தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் அதில் கச்சிதமாக பொருந்தும் நடிகர்களில் ஒருவராக உருவெடுத்திருக்கிறார் ‘கபாலி’ விஸ்வாந்த், தனது பிறந்தநாளை ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடியிருப்பது வைரலாகி வருகிறது.
‘வெளுத்து கட்டு’, ‘தோனி’, ’தடையற தாக்க’ என பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த விஸ்வந்த், ’அட்ட கத்தி’ படம் மூலம் கவனிக்க வைத்ததோடு, ‘கபாலி’ படத்தில் தனது இயல்பான நடிப்பு மூலம் பாராட்டப்பட்டவர்.
தற்போது பல
படங்களில் கதையின் நாயகனாகவும், வில்லன் உள்ளிட்ட பலதரப்பட்ட கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.
’கபாலி’ படத்தை தொடர்ந்து ’அண்ணாத்த’ படம் மூலம் மீண்டும் ரஜினி படத்தில் நடித்து வரும் விஸ்வாந்த், பிறந்தநாளை
‘அண்ணாத்த’ படக்குழு படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்கள்.
இந்த பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படத்தை
விஸ்வாந்த், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட, தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருவதோடு, ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
மேலும், நடிகர்களை வைத்து வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி வரும் பிரபல ஆடை வடிவமைப்பாளர் என்.ஜே.சத்யா, நடிகர் விஸ்வாந்தை வைத்தும் வித்தியாசமான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
இந்த புகைப்படங்களை சத்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, தற்போது அந்த புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.
வித்தியாசமான உடையில், வித்தியாசமான கெட்டப்பில் நடிகர் விஸ்வாந்த் இருக்கும் அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக் போட்டு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இப்படி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உயர்ந்து வரும் விஸ்வாந்த், சசிகுமார் நடிக்கும் படம் ஒன்றில் முக்கிய
கதாப்பாத்திரத்தில் நடிப்பவர்.
‘8 தோட்டாக்கள்’ வெற்றி நடிக்கும் ஒரு படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பவர், ‘அங்காடி தெரு’ மகேஷ் நடிக்கும் படம் ஒன்றில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.
கதையின் நாயகனாக சில படங்களில் நடித்து வந்தாலும், வில்லன், குணச்சித்திரம் என எந்த வேடமாக இருந்தாலும் நடிக்க ரெடியாக இருக்கும் விஸ்வாந்த், தனது எதார்த்தமான நடிப்பு மூலம் ரசிகர்களையும், திரையுலக பிரபலங்களையும் வெகுவாக கவர்ந்துள்ளார்.
மேலும், அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் தனது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருப்பவர், இயக்குநர் சிவா உள்ளிட்ட அண்ணாத்த படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்திருப்பதோடு, ரஜினி சார், நயன்தாரா மேடம், பிரகாஷ்ராஜ் சார், சூரி சார், வேல ராமமூர்த்தி சார், ஆகியோருடன் நடிப்பது எனக்கு கிடைத்த பெரிய பாக்கியம்.
இப்படி ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்ததற்கு காரணமாக இருந்த இயக்குநர் சிவா சார் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
Kabali fame Viswanth celebrated his birthday at Annaatthe shoot