சொல்லி அடிச்ச ‘கில்லி’ விஜய்..; அஜித் பிறந்தநாளில் ‘பில்லா’ ரீ-ரிலீஸ்

சொல்லி அடிச்ச ‘கில்லி’ விஜய்..; அஜித் பிறந்தநாளில் ‘பில்லா’ ரீ-ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சொல்லி அடிச்ச ‘கில்லி’ விஜய்..; அஜித் பிறந்தநாளில் ‘பில்லா’ ரீ-ரிலீஸ்

தரணி இயக்கத்தில் விஜய் – த்ரிஷா – பிரகாஷ்ராஜ் – ஆசிஷ் வித்யார்த்தி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘கில்லி’.

வித்யாசாகர் இசை அமைத்து இருந்த இந்த படத்தை ஏ.எம் ரத்தினம் தயாரித்திருந்தார். 20 வருடங்களுக்கு பின்னர் இந்த படம் கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்தப் படத்தில் ரீ-ரீலீஸ் உரிமையை பெற்ற சக்திவேலன் ஃபிலிம் ஃபேக்டரி தமிழகமெங்கும் வெளியிட்டது. திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக கில்லி படம் ஓடிக் கொண்டிருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனர் சக்திவேலன் நடிகர் விஜய்யை சந்தித்து.. “நீங்கள் அரசியலுக்கு வந்தாலும் வருடத்திற்கு ஒரு படமாவது நடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து மாலை அணிவித்து இருந்தார்.

இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இந்த நிலையில் விஜய்யின் சகப் போட்டியாளராக கருதப்படும் நடிகர் அஜித் நடித்த பில்லா படத்தை ரீ-ரீலீஸ் செய்ய படக்குழு முடிவு எடுத்துள்ளது.

அதன்படி மே 1ம் தேதி உழைப்பாளர் தினத்தில் அஜித் பிறந்தநாளில் பில்லா படத்தை ரீ-ரீலீஸ் செய்கின்றனர்.

‘பில்லா’ படத்தை இயக்குநர் விஷ்ணுவர்தன் திறமையாக மறுஉருவாக்கம் செய்திருந்தார்.

ஜிபி என்டர்டெயின்மென்ட்டின் அரவிந்த் சுரேஷ் குமார் & டாக்டர் ஞானபாரதி ஆகியோர் மே 1, 2024 அன்று தமிழ்நாடு முழுவதும் ஏடிஎம் புரொடக்ஷன்ஸ் மூலம் 150+ திரைகளில் இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள்.

ஜிபி என்டர்டெயின்மென்ட் அரவிந்த் சுரேஷ் குமார் & டாக்டர் ஞானபாரதி ‘பில்லா’ படத்தை மீண்டும் வெளியிடுவதில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

விஷ்ணுவர்தனின் ஸ்டைலான மேக்கிங்கில் அஜித்குமார் நடிப்பில் வெளியான ‘பில்லா’ பாக்ஸ் ஆஃபிஸில் அற்புதமான சாதனையைப் படைத்தது. அஜித்குமாரின் இரட்டை வேடத்தில் நடித்திருக்க, நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார்.

நீரவ் ஷாவின் கண்கவர் காட்சியமைப்பு மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவின் பவர் பேக் இசை ஆகியவை பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத சினிமா அனுபவத்தை வழங்கின.

Ghilli and Billa movies re release news

ஆடியன்ஸ் மைண்ட்செட்டில் கதை கேட்பேன்..; ‘ரெட்ட தல’ குறித்து ரெட்ட மகிழ்ச்சியில் அருண்விஜய்

ஆடியன்ஸ் மைண்ட்செட்டில் கதை கேட்பேன்..; ‘ரெட்ட தல’ குறித்து ரெட்ட மகிழ்ச்சியில் அருண்விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆடியன்ஸ் மைண்ட்செட்டில் கதை கேட்பேன்..; ‘ரெட்ட தல’ குறித்து ரெட்ட மகிழ்ச்சியில் அருண்விஜய்

அருண் விஜய் நடிப்பில், BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பு, “ரெட்ட தல” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு நிகழ்வு !!

BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற்கு , “ரெட்ட தல” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் தலைப்புடன் கூடிய அசத்தலான ஃபர் ஸ்ட் லுக் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவினில்..

நடிகை சித்தி இத்னானி பேசியதாவது…

இந்தப்படத்தின் வைப் மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தப்படத்தில் நானும் இருப்பது மிகமிகச் சந்தோஷமாக உள்ளது. திருக்குமரன் சாருக்கு நன்றி. எனக்குத் தொடர்ந்து நல்ல இயக்குநர்கள் கிடைத்து வருகிறார்கள். கௌதம் மேனன் சாரில் ஆரம்பித்து அனைவரும் எனக்கு நல்ல கதாப்பாத்திரங்கள் தந்து வருகிறார்கள். அருண் விஜய் சாருடன் நடிப்பது மகிழ்ச்சி. இந்தப்படம் கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.

இயக்குநர் அஜய் ஞானமுத்து பேசியதாவது…

ஒரு வருடம் முன்பு பிடிஜி. சந்திப்பிற்காகப் போனேன் முதல் படமாக என் படம் செய்கிறார்கள் எனும் போது பயம் இருந்தது. ஆனால் அவர்கள் திரைப்படங்கள் மேல் வைத்திருக்கும் காதல் மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்தது. அவர்கள் இன்னும் நிறையப்படங்கள் செய்து பலருக்கு வாழ்க்கைத் தர வேண்டும் என்பதே என் ஆசை.

திருக்குமரன் அண்ணாவிற்கு இந்தப்படம் கிடைத்தது பெரிய மகிழ்ச்சி. ஏ ஆர் முருகதாஸ் சாரிடம் வேலைப் பார்த்த போது அவர் எனக்குச் சீனியர். அவர்ப் பயங்கர ஸ்ட்ரிக்ட். மிகப்பெரிய திறமைசாலி அவருக்குச் சரியான ஹீரோவாக அருண் விஜய் கிடைத்துள்ளார். இந்த டைட்டில் மிரட்டலான டைட்டில் ஏ ஆர் முருகதாஸ் சார் வைத்திருந்த டைட்டில். படம் மிகப்பெரிய வெற்றிபெறும் வாழ்த்துக்கள்.

நடிகர் விஜயகுமார் பேசியதாவது…

பாபி பாலச்சந்திரன் மிக எளிய குடும்பத்தில் பிறந்து இத்தனை உயரம் எட்டியுள்ளார். உழைப்பு, நம்பிக்கை, நேர்மை இருந்தால் வெற்றிப் பெறலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார். டாக்டர் மனோஜ் எங்கள் குடும்பத்தில் ஒருவர். ரெட்ட தல மிகச்சிறந்த டைட்டில். வெற்றிகரமான டைட்டில். திருக்குமரன் மிகப்பெரிய திறமைசாலி, கடுமையாக உழைத்து நல்ல திரைக்கதை உருவாக்கி, இந்தப்படம் செய்கிறார். இரண்டு குயின் இருக்கிறார்கள். படத்தில் உழைக்கும் கலைஞர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். படம் மாபெரும் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்.

இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் பேசியதாவது…

இந்த இடத்தில் நான் நிற்கக் காரணமான அனைவருக்கும் நன்றி. ஃபர்ஸ்ட் லுக் தனித்துவமாக இருக்க வேண்டும் எனச் சொன்ன போது, ஒரு கான்செப்ட் வைத்து உருவாக்கலாம் என இந்த ஐடியாவை அருண் விஜய் சாரிடம் சொன்னேன். இது என்ன மாதிரி ஐடியா எனக்கேட்டார்.

இரண்டு மிருகங்கள் ஒன்றை ஒன்று அடித்து சாப்பிட நினைக்கிறது அது தான் கரு என்றேன். எல்லோருக்கும் பிடித்திருந்தது. பாபி சார், மனோஜ் சார் எவ்வளவு செல்வானாலும் பராவாயில்லை, இதைத்தான் எடுக்கனும் என்றார்கள். அருண் விஜய் உடம்பை வில்லாக வளைத்து, இதற்காக உழைத்துள்ளார்.

இந்த டைட்டில் ஏ ஆர் முருகதாஸ் சாருடையது, அருண் விஜய் சாருக்கும் எனக்கும் இந்த டைட்டில் பிடித்திருந்தது. இந்தக்கதைக்கு இது தான் சரியாக இருக்குமெனத் தோன்றியது. ஏ ஆர் முருகதாஸ் சாரிடம் கேட்டேன், அவர் வைத்துக்கொள் என அன்போடு தந்தார்.

இந்தப்படம் ஒரு குழுவாக உருவாக்கும் படம் பாபி சார், மனோஜ் சார் மட்டுமல்லப் பிடிஜி என்பது எங்களையெல்லாம் இணைத்த ஒரு பெரிய குழு. தான்யா, சித்தி இத்னானி அழகாக நடிக்கிறார்கள். அருண் விஜய் சார் ஆச்சர்யம் தந்துகொண்டே இருக்கிறார். படத்திற்காகப் பயங்கரமாக உழைக்கிறார். தயாரிப்பாளர் என் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்ற கடுமையாக உழைப்பேன். இந்தப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் நன்றி.

நடிகர் அருண்விஜய் பேசியதாவது…

பாபி சார் மனோஜ் சார்ப் பற்றி எல்லோரும் பேசினார்கள். இந்தப்படம் எனக்கு மிக நெருக்கமான படம். இந்தக்கதை மிக மிகப் பிடித்த கதை. இதற்கு முன் மனோஜ் அண்ணா அனுப்பிய கதைகள் கேட்டிருக்கிறேன், நான் எப்போதும் ஆடியன்ஸ் மைண்ட்செட்டில் இருந்து தான் கதைக் கேட்பேன்.

திருக்குமரன் இந்தக்கதைச் சொல்லி, ரெட்ட தல என்று சொன்ன போது அட்டகாசமாக இருந்தது. அவர் ஆரம்பத்திலேயே படத்திற்காகக் கடுமையாக உழைத்து வருவது எனக்குப் பிடித்துள்ளது. அவருக்காக நானும் கடுமையாக உழைப்பேன். சித்தி, தான்யா, ஆண்டனி சார், கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். இந்தப்படம் மீது இப்போதே நல்ல பாஸிடிவிட்டி இருக்கிறது.

சாம் சி எஸ் உடன் ஏற்கனவே வேலைப் பார்த்துள்ளேன். இந்தப்படம் அவருக்கு வெற்றிப்படமாக இருக்கும். உங்களை மகிழ்விக்கக் கண்டிப்பாக கடுமையான உழைப்பைத் தருவோம். இந்தப்படம் கண்டிப்பாக உங்களை ஆச்சரியப்படுத்தும் நன்றி.

நடிகர் அருண் விஜய் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், சித்தி இத்னானி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார், இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ், யோக் ஜேபி, வின்செண்ட் அசோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்தினை BTG Universal நிறுவனம் சார்பில் திரு.பாபி பாலச்சந்திரன், மிகப்பெரும் பொருட்செலவில், அருண் விஜய் திரை வாழ்க்கையில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பிரம்மாண்ட படைப்பாகத் தயாரிக்கிறார்.

தமிழ் திரையுலகில் பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் தலைமை நிர்வாக இயக்குநராக பணியாற்றிய திரு டாக்டர் M.மனோஜ் பெனோ, தற்போது BTG Universal நிறுவனத்தின் தலைமை திட்ட இயக்குநராக பொறுப்பேற்று திரைப்படங்களின் அனைத்து நிர்வாகப் பணிகளையும் செய்து வருகிறார்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் CS இசையமைக்கிறார். டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டர் ஆண்டனி எடிட்டிங் செய்கிறார். மாஸ்டர்ஸ் அன்பறிவு மற்றும் பிரபு மாஸ்டர் இணைந்து சண்டைக்காட்சிகளை வடிவமைக்கவுள்ளனர்.

அருண்சங்கர் துரை கலை இயக்கம் செய்கிறார். கிருத்திகா சேகர் உடை வடிவமைப்பு பணிகளைச் செய்கிறார். பப்ளிசிட்டி டிசைனிங் பணிகளை சசி & சசி செய்கிறார்கள். வெங்கட்ராம் பப்ளிசிட்டி போட்டோகிராஃபராக பணியாற்றுகிறார். மக்கள் தொடர்பு பணிகளை சதீஷ், சிவா (AIM) செய்கிறார்கள்.

Arunvijay happy with Retta Thala story and making

இது தேர்தல் பிரச்சாரம் அல்ல.. சினிமா பிரச்சாரம்.. களத்தில் இறங்கிய ‘ரத்னம்’ இயக்குனர் ஹரி

இது தேர்தல் பிரச்சாரம் அல்ல.. சினிமா பிரச்சாரம்.. களத்தில் இறங்கிய ‘ரத்னம்’ இயக்குனர் ஹரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இது தேர்தல் பிரச்சாரம் அல்ல.. சினிமா பிரச்சாரம்.. களத்தில் இறங்கிய ‘ரத்னம்’ இயக்குனர் ஹரி

ஏற்கனவே ஹரி – விஷால் கூட்டணியில் உருவான தாமிரபரணி பூஜை ஆகிய இரு படங்களை வெற்றி பெற்றன.

தற்போது இவர்களது கூட்டணியில் மூன்றாவதாக உருவாகியுள்ள படம் ரத்னம்.

இதில் விஷால் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விஷாலின் 34-வது படமான இதை ஜீ ஸ்டூடியோஸ் சவுத் மற்றும் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ள இப்படம் நாளை வெள்ளிகிழமை (ஏப்.26) திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தின் புரமோஷன் பணிகளை இயக்குனர் ஹரி வித்தியாசமாக செய்து வருகிறார்.. அதாவது தேர்தல் பிரச்சாரங்களில் வேட்பாளர்கள் நேரடியாக சென்று வாக்கு சேகரிப்பது போல் தன் படத்தைக் காண தியேட்டருக்கு வாருங்கள் என இயக்குனர் ஹரி ரசிகர்களை சந்தித்து வருகிறார்.. பொதுமக்களை சந்தித்து படத்தை காண அழைப்பு விடுத்துள்ளார்.

புதுச்சேரியில் உள்ள மார்க்கெட் பகுதிக்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்து.. என்னை தெரியுதா? நான் தான் இயக்குனர் ஹரி.. நான் இயக்கிய உள்ள ரத்னம் படம் தியேட்டரில் வருகிறது.. தியேட்டருக்கு வந்து படம் பாருங்கள் என்றார்.

ஒரு சிலர் நிச்சயமாக படம் பார்ப்போம் என்று உறுதி அளித்தனர்.. ஒரு சிலர் டிக்கெட் எடுத்துக் கொடுங்கள் நிச்சயம் பார்க்கிறோம்” என்றனர்.

இப்படியாக வித்தியாசமாக பொதுமக்களை இயக்குனர் சந்தித்து படத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Director Hari movie campaign for Rathnam

—-

மே 10 முதல் அரசியல் பின்னணியில் அதகளம் செய்ய வரும் அமீர்

மே 10 முதல் அரசியல் பின்னணியில் அதகளம் செய்ய வரும் அமீர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மே 10 முதல் அரசியல் பின்னணியில் அதகளம் செய்ய வரும் அமீர்

*மே-10ல் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு…. அமீரின் ‘உயிர் தமிழுக்கு’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஆன்டி இண்டியன் படத்தை தொடர்ந்து மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்தப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆதம்பாவா.

அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் அமீர் நாயகனாக நடிக்க, நாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார்.

இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ்கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இப்படம் மூலம் வெற்றிகரமாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர்.

வரும் மே-10ஆம் தேதி உலகெங்கிலும் இப்படம் வெளியாக இருக்கிறது.. PVR Inox பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது

‘உயிர் தமிழுக்கு’ பட வெளியீடு குறித்து தயாரிப்பாளரும் இயக்குநருமான ஆதம் பாவா கூறும்போது…

“ஏற்கனவே வெளியான டீசர் மற்றும் ட்ரெய்லருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது, இந்த வரவேற்பால் படத்தின் நாயகன் இயக்குநர் அமீருக்கும் எனக்கும் படக்குழுவினருக்கும் மகிழ்ச்சி.

மேலும் அமீர் படம் வந்து நீண்ட நாட்கள் ஆவதால் அவரது ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில் சூட்டோடு சூட்டாக இப்படி ஒரு அரசியல் காதல் காமெடி படம் வெளியாவதால் நேரடியாக மக்களிடம் 100% கனெக்ட்டாகும்” என நினைக்கிறேன்.

இதுவரை பார்த்திராத ஒரு புது அமீரை ரசிகர்கள் இப்படத்தில் பார்க்கலாம். காதல், ஆக்‌ஷன், காமெடி என அனைத்து ஏரியாவிலும் ஒரு மாஸ் எண்டர்டைனராக அதகளப்படுத்தியிருக்கிறார்.

வித்யாசாகரின் இசையில் பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து மில்லியன் கணக்கில் பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறையில் குடும்பத்துடன் சென்று பார்க்கும் ரசிகர்களுக்கு உயிர் தமிழுக்கு சரியான விருந்தாக இருக்கும் இது இயக்குநராக, தயாரிப்பாளராக என்னுடைய கேரண்டி” என நம்பிக்கையுடன் கூறினார்.

Uyir Tamilzhuku set to release on 10th May

‘மண்டைக்கு சூரு ஏறுதே’… கோடையை இன்னும் சூடேத்த ‘சூது கவ்வும் 2’ பாட்டு

‘மண்டைக்கு சூரு ஏறுதே’… கோடையை இன்னும் சூடேத்த ‘சூது கவ்வும் 2’ பாட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மண்டைக்கு சூரு ஏறுதே’… கோடையை இன்னும் சூடேத்த ‘சூது கவ்வும் 2′ பாட்டு

சூது கவ்வும் 2’ படத்திலிருந்து பட்டையைக் கிளப்பும் ‘சூரு’ பாடல் வெளியீடு…

ஏ ஆர் ரஹ்மான் இசைக் கல்லூரி முன்னாள் மாணவரான எட்வின் இசையமைத்துள்ள பாடலை கண்ணன் கணபதி, ஸ்டீபன் ஜக்கரியா, பிரேம்ஜி அமரன் பாடியுள்ளனர்*

தங்கம் சினிமாஸ் தங்கராஜ் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சி வி குமார் தயாரிப்பில் எஸ் ஜே அர்ஜுன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, ராதாரவி, கருணாகரன், எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘சூது கவ்வும் 2’ படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் இருந்து ‘மண்டைக்கு சூரு ஏறுதே’ எனும் உற்சாகமிக்க பாடல் திங்கட்கிழமை மாலை வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஏ ஆர் ரஹ்மான் நடத்தும் இசைக் கல்லூரியிலும், லண்டன் டிரினிட்டி கல்லூரியிலும் பயின்ற எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைத்துள்ள இப்பாடலை, பிரபல மலேசிய கலைஞர் கண்ணன் கணபதி, முன்னணி சிங்கப்பூர் கலைஞர் ஸ்டீபன் ஜக்கரியா மற்றும் நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

பாடலைப் பற்றி பேசிய இசையமைப்பாளர் எட்வின்…

“திரைப்படத்தின் பின்னணியில் வரும் பாடலான இதில், இதுவரை திரையுலகில் பயன்படுத்தப்படாத ‘சூரு’ எனும் தமிழ் வார்த்தையை உபயோகித்துள்ளோம்.

சூரு என்றால் கிராமத்து வழக்கில் அதீத உற்சாகத்தில் இருப்பது என்று பொருள். மலேசியாவிலும் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

இந்த பாடலுக்கு இது மிகவும் பொருத்தமாக இருந்ததால் இதை உபயோகப்படுத்தி உள்ளோம்,” என்றார்.

பாடல் மிகவும் சிறப்பாக வந்துள்ளதாக கூறிய இசையமைப்பாளர் எட்வின், மலேசியாவில் எண்ணற்ற ரசிகர்களை கொண்டுள்ள கண்ணன் கணபதி, சிங்கப்பூரில் சாதனை படைத்துள்ள ஸ்டீபன் ஜக்கரியா மற்றும் நடிகராக மட்டும் இல்லாமல் இசையமைப்பாளராகவும் உள்ள பிரேம்ஜி அமரன் ஆகியோர் இப்பாடலுக்காக மிகச் சிறப்பான ஒத்துழைப்பு தந்துள்ளதற்கு நன்றி தெரிவித்தார்.

‘சூது கவ்வும் 2’ படத்திற்கு இசையமைப்பதற்கு தனக்கு வாய்ப்பு தந்த தயாரிப்பாளர் சி வி குமாருக்கும் அவர் நன்றி கூறினார்.

‘சூது கவ்வும்’ வெளியாகி 11 ஆண்டுகள் கழித்து இரண்டாம் பாகமான ‘சூது கவ்வும் 2’ தயாராகி உள்ளது.

‘சூது கவ்வும்’ திரைப்படத்தின் முறையான இரண்டாம் பாகமாகவும் நகைச்சுவை மற்றும் ஆக்ஷன் சரிவிகிதத்தில் கலந்த பரபரப்பு திரைப்படமாகவும் ‘சூது கவ்வும் 2’ இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

‘சூது கவ்வும் 2’ படத்திற்கு கார்த்திக் கே தில்லை ஒளிப்பதிவு செய்துள்ளார். சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

தங்கம் சினிமாஸ் தங்கராஜ் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சி வி குமார் தயாரிப்பில் எஸ் ஜே அர்ஜுன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சூது கவ்வும் 2’, விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது.

Sooru a sensational song from Soodhu Kavvum 2 released

டாலி தனஞ்சயாவுக்கு ஜோடியாகி கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா

டாலி தனஞ்சயாவுக்கு ஜோடியாகி கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டாலி தனஞ்சயாவுக்கு ஜோடியாகி கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா

*கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்*

*கே ஆர் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘உத்தரகாண்டா’ எனும் படத்தின் மூலம் ஐஸ்வர்யா ராஜேஷ் கன்னட திரையுலகில் அறிமுகமாகிறார்.*

‘கர்நாடக சக்கரவர்த்தி’ டாக்டர் சிவராஜ் குமார் மற்றும் ‘நடராக்ஷசா’ டாலி தனஞ்சயா நடிப்பில் தயாராகி வரும் ‘உத்தரகாண்டா’ எனும் படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமாகிறார்

இப்படத்தில் அவர் டாலி தனஞ்சயாவுக்கு ஜோடியாக ‘துர்கி’ எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷின் வெற்றி பட பட்டியலில் ‘த கிரேட் இந்தியன் கிச்சன்’, ‘வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’, ‘வடசென்னை’, தேசிய விருது பெற்ற படமான ‘காக்கா முட்டை’, ‘ஜோமௌண்டே சுவிஷேஷங்கள்’, ‘ டக் ஜகதீஷ்’, ‘வானம் கொட்டட்டும்’ என பல வெற்றி படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. மேலும் அவர் தற்போது முன்னணி நட்சத்திர நடிகர்களுடனும் நடித்து வருகிறார்.

‘உத்தரகாண்டா’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது பிஜப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற்று வருகிறது. கே ஆர் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் கார்த்திக் கவுடா மற்றும் யோகி ஜி. ராஜ் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இயக்குநர் ரோஹித் பதகி இயக்கத்தில் உருவாகி வரும் ‘உத்தரகாண்டா’ திரைப்படத்தில் ‘கர்நாடக சக்கரவர்த்தி’ சிவராஜ்குமார், ‘நடராக்ஷசா’ டாலி தனஞ்சயா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன் மலையாள நடிகர் விஜய் பாபு, ரங்காயண ரகு, சைத்ரா ஜே. ஆச்சார், உமா ஸ்ரீ, யோகராஜ் பட் , கோபாலகிருஷ்ண தேஷ் பாண்டே உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்தின் கலை இயக்கத்தை விஸ்வாஸ் காஷ்யப் கவனிக்க, பாலிவுட் இசையமைப்பாளரும், பாடகருமான அமித் திரிவேதி இசையமைக்கிறார்.

தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்களை மகிழ்விக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், கன்னட திரையுலகில் அறிமுகமாகி அங்கும் தன் முத்திரையை பதித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பார் என உறுதியாக எதிர்பார்க்கலாம்.

Aishwarya Rajesh debut in Kannada Cinema

More Articles
Follows