Upcoming Movies

  • Upcoming Movies
  • July
  • Sep

Videos

  • Teasers
  • Trailers
  • Videos Songs
  • Short films
  • Motion Poster
  • Sneak Peek

Raid – Official Teaser

Movie: Raid Dialogues: Director Muthaiya Produced By: S.K.Kanishk, GK @ G.Manikannan Cast: Vikram Prabhu, Sri Divya, Ananthika,Rishi Rithvik, Soundararaja Directed By: Karthi Music: Sam Cs

Thalaikkavasamum 4 Nanbargalum Teaser

Written & Directed by: V.M.Rathnavel Produced by: V.M.Rathnavel Banner: Team productions Music: Rajprathop DOP – Seenuathitya Edit – Sethuramanan Action choreography – ThalapathiDinesh Dance choreography

Custody – Teaser (TAMIL)

Cast: Naga Chaitanya Akkineni, Krithi Shetty, Arvind Swami, Priyamani, Sharat Kumar, Sampath Raj, Premji Amaren, Vennela Kishore, Premi Vishwanath and many other notable actors. Technical

Red Sandal – Official Teaser

Cast : Vetri, Diya Mayuri, KGF Ram, MS Baskar, Ganesh Venkat Raman, kabali vishvanth, vinod Sagar, marimuthu,Ravi venkat Raman, Abhi Produced by: JN Cinemas Director

Latest post

செந்தில்



1980-90 களில் தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் செந்தில்.

சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், கார்த்திக், பிரபு, சத்யராஜ், விஜய், அஜித், விக்ரம், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

அதேபோல் இவரும் நடிகர் கவுண்டமணியும் இணைந்து நடித்த காட்சிகள் ஆண்டுகள் கடந்தாலும் இன்றைய தலைமுறை ரசிகர்களும் ரசித்து பார்க்கும் வகையில் உள்ளது.

கவுண்டமணி – செந்தில் காமெடிக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இந்நிலையில், நடிகர் செந்தில் தனது 72-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் பீமரத சாந்தி பூஜை நேற்று நடைபெற்றது.

இதில் செந்தில் மற்றும் அவரது மனைவி இருவரும் மாலை மற்றும் மோதிரம் மாற்றிக் கொண்டனர்.

இருவர் மீதும், 64 கலசங்களில் இருந்து புனித நீர் ஊற்றப்பட்டது.

நடிகர் செந்தில் அவரது மனைவி கலைச்செல்வி, மகன்கள் மணிகண்ட பிரபு, மிரிதிபிரபு மற்றும் குடும்பத்தினர் இந்த பூஜையில் பங்கேற்றனர்.

செந்தில்

Comedy actor Senthil visited the Thirukkadaiyur Abhirami temple

இளையராஜா



இசைஞானி இளையராஜா இசையமைக்கும் 1417வது படமான “நினைவெல்லாம் நீயடா” படத்தை எழுதி இயக்கி வரும் ஆதிராஜன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தன்னை இசையமைப்பாளர் மற்றும் சமூக ஆர்வலர் என்று சொல்லிக் கொள்ளும் ஜேம்ஸ் வசந்தன் என்பவர் ஒரு இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், இசைஞானி இளையராஜாவை பற்றி மிகவும் மட்டமான வார்த்தைகளால் விமர்சித்திருக்கிறார். இசைஞானி இந்தியாவின் அடையாளம்.

சிறந்த ஆன்மிகவாதி. உலகின் மிகச்சிறந்த 25 இசையமைப்பாளர்களில் 9 வது இடம் பிடித்து நம் நாட்டிற்கு பெருமை சேர்த்தவர். இளையராஜாவுக்கு நிகராக இன்னொருவர் பிறக்கவும் முடியாது.. இசையில் சிறக்கவும் முடியாது.

உலகமே கொண்டாடும் ஒரு இசைஞானியை ஒரு மிகச் சாதாரணமான… மறைமுகமாக ஊழியம் பார்த்து வயிறு வளர்த்து கொண்டிருக்கும் நாகரீகமற்ற ஜேம்ஸ் வசந்தன், மட்டமான வார்த்தைகளை பயன்படுத்தி மத அரசியல் செய்யும் நோக்கத்துடன் விமர்ச்சித்திருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.

சென்னையைத் தாண்டினால் யார் என்றே தெரியாத இவர் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் வாய்க்கொழுப்பின் வெளிப்பாடு. அவர் பயன்படுத்திய வார்த்தைகளை கவனித்து பார்த்தால் அவர் நோக்கம் தெளிவாகத் தெரிகிறது. பேட்டி எடுப்பவர்” நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்று தெரிந்து தான் பேசுகிறீர்களா?” என்று கேட்கும் போது கூட திமிர்த்தனமாக பதில் அளித்து இருக்கிறார்.

இதிலிருந்தே தெரிகிறது…. இவர் யாரோ வீசிய எலும்பு துண்டுக்குத் தான் குரைத்திருக்கிறார் என்பது. இளையராஜா ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவராலும் கொண்டாடப்படுபவர் என்பது உலகறிந்த விஷயம்.

திறமையின் உச்சத்தில் இருப்பவர்களுக்கும் புகழின் உச்சத்தில் இருப்பவர்களுக்கும் வித்யா கர்வம் இருக்கத்தான் செய்யும். உனக்கு ஏன் எரிகிறது?. குறைகுடங்கள் எல்லாம் கூத்தாடித் திரியும் போது நிறைகுடம் ததும்பினால்தான் என்ன?

உண்மையிலேயே ஒருவரை விமர்சிக்க விரும்பினால் அடிப்படை நாகரீகம் தெரிந்திருக்க வேண்டும். எவ்வளவு பெரிய சாதனையாளரை, ஒரு பாராளுமன்ற உறுப்பினரை இவ்வளவு மட்டமான வார்த்தைகளால் விமர்சிக்கும் உனக்கெல்லாம் பண்பாடு பற்றியும் பக்குவம் பற்றியும் பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது?

கோடான கோடி ரசிகர்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் இசைஞானியை இது போன்ற சில்லரைக
ள் சீண்டி பார்ப்பதை அனுமதிக்க முடியாது. இந்தியாவின் ஆகப்பெறும் அடையாளத்தை, விருதுகளுக்கெல்லாம் பெருமை சேர்த்த ஒரு மாமனிதரை… அவர் வாழும் காலத்திலேயே அசிங்கப்படுத்த நினைப்பவர்களை, என்னைப் போன்ற அவருடைய உண்மையான ரசிகர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.

ஜேம்ஸ் வசந்தன் உடனடியாக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அவதூறு பரப்பும் வீடியோவை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் இளையராஜா ரசிகர்கள், ஜேம்ஸ் வசந்தன் செல்லும் இடமெல்லாம் கூடிநின்று வசைமாரி பொழியும் சூழ்நிலை உருவாகும்.

தமிழ் திரையுலகில் உள்ள அத்தனை சங்கங்களும் இதனை வன்மையாக கண்டிக்க வேண்டும். ரஜினிகாந்த் கமலஹாசன் விஜயகாந்த் பாரதிராஜா பாலா வெற்றிமாறன் சசிகுமார் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களும் வசந்தனின் வாய்க்கொழுப்பை கண்டிப்பாக கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி

இவ்வாறு அந்த அறிக்கையில் ஆதிராஜன் கூறியுள்ளார்.

ஆதிராஜன்

ilayaraja music composeing in ninaivellam neeyada movie

ஐஸ்வர்யா ராய்



மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த விழாவில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், மணிரத்னம், சுஹாசினி, குஷ்பூ, ரேவதி, ஏஆர்.ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக இன்று சென்னை வந்திருந்தார் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்.

அரங்கத்திற்குள் நுழைவதற்கு முன்பு அங்கு அமைக்கப்பட்டிருந்த ஒரு பகுதியில் ஐஸ்வர்யா ராய் பேசினார்.

அவர் பேசும்போது.. “பொன்னியின் செல்வன் படத்திற்கு நீங்கள் அனைவரும் தந்த அன்பு மிகப்பெரியது.

உலகம் முழுவதும் இந்த படத்திற்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் சென்னையிலும் என ஒவ்வொரு வீட்டிலும் இந்த படத்தை பார்த்து ரசித்துள்ளனர்.

உங்களின் அன்பினால் எங்களுடைய ஒட்டுமொத்த பொன்னியின் செல்வன் படக்குழுவும் மகிழ்ச்சியில் உள்ளது” என ஆங்கிலத்தில் பேசினார்.

அதன் பின்னர்…. “உங்க எல்லாருடைய அன்புக்கும் நன்றி” என தமிழில் பேசினார் ஐஸ்வர்யா ராய்.

Aishwarya Rai speech at Ponniyin Selvan 2 audio launch

பொன்னியின் செல்வன்



மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த விழாவில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், மணிரத்னம், சுஹாசினி, குஷ்பூ, ரேவதி, ஏஆர்.ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாரதிராஜா பேசும் போது..

“ஒரு காலகட்டத்தில் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தை நான் டைரக்ட் செய்ய இருந்தேன். அந்தப் படத்தை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தயாரிக்க தயாராக இருந்தார். அப்போது வந்தியத் தேவன் கேரக்டரில் கமல்ஹாசனை நடிக்க வைக்க முடிவு செய்திருந்தோம்.

தற்போது மணிரத்னம் அந்த படத்தை இயக்கியுள்ளார். அவர் சிறந்த இயக்குனர் என பாரதிராஜா பாராட்டி பேசினார்.

வந்தியத்தேவன் கேரக்டரில் தற்போது கார்த்தி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வந்திய தேவன் கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்தால் சிறப்பாக இருக்கும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார் என்பதை பொன்னியின் செல்வன் முதல் பாக இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசியிருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Bharathiraja speech at Ponniyin Selvan 2 audio launch

துருவ் விக்ரம்



மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த விழாவில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், மணிரத்னம், சுஹாசினி, குஷ்பூ, ரேவதி, ஏஆர்.ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இதில் சிறப்பு விருந்தினர்களாக கமல்ஹாசன் கலந்துக் கொண்டார்.

சிலம்பரசன்

கமல் வருகையின் போது அரங்கமே அதிர்ந்தது. அதுபோல நடிகர் விக்ரமின் மகன் துருவ் வந்த போதும் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

நடிகர் சிலம்பரசன் அரங்கத்திற்கு நுழைந்தபோது அரங்கத்தில் எழுந்த கூச்சல்கள் அடங்க வெகு நேரமானது.

மிக மாஸாக கெத்தாக வந்து இறங்கினார் சிலம்பரசன். கார்த்தி விக்ரம் ஆகிய இருவருக்கும் நடுவில் அமர்ந்திருந்தார் சிலம்பரசன் ய.

நடிகர் விக்ரம் தலை அலங்காரமும் சிலம்பரத்தின் தலை அலங்காரமும் ஒன்றாக இருந்ததாக ரசிகர்கள் குறிப்பிட்டு படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

தற்போது அவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சிலம்பரசன்

Dhruv Vikram talks about kamal and Simbu at the PS2 audio launch

கமல்



லைகா மற்றும் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் 2’.

இந்த படத்தை மணிரத்னம் இயக்க ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, பிரபு, சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா தற்போது சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் கலந்து கொண்டனர்.

கமல்ஹாசன் மேடையில் பேசும் போது..

“பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இந்த படத்திற்காக நான் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளேன். அந்த வாய்ப்பு எனக்கு அமைந்தது.

சிறந்த சினிமா கொடுப்பது எங்களது கடமை. அதை என் சகோதரர் சிலம்பரசன் நன்கு அறிவார். ஏனென்றால் நானும் அவரும் குழந்தை பருவத்தில் இருந்து நடித்து வருகிறோம்” என பேசினார் கமல்ஹாசன்.

Kamal talks about Simbu at the PS2 audio launch

மாவீரன்



மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘மாவீரன்’.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்க, சுனில், மிஷ்கின், யோகி பாபு, சரிதா, யூடியூபர் மோனிஷா பிளெஸ்ஸி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.

‘மாவீரன்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் தனது படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார், மீதமுள்ள இன்னும் இரண்டு நாட்களில் படப்பிடிப்பு முடிவடையும்.

மேலும், இதற்கிடையில், கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியுடன் சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்கவுள்ளார்.

Sivakarthikeyan completes shooting for ‘Maaveeran’

விஜய்சேதுபதி



நடிகர் விஜய் சேதுபதி 1,000 புத்தகங்களை மதுரை சிறைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சென்னையில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில், சிறைக்கைதிகளுக்கு புத்தகம் வழங்க தனியாக ஹால் அமைக்கப்பட்டு, கைதிகளுக்கு புத்தகம் தானமாக வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து, பலரும் புத்தகங்களை தானமாக வழங்கி வந்தனர்.

இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி 1,000 புத்தகங்களை மதுரை சிறைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

சிறைச்சாலையில் செயல்படும் சிறை நூலகத்திற்கு 1,000 புத்தகங்களை அதிகாரியிடம் வழங்கினார்.

இதனை மதுரை மத்திய சிறைத்துறை துணைத் தலைவர் பழனி மற்றும் சிறைத்துறை காவல் கண்காணிப்பாளர் வசந்த கண்ணன் பெற்றுக்கொண்டனர்.

vijay sethupathi donated a thousand books to madurai jail

கேப்டன் மில்லர்



அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கேப்டன் மில்லர்’.

இப்படத்தில் தனுஷுடன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் மற்றும் நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளனர்.

‘கேப்டன் மில்லர்’ படத்தின் மூலம் தனுஷுக்கு ஐந்தாவது முறையாக ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்நிலையில், ஜி.வி.பிரகாஷின் சமீபத்திய அறிக்கை ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், ‘கேப்டன் மில்லர்’ அப்டேட் ……. ஆயிரத்தில் ஒருவன் Celebration of Life BGM-க்கு பிறகு கேப்டன் மில்லருக்காக படமாக்கப்பட்ட காட்சிகளுக்கு இசையமைத்துள்ளேன், கிட்டதட்ட 3,4 bgms படமாக்கப்பட்டு ஒத்திசைக்கப்பட்டது. mad bgms onway super excited” என ட்வீட் செய்துள்ளார்.

GV Prakash gives update on Dhanush’s ‘Captain Miller’




சிம்பு கௌதம் கார்த்திக் ப்ரியா பவானி சங்கர் கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்து தல’.

இந்த படம் நாளை மார்ச் 30ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தில் தன் அனுபவங்கள் குறித்து பிரியா பவானி சங்கர் பேசியதாவது…

“ஒரு நடிகைக்கு ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் அதிகம் நடிப்பதை விடவும் சவாலான கதாபாத்திரங்கள் சிலது கிடைப்பது சிறந்த ஒன்றுதான். அது கனவு நனவாகும் ஒரு தருணம்.

இயக்குநர் கிருஷ்ணா சார் தனது படங்களில் பெண் கதாபாத்திரங்களை வலுவான ஒன்றாக இருக்கும்படியே அமைப்பார்.

அந்த வகையில், அவருடைய ‘பத்து தல’ படத்தில் அப்படிப்பட்ட ஒரு பாத்திரத்தில் நடிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த படத்திற்கு தயாரிப்பாளர்கள் கே.இ.ஞானவேல்ராஜா மற்றும் ஜெயந்திலால் கடா ஆகியோர் மிகப்பெரிய ஆதரவை வழங்கியுள்ளனர். கௌதம் கார்த்திக்குடன் பணிபுரிந்தது அற்புதமான அனுபவம். அவர் ஒரு அர்ப்பணிப்புள்ள கலைஞர். தன்னுடைய நடிப்பில் சிறந்ததைக் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்.

சிலம்பரசனின் தோற்றமும் நடிப்பும் எப்போதும் ரசிகர்களை ஈர்க்கக்கூடியது. இந்தப் படத்தில் ஒவ்வொரு ஷாட் மீதும் அவரது அதீத அர்ப்பணிப்பு படம் பார்க்கும்போது தெரிய வரும்.

ஒவ்வொரு நடிகரும் தங்களின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் படம் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது.

ஒவ்வொரு பிரேமும் மிகவும் கச்சிதமாக இருப்பதை உழைப்பைக் கொடுத்து தொழில்நுட்ப வல்லுநர்கள் உறுதி செய்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையைக் கேட்டு வளர்ந்த நான், அவருடைய இசையமைப்பிலேயே திரையில் வருகிறேன் என்பது எனக்கு மிகவும் எமோஷனலான மற்றும் மகிழ்ச்சியான தருணம். குடும்பப் பார்வையாளர்களின் ரசனையை நிச்சயம் திருப்திப்படுத்தும் வகையில் பல எமோஷன்கள் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் என கமர்ஷியலான விஷயங்களை ‘பத்து தல’ கொண்டுள்ளது”.

இவ்வாறு தன் அனுபவங்களை பகிர்ந்தார் ப்ரியா பவானி சங்கர்.

ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜாவும், பென் ஸ்டுடியோஸ் சார்பில் ஜெயந்திலால் கடாவும் தயாரித்திருக்கும் படம் ‘பத்து தல’. சிலம்பரசன் டிஆர், கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கெளதம் வாசுதேவ் மேனன், கலையரசன், டீஜே அருணாசலம், அனு சித்தாரா மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ஓபிலி என் கிருஷ்ணா இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு ஃபரூக் ஜே பாஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பாளராகவும் மிலன் கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர்.

Actress Priya Bhavani Shankar talks about working in Pathu Thala




‘விடுதலை பார்ட் 1’, மார்ச் 31 அன்று திரையரங்குகளுக்கு வருகிறது.

இதனிடையே வெற்றிமாறன் தனது 25 உதவி இயக்குனர்களுக்கு படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாக நிலம் வாங்கியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூர் அருகே தனது உதவியாளர்களுக்கு தலா ஒரு கிரவுண்ட் நிலம் வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், வெற்றிமாறன் உதவியாளர்களுக்கு அங்கு வீடு கட்டி அல்லது விவசாயத்திற்கு பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.

நிலத்தை விற்கக் கூடாது என்று கடுமையாக அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Vetrimaaran’s unique gift to his assistants ahead of ‘Viduthalai Part 1’ release!

குஷ்பூ



எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் பிரபலமான பாடலான ‘நாட்டு நாடு’ 95வது அகாடமி விருதுகளில் ‘சிறந்த ஒரிஜினல் பாடல்’ பிரிவில் அகாடமி விருதை வென்ற முதல் முழுமையான இந்தியப் பாடலாக அமைந்தது.

இயக்குநர் ராஜமௌலி மற்றும் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இருவரையும் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்று வருகின்றனர்.

நடிகையும் தயாரிப்பாளருமான குஷ்பு சுந்தர் இயக்குனர் ராஜமௌலி மற்றும் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணியை அவர்களது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து கூறினார்.

மேலும், ஹைதராபாத்தில் இருந்தபோது பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியையும் சந்தித்தார்.

குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ராஜமௌலி மற்றும் கீரவாணி உடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்துகொண்டு, “இந்திய சினிமாவின் பெருமைகளான எஸ்.எஸ். ராஜமௌலி காரு மற்றும் ஆஸ்கார் விருது வென்ற எம்.எம். கீரவாணி காரு மற்றும் அவர்களின் அழகான கருணையுள்ள துணைவர்கள் ஆகியோரை ஹைதராபாத்தில் உள்ள அவர்களது இல்லத்தில் சந்தித்தேன். ஆரோக்கியமான ஆடம்பரமான காலை உணவுடன். வெற்றி தங்களை மிகவும் உறுதியாக நம்புபவர்களை பாதிக்காது. இந்த அற்புதமான மனிதர்கள் அதை நிரூபிக்கிறார்கள்” என கூறினார்.

குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சிரஞ்சீவி உடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளார்.

Khushbu meets Rajamouli and MM Keeravani

Follows