தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது வரை 65 நாட்களை கடந்துவிட்டது.
அக்டோபர் 4-ம் தேதி 16 பேருடன் இந்த சீசன் தொடங்கியது.
ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சுரேஷ் மற்றும் சனம் ஷெட்டி ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நடிகை விஜே அர்ச்சனா, பாடகி சுசித்ரா ஆகியோர் வைல்டு கார்டு எண்ட்ரியாக வீட்டுக்குள் வந்தனர்.
இந்த வார நாமினேஷனில், சோம் சேகர், கேப்ரில்லா, ஜித்தன் ரமேஷ், ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி, ஆகியோர் உள்ளனர்.
கடந்த வாரம் சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டார்.
ஷனம் ஷெட்டியை ஒரு முறை கமல்ஹாசனும் பிக்பாஸ் மேடையில் பாராட்டினார்.
எனவே சனம் வெளியேறிய போது ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.
இந்தநிலையில் சனம் அவரின் வீட்டுக்கு செல்லாமல் ஹோட்டலில் தனிமைப்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது சனம் ஷெட்டி மீண்டும் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சீசனில் வனிதா வெளியேற்றப்பட்டு மீண்டும் வைல்ட் கார்ட் போட்டியாளராக வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sanam Shetty To Re-Enter Bigg Boss Tamil 4 house As Wild-Card Contestant?