அன்று ‘கல்லூரி-யில் தமன்னாவுடன்.?!.. இன்று காலேஜ் ரோடு’-ல் தனி நாயகனாக லிங்கேஷ்

அன்று ‘கல்லூரி-யில் தமன்னாவுடன்.?!.. இன்று காலேஜ் ரோடு’-ல் தனி நாயகனாக லிங்கேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அன்று தமன்னாவோடு ‘கல்லூரி’ படத்தில் நாயகனாக வாய்ப்பு கிடைத்தும் நடிக்காமல் போனவர் லிங்கேஷ்.

இன்று ” காலேஜ் ரோடு ” படத்தின் மூலம் கதாநாயகனாகிறார் நடிகர் லிங்கேஷ்.

நடிகர் லிங்கேஷ். பல படங்களில் வில்லனாக, குணச்சித்திர நடிகராக அறியப்பட்டவர்.

இவர் நடித்த கபாலி, பரியேறும் பெருமாள் , படங்கள் இவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தாலும். நாயகனாக இப்போதுதான் ‘காலேஜ் ரோடு’ படத்தில் அறிமுகமாகிறார்.

காலேஜ் ரோடு திரைப்படம் டிசம்பர் 30 அன்று திரையரங்கில் வெளியாக இருக்கிறது.

காலேஜ் ரோடு

ஏற்கனவே இந்த திரைப்படத்தை இயக்குனர் ரஞ்சித் அவர்கள் பாராட்டியுள்ளார்.

மாணவர்களின் கல்விக் கடனை பற்றி பேசி இருக்கும் இத்திரைப்படம் மாணவர்கள் மத்தியில் நிச்சயமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று படக்குழுவினர் ஆவலுடன் இருக்கின்றனர் .

ஏறக்குறைய கல்லூரி படத்திற்காக 10 வருடங்களுக்கு முன்னால் எடையை குறைத்து இரண்டு வருடங்கள் திரைப்படத்திற்காக கடினமாக உழைத்த லிங்கேஷ் பின்னர் தொகுப்பாளராக தன் வாழ்க்கையை கடந்து, மெட்ராஸ், கபாலி பரியேறும் பெருமாள், போன்ற திரைப்படங்களில் குணசித்திர நடிகராக நடித்து வந்தார்.

கடின உழைப்பும் , அற்பணிப்போடும் போராடி இன்று கல்லூரியில் படத்தில் நாயகனாக நடிக்காமல் விட்டதை காலேஜ்ரோடு திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார்.

டிசம்பர் 30 திரையரங்கில் வெளியாகிறது பி வி ஆர் பிச்சர்ஸ் வெளியிடுகின்றனர்.

மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு திரைப்படம் பெரும் என்று ஆவலோடு எதிர்பார்க்கலாம்..

காலேஜ்

Missed Chance with Tamannah at Kalluri but now Lingesh at College Road

2022 இறுதியில் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ தள்ளிப் போச்சு.. ‘அருவா சண்ட’ நுழைஞ்சிட்டு

2022 இறுதியில் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ தள்ளிப் போச்சு.. ‘அருவா சண்ட’ நுழைஞ்சிட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அடுத்த வாரம் டிசம்பர் 31ம் தேதியுடன் இந்த ஆண்டு 2022 முடிவடைகிறது.

அதன்படி டிசம்பர் 29 – 30 ஆகிய தேதிகளில் ரிலீஸ் ஆக ரெடியாக உள்ள படங்களின் பற்றிய ஒரு பார்வை இங்கே…

டிசம்பர் 29ல்..

1) மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ தமிழிலும் அதே பெயரில் தயாராகியுள்ளது.

ஆர். கண்ணன் இயக்க இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ராகுல் ரவீந்திரன் இருவரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர்.

பாலசுப்பிரமணியன் ஒளிப்பதிவு செய்ய ஜெரி சில்வஸ்டர் வின்செண்ட் இசையமைத்துள்ளார். இப்பட தமிழக வெளியீடு உரிமையை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் பெற்றுள்ளது.

இந்தப் படத்தை டிசம்பர் 29ஆம் தேதி தியேட்டர்களில் வெளியிட உள்ளனர். ஆனால் இன்று படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகிறது என அறிவித்துள்ளனர்.

மேலும் டிசம்பர் 30ல் ரிலீசாகவுள்ள படங்கள் பற்றிய பார்வை இதோ…

2) தமிழரசன்

பாபு யோகேஷ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் தமிழரசன். டிசம்பர் 30ல் இந்த படம் ரிலீசாகிறது.

இதில் சுரேஷ் கோபி, சோனு சூட், ரம்யா நம்பீசன், யோகி பாபு, ராதா ரவி, முனிஷ் காந்த், உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்துக்கு இளையராஜா இசையமைக்க ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

3) ஓ மை கோஸ்ட்

வா மீடியா என்டர்டைன்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஓ மை கோஸ்ட்’.

இதில் நாயகியாக பிரபல பாலிவுட் நடிகை் சன்னி லியோன் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் நகைச்சுவை நடிகர்கள் யோகி பாபு, சதீஷ், ரமேஷ் திலக், ரவி மரியா, அர்ஜுன், தர்ஷா குப்தா உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

ஜாவித் ரியாஸ் இசையமைத்திருக்கிறார். தீபக்மேனன் ஒளிப்பதிவு செய்ய பாடல்களை பா.விஜய் எழுதியுள்ளார்.

4) ‘ராங்கி

த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘ராங்கி’ திரைப்படம் வருகிற டிசம்பர் 30ஆம் தேதி 2023 புத்தாண்டை முன்னிட்டு வெளியாக உள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன் கதையை பிரபல இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் எழுத எம் சரவணன் இயக்கியுள்ளார்.

சி எஸ் சத்யா இசையமைக்க சக்தி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

5) காலேஜ் ரோடு

ஜெய் அமர்சிங் இயக்கத்தில் லிங்கேஷ் நாயகனாக நடித்துள்ள ‘காலேஜ் ரோடு’ படம் டிசம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இசை – ஆப்ரோ
ஒளிப்பதிவு- கார்த்திக் சுப்ரமணியம்.
எடிட்டர்- அசோக்

மோனிகா, ஆனந்த்நாகு, KPY அன்சர், அக்சய்கமல், பொம்முலக்‌ஷ்மி, நாடோடிகள் பரணி, மெட்ராஸ் வினோத், அருவிபாலா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

MP எண்டர்டெயின்மெண்ட் பிரவீன் மற்றும் சரத். இவர்களுடன் ஜனா துரைராஜ் மனோகர் இணைந்து தயாரித்துள்ளனர்.

PVR இந்த படத்தை வெளியீடு செய்கிறார்கள்.

6 ) டிரைவர் ஜமுனா

18 ரீல்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் பி சௌத்ரி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’. இந்த திரைப்படத்தை ‘வத்திக்குச்சி’ படப் புகழ் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கியிருக்கிறார்.

இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.

இவருடன் ஆடுகளம் நரேன், கவிதா பாரதி, அபிஷேக் குமார், இளைய பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.

7) செம்பி…

பிரபு சாலமன் இயக்கியுள்ள திரைப்படம் ‘செம்பி’. கோவை சரளா, அஸ்வின் குமார், ரேயா, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகியுள்ள இந்த படத்தை டிரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏஆர் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். ஜீவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் பெற்றுள்ளது.

இன்னும் சில படங்களின் அறிவிப்புகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன…

மேற்கண்ட செய்தியை நம் FILMISTREET தளத்தில் நேற்று டிசம்பர் 23ஆம் தேதி பார்த்திருந்தோம்.

இந்த நிலையில் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என்ற படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் தான் ஆதிராஜன் இயக்கிய ‘அருவா சண்ட’ என்ற படம் டிசம்பர் 30ஆம் தேதி திரைக்கு வர உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த படத்தில் புதுமுகம் ராஜா நாயகனாகவும், மாளவிகா மேனன் நாயகியாகவும் நடித்திருக்கின்றனர்.

இவர்களுடன் சரண்யா, ஆடுகளம் நரேன், சௌந்தர்ராஜா கஞ்சா கருப்பு காதல் சுமார் விஜய் டிவி சரத் டைரக்டர் மாரிமுத்து மதுரை சுஜாதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தரண்குமார் இசையமைத்திருக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதி இருக்கிறார்

2022 Last day Tamil movie release latest updates

MGR களத்தில் நான்..; பெரியார் நினைவுநாளில் ராகுலுடன் இணைகிறேன் – கமல்

MGR களத்தில் நான்..; பெரியார் நினைவுநாளில் ராகுலுடன் இணைகிறேன் – கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் கட்சி எம்பியுமான ராகுல் காந்தி ஜோடோ யாத்திரையை தொடங்கினார்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான மக்களை ஒன்றிணைக்கும் நோக்கில் இந்த யாத்திரையை அவர் மேற்கொண்டுவருகிறார்.

கேரளா, கர்நாடகம், ஆந்திரா வழியாக யாத்திரை மேற்கொண்ட அவர் தற்போது ராஜஸ்தானில் நடைபயணம் செய்துக் கொண்டு வருகிறார்.

ஓரிரு தினங்களுக்கு முன் யாத்திரையின் 100வது நாளை நிறைவு செய்தார்.

இந்த பாரத ஜோடோ யாத்திரையில் பங்கேற்குமாறு நடிகரும் மக்கள் நீதி கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த நிலையில், டெல்லியில் நடைபெறும் யாத்திரையில் தான் பங்கேற்பதாக அறிவித்திருக்கிறார் கமல்ஹாசன்.

அதன்படி இன்று டிசம்பர் 24ல் தன் ட்விட்டரில்…

“பாகுபாடு இல்லை உயர்வு தாழ்வு இல்லை பிறப்பில் பெருமை இல்லை என இல்லைகளைப் பிரச்சாரம் செய்ததோடு, சமச்சமூகத்தில் பொன்னுலகம் உண்டு என்ற நம்பிக்கையையும் விதைத்த பெரியாரின் நினைவுநாளில், பாரத் ஜோடோ யாத்திரையில் இருந்து அவருக்கு வணக்கம் செய்கிறேன்.

மேலும் இது தொடர்பான வீடியோ ஒன்றையும் கமல் பதிவிட்டுள்ளார்.. அந்த வீடியோவில்…

“இது அரசியல் சார்பற்ற ஒரு யாத்திரை. நாட்டின் ஒற்றுமைக்காக அனைவரும் இணைவோம்” என அந்த வீடியோவில் தன் கருத்தை பதிவு செய்துள்ளார் கமல்ஹாசன்.

மேலும் இன்று எம்ஜிஆர் நினைவு நாள் என்பதால் எம்ஜிஆர் குறித்தும் கமல் தன் திட்டத்தில் பதிவிட்டுள்ளார் அந்த பதிவில்…

“மேடையில் மாணவராகத் தொடங்கி திரையில் வாத்தியார் ஆனவர். இணையற்ற தலைவராக இன்றுவரை மக்களின் மனதில் நிலைத்திருப்பவர், ஆனந்தஜோதி படத்துக்காக எனக்கு நீச்சல் கற்றுக்கொடுத்து, இன்று அவரது களத்திலேயே நான் நீந்தக் காரணமானவர் எங்கள் எம்ஜிஆர். நினைவுநாளில் வணங்குகிறேன்.

MNM Leader Kamal joins with Rahul Gandhi

கமல்ஹாசனை அமைச்சராக்க வேண்டும்..; அரசுக்கு பிரபல இயக்குனர் கோரிக்கை.!

கமல்ஹாசனை அமைச்சராக்க வேண்டும்..; அரசுக்கு பிரபல இயக்குனர் கோரிக்கை.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பிரபலமானவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்.

இவர் ‘நேரம் – பிரேமம் – கோல்ட்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இதில் பிரித்விராஜ் – நயன்தாரா நடித்த ‘கோல்ட்’ படம் போதுமான வரவேற்பை பெறவில்லை.

இந்த நிலையில் இவரது சமீபத்திய இணைய பதிவில்.. ” தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த கோரிக்கையில்..
“சினிமாவுக்கு என்று திரையுலக நல்வாழ்வுத்துறை என்ற ஒரு துறையை உருவாக்க வேண்டும். அதன் அமைச்சராக நடிகர் கமல்ஹாசனை நியமிக்க வேண்டும். அப்படி ஏற்படுத்தினால் அது சினிமாவின் மேம்பாட்டுக்காக உதவும்.

கமல் ஒருவரே சினிமாவை முழுவதும் அறிந்தவர்.. பாடகர் பாடலாசிரியர் தயாரிப்பாளர் இயக்குனர் நடன இயக்குனர் விநியோகஸ்தர் என பன்முக திறமை கொண்டவர் கமல்.. அவரிடம் இருந்து புதுமையான விஷயங்களை கற்றுக் கொண்டே இருக்கலாம். அவர் மட்டுமே உலகத்தில் தலைசிறந்த கலைஞர்.” என அல்போன்ஸ் புத்திரன் பதிவிட்டுள்ளார்

 அல்போன்ஸ் புத்திரன்

A request to @mkstalin & @Udhaystalin please Start or introduce a minister called cinema welfare minister and appoint @ikamalhaasan as the cinema welfare minister, if you do it cinema will became more flourishing and prosperous – @puthrenalphonse

Kamal should became Minister of Cinema Welfare says Alphonse Puthiran

MGR 35 ஆண்டு நினைவு தினத்தில் நடிகர் சங்கம் நினைவஞ்சலி

MGR 35 ஆண்டு நினைவு தினத்தில் நடிகர் சங்கம் நினைவஞ்சலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவிலும் தமிழக அரசியலிலும் மக்களின் மகத்தான ஆதரவை பெற்றவர் எம் ஜி ராமச்சந்திரன். இவரது பாடல்களும் படங்களும் மக்களுக்கு வாழ்க்கையின் வழிமுறைகளை காட்டுவதாக காட்சிகள் இருக்கும்.

எனவே அவருக்கு என்றென்றும் மக்கள் மனதில் நிரந்தரம் இடம் உண்டு. இன்று டிசம்பர் 24ஆம் தேதி எம்ஜிஆர் மறைந்து 35 ஆண்டுகள் நிறைவடைகிறது.

இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க முன்னாள் தலைவரும், மக்கள் திலகமாக போற்றப்பட்டவருமான பொன்மனச் செம்மல் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 35- ஆம் ஆண்டு நினைவு தினமான 24.12.2022 காலை 10.00 மணியளவில் தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் துணைத்தலைவர் S.பூச்சி முருகன், செயற்குழு உறுப்பினர்களான, லதா சேதுபதி, அஜய்ரத்தினம் நந்தா மற்றும் மேலாளர் தாமராஜ் ஆகியோர் அவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தினர்.

# தென்னிந்திய நடிகர் சங்கம்

Nadigar Sangam Remembering MGR on his 35th death Anniversary

நடிகர் கைகலா சத்யநாராயணாவின் மறைவுக்கு கமல் இரங்கல்

நடிகர் கைகலா சத்யநாராயணாவின் மறைவுக்கு கமல் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பழம்பெரும் டோலிவுட் நடிகரும், முன்னாள் எம்பியுமான கைகலா சத்யநாராயணா.

தமிழ், தெலுங்கு என 750-க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து இருக்கிறார்.

கமல்ஹாசனின் ‘பஞ்சதந்திரம்’ படத்தில் ரெட்டியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களால் அறியப்பட்டவர்.

இந்த நிலையில், ஹைதராபாத்தில் உள்ள ஜூப்லி ஹில்ஸ் இல்லத்தில் நேற்று காலமானார்.

கைகலா சத்யநாராயணா மறைவுக்கு தனது இரங்கலை ட்விட்டர் பகிர்ந்து கொண்ட கமல்ஹாசன் தமிழில் பதிவிட்டுள்ளார்,

‘பஞ்சதந்திரம்’ படத்தில் நீங்கள் பார்த்த கைகல சத்திய நாராயணா அவர்கள், 63 ஆண்டுகளாக சினிமாவைப் பிரியாதவர்.பல விதமான பாத்திரங்களை நடித்து தெலுங்கு ரசிகர்களின் மனதில் நிலைத்திருப்பவர். காலம் ஆகியிருக்கிறார். “அவருக்கென் மனப்பூர்வ அஞ்சலி” என கூறினார்.

kamal haasan mourns the demise of Kaikala Satyanarayana

More Articles
Follows