கதைக்கான பணத்தை கேட்டால் மிரட்டுகிறார் சுந்தர்.சி…. வேல்முருகன் புகார்

கதைக்கான பணத்தை கேட்டால் மிரட்டுகிறார் சுந்தர்.சி…. வேல்முருகன் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Velmurugan filed case against SundarC in Nandhini serial story issueநேசம் புதுசு படத்தை இயக்கியவர் வேல்முருகன்.

இவர் ஆட்டோகிராஃப் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

சன்டிவியில் ஒளிப்பரப்பாகும் நந்தினி சீரியலின் கதை தன்னுடையது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த கதைக்கு 50 லட்சம் ரூபாயும், சீரியல் ஒளிப்பரப்பாகும் வரை தனக்கு மாதம் 1 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்குவதாக சுந்தர் சி இவரிடம் கூறி கதையைப் பெற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

15 ஆண்டு நண்பர் என்ற அடிப்படையில் பரஸ்பர நம்பிக்கையின் பேரில் தாம் கதையை சுந்தர் சியிடம் வழங்கியதாகவும், ஆனால், ஒப்புக் கொண்டபடி மாத சம்பளத்தை 4 மாதங்களுடன் நிறுத்திவிட்டு 50 லட்சம் ரூபாய் பணமும் தராமல் தம்மை சுந்தர் சி ஏமாற்றியதாக குற்றம்சாட்டியுள்ளார்.

பணத்தைக் கேட்டால் அடியாட்களை வைத்து மிரட்டுவதாகவும் சுந்தர் சி மீது குற்றம்சாட்டியுள்ளார் வேல்முருகன்.

எனவே இதுகுறித்து சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

Director Velmurugan filed case against SundarC in Nandhini serial story issue

கேளிக்கை வரியை நீக்காவிட்டால் தீபாவளி முதல் தியேட்டர்கள் மூடப்படும்

கேளிக்கை வரியை நீக்காவிட்டால் தீபாவளி முதல் தியேட்டர்கள் மூடப்படும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

If Entertainment tax is not withdrawn by TN Govt the theatres will be closed from Diwaliகடந்த ஜீலை 1ஆம் தேதி முதல் சினிமா டிக்கெட்டுக்கு மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி (28%) விதிக்கப்பட்டது.

இவையில்லாமல் தமிழக அரசின் கேளிக்கை வரி 30% என அறிவிக்கப்பட்டது.

எனவே இதனை எதிர்த்து நான்கு நாட்கள் தமிழகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் மூடப்பட்டன.

பின்னர் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் புதிய அறிவிப்பு வரும் வரை, 30 சதவிகித கேளிக்கை வரி வசூலிக்கப்படாது என தமிழக அரசு அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து, தியேட்டர்கள் திறக்கப்பட்டன. ஜி.எஸ்.டி. வரி மட்டும் வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை சார்பாக புதிய தமிழ் திரைப்படங்களுக்கு 10 சதவிகித கேளிக்கை வரியும், மற்ற மொழி திரைப்படங்களுக்கு 20 சதவிகித கேளிக்கை வரியும் வசூலிக்கப்படும் என அறிவித்தது.

மேலும் பழைய தமிழ் திரைப்படங்களுக்கு 7 சதவிகித கேளிக்கை வரியும், மற்ற மொழி பழைய படங்களுக்கு 14 சதவிகித கேளிக்கை வரியும் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி விதித்த, இரட்டை வரி விதிப்பு முறைக்கு இந்திய மல்டிபிளக்ஸ் அசோஷியேசன் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் பி.வி.ஆர் மற்றும் ஐநாக்ஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் இயங்கவில்லை.

இதனைத் தொடர்ந்து மதுரை ஸ்ரீபிரியா திரையரங்கில் தென் மாவட்டங்களின் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கங்களின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

தமிழக அரசு விதித்த 10 சதவீத கேளிக்கை வரியை திரும்பப் பெற வலியுறுத்தி 6 மாவட்ட திரையங்கு உரிமையாளர்கள் சங்கங்கள் தீர்மானம் நிறைவேற்றின.

கோரிக்கையை அரசு நிறைவேற்றாவிட்டால் தீபாவளி முதல் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் திரையரங்குகள் மூடப்படும் என்று அறிவித்துள்ளன.

If Entertainment tax is not withdrawn by TN Govt the theatres will be closed from Diwali

காணாமல் போன குழந்தைகளை காப்பாற்றி பாதுகாக்கும் லதா ரஜினி

காணாமல் போன குழந்தைகளை காப்பாற்றி பாதுகாக்கும் லதா ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

latha rajini shree dayaa foundationகுழந்தைகள் நலம் மற்றும் தெருவோர குழந்தைகளை பாதுகாக்கும் அமைப்பான ஸ்ரீ தயா பவுண்டேஷன் அமைப்பின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைப்பெற்றது.

இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு நம் இந்திய நாட்டில் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

இதைப்பற்றிய ஒரு விழிப்புணர்வு பேரணி சமீபத்தில் நாடு தழுவிய அளவில் பாரத் யாத்ரா என்ற பெயரில் நடைபெற்றது.

சென்னையில் பாரத் யாத்ரா விழிப்புணர்வு பேரணியை ஸ்ரீ தயா பவுண்டேஷன் சார்பில் லதா ரஜினிகாந்த் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும் இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஸ்ரீதயா பவுண்டேஷன் எதற்காக? அதன் நோக்கம் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை அதன் நிறுவனர் லதா ரஜினி எடுத்துரைத்தார்.

ஒரு நல்ல நோக்கத்திற்காக, சமுதாய விழிப்புணர்வுக்காக நடைபெறும் இந்த முயற்சியில் ஸ்ரீ தயா பவுண்டேஷன் நிறுவனம் பல என்.ஜீ.ஓ நிறுவனங்களுடன் சேர்ந்து சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறது.

இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஸ்ரீ தயா பவுண்டேஷன் சார்பில் Smt.லதா ரஜினிகாந்த் அவர்களுடன் Mr.பவுல் (Karunalaya), Mr.நிர்மல் Ms. மிர்னாலினி (Banyan), Ms. காதாம்பரி (Deepam Foundation), Ms. ராஜ மீனாக்ஷி (Child Welfare Officer), Mr. ஐசக் (ஆச்சி மசாலா), Ms. வசந்தி பாபு (Psyologist), Dr. யாமினி (Kaveri Hospital), Mr. அரவிந்த் (Environmentalist), Mr. நெடுஞ்செழியன் (Career Guidance). ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை மதுவந்தி அருண் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய லதா ரஜினிகாந்த் அவர்கள்,

“தெருவோர குழந்தைகளை பாதுகாப்பது தான் ஸ்ரீ தயா பவுண்டேஷன் அமைப்பின் தலையாய நோக்கம்.

தற்போது சென்னையிலுள்ள வால்டக்ஸ் ரோடில் சாலையோரம் தங்கியிருக்கும் குடும்பங்களை தயா பவுண்டேஷன் சார்பில் நாங்கள் தத்து எடுத்துள்ளோம்.

இனி அவர்கள் யாரும் தெருவோர வாசிகள் கிடையாது அவர்கள் அனைவரும் அபயம் குடும்பத்தார்கள்.

சாலையோர குழந்தைகள் திருடுபோவதை பற்றி பேசிய அவர், குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு நம்மால் எதையும் கொடுத்து அந்த இழப்பை ஈடு செய்ய முடியாது.

போலீஸ் மற்றும் அரசாங்க அதிகாரிகளை மட்டும் நம்பாமல் இதை ஒட்டு மொத்த சமுதாயமும் விழிப்புணர்வு கொண்டு குழந்தைகளை பாதுக்காக்க வேண்டும்.” என்றார்.

“குழந்தைகளுக்கு தேவையான விஷயம் அன்பு, அரவனைப்பு, அதரவு மட்டுமே. இதைத் தவிர மற்ற எமோஷன்கள் அவர்களுக்கு தவறான அதிர்வை கொடுத்து விடும்.

பிள்ளைகள் விஷயத்தில் முதலில் பெற்றோருக்கு அக்கறை தேவை. எக்காரணத்தைக் கொண்டும் நமக்கு இருக்கும் அழுத்தத்தையோ, வருத்தத்தையோ காரணம் காட்டி குழந்தைகளின் மீது ஒரு தவறான அதிர்வை தந்துவிடக் கூடாது.” என்று கேட்டுக் கொண்டார்.

“தற்போது ஸ்ரீதயா பவுண்டேஷன் பல என்.ஜீ.ஓக்களுடன் கைகோர்த்து குழந்தை நல விஷயத்தில் ஒரு ஒட்டு மொத்த சமுதாய மாற்றத்தைக் கொண்டு வர முயற்ச்சித்து வருகிறது.

ஸ்டூண்ட் வெல்பேர் அஸொசியஷன், குழந்தைகள் மன நலம், ஸ்கில்ஸ் டெவலப்மெண்ட் என பல வகைகளில் குழந்தைகளின் நலனை மேம்படுத்த அனைத்து வகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த ஒட்டுமொத்த சமுதாய மாற்றத்திற்கான முயற்சியில் சமுதாயத்தின் அனைவரின் ஆதரவும், உதவியும், ஊடக நண்பர்களான உங்கள் உதவியும் பெருமளவில் தேவை என்பதை கேட்டுக் கொள்கிறேன்.” என்றார் லதா ரஜினி.

Smt Latha Rajinikanths Care for Childrens

latha rajini welcome

மூன்று பாட்டிகளுக்காக இட்லி டீசரை வெளியிட்டார் கார்த்தி

மூன்று பாட்டிகளுக்காக இட்லி டீசரை வெளியிட்டார் கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

itly posterஅப்பு மூவீஸ் தயாரிப்பில் இயக்குநர் வித்யாதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “இட்லி“.

இப்படத்தில் சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, கல்பனா ஆகிய மூவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இவர்களோடு மனோபாலா, தேவதர்ஷினி, வெண்ணிறடை மூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

திட்டமிட்டப்படி 29 நாட்களில் இத்ன் படப்பிடிப்பை முடித்துள்ளார் இயக்குநர் வித்யாதரன்.

வழக்கமான கமர்ஷியல் படங்களிலிருந்து மாறுபட்டு வித்யாசமான கதையை எழுதி இயக்க வேண்டும் அது கமர்ஷியலாகவும் இருக்க வேண்டும் என்பது எனது ஆசை.

அப்படி யோசிக்கும் போது தான் இப்படத்தின் கதை எனக்கு மனதில் வந்தது. வயதான மூன்று பாட்டிகள்தான் ஹீரோ. அவர்கள் எதிர்கொள்ளும் சம்பவங்கள் தான் கதை.

படத்தில் பாடல்கள், அக்சன் காட்சிகள் என்று எதுவும் கிடையாது. இதுதான் இட்லி படத்தின் ஸ்பெஷல்.

இது அனைவரையும் சிரிக்க வைக்கும் சிந்திக்க வைக்கும் படமாக இருக்கும். நான் படத்தின் கதையை சரண்யா பொன்வண்ணனிடம் முதலில் கூறிய போது நாங்கள் துப்பாக்கி தூக்கி ஒரு காட்சியில் வந்தால் சரியாக இருக்குமா ?? மக்கள் ஏற்றுக்கொள்வார்களா ?? என்று சந்தேகத்தோடு கேட்டார்.

நடித்து முடித்து அந்த காட்சியை டப்பிங்கில் பார்க்கும் போது அனைவருக்கும் மனநிறைவாக இருப்பதாக கூறினார்கள்.

அப்பு மூவீஸ் Abbas தூயவன் தயாரித்துள்ள இத்திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது.

இதன் டீசரை சற்றுமுன் நடிகர் கார்த்தி வெளியிட்டார்.

Karthi revealed Itly movie teaser

Itly team karthi

மெர்சல் விளம்பரத்திற்கு தடை நீடிப்பு; தீர்ப்பை ஒத்திவைத்தது கோர்ட்

மெர்சல் விளம்பரத்திற்கு தடை நீடிப்பு; தீர்ப்பை ஒத்திவைத்தது கோர்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mersal posterவிஜய் நடிப்பில் அட்லி இயக்கியுள்ள படம் மெர்சல்.

இப்படம் வருகிற அக்டோபர் 18ஆம் தேதி ரிலீஸ் ஆகவ்வுள்ளது.

த்தின் டீசர் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இதனிடையில் சென்னை உயர்நீதிமன்றம் ‘மெர்சல்’ படத்தை விளம்பரம் செய்ய இடைக்கால தடை விதித்தது.

2014ம் ஆண்டு தயாரிப்பாளர் ராஜேந்திரன் ‘மெர்சலாயிட்டேன்’ என்ற தலைப்பை படத்திற்கு வைத்திருக்கிறார்.

இந்த தலைப்பை விஜய் படத்திற்கும் பயன்படுத்தியுள்ளனர்.

மேலும் இத்தலைப்புக்கு டிரெட் மார்க் பெற்றுள்ளதால், மெர்சலாயிட்டேன் படத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தயாரிப்பாளர் ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில், அக்டோபர் 3ம் தேதி வரை மெர்சல் தலைப்பில் படத்தை விளம்பரப்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டது.

தற்போது விசாரணை முடிந்துள்ள நிலையில், வழக்கின் தீர்ப்பை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்துள்ளது ஐகோர்ட்.

மேலும் ‘மெர்சல்’ பட பெயரை பயன்படுத்த, விளம்பரப்படுத்த விதிக்கப்பட்ட தடை தொடரும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

Mersal title issue court will give Judgment on 6th Oct 2017

தன்னை விட சிறந்த நடிகர் மோடி; பிரகாஷ்ராஜ் பேச்சால் பாய்ந்தது வழக்கு

தன்னை விட சிறந்த நடிகர் மோடி; பிரகாஷ்ராஜ் பேச்சால் பாய்ந்தது வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Exhibition at National Archives of Indiaநடிகர் பிரகாஷ்ராஜ் பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலையில் பிரதமர் மோடி மௌனம் காப்பது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.

மேலும் தன்னுடைய ஆதரவாளர்களின் செயலை மோடி ஆதரிக்கிறாரா என கேள்வி எழுப்பினார்.

அதிலும் நரேந்திர மோடி தன்னைவிட சிறந்த நடிகர் என தெரிவித்தார்.

மேலும், தான் பெற்ற தேசிய விருதுகளைத் திரும்ப அளிப்பேன் என பிரகாஷ்ராஜ் கூறியதாக செய்திகள் வெளியானது.

ஆனால் தேசியவிருதை  திரும்ப அளிக்க நான் ஒன்றும் முட்டாள் இல்லை. அது என் திறமைக்கு கிடைத்த விருது. திருப்பியளிப்பேன் என கூறவில்லை என மற்றொரு பேட்டியில் தெரிவித்தார்.

நான் எந்தவொரு கட்சியிலும் இல்லை. நாட்டின் குடிமகன் என்கிற முறையில் பிரதமரிடம் கேள்வி கேட்டேன் என்றார்.

இந்தக் கருத்துகள் மூலம் பிரதமருக்கு எதிராக பிரகாஷ்ராஜ் பேசியதாகக் கூறி வழக்கறிஞர் ஒருவர் லக்னோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு, அக்டோபர் 7ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Case filed against PrakashRaj over his criticism of PM Modi

More Articles
Follows