‘பிக்பாஸ்’ வீட்டிலிருந்து பாடகர் வேல்முருகன் வெளியேற்றம்

‘பிக்பாஸ்’ வீட்டிலிருந்து பாடகர் வேல்முருகன் வெளியேற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bigg boss velmuruganவிஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ் 4’ நிகழ்ச்சி தொடங்கி கிட்டதட்ட ஒரு மாதமாகிவிட்டது.

முதல் வார எவிக்‌ஷனில் நடிகை ரேகா வெளியேறினார்.

கடந்த வாரம் தன் கையிலிருந்த எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் மூலம் தப்பித்தார் பாடகர் ஆஜித்.

எனவே கடந்த வாரம் எவரும் ஷோவிலிருந்து வெளியேறவில்லை.

இந்நிலையில் ஷோ தொடங்கிய நான்காவது வாரத்துக்கான எவிக்‌ஷன் நடைமுறை கடந்த திங்கள்கிழமை தொடங்கியது.

சம்யுக்தா, கேபி, ஆரி, அர்ச்சனா, ஷிவானி ஆகிய ஐந்து பேரைத் தவிர மற்ற அனைவருமே நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றார்கள்.

அதாவது மொத்தம் 11 பேர்.

இந்த 11 பேரில் பாடகர் வேல்முருகனே குறைவான வாக்குகள் பெற்றுள்ளார்.

எனவே எவிக்‌ஷன்படி அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டாராம்.

நாளை (நவம்பர் 1) ஒளிபரப்பாகும் எபிசோடில் வேல்முருகனின் எவிக்சனைக் காணலாம்.

வேல்முருகன் வெளியேறிய தகவல் லீக்கானதால் மீம்ஸ்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Singer Vel Murugan got evicted this week ?

அர்ஜுன் தாஸ் நடித்த ‘அந்தகாரம்’ படத்தை ஆன்லைனில் வெளியிடும் அட்லி

அர்ஜுன் தாஸ் நடித்த ‘அந்தகாரம்’ படத்தை ஆன்லைனில் வெளியிடும் அட்லி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

andhaghaaramராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர்ச்சியாக 4 ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் அட்லீ.

அவ்வப்போது திரைப்பட தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

ஜீவா & ஸ்ரீதிவ்யா நடித்த ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தை கடந்த 2017ல் தயாரித்து வெளியிட்டார்.

தற்போது ‘அந்தகாரம்’ என்ற படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் உடன் இணைந்து தயாரித்துள்ளார் அட்லீ.

விக்னராஜன் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ள இப்படத்தில் அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன், மீஷா கோஷல், பூஜா ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை வருகிற நவம்பர் 24-ந் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளார்.

இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக உள்ளது.

Andhagaram gets a direct OTT release

சென்னை அண்ணாநகர் சைக்கிள்ஸின் 6வது கிளையை திறந்து வைத்த உதயநிதி

சென்னை அண்ணாநகர் சைக்கிள்ஸின் 6வது கிளையை திறந்து வைத்த உதயநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

udhayanidhi stalinகடந்த வருடம் சென்னை அண்ணாநகரில் முதன் முதலில் துவங்கப்பட்ட அண்ணாநகர் சைக்கிள்ஸ் மல்டி பிராண்டு ஷோ ரூமை தற்போது வெள்ளூர் , சோளிங்கர் , ஆற்காடு , கீழ்ப்பாக்கம் ஆகிய முக்கிய பகுதிகளில் துவங்கப்பட்டு இன்று ஆழ்வார்பேட்டை TTK சாலையில் , நாரதகானா சபா எதிரில் 6 வது கிளையாக புதிய ஷோ ரூம் தொடங்கப்பட்டு இருக்கிறது.

இந்நிறுவனத்தின் முதன்மை அதிகாரி சுதாகர் அவர்களின் தலைமையில், உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு ஷோ ரூமை துவங்கி வைத்தார்.

Udhayanidhi Stalin opens Anna Nagar cycle shop

சூடாகும் தேர்தல் களம்..: விஷாலை குறை சொல்லிட்டு அதே தவறை செய்கிறார் டிஆர்.. – ‘நலம் காக்கும் அணி’யில் செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் ராதாகிருஷ்ணன் பேட்டி

சூடாகும் தேர்தல் களம்..: விஷாலை குறை சொல்லிட்டு அதே தவறை செய்கிறார் டிஆர்.. – ‘நலம் காக்கும் அணி’யில் செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் ராதாகிருஷ்ணன் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Radha Krishnanதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இத்தேர்தலில், தேனாண்டாள் முரளி தலைமையில் ஒரு அணியும் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றன.

இவ்விரண்டைத் தவிர இன்னும் சிலரும் போட்டியிடுகின்றனர்.

தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி என்கிற பெயரில் தேனாண்டாள் முரளி தலைமையிலான அணி போட்டியிடுகிறது.

ஏற்கனவே சங்கத்தின் செயலாளர், மற்றும் பொருளாளர் பதவி வகித்தவர் ராதாகிருஷ்ணன்.

கடந்த 20 வருடங்களாக குறைந்தபட்ஜெட் படத்தயாரிப்பாளர்களின் குரலாக செயல்பட்டு வருபவர் இவர்.

கடந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தவர்.

நடைபெறவுள்ள தேர்தலில் தயாரிப்பாளர்கள் நலம் காக்கும்அணியில் செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் ராதாகிருஷ்ணன் அவர்களுடன் ஒரு பேட்டி…

1.என்னென்ன வாக்குறுதிகளை முன்வைத்து இந்த தேர்தலில் போட்டியிடுகிறீர்கள்.?

தமிழ்த்திரையுலகில் இப்போதைய முக்கிய சிக்கலாக இருப்பது VPF கட்டணம். அதைக்கட்ட மாட்டோம் என்றும் அதற்குரிய வழிமுறைகளைச் செய்வோம்.

நவீன தொழில் நுட்பங்கள் காரணமாக தமிழ்த் திரையுலகம் சந்திக்கும் சிக்கல்களைச் சரி செய்து அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்கச் செய்வோம்.

ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த விரும்பும் தயாரிப்பாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவோம்.

சிறிய படங்களையும் OTTயில் வெளியிட முயற்சி எடுப்பது. சிறு படங்களுக்கும் போதிய திரையரங்குகள் ஒதுக்கீடு உறுதி செய்தல் உட்பட பல வாக்குறுதிகளை முன் வைத்துத் தேர்தலில் போட்டியிடுகிறோம்.

2.தொழில்நுட்பச் சிக்கல் என்று OTTயைகுறிப்பிடுகிறீர்கள். அதேசமயம் சிறிய படங்களையும் OTTயில் வெளியிட முயல்வோம் என்று சொல்கிறீர்களே?

திரையரங்குகள் ஒதுக்கீடு போல OTTயிலும் பெரிய படங்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. அதனால் சிறிய படங்களையும் OTTயில் வெளியிட முயல்வோம் என்று சொல்கிறோம்.

3. சிறிய படங்களுக்குப் போதிய திரையரங்குகள் என்னும் வாக்குறுதி பல தேர்தல்களில் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறதே? செயலுக்கு வந்தபாடில்லையே?

கடந்த முறைவிஷால் தேர்தலில் வென்றபோதும் இப்படிச் சொன்னார்.

ஆனால் நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் என இரண்டு பதவிகளில் இருந்து கொண்டு ஒன்றும் செய்யமுடியவில்லை.

4.சிறு படங்களுக்கு போதிய திரையரங்குகள் என்பது விஷாலுக்கு முன்பும் தேர்தல்களில் பேசப்பட்டுக்கொண்டே இருக்கும் விசயமாக இருக்கிறதே?

ஆமாம், ஒவ்வொரு முறை தலைவராக வருகிறவர்களும் அதற்காக உரிய முயற்சிகள் எடுக்காமல் விட்டுவிட்டார்கள்.

சிறு படங்களை மட்டுமே தயாரித்துப் பெரிய வெற்றிகளைப் பெற்ற தேனாண்டாள் நிறுவனத்தின் முரளிக்கு அதன் வலி முழுமையாகத் தெரியும். அவர் கண்டிப்பாக செயல்படுத்துவார்.

5.எதிரணியில் போட்டியிடும் டி.ராஜேந்தர் மற்றும் மன்னன் ஆகியோர் விநியோகஸ்தர் சங்கத்திலும் பொறுப்பில் இருக்கிறார்களே?

டி.ராஜேந்தர் போட்டியிடுவது வருந்தத் தக்கது. ஏற்கெனவே விஷால் தலைவரான போது இவரே இதே காரணத்தைச் சொல்லி விஷாலை விமர்சனம் செய்தார்.

இப்போது அவரே அப்படிச் செய்கிறார்.
அவருடைய மகன் சிம்புவால் பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

டி.ராஜேந்தர் பொறுப்புக்கு வந்தால் என்ன செய்வார்? அதுமட்டுமின்றி விநியோகஸ்தர் சங்கப் பொறுப்பிலிருப்பவர்கள் வேறு அமைப்புகளில் பொறுப்பு வகிக்கக்கூடாது என்கிற சட்டத்தைத் திருத்தி அதற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாமலேயே இங்கே போட்டியிடுகிறார்கள்.

இது அவருக்குப் தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தும்

6.தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடுகிறவர்கள் ஆட்சியிலிருப்பவர்களைச் சந்தித்து அதிகாரத்துக்கு நெருக்கமாக இருப்பது போல் காட்டிக் கொள்வது சரியா?

எங்கள் சங்கத்தைப் பொறுத்தவரை மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவர்களோடு இணக்கமாக நடந்துகொள்வது எப்போதும் இருக்கும் வழக்கம்தான்.

எங்கள் அணியில் பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் போட்டியிடுகிறார்கள். அரசியல் என்பது வெளியில்தான் இங்கே எல்லோரும் தயாரிப்பாளர்கள்தான்.

7.இம்முறை நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்றொன்று அமைந்திருக்கிறதே?

அப்படி ஒரு சங்கம் அமைவதற்குக் காரணம் இருந்தது. அரசாங்கம் சங்கத்தின் பொறுப்பை எடுத்துக் கொண்டு ஒரு நிர்வாகக் கமிட்டி அமைத்தது. அதனால் பல சிக்கல்களில் முடிவெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

அதனாலேயே அந்தச் சங்கம் உருவானது.
நாங்கள் வென்ற பிறகு அவர்களுடன் பேசி தாய்ச்சங்கத்தில் இணைய வைப்போம்.

8.இந்தத் தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறதே?

கொரோனா நேரத்தில் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்தோம். ஆனால் இப்போது எங்கள் அணி சார்பாக வாக்குக்காகயாருக்கும் பணம் கொடுக்கப்படவில்லை

9.உங்களிடம் குறிப்பிட்ட அளவு ஓட்டுகள் இருக்கின்றன. நீங்கள் சொல்லும் அணிக்கு அவர்கள் ஓட்டுப்போடுவார்கள் என்று சொல்லப்படுவது பற்றி..?

நான் எல்லோரிடத்திலும் அன்பாகப் பழகுகிறவன். கடந்த 20 வருடங்களாக குறைந்தபட்ஜெட்டில் படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் நலனுக்காக போராடி வருகின்றேன்யாருக்கு சிக்கல் என்றாலும் முதல் நபராக அங்கு இருப்பேன்என்னாலான உதவிகளைசெய்வேன்.

அதனால் எல்லோரும் என்னிடம் பாசமாக இருப்பார்கள். இதைத்தான் அப்படிச் சொல்கிறார்கள்.

10. சங்கப் பொறுப்புக்குப் போட்டியிடும் தகுதி இல்லாத நீங்கள் அவசரகதியில் ஒரு படத்தை ஓரிரு திரையரங்குகளில் வெளியிட்டுவிட்டு தேர்தலில் போட்டியிடுவதாகப் புகார் எழுந்துள்ளதே

படத்தை முதல்பிரதி அடிப்படையில் ஒருவர் தயாரிப்பதும் அதை இன்னொருவர் வாங்கி வெளியிடுவதும் எப்போதும் உள்ள நடைமுறைதான்.

கொரோனா காரணமாக தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படவில்லை என்பதால் கொழும்பு, புதுச்சேரி ஆகிய இடங்களில் திரையிட்டோம்.

தமிழகத்தில் திரையரங்குகள் திறந்திருந்தால் அதிக திரைகளில் வெளியிட்டிருப்போம்.

எனவே இந்தப் புகார் அர்த்தமற்றது. தேர்தல் அதிகாரி நாங்கள் விதிமுறைப்படி நடந்துகொண்டதை ஒப்புக்கொண்டு எங்கள் வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்டார்.

Radha Krishnan condemns TR for his nomination in TFPC

JUST IN ஏழு ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நடித்த ஷான் கானரி காலமானார்

JUST IN ஏழு ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நடித்த ஷான் கானரி காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

james bond sean conneryஸ்காட்லாந்த்து நாட்டை சேர்ந்த தாமஸ் ஷான் கானரி கடந்த 1930, ஆகஸ்ட் 25ஆம் தேதி பிறந்தவர்.

ஜேம்ஸ்பாண்ட் கதாப்பாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகர் இவர்.

வறுமை காரணமாக பள்ளிப் படிப்பைத் தொடரவில்லை.

கூலி முதல் ராணுவம் வரை பல்வேறு தளங்களில் பணியாற்றி இருக்கிறார்.

1950ஆம் ஆண்டு மிஸ்டர் யூனிவர்ஸ் போட்டியிலும் பங்கெடுத்துள்ளார்.

சின்னத்திரையிலும் சில நாடகங்களில் கானரி நடித்து வந்தார்.

1957ஆம் ஆண்டு, ‘நோ ரோட் பேக்’ என்கிற திரைப்படத்தில் ஷான் கானரிக்கு அருமையான வாய்ப்பு கிடைத்தது.

1962ஆம் ஆண்டு, ‘டாக்டர் நோ’ திரைப்படத்தில் ஜேம்ஸ் பாண்டாக நடித்த புகழின் உச்சியை தொட்டார்.

‘தி அண்டச்சபிள்ஸ்’ என்கிற திரைப்படத்தில் நடித்ததற்காகச் சிறந்த உறுதுணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை கானரி வென்றார்.

40 வருடங்களாக நடித்து வந்த தற்போது அவருக்கு வயது 90 ஆகிறது.

சுமார் ஏழு ஜேம்ஸ்பாண்ட் படங்களில் ஷான் கானரி நடித்துள்ளார். பல்வேறு வெற்றிப் படங்களில் கானரி நடித்திருந்தாலும் இன்றுவரை ஜேம்ஸ் பாண்ட் தான் அவரது அடையாளமாக இருந்து வருகிறது.

‘இண்டியானா ஜோன்ஸ்’ திரைப்படத்தின் மூன்றாம் பாகம், ‘தி ஹண்ட் ஃபார் தி ரெட்’ அக்டோபர், ‘தி ராக்’ உள்ளிட்ட திரைப்படங்கள் சர்வதேச அளவில் புகழை தந்தன.

இந்நிலையில் இன்று ஷான் கானரி காலமானார்.

வாழ்க்கை குறிப்பு.. 1962ல் நடிகை டயான் சிலெண்டோவை கானரி மணந்தார். இவர்களுக்கு ஜேஸன் கானரி என்ற மகன் உள்லார்.

சிலெண்டாவை 73ஆம் வருடம் கானரி விவாகரத்து செய்தார்.

1975ஆம் ஆண்டு மிஷலின் ரோக்ப்ரூன் என்கிற ஓவியரை கானரி மணந்தார்.

கடைசி வரை மிஷலினுடன் தான் கானரி இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING : Sean Connery, the first James Bond, dies at 90

ஒரு பட மொத்த பட்ஜெட்டை விட ஹீரோவின் சம்பளம் அதிகம்…; ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் முருகானந்தம் பேட்டி

ஒரு பட மொத்த பட்ஜெட்டை விட ஹீரோவின் சம்பளம் அதிகம்…; ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் முருகானந்தம் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rock Fort Murugananthamதமிழ் திரைப்படங்களின் விநியோக உரிமையை குறிப்பிட்ட ஏரியாக்களுக்கு மட்டும் வாங்கி திரையரங்குகளில் திரையிட்டு வந்தது.

ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம்கடந்த 20 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என 148க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தமிழகத்தில் வெளியிட்டுள்ளது

இந்நிறுவனம் ஹிப் ஆப் தமிழா ஆதிநாயகனாக அறிமுகமான
” மீசையை முறுக்கு” திரைப்படத்தின் தமிழக உரிமையை முதல் படமாக வாங்கி வெளியிட்டு வெற்றிப் பயணத்தை தொடங்கியது.

தமிழ் சினிமாவின் பாக்ஸ்ஆபீஸ் நட்சத்திரங்களான அஜித், விஜய், சூர்யா, ஆர்யா, தனுஷ் நடித்த படங்களும் அடங்கும்.

இந்நிறுவனம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் 2017 தீபாவளிக்கு வெளியான “ மேயாத மான்” ப்ளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது.

இதை தொடர்ந்து தமிழகத்தில் மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட அஜீத்குமார் நடித்து வெளியான “வேகம், விவேகம்” படத்தின் சில ஏரியாவிநியோக உரிமையை வாங்கி வெளியிட்டது அமலாபால் ஆடையின்றி நடித்து பரபரப்பை ஏற்படுத்திய “ஆடை, மற்றும் ஆர்யா நடிப்பில் வெளியான மகாமுனி, விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கொலைகாரன், ஜெயம் ரவி நடித்த கோமாளி, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியானசிந்துபாத்,
அசுர வெற்றிபெற்றஅசுரன், பெட்ரோமாக்ஸ் மற்றும் நான் சிரித்தால்” என பல வெற்றிபடங்களை வெளியிட்டு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நிறுவனமாக ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது

2019 ஆம் வருடம் இந்நிறுவனத்திற்கு மிக முக்கியமான ஆண்டாகும். ரசிகர்களின் நாடித்துடிப்பறிந்து, மிகச்சிறந்த கதையம்சம் உள்ள படங்களை வாங்கி வெளியிட்டது விநியோக வியாபாரத்தில் முன்ணனி நிறுவனமாக வளர்ந்துவரும் நிலையில் 2019ல் ராக் போர்ட் எண்டர்டெயின்மென்ட்
T. முருகானந்தம் முதல் முறையாக “குருதி ஆட்டம்” படம் மூலம் தயாரிப்பாளராக அடியெடுத்து வைத்தார்.

அதர்வா, பிரியா பவானி சங்கர் நடிப்பில்
குருதி ஆட்டம் படத்தை தொடர்ந்து YouTube Put Chutney புகழ் ராஜா மோகன் இயக்கத்தில், குழந்தைகளை மையமாக கொண்ட, காமெடி கமர்ஷியல் படத்தை இரண்டவாது படைப்பாக தயாரித்து வருகிறார்.

அதனை தொடர்ந்து எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு கொரானா காலத்திலும் திரைப்பட தயாரிப்புக்கான திட்டமிடலை நடைமுறைப்படுத்துவதில் முனைப்புடன் செயல்படுத்தினார் முருகானந்தம்.

தமிழ் சினிமா இயக்குநர்களில் தனக்கு என்று ரசனைமிக்க சினிமா பார்வையாளர்களை கொண்ட மிஷ்கின் இயக்கத்தில்ஆண்ட்ரியா ஜெர்மீயா நடிப்பில் மூன்றாவது தயாரிப்பாக “பிசாசு 2” படத்தின் அறிவிப்பை வெளியிட்டு கோடம்பாக்கத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளார்.

பிசாசு-2 படத்தின் வியாபாரத்தை முடிக்க முண்ணனி விநியோகஸ்தர்கள் தற்போதே பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.

படங்களை தேர்வு செய்வதில் ராக் போர்ட் எண்டர்டெயின்மென்ட் நம்பகதன்மையை உறுதிசெய்து உள்ளது.

மேலும் தமிழில் சில முக்கிய படைப்புகளின் உலகளாவியஉரிமையை வாங்குவதற்கான வியாபார பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது ராக் போர்ட் எண்டர்டெயின்மென்ட்.

மாஸ்டர் பீஸ் புரடக்க்ஷன் நிறுவனத்திடமிருந்து நடுகாவேரி இயக்கத்தில் கயல் ஆனந்தி, ரோகித் ஷ்ராஃப் நடிப்பில் உருவாகும் “கமலி” படத்தின் உரிமையை பெற்றிருக்கிறது.

மேலும் ஆகாஷ் பிரபு, ஜானகி, ஐஸ்வர்யா முருகன், அருன் மற்றும் வித்யா பிள்ளை நடிக்கும் “மாயபிம்பம்” படத்தின் உரிமையையும் பெற்றுள்ளது.

ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மிகப்பெரும் வெளியீடாக ஜெயம் ரவி நடிப்பில் தயாராகியுள்ள “பூமி” படத்தின் தமிழகத்தில் உள்ள ஒன்பது ஏரியா உரிமைகளில்ஏழு பகுதிகளில் இப்படத்தை வெளியிடும் உரிமையை பெற்றுள்ளது.

ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சமீப காலமாக சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தி இருக்கும் இருட்டு அறையில் முரட்டுகுத்து பட இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார் நாயகனாக நடித்து இயக்கி இருக்கும் அதன் அடுத்த பாகமாக உருவாகியுள்ள
“இரண்டாம் குத்து” படத்தின் உலகளாவிய வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது.

இப்படம் தீபாவளி பண்டிகை அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

திரையுலகில் தொடர்ந்து முண்னனி நடிகர்கள் நடிக்கும் படங்களை 2021ல் தயாரிக்கவுள்ள ராக் போர்ட் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தலைவர் முருகானந்தத்துடன் நடைபெற்ற நேர்காணல்…

திரைப்படத் தயாரிப்பு மிகவும் ஆபத்தானது என்று சொல்லப்படும் நேரத்தில் நீங்கள் தயாரிப்பில் இறங்கத் துணிந்தது எப்படி?

நல்ல படங்களைச் சரியாக மார்க்கெட்டிங் செய்தால் வெற்றி நிச்சயம் என்பது நான் கற்றுக்கொண்ட பாடம். எனவே நம்பிக்கையுடன் படத் தயாரிப்பில் இறங்கியிருக்கிறேன்.

விநியோகஸ்தர்களின் ரீஃப்ண்ட், திரையரங்கு வசூலில் வெளிப்படைத்தன்மையின்மை ஆகியன குறித்து..?

ஒரு படம் நன்றாக ஓடும் என்று நம்பி வெளீயிடுகிறோம். அது தப்பாகிவிட்டால் ரீஃப்ண்ட் கொடுக்கவேண்டி வரும்.

நாம் தொடர்ந்து இந்த வியாபாரத்தில் இருப்பதால் அடுத்தடுத்த படங்களில் சரி செய்துவிடலாம்.

திரையரங்கு வசூலைப் பொறுத்தவரை எங்காவது ஒரு சில இடங்களில் வசூலில் வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருக்கலாம். பெரும்பாலும் எல்லாம் சரியாகவே இருக்கிறது.

திரையரங்குக்காரர்கள் வசூல் தொகையைப் பல மாதங்கள் தராமல் இழுத்தடிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறதே?

முதல்நாள் வசூலை அடுத்த நாளே தருகிறவர்களும் இருக்கிறார்கள். மாதக்கணக்கில் இழுக்கிறவர்களும் இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் சமாளித்துத்தான் தொழில் செய்தாக வேண்டும்.

நடிகர்களின் சம்பளம் அதிகமாக இருப்பதால் திரைப்படத் தொழில் நசிவதாகச் சொல்லப்படுவது பற்றி..?

உண்மைதான், சில படங்களில் படத்தின் மொத்தச் செலவைக் காட்டிலும் நடிகரின் சம்பளம் அதிகம் என்றாகிறது.

அங்கு தொடங்குகிற சிக்கல் திரையரங்கில் அதிக விலைக்கு டிக்கெட் விற்கச் சொல்வதுவரை வந்து நிற்கிறது.

தயாரிப்பாளர்களுக்குள் முழுஒற்றுமை ஏற்பட்டால்தான் இச்சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணமுடியும்.

நீங்கள் வெளியிடும் இரண்டாம்குத்து சர்ச்சைக்கு ஆளாகியிருக்கிறதே?

இயக்குநரின் முந்தைய படங்கள் வெற்றி மற்றும் அதனுடைய பட்ஜெட் போன்ற விசயங்களைப் பார்த்துத்தான் படங்களை வாங்கி வெளியிடுகிறோம். நான் படம் பார்க்கவில்லை.

சர்ச்சை வந்துவிட்டபின் படத்தில் மாற்றம் செய்யப்போகிறீர்களா?

அது முழுக்க முழுக்க இயக்குநரின் உரிமை. அதில் நான் தலையிடமாட்டேன்.

உங்களுக்கு சமுதாயப் பொறுப்பு இல்லையா

இருக்கிறது. எங்கள் வியாபாரத்தில் அத்திபூத்தாற்போல் இதுபோன்ற சிக்கல்கள் வருவதுண்டு. அவற்றைச் சரி செய்து வெளியிடுவோம்.

‘பூமி’ படத்தின் சென்னை செங்கல்பட்டு தவிர தமிழக விநியோக உரிமை பெற்றிருக்கிறீர்கள். அது நேரடியாக இணையத்தில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறதே?

அதுகுறித்து தயாரிப்பாளருடன் பேசியிருக்கிறோம். எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

Rock Fort Muruganantham talks about top actors salary

More Articles
Follows