கேஜே. யேசுதாஸுக்கு பிறகு பாடகர் வேல்முருகனுக்கு கிடைத்த கௌரவம்

கேஜே. யேசுதாஸுக்கு பிறகு பாடகர் வேல்முருகனுக்கு கிடைத்த கௌரவம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் விருதகிரீஸ்வரர் ஆலய குடமுழுக்கு கும்பாபிஷேக நிகழ்ச்சியில் திரைப்பட பின்னணி பாடகர் நாட்டுப்புற இசை பாடகருமான டாக்டர் வேல்முருகன் அவர்களுக்கு தர்மபுரம் ஆதினத்தால் “கிராமிய இசை கலாநிதி” என்கிற பட்டத்தையும் தர்மபுரம் அதினத்தின் உடைய ஆஸ்தான பாடகராகவும் அறிவித்துள்ளது.

இதற்கு முன்பாக டாக்டர். யேசுதாஸ் அவர்கள் இந்த பொறுப்பில் இருந்து வந்தார்.

அவர்களுக்கு பிறகு முதல் முறையாக ஒரு நாட்டுப்புற பாடகரை தர்மபுரம் ஆதினம் சிவாலயங்களுக்கு ஆஸ்தான பாடகராக அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

“ஆன்மிக காவலர் ” அகர்சந்த் அவர்கள் “தொழிலாளர் துறை அமைச்சர் ” சி. வெ. கணேசன், “இயக்குனருமான இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் “கே. பி. அசோக் குமார் அவர்களின் முன்னிலையில் திரைப்பட பின்னணி பாடகர் நாட்டுப்புற இசை பாடகர் டாக்டர்.

வேல்முருகன் அவர்களுக்கு “கிராமிய இசை கலாநிதி “எனும் பட்டத்தை வழங்கி தங்கப்பதக்கத்தை அளித்து தர்மபுரம் ஆதினம் நாட்டுப்புற இசை கலைக்கு ஒரு கவுரவத்தை அளித்துள்ளது.

Singer Vel Murugan gets new recognition

‘சீயான்’ விக்ரம் மகன் துருவ் எழுதி பாடிய ராப் சாங் வைரல்

‘சீயான்’ விக்ரம் மகன் துருவ் எழுதி பாடிய ராப் சாங் வைரல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சீயான்’ விக்ரம் நடிப்பில் உருவான ‘மகான்’ படத்தில் இடம்பெற்ற ‘மிஸ்ஸிங் மீ ..’ எனத் தொடங்கும் ராப் பாடலை பாடி, நடிகர் துருவ் விக்ரம் பாடகராக அறிமுகமாகிறார்.

‘சீயான்’ விக்ரம் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘மகான்’ திரைப்படம் பல சாதனைகளை படைக்கவிருப்பது உறுதியாகி உள்ளது.

இத் திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டதிலிருந்து ரசிகர்களின் உற்சாகத்துடன் சரியான அதிர்வை ஏற்படுத்தி வருகிறது.

இந்த திரைப்படம் ‘சீயான்’ விக்ரமின் 60வது படம் என்பதுடன், இந்தப் படத்தில் அவருடைய மகனும், நடிகருமான துருவ் விக்ரமுடன் முதன்முறையாக இணைந்து நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் உலகளவில் வெளியாகிறது.

இதற்கு ஒரு நாள் முன்னதாக நடிகர் துருவ் விக்ரம் முதன்முதலாக சொந்த குரலில் பாடிய ‘மிஸ்ஸிங் மீ ..’ எனத் தொடங்கும் ராப் பாடல் வெளியாகிறது.

துள்ளலான நடனத்துடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகி இருக்கும் ‘ மிஸ்ஸிங் மீ…’ என்ற பாடலை பாடலாசிரியர் விவேக்குடன் இணைந்து நடிகர் துருவ் விக்ரமும் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

‘சீயான்’ விக்ரம் நடிப்பில் உருவான ‘மகான்’ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கிறார்.

இதனை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்துள்ளார். இந்தப்படத்தில் ‘சீயான்’ விக்ரமுடன் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா மற்றும் சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

‘மகான்’ திரைப்படம் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் ப்ரைம் வீடியோவில் பிரத்யேகமாக உலகம் முழுவதும் திரையிடப்படுகிறது. தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் வெளியாகிறது. கன்னடத்தில் இந்த படத்திற்கு ‘மகா புருஷா’ என பெயரிடப்பட்டிருக்கிறது.

மகான் = தனக்கென சில இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு தனிமனித சுதந்திரத்துடன் லட்சிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இதன்போது அவரது குடும்பத்தை விட்டு அவர் வெளியேற வேண்டிய சூழல் உருவாகிறது. கோடீஸ்வரனாக வேண்டும் என்ற தனது கனவு நனவான பிறகு, தன்னுடைய சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள வாரிசு இல்லையே..! என்ற இழப்பை உணர்கிறார். அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி நல்லதொரு தந்தையாக வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் தொடர்ந்தாரா.. என்பதை பரபரப்பான அதிரடி மிகுந்த படைப்பாக ‘மகான்’ உருவாகியிருக்கிறது.

எதிர்பாராத தொடர் நிகழ்வுகளின் வழியாக நாயகனது வாழ்க்கை எப்படி பயணிக்கிறது என்பதை ஆக்சன் திரில்லருடன் விவரிக்கிறது ‘மகான்’ படத்தின் திரைக்கதை.

‘மிஸ்ஸிங் மீ..’ என தொடங்கும் பாடலுக்கான இணைப்பு…: https://www.youtube.com/watch?v=G5ur_C-L7ZU

Dhruv Vikram’s missing me rap song goes viral

மண்ணை கவ்வியது ‘வீரமே வாகை சூடும்’..; விஷால் விழித்துக் கொள்வாரா..??

மண்ணை கவ்வியது ‘வீரமே வாகை சூடும்’..; விஷால் விழித்துக் கொள்வாரா..??

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஷால்.

ஆனால் இவரது சமீபத்திய படங்களின் ரிசல்ட் இவரை பின்னணிக்கு கொண்டு போகும் வகையில் உள்ளது.

விஷால் தயாரித்து அவரது நடிப்பில் வெளியான வீரமே வாகை சூடும் திரைப்படம் கடந்த வாரம் பிப்ரவரி 4ல் ரிலீசானது.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த படம் வெளியானது.

பலமுறை இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றி மாற்றி அறிவிக்கப்பட்டது.

2022 ஜனவரி பொங்கலுக்கு என அறிவித்தனர். பின்னர் தெலுங்கில் மட்டும் ரிலீஸ் என அறிவித்தனர்.

அதன்பின்னர் குடியரசு தினமான ஜனவரி 26ல் ரிலீஸ் என்றனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் குழப்பமானது.

ஆனால் பிப்ரவரி 4ல் வெளியானது.

மேலும் படத்திற்கு போதுமான விளம்பரங்களும் இல்லை. இதுவும் படத்திற்கு பெரும் பின்னடைவானது.

இந்த படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. இதனால் திரையரங்குகளில் கூட்டம் இல்லை.

சரி தமிழகத்தில் தான் இந்த நிலை என்றால்… தெலுங்கு, கன்னட மாநிலங்களிலும் படத்திற்கு கூட்டம் இல்லவே இல்லையாம்.

இத்துடன் ஆந்திரா, தெலுங்கானாவில் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான ஆக்சன், சக்ரா, அயோக்கியா, எனிமி என எந்தப்படமும் பெரிய வெற்றியை பெறவில்லை.

அந்த அந்த படத் தயாரிப்பாளர்களுக்கு கணிசமான நஷ்டத்தை ஏற்படுத்தின.

இந்த நிலையில் ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படமும் தோல்வி வரிசையில் இணைந்துள்ளது.

இனியாவது விஷால் விழித்துக் கொள்வாரா..??

Will Vishal concentrate on story selection ?

‘மகான்’ படத்தை கண்டிப்பாக பார்க்க மகத்தான காரணங்கள் இதோ…

‘மகான்’ படத்தை கண்டிப்பாக பார்க்க மகத்தான காரணங்கள் இதோ…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆக்‌ஷன் த்ரில்லர் ரசிகர்கள் மற்றும் ஆர்வமிகு திரைப்பட காதலர்கள், இனி அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை, ஏனெனில் ப்ரைம் வீடியோ, மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, சீயான் விக்ரம் நடித்த ‘மகான்’ படத்தை பிப்ரவரி 10 ஆம் தேதி திரையிடுகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் ‘மகான்’, கன்னடத்தில் ‘மஹா புருஷா’ என்ற பெயரில் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக உலகம் முழுதும் வெளியாகவுள்ளது. ரிலீஸுக்கு முன்னதாகவே எதிர்பார்ப்புகள் உச்சத்தில் இருக்கும் நிலையில், திரைப்படக் காதலர்கள் வெகுஜன ரசிகர்கள் ஆகியோருக்கு, இந்தப்படம் மிகச்சிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தை தரும் என்பதற்கான முக்கிய அம்சங்கள் உங்களுக்காக இங்கே..

நடிகர் சீயான் விக்ரம் நடிக்கும் 60 வது படம் : திரையுலகில் பல சிறந்த கதைகளை உருவாக்கியதற்காக புகழ் பெற்ற இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘மகான்’ திரைப்படம் முன்னணி நடிகர் சீயான் விக்ரமின் 60வது படமாகும்.

இந்த காரணம் நீங்கள் உற்சாகமடைய போதுமானதாக இல்லை எனில் இதோ அடுத்தது.. நிஜ வாழ்க்கையில் அப்பா-மகன் இரட்டையர்களான சீயான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ஆகியோர், ரீல்-லைஃப் அப்பா மகனாக முதல் முறையாக இந்த படத்தில் நடிக்கிறார்கள் என்பது இப்படத்தின் முக்கிய சிறப்பம்சம் ஆகும்.

ஒரு அட்டகாசமான எண்டர்டெயினர்: ‘மகான்’ படத்தின் டிரெய்லர் வெளியானபோது அதன் உலகின், சிறு பார்வையை நமக்கு காட்டியது.

சீயான் விக்ரம் மற்றும் துருவ் ஆகியோர் தங்களின் நேர்த்தியான தோற்றத்தில், கதாப்பாத்திரத்தில் பொருத்தமாகவும், அழகாகவும் இருப்பதைக் காணும் போது நம் அனைவருக்கும் ஒரு விருந்து இருப்பது உறுதியானது.

படைப்பாளிகள் வெளியிட்ட இப்படத்தின் போஸ்டர்களும் பாடல்களும், படம் எந்தளவுக்கு விறுவிறுப்பாக இருக்கப் போகிறது என்பதை நோக்கிய எதிர்பார்ப்பை மேலும் மேலும் தூண்டுவதாக அமைந்திருந்தது. சந்தோஷ் நாராயணன் இசை ஏற்கனவே ரசிகர்களின் பிளேலிஸ்ட்களில் முதன்மையான இடத்தை பிடித்துள்ளது.

இரண்டு உலகங்களிலும் சிறந்தவை: ஒரே மாதிரியான பார்வையைப் பகிர்ந்து கொள்ளும் இரு திறமைசாலிகள், அழுத்தமான, சக்திவாய்ந்த கதைகளை உருவாக்கும்போது ஒரு சிறந்த படைப்பு ரசிகர்களுக்கு கிடைக்கும், அப்படிபட்ட திறமைசாலிகளான இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் முன்னணி நடிகர் சீயான் விக்ரம், ஆகிய இருவரும் இணைந்ததன் விளைவு தான் ‘மகான்’ திரைப்படம்.

கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சீயான் விக்ரம் இணைந்திருப்பது, உலகெங்கிலும் உள்ள திரைப்பட சாதனைகளை பல முறியடிக்கப்படப்போவதை குறிக்கிறது.

மகான் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் மற்றும் கன்னடத்தில் மகா புருஷாவாகவும் பிப்ரவரி 10 ஆம் தேதி பிரத்தியேகமாக உலகளவில் பிரைம் வீடியோவில் திரையிடப்படுகிறது.

Top reasons to watch Chiyaan Vikram’s Mahaan on Prime Video

பன்றிக்கு நன்றி சொல்லும் ஹீரோ நிஷாந்த் ரூஸோ..!

பன்றிக்கு நன்றி சொல்லும் ஹீரோ நிஷாந்த் ரூஸோ..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்தில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சோனிலிவ் தளத்தில் வெளியிட்ட ‘பன்றிக்கு நன்றி சொல்லி’ திரைப்படம் அதன் வித்தியாசமான கதையம்சத்திற்காக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. பாலா அரன் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் சினிமாவில் இயக்குனராக போராடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிஷாந்த் ரூஸோ (Nishanth Russo), யார் இவர் என ரசிகர்களின் கவனத்தில் பதியும் விதமாக தனது பங்களிப்பை தந்துள்ளார்.

கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி எடுத்துக்கொண்ட நிஷாந்த் ரூஸோ-விற்கு நண்பர் ஒருவர் மூலமாக 2018ல் ‘ஆண்டனி’ என்கிற படத்தில் கதாநாயகனாக சண்டக்கோழி வில்லன் நடிகர் லாலுக்கு மகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது..

அந்தப்படத்தின் படப்பிடிப்பு நடந்த சமயத்திலேயே இயக்குனர் பாலா அரனிடமிருந்து பன்றிக்கு நன்றி சொல்லி படத்தில் நடிக்கும் அழைப்பு வந்து, ஆடிசனிலும் தேர்வானார் நிஷாந்த் ரூஸோ. தற்போது அந்தப்படத்திற்கு கிடைத்துவரும் பாசிடிவ் விமர்சனங்களால் உற்சாகமாக இருக்கிறார் நிஷாந்த் ரூஸோ.

“இந்தப்படத்தில் பல காட்சிகளை யாரும் அறியாதவண்ணம் படமாக்கினோம்.. கோவையில் நள்ளிரவில் பிக்பாக்கெட் திருட்டு ஒன்றை படமாக்கியபோது, இயக்குனர் கட் சொன்னது கூட கேட்காமல் நானும் உடன் நடித்தவரும் சற்று தூரம் தள்ளி வந்துவிட்டோம்.. ஆனால் வழியில் எங்களை நிறுத்திய போலீஸார் எனது கிழிந்த உடை, உடன் நடித்தவரின் முகம் எல்லாவற்றையும் பார்த்து, சம்பவம் நிஜமாகவே நடந்திருக்கிறதோ என்கிற அளவுக்கு சந்தேக்கப்பட்டு ஜீப்பில் ஏற்றும் அளவுக்கு தயாராகி விட்டார்கள். ஒரு வழியாக படப்பிடிப்பு நடக்கிறது என கூறி, அனுமதி கடிதத்தை காட்டிய பின்னரே அங்கிருந்து சென்றனர்.

அதேபோல சைதாப்பேட்டை பகுதியில் இரவு நேர படப்பிடிப்பில் சாலை வழியாக ஓடும் காட்சிகளை படமாக்கினோம்.. படப்பிடிப்பு நடைபெறுவதற்கான அறிகுறியே இல்லாததால் நாங்கள் ஓடுவதை பார்த்து பிளாட்பாரத்தில் உறங்கிக்கொண்டு இருந்தவர்கள் திடுக்கிட்டு விழித்து, எங்களை விரட்ட ஆரம்பித்தனர்.. இப்படி பல சுவாரஸ்யங்கள் அந்தப்படத்தின் படப்பிடிப்பில் நடந்தன.

இந்தப்படத்தின் டைட்டில் ஒரு மாதிரி இருக்கிறதே என்று கூட ஆரம்பத்தில் பலர் கேட்டார்கள்.. ஆனால் இந்தப்படத்தின் டைட்டில் தான் ஸ்டுடியோகிரீன் ஞானவேல்ராஜா சாரின் கவனத்தை ஈர்த்து அவரையே இந்தப்படத்தை பார்க்க வைத்தது. படத்தை பார்த்த மறுநாளே அவரே படத்தை வெளியிடுவதாக கூறவும் வைத்தது.

தற்போது நானும் விவேக் பிரசன்னாவும் நடித்துள்ள சர்வைவல் ஆக்ஷ்ன் திரில்லர் படம் ஒன்று ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்தப்படத்தின் டைட்டில் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

அடுத்ததாக ஸ்போர்ட்ஸ் ஜானரில் ‘யார்க்கர்’ எனும் படத்தில் நடிக்கிறேன்.. பன்றிக்கு நன்றி சொல்லி படத்தை பார்த்துவிட்டு சில தயாரிப்பாளர்களும் என்னை பாராட்டியதுடன் விரைவில் இணைந்து பணியாற்றலாம் என நம்பிக்கை கொடுத்துள்ளனர்.. இந்தப்படங்களின் மூலம் அடுத்தடுத்து நல்ல வாய்ப்புகள் வரும் என காத்திருக்கிறேன்” என்கிறார் நிஷாந்த் ரூஸோ நம்பிக்கையுடன்…

Actor Nishanth Ruso thanked everyone for Pandrikku Nandri Solli team

சிம்புவை எல்லோரும் தப்பாவே புரிஞ்சுக்கிறாங்க… – ஸ்ரீகாந்த்

சிம்புவை எல்லோரும் தப்பாவே புரிஞ்சுக்கிறாங்க… – ஸ்ரீகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் வி.விஜயகுமார், லோகேஸ்வரி விஜயகுமார் மற்றும் ஆஞ்சநேயா புரொடக்சன்ஸ் சார்பில் கே.கந்தசாமி, கே.கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘தி பெட்’ (The Bed). வெத்துவேட்டு படத்தை இயக்கிய இயக்குநர் மணிபாரதி இப்படத்தை இயக்கியுள்ளார்.

ஸ்ரீகாந்த் நாயகனாகவும், நாயகியாக சிருஷ்டி டாங்கேயும் நடித்துள்ளனர்.

மேலும் ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜய் டிவி பப்பு, தேவிபிரியா, மலையாள நடிகை திவ்யா, ரிஷா, டிக்டாக் திருச்சி சாதனா, விக்ரம் ஆனந்த், பிரவீண் குமார், சுண்ணாம்பு செந்தில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கோகுல் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு தாஜ்நூர் இசையமைத்துள்ளார்.

“தி பெட்” படத்தின் டீசர் வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் மதியழகன், தயாரிப்பாளர் சங்க (கில்ட்) செயலாளர் ஜாக்குவார் தங்கம், மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் ரஷீக் ஆகியோர் கலந்துகொண்டனர். .

தயாரிப்பாளர் வி.விஜயகுமார் பேசும்போது, “இயக்குநர் மணிபாரதி எனது இருபது வருட கால நண்பர்.. பேச்சுவாக்கில் இந்தப்படத்தை ஆரம்பித்து, நல்லபடியாக முடித்துக் கொடுத்துள்ளார். நடிகர் ஸ்ரீகாந்த் கோத்தகிரி கடுங்குளிரிலும் கூட பத்து நிமிடம் முன்னாடியே படப்பிடிப்புக்கு வந்துவிடுவார். சிருஷ்டி டாங்கேவும் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார்.. படம் சிறப்பாக வந்துள்ளது” எனக் கூறினார்.

நடிகை தேவிபிரியா பேசும்போது, “இந்த படத்தில் நான் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.. என்னுடைய கதாபாத்திரம் குறைவான நேரமே வந்தாலும் போலீஸ் என்றதும் உடனே ஒப்புக்கொண்டேன்.. அதிலும் ஜான் விஜய் சாருக்கு அசிஸ்ட்டெண்ட் என்றதும் டபுள் ஓகே சொல்லி விட்டேன்” எனக் கூறினார்.

தயாரிப்பாளர் எட்செட்ரா என்டர்டெயின்மெண்ட் மதியழகன் பேசும்போது, “என்னுடைய மகா படத்திலும் ஸ்ரீகாந்த் நடித்து வருகிறார். 20 வருடத்திற்கு முன்பு ரோஜாக்கூட்டம் படத்தில் எப்படி பார்த்தோமோ அதே போல எப்போதும் மார்க்கண்டேயன் ஆகவே இப்போதும் இருக்கிறார். ”தி பெட் படத்தின் டீசர் சிறப்பாக வந்துள்ளது. படமும் வெற்றியடைய எனது வாழ்த்துகள் என வாழ்த்தினார்.

நாயகி சிருஷ்டி டாங்கே பேசும்போது, “இந்த படத்தில் கடும் குளிரில் நடுங்கிக்கொண்டே நடிக்க வேண்டி இருந்தது. சில நேரங்களில் குளிர் ஜுரம் கூட வந்துவிட்டது.. அந்த சமயத்தில் ஸ்ரீகாந்த் எனக்கு மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து காட்சிகளில் எளிதாக நடிக்க உதவினார்.. அதேபோல படப்பிடிப்பில் நடிகர் ஜான் விஜய் எப்போதும் எல்லாரையும் கலாய்த்துக் கொண்டு இருப்பார்.. ஆனால் நானும் பதிலுக்கு அவரை திருப்பி ஓட்டுவேன் என்பதால் இந்த பெண்ணிடம் மட்டும் எந்த வம்பு வைத்துக் கொள்ளக்கூடாதுப்பா என்று பயந்துகொண்டு என் பக்கமே வர மாட்டார்” என புதுத் தகவல் ஒன்றைக் கூறினார். .

இயக்குநர் மணிபாரதி பேசும்போது, “படப்பிடிப்புக்கு முதல் நாள் தான் இந்த படத்தின் கதையை முழுவதுமாக ஸ்ரீகாந்திடம் கூறினேன்.. அவருக்கு சிறிது தயக்கம் இருந்தது.. என்னிடம் சில கரெக்சன்களும் ஆலோசனைகளும் கூட சொன்னார்.. ஆனால் கடைசி நாள் படப்பிடிப்பு வரை நான் பிடிவாதமாக இருந்து அவரை கன்வின்ஸ் செய்து படப்பிடிப்பை நடத்தி முடித்தேன்..

ஒரு வசனத்தைக் கூட மாற்ற ஒப்புக்கொள்ளவில்லை. அந்த வகையில் அவரை நான் நிறையவே டார்ச்சர் செய்து இருக்கிறேன்.. ஆனால் அவையெல்லாம் படத்திற்காக மட்டுமே.. இருந்தாலும் அதற்காக அவரிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்..

நடிகர் ஸ்ரீகாந்த் பேசும்போது, “இந்த சமயத்தில் இப்படி ஒரு பிரஸ்மீட் வைக்க வேண்டுமா என்கிற தயக்கம் என்னிடம் இருந்தது. ஆனால் தயாரிப்பாளர், மக்கள் தொடர்பாளர் இருவரும் மிகுந்த நம்பிக்கை வைத்து இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்தார்கள்..

ஆனால் இவ்வளவு பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை ஏனென்றால் இந்த இரண்டு வருடமாக கோவிட்டால் எல்லாமே மாறிப்போயிருந்தது..

படம் துவங்கும் தேதியையும் முடிக்கும் தேதியையும் முன்கூட்டியே தீர்மானித்து விட்டு நடந்தாலே தயாரிப்பாளர் தப்பித்து விடுவார்.

முதலில் டைட்டிலைக் கேட்டதுமே சற்று தயக்கமாகத்தான் இருந்தது.. கதையும் ஏதாவது சர்ச்சையைக் கிளப்புமோ என்கிற பயமும் இருந்தது.. சில பேர் சொல்லும்போது ஒன்றாகவும், படமாக்கும்போது வேறு ஒன்றாகவும் செய்வார்கள்.. படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பின்னர் அதிலிருந்து பின்வாங்கவும் முடியாது. அப்படி செய்தால் வேறு சிலருடன் ஒப்பிட்டுப் பேச ஆரம்பித்து விடுவார்கள்..

எல்லோருக்கும் சிம்பு மாதிரி தைரியம் இருக்காது.. ஹேட்ஸ் ஆப் சிம்பு.. ஏனென்றால் பல பேர் சிம்புவை சரியாகப் புரிந்து கொள்ளவே மாட்டார்கள். யாரும் சரியாகப் புரிந்துகொள்ளப்படாத நடிகர் சிம்பு என்று நான் நினைக்கிறேன்.

ஆனால் அவர் ஒரு அற்புதமான மனிதர்.. படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு டோட்டலாக இயக்குநரிடம் தன்னை ஒப்படைத்து விடுவார்.. சிலர் வேறு மாதிரி கதையை குழப்பினாலும் கூட கண்டுகொள்ள மாட்டார்..

படங்களில் அர்ப்பணிப்பு உணர்வுடன் நடிக்கும்போது சில விஷயங்களில் நம் யோசனையை சொல்வோம்.. அது ஒரு நடிகர் என்று இல்லாமல் பார்வையாளரின் கண்ணோட்டத்திலும் இருக்கும்.

எல்லா இயக்குநர்களும் அவர்கள் மனதில் கதையை எப்படி உருவாக்கி வைத்திருக்கிறார்களோ அப்படித்தான் எடுக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.. ஆனால் படம் வெளியான பிறகு உண்மையான வெற்றி பார்வையாளர்களிடம் இருந்து தானே கிடைக்கும்..?

அதனால் ஹீரோக்கள் சொல்லும் சில விஷயங்களையும் ஏற்றுக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை..

என்னைப் பொருத்தவரை ஐடியா கொடுப்பது தவறில்லை.. ஆனால் குறுக்கீடு செய்யக்கூடாது க்ளைமாக்ஸில் கூட எனக்கு சற்று கருத்து மாறுபாடு இருந்தது.. இயக்குநரிடம் அதை மாற்றி விடலாமா எனக் கூறினேன்.. ஆனாலும் தான் இப்படித்தான் மனதில் உருவகப்படுத்தி வைத்திருப்பதாக அவர் சொன்னார்.. சரி என அவர் விருப்பத்திற்கு விட்டு விட்டேன்.. அவர் என்னிடம் என்ன சொன்னாரோ அதைக் கொஞ்சமும் மாற்றாமல் அவர் போக்கிலேயே எடுத்துவிட்டார்..

அதேசமயம் தி பெட் என பெயர் வைத்திருந்தாலும் குடும்பத்துடன் பார்க்கும் அழகான படமாக இது இருக்கும். இந்த டீசர் எல்லோரையும் கவரும் என்று நான் சொல்ல மாட்டேன்.. ஆனால் படம் சூப்பராக வந்திருக்கிறது என்பதை மட்டும் உறுதியாக சொல்வேன்..

இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதுமே படத்திற்கான ஒளிப்பதிவாளரை நான் சிபாரிசு செய்யலாமா எனக் கேட்டேன்.. ஆனால் ஏற்கனவே கோகுலை ஒப்பந்தம் செய்து விட்டேன்.. அவர்தான் என் முதல் சாய்ஸ் என்று இயக்குநர் மணிபாரதி கூறினார்.. ஆனால் படப்பிடிப்பின்போதுதான், நான் என்னுடைய தவறை உணர்ந்தேன்.. ஒருவரை பற்றி எதுவுமே தெரியாமல் அவரது திறமையை எடைபோடுவது எவ்வளவு தவறு என்பதை கோகுல் எனக்கு உணர்த்தினார் அந்த அளவுக்கு அற்புதமாக காட்சிகளை படமாக்கியதுடன் என்னை மிகவும் அழகாக காட்டியுள்ளார்.

ஊட்டி குளிரில் குறைந்த அளவு ஆடையுடன் நடுங்கிக்கொண்டே சிரமப்பட்டு நடித்தார் சிருஷ்டி டாங்கே. ஆனால் இயக்குனரோ ஸ்வெட்டர் குல்லா என குளிருக்கு இதமாக அணிந்துகொண்டு மானிட்டருக்கு பின் ரொம்ப பாதுகாப்பாக அமர்ந்து கொண்டிருந்தார். ஏன், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஸ்வெட்டர் போட்டுக்கொண்டு வருவதுபோல கதை எழுத கூடாதா என்று கூட அவரிடம் கேட்டுவிட்டேன்.” என அருவி போல தன் மனதில் இருந்ததை எல்லாம் மேடையில் கொட்டி தீர்த்தார் ஸ்ரீகாந்த்.

*நடிகர்கள் ;*

ஸ்ரீகாந்த், சிருஷ்டி டாங்கே, ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜய் டிவி பப்பு, தேவிபிரியா, மலையாள நடிகை திவ்யா, ரிஷா, டிக்டாக் திருச்சி சாதனா, விக்ரம் ஆனந்த், பிரவீண் குமார், சுண்ணாம்பு செந்தில்

-தொழில் நுட்பக் கலைஞர்கள் விபரம்*

இயக்குநர் ; எஸ்.மணிபாரதி

ஒளிப்பதிவு ; கே.கோகுல்

படத்தொகுப்பு ஜே.பி

இசை ; தாஜ்நூர்

பாடல்கள் ; யுகபாரதி

கலை ; பழனிவேல்

சண்டைப் பயிற்சி ; ஆக்சன் பிரகாஷ்

ஸ்டில்ஸ் ; ராஜ் பிரபு

நிர்வாக தயாரிப்பாளர் ; A.V. பழனிச்சாமி

தயாரிப்பாளர் ; வி.விஜயகுமார், லோகேஸ்வரி விஜயகுமார் மற்றும் கே.கந்தசாமி, கே.கணேசன்

தயாரிப்பு நிறுவனம் ; ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் & ஆஞ்சநேயா புரொடக்சன்ஸ்

மக்கள் தொடர்பு ; A ஜான்

Srikanth praises STR at the bet teaser launch

More Articles
Follows