இந்த நிலையில், இப்படத்தின் அறிமுக பாடலை 2000 கலைஞர்களை வைத்து படமாக்க லோகேஷ் கனகராஜ் முடிவு செய்துள்ளார்.

டப்பிங் பகுதிகளை முடித்த பிறகு பிரமாண்ட பாடலின் படமாக்கப்படும்.

இப்படத்தின் முழு படப்பிடிப்பையும் ஜூன் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், இதற்கு முன்பாக லோகேஷ் கனகராஜ், ‘மாஸ்டர்’ படத்தில் விஜய்யின் அறிமுக பாடலை 500+ நடனக் கலைஞர்களுடன் படமாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Use 2000 dancers leo song shoot planned lokesh

PS2 Release : காசியில் கார்த்தி.. கண்ணாடி உடைப்பு.; வெற்றியில் ஜெயம் ரவி.!

PS2 Release : காசியில் கார்த்தி.. கண்ணாடி உடைப்பு.; வெற்றியில் ஜெயம் ரவி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் உருவான ‘பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம்’ இன்று ஏப்ரல் 28 திரையரங்குகளில் வெளியானது.

கடந்த இரண்டு வாரங்களாக இந்த படத்தை பிரமோஷன் செய்ய இதில் நடித்த விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் ஐஸ்வர்ய லட்சுமி, பார்த்திபன் உள்ளிட்ட படக்குழுவினர் இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களுக்கு சென்று வந்தனர்.

இன்று இந்த படம் வெளியான நிலையில் ரசிகர்களுடன் திரிஷா, விக்ரம் உள்ளிட்ட பலரும் படம் பார்த்தனர்.

இப்படத்தைப் பார்த்த பின் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி கொண்டனர்.

மேலும் நடிகர் கார்த்தி சென்னையில் பிரபலமான காசி தியேட்டரில் ரசிகர்களுடன் சென்று படம் பார்த்தார்.

நடிகர் கார்த்திக்கு அசோக் நகர் மேம்பாலத்தில் இருந்து பூக்கள் டிவி ரசிகர்கள் வரவேற்றது குறிப்பிடத்தக்கது

கார்த்தியை கண்ட ரசிகர்கள் திரண்டு வந்தனர். அப்போது கூட்ட நெரிசலில் ரசிகர்கள் அங்கும் இங்கு ஓட அங்கு வைக்கப்பட்டிருந்த கண்ணாடி உடைந்தது.

இதனால் அங்கே சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

மேலும் சென்னையில் உள்ள பிரபலமான வெற்றி தியேட்டரில் ரசிகர்களுடன் ஜெயம் ரவி படம் பார்த்தார். நடிகர்களை கண்ட ரசிகர்கள் அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு கொடுத்தனர்.

மேலும் தமிழகமெங்கும் உள்ள விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோரது ரசிகர்கள் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம், ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

kasi theatre mirror broke in karthi fans

Kamal 234 UPDATE : த்ரிஷா – நயன்தாரா பத்தல பத்தல.; கமலுக்கு பாலிவுட் நடிகையும் வேணுமாம்.?!

Kamal 234 UPDATE : த்ரிஷா – நயன்தாரா பத்தல பத்தல.; கமலுக்கு பாலிவுட் நடிகையும் வேணுமாம்.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார்.

இதை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்க உள்ளார்.

இப்படத்திற்கு தற்காலிகமாக ‘KH 234’ என பெயரிடப்பட்டுள்ளது.

ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் அந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் நயன்தாராவும், த்ரிஷாவும் ஹீரோயினாக நடிப்பார்கள் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

அவருடன் பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இதற்கு முன்பு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘குரு’ படத்தில் வித்யா பாலன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வித்யா பாலன்

Vidya Balan will act in kamal haasans kh234 movie

More Articles
Follows