மறைந்த நடிகர் ஜேகே ரித்தீஷின் மனைவிக்கு சிறை தண்டனை.. நீதி மன்றம் உத்தரவு..

மறைந்த நடிகர் ஜேகே ரித்தீஷின் மனைவிக்கு சிறை தண்டனை.. நீதி மன்றம் உத்தரவு..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாயகன், பெண் சிங்கம் படங்களில் நடித்தவர் ஜேகே ரித்தீஷ்.

ராமநாதபுரம் திமுக எம்பி யாகவும் இருந்தவர். 2019 இல் உடல் நல குறைவால் காலமானார்.

ரித்தீஷின் மனைவி ஜோதீஸ்வரி கரைக்குடியில் திருச்செல்வம் என்பவரிடம் 60 லட்ச ரூபாய்க்கு தங்க வைர நகைகளை வாங்கி இருக்கிறார்.

அதற்கு 20 லட்சத்திற்கான மூன்று காசோலைகளை வழங்கியுள்ளார்.

காசோலையில் பணம் இல்லாததால் திருப்பி வந்துள்ளது.

இதனால் திருச்செல்வம் நீதி மன்றத்தை நாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜோதீஸ்வரிக்கு 60 லட்ச ரூபாய் அபராதமும் 6 மாத சிறை தண்டனையும் விதித்தார்.

Jail sentence for late actor JK Rittish’s wife.. Court orders..

கங்குவா படத்திற்காக மாஸ் கெட்டப்பில் தோன்றும் சூர்யா

கங்குவா படத்திற்காக மாஸ் கெட்டப்பில் தோன்றும் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யாவின் கங்குவா கற்பனை கலந்த சாகச கதை என்று கூறப்படுகிறது. தயாரிப்பாளர்கள் சமீபத்தில் வரலாற்று பகுதிகளுக்கான படப்பிடிப்பை தொடங்கினர். சில நாட்களுக்கு முன்பு, கொடைக்கானலில் ஒரு ஷெட்யூலை முடித்துவிட்டு, அடுத்த ஷெட்யூலுக்கான ஆயத்தப் பணியை ஆரம்பித்தனர். . இதற்கிடையில், படத்திற்காக சூர்யா தனது உடலை மெருகேற்றி வருகிறார்.

சூர்யா ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் புதிய புகைப்படம் நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது.
கங்குவாவில் வலிமைமிக்க வீரனாக நடிக்க உடல் எடையை அதிகரித்து அசத்தலான உடலமைப்பிற்காக உழைத்து வருகிறார் சூர்யா.

Suriya’s mass transformation for ‘Kanguva’

அரசியலில் களம் காணும் வடிவேலு..!! உதயநிதியுடன் கூட்டணி?

அரசியலில் களம் காணும் வடிவேலு..!! உதயநிதியுடன் கூட்டணி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, ஃபகத் ஃபாசில், உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கும் படம் ‘மாமன்னன்’. இவர்களின் கதாபாத்திரங்களின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இணையத்தில் பரவியது.

இந்த படத்தில் வைகை புயல் வடிவேலு அரசியல்வாதியாக நடிப்பதாக சொல்லப்படுகிறது.

உதயநிதி நடித்த சிறந்த வேடங்களில் இதுவும் ஒன்று என்பதை அவரது ஃபர்ஸ்ட் லுக் உணர்த்துகிறது.
இதற்கிடையில், மாமன்னனில் ஃபஹத் பாசிலின் கதாபாத்திரம் மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

Vadivelu enters politics..!! Alliance with Udayanidhi stalin?

OFFICIAL அருள்நிதியின் ‘கழுவேத்தி மூர்க்கன்’ பட ரிலீஸ் தேதி

OFFICIAL அருள்நிதியின் ‘கழுவேத்தி மூர்க்கன்’ பட ரிலீஸ் தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சை.கௌதம்ராஜ் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் திரைப்படம் ‘கழுவேத்தி மூர்க்கன்’.

இப்படத்தில் ‘சார்பட்டா பரம்பரை’ புகழ் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்க, சந்தோஷ் பிரதாப், சாயா தேவி, முனிஷ்காந்த், சரத் லோஹிதஸ்வா, ராஜ சிம்மன், யார் கண்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.

இந்த படம் மே மாதம் ரிலீஸ் ஆகும் என்றும், விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் அருள்நிதி தனது தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், ’கழுவேத்தி மூர்க்கன்’ படத்தின் போஸ்டரை பட குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

மேலும், ’கழுவேத்தி மூர்க்கன்’ படம் மே 26 ஆம் தேதி வெளியாகும் என்று போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கழுவேத்தி மூர்க்கன்

arulnidhi’s Kazhuvethi Moorkkan release from may 26

உடற்பயிற்சி செய்ய முடியாமல் நீங்க பிஸி.? வந்துட்டு மொபைல் ஆப்.; டான்ஸ் மாஸ்டருக்கு கமல் ஆதரவு

உடற்பயிற்சி செய்ய முடியாமல் நீங்க பிஸி.? வந்துட்டு மொபைல் ஆப்.; டான்ஸ் மாஸ்டருக்கு கமல் ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சூது கவ்வும்’ தொடங்கி பல்வேறு வெற்றி படங்களில் நூற்றுக்கணக்கான சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்து தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குநர்களில் ஒருவராக உள்ள ஷெரீஃப்,.

எளிய நடனப் பயிற்சி மூலம் உடல் உறுதியை பேணுவதற்கு உதவும் வகையிலான புதிய முயற்சி ஒன்றை தொழில்நுட்பத்தின் உதவியோடு தொடங்கியுள்ளார்.

தனது ஜூபாப் ப்ரோ ஸ்டூடியோ (JOOPOP Pro Studio) மூலமாக வின்சென்ட் அடைக்கலராஜின் முதலீட்டோடு ஷெரீஃப் உருவாக்கியுள்ள ஜூபாப் (JOOPOP) நடன செயலியை உலக நாயகன் கமல்ஹாசன் துவக்கி வைத்தார்.

இந்த செயலியின் செயல்முறை விளக்கம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கிரவுன் பிளாசா ஹோட்டலில் நாளை (மே 12) நடைபெற உள்ளது.

ஜூபாப் செயலி குறித்து பேசிய ஷெரீஃப்…

“உடற்பயிற்சியின் முக்கியத்துவம் அனைவரும் அறிந்ததே. ஆனால், இன்றைய உலகில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவரவர் பணிகளில் பிசியாக இருப்பதால் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க முடிவதில்லை.

இதை கருத்தில் கொண்டு, ஒரு நாளைக்கு வெறும் ஐந்து முதல் பத்து நிமிடங்களிலேயே எளிய நடனப் பயிற்சி மூலம் உடல் நலத்தை பேணுவதற்காக இந்த செயலியை உருவாக்கி உள்ளோம்,” என்று கூறினார்.

கமல்ஹாசன்

தொடர்ந்து பேசிய அவர்…

“பள்ளி குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் நடனத்தை தொழிலாக மேற்கொள்ள விரும்புவோருக்கு என மூன்று விதமாக இந்த செயலி பிரிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

பயனர்கள் தங்களுக்கு தேவையான பகுதியை தேர்வு செய்து கொண்டு அவர்களுக்கு உரிய நடன பயிற்சிகளை மிகவும் எளிதாக மேற்கொள்ளலாம்,” என்றார்.

பள்ளிகள் இந்த செயலியை பயன்படுத்துவது குறித்து விளக்கிய ஷெரீஃப்…

“சுமார் 450 பள்ளிகளில் இந்த செயலியை ஏற்கனவே வெற்றிகரமாக பரிசோதித்துள்ளோம். அந்த பள்ளிகள் அனைத்தும் ஜூபாப் நடன செயலியை பெரிதும் வரவேற்றுள்ளன.

ஒவ்வொரு வகுப்பு மாணவர்களுக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள நடன பயிற்சிகளை வகுப்புகள் தொடங்குவதற்கு முன்னர் ஐந்து முதல் பத்து நிமிடம் வரை மேற்கொண்டால் மாணவர்களுக்கு உடற்பயிற்சி கிடைப்பதோடு அவர்கள் உள்ளங்களும் உற்சாகமடையும்,” என்று கூறினார்.

ஜூபாப் நடன செயலி குறித்து விளக்கிய போது உலகநாயகன் கமல்ஹாசன் மிகவும் பாராட்டியதாக கூறிய ஷெரீஃப், செயலியை துவக்கி வைத்ததற்காக அவருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.

இது குறித்து மேலும் விவரங்களுக்கு திரைப்பட நடன இயக்குநர் ஷெரீஃப்பை 9843261718 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

கமல்ஹாசன்

Kamal launches dance fitness app JOOPOP initiative by choreographer Sherif

விஜய்யின் ‘லியோ’ படத்தில் அர்ஜூன் சீன்ஸ் & மேக்அப் அப்டேட்ஸ்

விஜய்யின் ‘லியோ’ படத்தில் அர்ஜூன் சீன்ஸ் & மேக்அப் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து ‘லியோ’ படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு கடந்த மாதம் காஷ்மீரில் முடிவடைந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.

சென்னையில் 25 நாட்கள் ஷெட்யூல் நடக்கும் என்று கூறப்படுகிறது.

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் இரண்டு நாட்களுக்கு முன்பு புதிய தோற்றத்துடன் காணப்பட்டார். இவருக்கு கேரக்டர் டெஸ்ட் எடுக்கப்பட்டிருக்கிறது.

அதில் அர்ஜுனுக்கு செயற்கையான மேக்கப் பயன்படுத்தியுள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், அர்ஜுன் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பில் இன்று முதல் இணைகிறார்.

மேலும், அர்ஜுனைத் தொடர்ந்து, சஞ்சய் தத் மற்றும் ப்ரியா ஆனந்த் மீண்டும் நடிகர்களுடன் இணைவார்கள் மற்றும் அவர்களின் பாகங்களின் படப்பிடிப்பை முடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Arjun Scenes & Makeup Updates in Vijay’s ‘Leo’

More Articles
Follows