இரட்டை குதிரையில் சவாரி செய்யும் ‘கின்னஸ் சாதனை’ பாடகர் வேல்முருகன்

இரட்டை குதிரையில் சவாரி செய்யும் ‘கின்னஸ் சாதனை’ பாடகர் வேல்முருகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 13 வருடங்களாக பல வெற்றிப் பாடல்களை பாடி நாட்டுப்புறம் மற்றும் திரைப்பட பாடல்களில் தனக்கென தனியிடம் பிடித்துள்ள பாடகர் வேல்முருகன் தற்போது நடிகராக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

இதுவரை ஏறக்குறைய 500 திரைப்படங்களுக்கு மேல் வேல்முருகன் பாடியுள்ளார்.

மதுர குலுங்க குலுங்க, ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா, ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம், வேணாம் மச்சான் வேணாம், சங்கிலி புங்கிலி கதவ தொற, போட்டது பத்தலை, கத்திரி பூவழகி, ஒத்த சொல்லால, சண்டாளி, அட கருப்பு நிறத்தழகி… உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் பாடல்களை அவர் பாடியுள்ளார்.

இது மட்டுமின்றி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் நாட்டுப்புற பாடகர் என்ற பெருமையும் வேல்முருகனுக்கு உண்டு.

அது வரை வேல்முருகனின் குரலை மட்டும் கேட்ட மக்களுக்கு வேல்முருகனின் முகமும் பரிச்சயம் ஆனது.

கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வேல்முருகன் வென்றுள்ளார். இதை தவிர, 5,000 நாட்டுப்புற கலைஞர்களை வைத்து கின்னஸ் உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

நாட்டுப்புற பாடல்களுக்காக வேல்முருகன்
முனைவர் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி உள்ளிட்ட படங்களில் பாடல்களில் மட்டுமே இதுவரை நடித்து வந்த வேல்முருகன் தற்போது குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகராக வலம் வர உள்ளார்.

இவர் ஏற்கனவே கவுண்டமணி நடிப்பில் வெளியான ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.

ப்ரஜின் நடிக்கும் சங்கரலிங்கத்தின் சைக்கிள் வண்டி, மிர்ச்சி சிவா நடிப்பில் சலூன், படைப்பாளன், அன்னக்கிளி ஆர்கெஸ்ட்ரா, யோகி பாபுவுடன் இன்னும் பெயரிடப்படாத படம் ஆகிய பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

அதே நேரத்தில் பாடல்கள் பாடுவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். வேலன், காஞ்சனா உள்ளிட்ட படங்களில் பாடல்களை எழுதியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

நடிகராக வேல்முருகனின் சமீபத்திய புகைப்படங்கள் பலரின் பாராட்டுதல்களை பெற்றுள்ளன.

“இனி பாடல், நடிப்பு ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்துவேன். நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறேன். பாடகராக எனக்கு அங்கீகாரம் அளித்தது போல், நடிகனாகவும் மக்கள் என்னை ஏற்றுக்கொள்வார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்குள்ளது.

எனது குரலை ஏற்றுக்கொண்டதுப் போல் எனது நடிப்பையும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது,” என்று வேல்முருகன் கூறுகிறார்.

Famous Kollywood singer Vel Murugan turns Actor

வடிவேல் சந்தானம் யோகிபாபு சதீஷ் சூரி வரிசையில் ஹீரோவானார் ‘போண்டா’ மணி

வடிவேல் சந்தானம் யோகிபாபு சதீஷ் சூரி வரிசையில் ஹீரோவானார் ‘போண்டா’ மணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வடிவேல், விவேக், சந்தானம், சூரி, சதீஷ், யோகிபாபுவை போல் கதையின் நாயகனாக போண்டா மணி நடித்துள்ள படம் தான் “சின்ன பண்ண பெரிய பண்ண”

மேலும் இதில் ஷர்மிலி, ஆர்.சுந்தர்ராஜன், பயில்வான் ரங்கநாதன், ஆதேஷ் பாலா, முத்துக்காளை, சிசர் மனோகர், பெஞ்சமின், வெங்கல்ராவ், கிங்காங், சுப்புராஜ், விஜய்கணேஷ், ஜான்சன், இன்னும் பலர் நடித்துள்ளனர்.

ரங்கதுரை, கவிதா குப்புசாமி இருவரும் பாடல்களையும்,
பிரேம்ஜி இசையையும், லட்சுமணன் எடிட்டிங்கையும், தீப்பொறி நித்யா சண்டை பயிற்சியையும், பவர் சிவா நடன பயிற்சியையும் கவனித்துள்ளனர்.

கிராம நிர்வாக அதிகாரியாக வரும் போண்டாமணி , அந்த கிராமத்தில் அக்கிரமம் புரியும் சின்ன பண்ண யிடம் மோதுகிறார். விளைவு? யாரும் எதிர்பாராதது.

சின்ன சின்ன விஷயங்களில் கூட கவனமாக இருக்க வேண்டும். அதனால் பெரும் அசம்பாவிதங்களை தடுக்கலாம்” என்பதை காமெடியுடன் கொஞ்சம் ஆக்சனையும் கலந்து தந்துள்ளேன்” என்று கதையை பற்றி கூறியுள்ள பகவதி பாலா இந்தப் படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கி உள்ளார்.

இவர் பத்து படங்களுக்கு மேல் இயக்கி உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூர், மைசூர், ஓசூர், திருச்சி, சென்னை பகுதிகளில் வளர்ந்துள்ள ” சின்ன பண்ண பெரிய பண்ண” படத்தை சி.ப. தனசேகரன்
பகவதி பாலா இருவரும் இணைந்து எஸ். பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளனர்.

Comedy actor Bonda Mani turns hero

பேச முடியாமல் தவித்த ரஹ்மான்.; விட்டுக் கொடுத்து உதவிய ராதிகா

பேச முடியாமல் தவித்த ரஹ்மான்.; விட்டுக் கொடுத்து உதவிய ராதிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரஹ்மான் மலையாளத்தில் ஹீரோவாக நடித்து வரும் படம் ‘சமாறா’.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, ரஹ்மான் தவிர அனைவரும் டப்பிங் பேசி விட்டார்கள்.

கேரளாவில் கொரோனா அதிகம் இருப்பதால் அங்கு சென்று டப்பிங் பேச முடியாத சூழ்நிலை.

மேலும் தீபாவளி சமயம் என்பதால் சென்னையில் அனைத்து டப்பிங் ஸ்டுடியோவும் பிசியாக உள்ளது.

இதை கேள்விப்பட்ட ராதிகா, தனது ராடன் டப்பிங் தியேட்டரில் வந்து டப்பிங் செய்து கொள்ளுமாறு ரஹ்மானுக்கு உதவினார்.

பொதுவாக ராடன் தயாரிக்கும் படம் அல்லது டிவி சீரியல் டப்பிங் மட்டும் தான் அங்கு நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Radhika’s help to Actor Rahman

ஆக்சன் ஹீரோவாக மாறும் ‘நடன புயல்’ பிரபுதேவா

ஆக்சன் ஹீரோவாக மாறும் ‘நடன புயல்’ பிரபுதேவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் ‘நடனப்புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்கிறார்.

இவருடன் நடிகர்கள் ஜான் விஜய், விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியான், மலையாள நடிகர் பினு பப்பு, அருள்தாஸ், நடிகர் ரியாஸ் கானின் வாரிசும், நடிகருமான ஷாரிக் ஹாஸன், ‘பழைய ஜோக்’ தங்கதுரை, மகேஷ், மலையாள நடிகை லியோனா லிஷாய் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

விக்னேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, எஸ். என். பிரசாத் இசையமைக்கிறார். படத்தின் கலை இயக்கத்தை மாய பாண்டி கவனிக்க, ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

இந்த படத்தை ஜாய் ஃபிலிம் பாக்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் என்ற பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் பேசுகையில்….

” பிரபுதேவா நடிப்பில் மாஸான முழு நீள ஆக்சன் படமாக தயாராகிறது. இந்த படத்தின் உச்சக்கட்ட காட்சி, ரசிகர்களின் கண்களுக்கு புதுமையானதாக இருக்கும்” என்றார்.

Prabhu Deva turns action hero for his next

நன்னம்பிக்கை தரும் நண்பன் தாயை போல் உயர்ந்தவன்..; தாமிரா நினைவஞ்சலியில் சீனு ராமசாமி கடிதம்

நன்னம்பிக்கை தரும் நண்பன் தாயை போல் உயர்ந்தவன்..; தாமிரா நினைவஞ்சலியில் சீனு ராமசாமி கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மறைந்த இயக்குநர் தாமிரா அவர்களின் நினைவஞ்சலிக்காக,
இயக்குநர் சீனு ராமசாமி கடிதம்
——————-

அனைவருக்கும் வணக்கம்!.

தங்களோடு பயணித்த ஒரு படைப்பாளியை நினைவு கூற நினைத்த உங்கள் பெரு உள்ளத்திற்கு இந்த வணக்கம் அன்பின் காணிக்கை.

ஒரு முறை, ஒரு மேனேஜர் வேனும் சீனு என்றார் இயக்குனர் தாமிரா.

என் உடலில் பாகமாக இருக்கும் நண்பன் ஜாகீர் உசேனை அனுப்பி, என்னுடன் நீ இருப்பதை போல
அவருடன் இரு என்றேன். ஒரு வருடம் கழித்து ஜாகிரை தந்தமைக்கு நன்றி என்றார் தாமிரா.

கொரோனா காலத்திற்கு முன்பு
ஒரு உதவி இயக்குனர் வேண்டும் என்றார். என் மீது மையல் கொண்டு என்னிடம் வந்து சேர முயன்ற இளைஞன் ஒச்சுமாயியை அனுப்பினேன்.

அந்த தம்பிதான் அவர் ஆஸ்பத்திரி நாட்களை ஒவ்வொரு நாளாக நம்பிக்கையாக சொல்லிக் கொண்டே வந்தான்.ஆனால்
இதய தசைகள் கிழிபட, தாமிரா சார் நம்மை விட்டுட்டு போய்ட்டார் சார் என்று அலைபேசியில் அழுதான்.

அன்று முழுவதும் அமைதியாக இருந்தேன். அவர் அட்மிட் ஆகியிருந்த ஆஸ்பத்திரியின் வாசலை இப்பவும் கடக்க நேர்கையில் அவர் சொன்ன வார்த்தைகளை நினைக்கும் என் மனம்.

“சீனு உங்ககிட்ட இருக்கிற கவிதை உணர்ச்சி… அது ஸ்கீரின் பிளேல்ல வருது.. அது இருக்கிற வரைக்கும் உங்களுக்கு தோல்வி இல்ல..
உடம்ப மட்டும் பாத்துக்கங்க சீனு” என்றார்.

உலகம் என்னை கைவிட்ட ஓர் நாளில் அவரிடம் இருந்து எனக்கு வந்த வார்த்தைகள் இவை. உலகம் மட்டுமல்ல என்னை நானே அப்போது கைவிட்டுருந்தேன். சரிங்க சார் என்று
மட்டும் சொன்னேன்.

என் உடலை சுமக்க முடியாமல் நடந்து அலைந்து கொண்டிருந்த அன்று உயிர் சுமந்து காற்றில் நடந்து வீடு வந்தேன்.

பிறந்து மூணு மாதம் ஆன என் மூத்த மகளின் அருகே படுத்து நிம்மதியாக தூங்கினேன். அந்நாள் இந்நாள் போல் நினைவில் இருக்கிறது. நன்னம்பிக்கை தரும் நண்பன் தாயை போல் உயர்ந்தவன். இதுதான், இயக்குனர் தாமிரா அவர் நேசித்த தாமிரபரணி ஆறும் அப்படியானது தான்.

இயக்குனர் தாமிரா அவர்களை நான் முதன் முதலாக பார்த்தது 1997ம் ஆண்டு அண்ணன் சீமான் அவர்களின் சாலிகிராம வீட்டில். ஒரு எழுத்தாளராக அறிமுகமானார்.

சி.பி.ஐ கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றியவராக அறிந்து நெருங்கி அவருடன் நட்பிக்கத் தொடங்கினேன். நானும் இலக்கிய ஆர்வமுடையவனாக தென்பட்டதால் அவரும் என் அருகாமையை விரும்பினார்.

பிறகு சந்திக்கும் வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் அவருடன் பயணித்திருக்கிறன்.

அவர் தொலைக்காட்சி தொடர்களுக்கு இரவு பகலாக உழைப்பதை நான் ஆச்சர்யமாக கவனித்திருக்கிறேன். எப்போதும் எளிமையாகவும் அன்பான மனிதராகவும் அவர் இருந்தார்

அவர் பெற்ற குழந்தைகளை சிறுவயதில் வடபழநி வீட்டில் என்னுடைய பெண்டக்ஸ் கே 1000 கேமராவால் படங்கள் எடுத்து மகிழ்ந்திருக்கிறேன்.

எப்போது சந்தித்தாலும் இலக்கியம் சினிமா என பேசி களைத்திருக்கிறோம். அவர் எப்போதும் நேற்றை பற்றி கவலையற்று நாளை பற்றிய நம்பிக்கையோடு இருந்தவர்.

சதா இயங்கிய படி இருக்கும்
தன்னம்பிக்கையாளர். எப்போதும் தனக்கு வேலை தந்தபடி இருப்பார்.

என் மீது அவருக்கு நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை மிகவும் முக்கியமானது. தோற்றவனுக்கு பிரியமாக தரும் சிகரெட் போல எனக்கு ரொம்ப முக்கியமானது. அவர் கோல்டுபிளேக் கிங்சை எனக்கு நீட்டி “வாங்க சீனு” என்பார்.

பின்பு சிகரெட் குடிப்பதை அறவே நிறுத்தி அதற்கு எதிராக என்னிடம் பிரச்சாரமும் செய்தார். புகைப்பவர்களுக்கு தெரியும் அந்த உறுதி எத்தகையதென்று.

முதல் சினிமா சரியாக அமையாத காலத்தில் என் திரியை தூண்டியவர் இயக்குனர் தாமிரா.. தாமீரா ஒரு நல்ல ஆன்மா.

தன் தந்தையை பெருமையாக
கொண்டாடியவர். தன் சொந்த ஊரை நேசித்த கலைஞன். தலைக்கணம் இல்லாத மனிதன். வசந்தகால மரத்தை வேரோடு பிடிங்கிய மாதிரி அவரை காலம் எடுத்து சென்று விட்டது.

என் படப்பிடிப்புக்கு அவர் தந்தையோடு வந்து மகிழ்ந்த அந்நாளின் திருவிழாவை எப்போதும் மறவேன். அவர் சிரிப்பில் எப்போதும் ஒரு இளவெயிலை உணர்ந்திருக்கிறேன்.
இப்போதும் இக்கணத்திலும்.

தாமிரா சார்.. உங்கள் புகழ் வாழ்க..
நீங்கள் நடந்து பாதங்களால் உருவாக்கிய நல்லுணர்வுமிக்க ஒற்றையடிப்பாதையில் உங்கள் சந்ததிகள் வளர்க!

தன் விவசாய நிலத்தில் காலூன்றி நிற்கும் உங்கள் தந்தை வாழ்க.. வாழ்க வாழ்க அன்புமிகுந்த தோழரே நீர் வாழ்க…

நீங்கள் எப்போது அழைத்தாலும் உங்கள் அலைபேசியை எடுக்க காத்திருப்பேன்..

சீனு ராமசாமி.

(இயக்குனர் தாமிரா அவர்களின் நினைவஞ்சலி கூட்டத்திற்கு கலந்து கொள்ள முடியவில்லை ஆகையால் இக்கடிதத்தை அனுப்பினேன்)

Seenu Ramasamy talks about his friend Thamira

seenu ramasamy

மக்களை இம்சிக்கும் 3 விஐபிக்களை கொலை செய்த மர்ம நபர்.; ‘யாரது’ என போலீசார் அதிர்ச்சி

மக்களை இம்சிக்கும் 3 விஐபிக்களை கொலை செய்த மர்ம நபர்.; ‘யாரது’ என போலீசார் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

“சமுதாயத்தில் செல்வாக்கு மிக்க மூவரால் மக்கள் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இவர்களை சாட்சியுடன் கைது செய்ய இன்ஸ்பெக்டர் ரவி களம் இறங்குகிறார்.

ஆனால் அந்த மூவரும் ஒருவர் பின் ஒருவராக மர்மமான முறையில் கொலையாகின்றனர்.

ஏன்? எப்படி? என்ற கேள்விக்குறியோடு மூத்த போலீஸ் அதிகாரிகளுடன் இன்ஸ்பெக்டர் ரவி தீவிர ஆலோசனை செய்கிறார்.

அப்பொழுதுதான் காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் சம்பவம் நடைபெறுகிறது.

படத்தில் நடித்தவர்களுக்கு மட்டுமல்ல படம் பார்ப்பவர்களுக்கும் வியப்பூட்டும் வண்ணம் இந்தப் படம் இருக்கும் என்கிறார் ” இயக்குனர் நம்பிராஜ்.

இவர் பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்த தனது அனுபவத்தை கொண்டு இயக்கி உள்ளார்.

வி.ஆர். இண்டர்நேஷனல் மூவீஸ் சார்பில் ஏகனாபுரம் ரவி தயாரித்துள்ள ‘யாரது’ திரைப்படத்தில்
இன்ஸ்பெக்டராக வி. ரவி, மதுஸ்ரீ, போஸ் வெங்கட், பெசன்ட்நகர் ரவி, வையாபுரி, காளியப்பர், போண்டாமணி, பெஞ்சமின், விஜய்கிருஷ்ணராஜ், அனிதா, ஜானகி, ஜெயமணி ஆகியோருடன் கே. பாக்யராஜ் நடித்துள்ளனர்.

திண்டுக்கல் , சின்னாளபட்டி, சென்னையில் வளர்ந்துள்ள இதற்கு சபேஷ் — முரளி இசையையும், ரவிசுந்தரம் கேமராவையும், கோபிகிருஷ்ணா படத்தொகுப்பையும், ஆக்சன் பிரகாஷ் சண்டை பயிற்சியையும், நோபல் நடன பயிற்சியையும், கவனித்துள்ளனர்.

கதை திரைக்கதை வசனம் எழுதி நடிகர் நம்பிராஜ் இயக்கி உள்ளார்..

Director Nambiraj’s crime thriller titled Yaarathu

More Articles
Follows