நவம்பர் 29 – ல் வெளியாகும் மெரினா புரட்சி..!

நவம்பர் 29 – ல் வெளியாகும் மெரினா புரட்சி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

marina puratchiகாலாகாலத்திற்கும் தமிழ் மக்களால் போற்ற வேண்டிய ஒரு வரலாற்று ஆவணமாக மெரினா புரட்சி விளங்கும் – தொல் திருமாவளவன்!

2017 ஜனவரியில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழர்கள் நடத்திய அறவழி போராட்டத்தைப் பற்றிய புலனாய்வு ஆவண திரைப்படம் ‘மெரினா புரட்சி’. ஏற்கனவே 13 நாடுகளில் திரையிடப்பட்டு உலகத் தமிழர்களின் பாராட்டைப் பெற்ற மெரினா புரட்சி, நார்வே தமிழ் திரைப்பட விழா விருதையும், கொரிய தமிழ் சங்கத்தின் விருதையும் வென்றுள்ளது. இயக்குனர் M.S.ராஜ் இயக்கத்தில் நாச்சியாள் பிலிம்ஸ் தயாரித்துள்ள மெரினா புரட்சி வரும் நவம்பர் 29 அன்று திரைக்கு வருகிறது. இந்த திரைப்படத்தை சிறப்புக் காட்சியில் அரசியல் தலைவர்கள் திரு தொல் திருமாவளவன் MP, திரு தனியரசு MLA, திரு வேல்முருகன் EX MLA, திரு திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் பார்த்து படக்குழுவை வெகுவாக பாராட்டினர்.

தொல் திருமாவளவன் அவர்கள் பேசும்போது “மத்தியில் ஆளக்கூடியவர்கள் பீட்டா என்ற விலங்கு நல அமைப்போடு இணைந்து நம்முடைய பண்பாட்டு நிகழ்வான ஜல்லிக்கட்டை தடுக்க எவ்வாறு சதித்திட்டம் தீட்டினார்கள்.. தமிழக அரசியல் களம் எந்தளவுக்கு இந்த போராட்டத்தில் பாத்திரம் வகித்தது..தமிழக அதிகார வர்க்கம் எந்தளவுக்கு இந்த போராட்டத்தை சிதறடிக்க முயற்சி செய்தது..என்பதை ஆதாரங்களோடு போராட்டத்தில் பங்கெடுத்தவர்களின் வாக்குமூலங்களுடன் உருவாக்கியிருக்கிறார்கள். காலாகாலத்திற்கும் தமிழ் மக்களால் போற்ற வேண்டிய ஒரு வரலாற்று ஆவணமாக மெரினா புரட்சி விளங்கும் ” என்று பாராட்டினார்.

திரு தனியரசு MLA பேசும்போது ” மெரினா புரட்சி தமிழ் மக்களின் போராட்ட வடிவத்திற்கு கிடைத்த மகத்தான அங்கீகாரம்.. நம்மை வலிமைப்படுத்துகிற ஒரு படம்..வருங் காலத்தில் தமிழ் மக்களுக்கு பல்வேறு உரிமைகள் மறுக்கப்படுகிற காலகட்டத்தில் ஒரு போராட்டத்தை எப்படி அறவழியில் போராட வேண்டும் என்ற உந்துதலையும் நம்பிக்கையையும் தருகிற படம் ” என்று பேசினார்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு வேல்முருகன் பேசும்போது “வரலாறு சிறப்பு மிக்க ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கான ஆரம்ப விதை மெரினாவில் அன்று விதைக்கப்பட்டது..எப்படி அது லட்சக்கணக்கான மக்களை சென்றடைந்தது என்பதை நாளைய நம்முடைய தமிழ் சமூகம் தெரிந்து கொள்கிற வகையில் மிகச்சிறப்பாக எடுத்து தந்திருக்கிறார்கள்.”என்று பேசினார்.

திரு திருமுருகன் காந்தி பேசும்போது ” ஜல்லிக்கட்டு போராட்டம் இந்திய அரசு தமிழர்களின் பண்பாட்டை நசுக்குவதற்கு எதிராக கிளர்ந்தெழுந்த போராட்டம்.. அரசியல் தலைவர்கள் ஏமாற்றுவதற்கு எதிரான போராட்டம்.. இந்த போராட்டத்தில் பொதுவெளியில் மறைக்கப்பட்ட தகவல்களை சிறப்பாக புலனாய்வு செய்து திரைப்படமாக தந்துள்ளனர்..இந்த திரைப்படத்தை தமிழர்கள் கொண்டாட வேண்டும்.. எல்லா இடங்களுக்கும் தமிழர்கள் கொண்டு சேர்க்க வேண்டும் ” என்று கேட்டு கொண்டார்.

கார்த்தி அறிமுகம் செய்து வைத்த ZEE தமிழ் சினி அவார்ட்ஸ் 2020

கார்த்தி அறிமுகம் செய்து வைத்த ZEE தமிழ் சினி அவார்ட்ஸ் 2020

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Karthi launched Zee Cine Awards Tamil 20202008 இல் துவங்கப்பட்ட ZEE தமிழ் பல்வேறு புது முயற்சிகளை செய்து வெற்றிகரமாக இயங்கி வருகின்றது. மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற ZEE தமிழ் சமீபத்தில் zee தமிழ் குடும்பம் விருதுகள் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை தொடர்ந்து தற்போது புது முயற்சியாக ZEE தமிழ் சினி அவார்ட்ஸ் நிகழ்ச்சியை நடத்த உள்ளனர்.

திரையுலகத்தில் சிறந்த நட்சத்திரங்களை ஊக்குவிக்கும் விதமாக முதன்முறை திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற இருக்கிறது.

இந்த விழாவின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.

ஒரு வருடத்தில் ரிலீஸ் ஆகும் திரைப்படங்களில் சிறந்த கலைஞர்களை அந்தந்த பிரிவுகளின் கீழ் தேர்ந்தெடுத்து விருது வழங்க உள்ளனர்.

இதற்காக zee தமிழ் 5 பேர் கொண்ட தேர்வு குழு ஒன்றை ஏற்பாடுசெய்துள்ளனர். இந்த தேர்வு குழுவில் சுஹாசினி மணி ரத்னம், கெளதம் வாசுதேவ் மேனன், பரத் பாலா, பரத்வாஜ் ரங்கன், கரு பழனியப்பன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தேர்வு குழுவினர்களை . சுஜீ பிரபாகரன் மற்றும் தமிழ் தாசன் ஆகியோர் வரவேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, விழாவை துவங்கி வைத்தார்.

சுஜீ பிரபாகரன் பேசியவை : zee தமிழ் துவங்கி 11 வருடங்களுக்கு மேல் ஆகியுள்ளது. பல புது முயற்சிகளை செய்துள்ளோம். தற்போது உங்கள் அனைவரின் ஆதரவோடு ZEE தமிழ் சினி அவார்ட்ஸ் நிகழ்ச்சியை தொடங்கி இருக்கிறோம். இதற்கு உறுதுணையாக இருக்கும் தேர்வு குழு நபர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் தாசன் பேசியவை : இந்தநாள் zee தமிழின் முக்கியமான நாள். இந்த விழாவை நடத்த சென்ற வருடம் முயற்சித்தோம். தற்போது தான் இதை நடத்த முடிந்தது. திரைப்படத்திற்கும், தொலைக்காட்சிக்கு இடையே ஒரு பெரிய உறவை ஏற்படுத்தும் முயற்சியாக இந்த விருது விழா இருக்கிறது.

கடந்த நான்கு வருடத்தில் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 700 படங்கள் வெளியாகியதில் zee தமிழ் 120 முதல் 130 படம் வரை திரைப்பட உரிமையை கைப்பற்றியது. அதில் 70 க்கும் மேற்பட்ட படங்கள் 1 கோடிக்கும் குறைவான பட்ஜட்டில் எடுக்கப்பட்ட சிறிய படங்கள். அந்த படங்கள் அனைத்திற்கும் எங்களது ஆதரவை நாங்கள் அளித்துள்ளோம்.

மேலும் இன்னும் அதிக திரைப்படங்களை நாங்கள் ஊக்குவிக்க இருக்கிறோம். அதன் தொடக்கமாக இந்த zee தமிழ் சினி அவார்ட்ஸ் நிகழ்ச்சியை துவங்குகிறோம். இந்த விருதுகளுக்கான தேர்வுகள் மிகவும் நேர்மையாக நடைபெறும்.

பரத்வாஜ் ரங்கன் பேசியவை : zee தமிழ் சினி அவார்ட்ஸ் தேர்வு குழுவில் இணைவதில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. சிறந்தமுறையில் தேர்வுகள் நடைபெறும்.

கரு பழனியப்பன் பேசியவை : பல விருது விழாக்களில் கலந்து கொண்டுள்ளேன், இந்த zee தமிழ் சினி அவார்ட்ஸ் 2020 இல் கலந்துகொள்ள முக்கிய காரணம் நிர்வாகம் தலையிடாமல் நாங்கள் 5 பேர் மட்டும் சிறந்த படங்களை தேர்வு செய்வதற்கான உரிமையை வழங்கியதுதான்.

தமிழ் சினிமாவின் பெருமை மற்ற மாநிலங்களிலும் இன்னும் அதிகம் தெரிய வைக்க எளிதாக அமைகிறது. பிற மாநில மக்களும் சிறந்த கலைஞர்களை தேர்வு செய்யலாம்.

பரத் பாலா பேசியவை : இந்த விழாவிற்கும், தேர்வு குழுவிற்கும் என்னை இணைத்ததிற்கு நன்றி. இந்த விழாவை விருது வழங்கும் விழாவாக எண்ணாமல் திறமைக்கு தரும் அங்கீகாரம் என அனைவரும் என்ன வேண்டும்.

எதிர்காலத்தில் திரைப்பட கலைஞர்கள் zee தமிழ் அவார்ட்ஸ் எப்படியாவது பெற வேண்டும் என்ற எண்ணம் வரவைக்கும் அளவுக்கு இந்த விருது வழங்கும் விழா இருக்க போகிறது.

கெளதம் வாசுதேவ் மேனன் பேசியவை : மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது இந்த தேர்வு குழுவில் இணைந்ததற்க்கு. இதன் மூலம் பார்க்காத திரைப்படங்களை பார்ப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கிறது. நேரம் இல்லாவிட்டாலும் அதற்கான நேரத்தை செலவிட்டு காண இருக்கிறேன்.

சுபாஷினி மணிரத்னம் பேசியவை : இந்த விருதுக்கான தரம் முதன்மையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அந்த அளவு தேர்வுக்குழு அமைந்துள்ளது.

என் அம்மா ZEE தமிழ் தொலைக்காட்சியை விரும்பி பார்த்து வருபவர். இந்த விருது விழாவில் இணைந்ததை அறிந்த என் அம்மா மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

நடிகர் கார்த்தி பேசியவை : ZEE தமிழுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தேர்வுக் குழுவினர் மிகப்பெரிய பொறுப்பை எடுத்துள்ளனர், கடினமான வேலைதான். நிறைய படங்கள் பார்க்க வேண்டியிருக்கும்.

திரைத்துறையில் எல்லாருக்குமே விருது வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். பத்திரிக்கையில் வரும் சிறிய வார்த்தை கூட கலைஞர்களை உற்சாகப்படுத்தும். அதற்கு தகுந்தாற்போல் இந்த நிகழ்ச்சி நடைபெறுவது சிறப்பு.

Actor Karthi launched Zee Cine Awards Tamil 2020

Actor Karthi launched Zee Cine Awards Tamil 2020

BREAKING ரஜினி (எ) வெற்றுபிம்பம் தூளாகும்; 2021 அதிசயம் அதான் – சீமான்

BREAKING ரஜினி (எ) வெற்றுபிம்பம் தூளாகும்; 2021 அதிசயம் அதான் – சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Seeman reaction to Rajinis statement about 2021 election wonders சற்றுமுன் கோவாவில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை விமான நிலையத்தில் சந்தித்தார்.

அப்போது 2021 ஆம் ஆண்டு தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிசயத்தையும் அற்புதத்தையும் மக்கள் 100க்கு 100 சதவீதம் நிகழ்த்துவார்கள் என நடிகர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது..

அதில், “ஆம்! அதிசயம் நிகழும். தான் என்ன பேசினாலும் அது செய்தியாகும் என்கிற நினைப்பிலும், மிதப்பிலும் செய்தி அரசியல் செய்து, அதீத ஊடக வெளிச்சம் மூலம் ஊதிப் பெரிதாக்கப்பட்ட ரஜினிகாந்த் எனும் வெற்றுபிம்பம் இனமானத் தமிழார்களால் தூள் தூளாகும் அதிசயம் அற்புதம் 2021ல் நடக்கும், நடந்தே தீரும்.” என பதிவிட்டுள்ளார் சீமான்.

Seeman reaction to Rajinis statement about 2021 election wonders

சினிமாவில் வெற்றிடமிருக்கு; ரஜினி-கமலுக்கு திருமுருகன் காந்தி பதிலடி

சினிமாவில் வெற்றிடமிருக்கு; ரஜினி-கமலுக்கு திருமுருகன் காந்தி பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thirumurugan Gandhi talks about Rajini and Kamal தமிழக அரசியலில் மிகப்பெரிய ஆளுமைகளாக இருந்த கருணாநிதி மற்றும் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக ரஜினி தெரிவித்தார்.

தற்போது உள்ள தமிழக அரசியல் தலைவர்களில் மிகப்பெரிய ஆளுமை இல்லை என அடிக்கடி தெரிவித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இதுகுறித்து திருமுருகன் காந்தி அவர்கள் கூறியதாவது…

ரஜினி குறித்த கேள்விகளுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. எங்களின் கேள்விக்கு அவர் பதிலளிப்பதில்லை.

சினிமாவில் தான் வெற்றிடம் உள்ளது. சிவாஜி கணேசன் மறைவுக்கு பின்னர் அவர் இடத்தில் யாரும் இல்லை.

ரஜினி கமல் இருவரும் 40 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் இருந்தாலும் சிவாஜி இடத்தை அவர்களால் நெருங்க முடியவில்லை. சிவாஜி விட்டு சென்ற வெற்றிடம் அப்படியே இருக்கு” என தெரிவித்தார்.

Thirumurugan Gandhi talks about Rajini and Kamal

BREAKING கமலுடன் இணைந்தால் யார் முதல்வர் வேட்பாளர்?; ரஜினி சூப்பர் பதில்

BREAKING கமலுடன் இணைந்தால் யார் முதல்வர் வேட்பாளர்?; ரஜினி சூப்பர் பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini clarifies who will be CM Candidate if alliance with Kamal partyகோவாவில் நேற்று நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதை ரஜினி பெற்றார்.

இன்று சென்னை திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் கூறியதாவது…

“நான் வாங்கிய சிறப்பு விருதுக்கு தமிழக மக்கள் தான் காரணம். எனவே அவர்களுக்கு அந்த விருதை சமர்ப்பிக்கிறேன்.

கூட்டணி அமைத்தால் யார் முதல்வர் வேட்பாளர் என்பது இப்போது ஒன்றும் சொல்ல முடியாது.

தேர்தல் நேரத்தில் கட்சி நிர்வாகிகள் எடுக்க வேண்டிய முடிவு.” என்று ரஜினி கூறினார்.

Rajini clarifies who will be CM Candidate if alliance with Kamal party

BREAKING 2021ல் தமிழக மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள்..; ரஜினி நம்பிக்கை

BREAKING 2021ல் தமிழக மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள்..; ரஜினி நம்பிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TN Peoples will make wonders in 2021 election result says Rajiniகோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கோல்டன் ஐகான் என்ற வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்ற ரஜினிகாந்த் சற்றுமுன் சென்னை திரும்பினார்.

அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது…

“நான் வாங்கிய சிறப்பு விருதுக்கு தமிழக மக்கள் தான் காரணம். எனவே அவர்களுக்கு அந்த விருதை சமர்ப்பிக்கிறேன்.

2021ஆம் ஆண்டு அரசியலில் தமிழக மக்கள் மிகப்பெரிய அதிசயத்தை, அற்புதத்தை 100க்கு 100 சதவிகிதம் நிகழ்த்துவார்கள்” என நம்பிக்கையுடன் தெரிவித்தார் ரஜினிகாந்த்.

TN Peoples will make wonders in 2021 election says Rajini

More Articles
Follows