‘கபாலி’ முதல் ‘அண்ணாத்த’ வரை வேற லுக்.; ‘ஜெயிலரில் ரஜினிக்கு நியூ லுக்

‘கபாலி’ முதல் ‘அண்ணாத்த’ வரை வேற லுக்.; ‘ஜெயிலரில் ரஜினிக்கு நியூ லுக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் இயக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து வருகிறார்.

பான் இந்திய படமாக உருவாகி வரும் இந்த படத்தில் இந்திய சினிமாவின் பிரபலமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

மலையாளத்தில் இருந்து மோகன்லால், கன்னடத்தில் இருந்து சிவராஜ்குமார், தெலுங்கில் இருந்து வில்லன் நடிகர் சுனில், இந்தியில் இருந்து ஜாக்கி ஷெராப் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

நாயகிகளாக தமன்னா மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

ரஜினி

இந்த படத்திற்காக ரஜினிகாந்த் தாடி வளர்த்து வந்தார். சமீப காலமாக நரைத்த தாடியில் கொஞ்சம் கருப்பு டை அடித்து பொது நிகழ்ச்சிகளில் கூட காணப்பட்டார்.

இந்த நிலையில் தாடி முழுவதையும் ஷேவ் செய்துவிட்டு புது லுக்கிற்கு மாறி உள்ளார் சூப்பர்ஸ்டார்.

அவரது நியூ லுக் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் மும்பையில் நடைபெற்ற அம்பானி நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் தன் மகள் சௌந்தர்யாவுடன் கலந்து கொண்டார். அந்த புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கபாலி, காலா பேட்ட தர்பார் அண்ணாத்த ஆகிய படங்களில் ரஜினிகாந்த் தாடியுடன் காணப்பட்டார். தற்போது ‘ஜெய்லர்’ படத்தில் தாடி இல்லாத தோற்றத்திலும் ரஜினி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி

Nelson changed Rajini look for Jailer movie

OFFICIAL முதன்முறையாக பாலா & அருண் விஜய் இணையும் ‘வணங்கான்’ சூட்டிங் அப்டேட்

OFFICIAL முதன்முறையாக பாலா & அருண் விஜய் இணையும் ‘வணங்கான்’ சூட்டிங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வணங்கான்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பை முடித்து விட்டதாக படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு கடந்த மாதம் கன்னியாகுமரியில் தொடங்கியது.

மேலும் இந்த முதல் ஷெட்யூலில் படக்குழு முக்கிய காட்சிகளை படமாக்கியுள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் ஏப்ரல் 17ஆம் தேதி தொடங்குகிறது.

அருண் விஜய் நாயகனாக நடிக்க ​​ரோஷினி பிரகாஷ் நாயகியாக நடிக்கிறார். பிரபல நடிகர்களுடன் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, சில்வா இந்த படத்திற்கு ஆக்‌ஷன் காட்சிகளைக் கையாண்டுள்ளார்.

first time team up Bala and Arun Vijay

முதன்முறையாக வெப் சீரிஸில் விஜய்சேதுபதி.; 3வது முறையாக மணிகண்டனுடன் கூட்டணி

முதன்முறையாக வெப் சீரிஸில் விஜய்சேதுபதி.; 3வது முறையாக மணிகண்டனுடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் சீரிஸை அறிவித்துள்ளது.

இந்த வெப் சீரிஸில், விஜய் சேதுபதி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தேசியவிருது வென்ற இயக்குநர் M.மணிகண்டன் இயக்குகிறார்.

இந்திய அளவில் புகழ்மிக்க நடிகராக விளங்கும் விஜய்சேதுபதி தமிழில் வெப் சீரிஸில் அவர் நடிப்பது இதுவே முதல் முறை.

‘காக்கா முட்டை’, ‘ஆண்டவன் கட்டளை’ மற்றும் ‘கடைசி விவசாயி’ போன்ற விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட, சூப்பர்ஹிட் படைப்புகளை தந்தவர் இயக்குநர் M.மணிகண்டன்.

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் M.மணிகண்டன் கூட்டணி மீண்டும் இணைவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் பல மடங்கு எகிற வைத்திருக்கிறது.

இந்த புதிய ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் சீரிஸின் படப்பிடிப்பு இன்று மதுரை அருகே உசிலம்பட்டியில் எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது.

7C’s Entertainment Pvt Ltd (P ArumugaKumar) தயாரிக்கும் இந்த வெப் சீரிஸிற்கு இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் இசையமைக்க, சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

B அஜித் குமார் படத்தின் எடிட்டராகவும், இம்மானுவேல் ஜாக்சன் கலை இயக்குநராகவும் பணியாற்றுகிறார்கள். வெப் சீரிஸின் ஒலி வடிவமைப்பை அஜயன் K அடாத் மற்றும் ஆடை வடிவமைப்பை கவிதா கையாள்கின்றனர்.

இந்த வெப் சீரிஸில் பங்குபெறவுள்ள மற்ற நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Vijay Sethupathi first time acting in a web series

தோல்வியை வெற்றியாக்கியவர் ரஜினி.; ‘பாபா’ படம் என் தென்னிந்திய சினிமாவை முடிச்சிட்டு – மனீஷா கொய்ராலா

தோல்வியை வெற்றியாக்கியவர் ரஜினி.; ‘பாபா’ படம் என் தென்னிந்திய சினிமாவை முடிச்சிட்டு – மனீஷா கொய்ராலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1990-களில் வெளியான அர்ஜூனின் ‘முதல்வன்’ மற்றும் கமலின் ‘இந்தியன்’ ஆகிய இரு படங்களிலும் நாயகியாக நடித்தவர் மனிஷா கொய்ராலா.

இந்த இரு படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து மனீஷாவுக்கு ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு 2002ல் அமைந்தது.

ரஜினியுடன் ‘பாபா’ படத்தில் நாயகியாக நடித்தார் மனிஷா. ஆனால் அதன் பிறகு அவர் தமிழில் நடிக்கவில்லை.

இந்த நிலையில் இவரது சமீபத்திய பேட்டியில் ரஜினி பற்றியும் பாபா படம் குறித்தும் பேசியுள்ளார் மனீஷா.

‘2002ல் மிகப்பெரிய படமாக பேசப்பட்டது ‘பாபா’. எனவே அந்த படத்தின் மூலம் நிறைய வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்தேன்.

‘பாபா’ கொடுத்த பெரும் தோல்வியால் எனக்கு வாய்ப்புகள் அமையவில்லை. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அந்த படம் பெரும் தோல்வி அடைந்தது.

ஆனால் சமீபத்தில் 2022-ல் பாபா படத்தை ரீ-ரீலிஸ் செய்தார் ரஜினிகாந்த். அந்த படம் நல்ல வசூலை அள்ளியது. ஒரு தோல்வி படத்தை கூட ஹிட் ஆக்கியவர் ரஜினிகாந்த். அவருக்கு தோல்வி என்பதே கிடையாது.” என தெரிவித்துள்ளார் மனீஷா.

Rajinism Baba disaster Manisha Koirala open talk

‘இந்தியன் 2’ ஸ்பெஷல் வீடியோ குறித்து ஷங்கர் கொடுத்த செம அப்டேட்

‘இந்தியன் 2’ ஸ்பெஷல் வீடியோ குறித்து ஷங்கர் கொடுத்த செம அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’.

ஷங்கர் இயக்கி வரும் இந்த படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், விவேக் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

அனிருத் இந்த படத்திற்கான இசையை அமைத்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கு பெற்ற கமல்ஹாசன் மற்றும் சங்கர் இருவரும் ‘இந்தியன் 2’ படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளனர்.

அவர்கள் கூறியதாவது…

“வருகிற ஜூன் மாதத்துடன் படத்தின் வசன காட்சிகளை படமாக்கிவிடுவோம்.்அதன் பிறகு பாடல் மற்றும் VFX பணிகள் நடைபெறும்.

இசையமைப்பாளர் அனிருத்திடம் ஒரு குட்டிப் பாடல் கேட்டு இருக்கிறோம். அவரும் ஓகே சொல்லிட்டார்.

எனவே விரைவில் ‘இந்தியன் 2’ ஸ்பெஷல் வீடியோ வெளியாகும்’’ எனத் தெரிவித்தனர்.

director Shankar new update given for ‘Indian 2’

லோகேஷ் இயக்கத்தில் மட்டுமே சாத்தியம்.; விஜய் படத்தில் இணையும் தனுஷ்.?!

லோகேஷ் இயக்கத்தில் மட்டுமே சாத்தியம்.; விஜய் படத்தில் இணையும் தனுஷ்.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் பெரும்பாலும் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து ஒரே படத்தில் நடிப்பதில்லை. ஆனால் சமீப காலமாக முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

மணிரத்னம் இயக்கிய செக்கச் சிவந்த வானம் & பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தனர்.

மணிரத்னம் பெரிய இயக்குனர் என்பதால் அவர் கேட்டுக் கொண்டதற்காக பலரும் ஒத்துக்கொண்டனர்.

ஆனால் தற்போது இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் நடிக்க பல முன்னணி நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.்அவரும் அதற்கு ஏற்ப மல்டி ஸ்டார் படங்களை இயக்கி வருகிறார்.

‘மாஸ்டர்’ படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்திருந்தனர். ‘விக்ரம்’ படத்தில் கமலுடன் பகத்பாசில், விஜய் சேதுபதி மற்றும் கெஸ்ட் ரோலில் சூர்யா நடித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது உருவாகி வரும் லோகேஷின் ‘லியோ’ படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன் சஞ்சய்தத், பகத்பாசில் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

LUC பாணியில் உருவாகும் நிலையில் ‘விக்ரம்’ படத்தில் இடம்பெற்ற ரோலக்ஸ் கேரக்டரை போல ‘லியோ’ படத்தில் ஒரு முக்கியமான கேரக்டர் இடம் பெற உள்ளதாம். இதில் நடிக்க வைக்க தனுஷிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

Dhanush to join Vijay’s film directed by Lokesh

More Articles
Follows