நீண்ட தலை முடி தாடியுடன் சிம்பு.; சீரியஸ் டிஸ்கஷனில் தேசிய பெரியசாமி

நீண்ட தலை முடி தாடியுடன் சிம்பு.; சீரியஸ் டிஸ்கஷனில் தேசிய பெரியசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

துல்கர் சல்மான் நடித்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் முதல் காட்சி துவங்கும் போதே அதில் ரஜினியின் கபாலி சிலை திரையில் காட்டப்படும்.

அப்போது இயக்குனர் ஒரு தீவிர ரஜினி ரசிகர் என்பதை நாம் உணரலாம்.

மிகப்பெரிய வெற்றி படத்தை இயக்குநர் தேசிங்கு பெரியசாமி கொடுத்த நிலையில் அவரை ரஜினிகாந்த் அழைத்து பாராட்டி எனக்கும் ஒரு கதை ரெடி செய்யுங்கள் என அன்பு கட்டளை விடுத்திருந்தார்.

எனவே ரஜினியின் அடுத்த படத்தை தேசிங்கு பெருங்குசாமி இயக்குவார் என திரையுலகம் எதிர்பார்த்த நிலையில் சிம்பு படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் தேசிங்கு.

ரஜினியின் தீவிர ரசிகரான தேசிங்கு பெரியசாமிக்கு தன் பேனரில் படம் இயக்கும் வாய்ப்பை கொடுத்தார் கமல்ஹாசன்.

இந்த அறிவிப்பு வெளியாகி சில மாதங்கள் ஆனாலும் இதன் ஷூட்டிங் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. ஆனால் இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நீண்ட தலை முடி தாடியுடன் சிம்பு நிற்கும் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் சிம்புவின் முகம் காட்டப்படவில்லை என்றாலும் அவர் தேசிங்கு பெரியசாமி உடன் சீரியஸ் டிஸ்கஷனில் இருப்பது தெரிகிறது.

இந்த புகைப்படம் தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது.

Simbu and Desingu Periyasamy serious discussion

கமல்ஹாசனை தொடர்ந்து தனுஷை இயக்கும் அஜித்தின் சூப்பர் ஹிட் இயக்குனர்

கமல்ஹாசனை தொடர்ந்து தனுஷை இயக்கும் அஜித்தின் சூப்பர் ஹிட் இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஐந்து படங்கள் மட்டும் தான் இயக்கி இருக்கிறார்.. ஐந்தும் ஐந்து ரகம். சதுரங்க வேட்டை என்ற முதல் படத்தை இயக்கி ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் தன் பக்கம் திருப்பியவர் இயக்குனர் ஹச் வினோத்.

முதல் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று என்ற போலீஸ் அதிகாரியின் உண்மை சம்பவத்தை இயக்கியிருந்தார்.

கார்த்தி நடித்த இந்தப் படமும் சூப்பர் ஹிட் ஆகவே அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் வினோத்.

தொடர்ந்து மூன்று அஜித் படங்களை இயக்கினார். நேர்கொண்ட பார்வை வலிமை துணிவு மூன்று படங்களை இயக்கினார்.

இதில் வலிமை கலவையான விமர்சனங்களை பெற்றாலும் துணிவு படம் வினோத்துக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

விரைவில் கமல்ஹாசன் தயாரித்து நடிக்க உள்ள படத்தை இயக்க ரெடியாகி வருகிறார் வினோத்.

எனவே தான் வினோத் பிறந்த நாளுக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

கமல் – வினோத் இணையும் படம் அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமலின் படத்தை முடித்துவிட்டு தனுஷ் படத்தை வினோத் இயக்குவார் என தகவல்கள் வந்துள்ளன.

After Kamal movie Vinoth will direct Dhanush

‘ஜெயிலர்’ சக்சஸ்.: 100 குழந்தைகளின் சிகிச்சைக்கு 1 கோடி கொடுத்த சன் பிக்சர்ஸ்

‘ஜெயிலர்’ சக்சஸ்.: 100 குழந்தைகளின் சிகிச்சைக்கு 1 கோடி கொடுத்த சன் பிக்சர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடிப்பில் உருவான ‘ஜெயிலர்’ கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது.

இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் ரஜினி, நெல்சன், அனிருத் ஆகிய மூவருக்கும் விலை உயர்ந்த காரை பரிசளித்திருந்தார் சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறன். மேலும் மூவருக்கும் மிகப்பெரிய தொகையும் சம்பளமாக வழங்கப்பட்டது.

இது தொடர்பான செய்திகள் மற்றும் வீடியோக்களை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்

இந்த நிலையில் கலாநிதி மாறனின் மனைவி காவிரி அவர்கள் அப்போலோ ஹாஸ்பிடல் நிர்வாகத்திற்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளார். நூறு குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்காக இந்த தொகை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Sun Pictures handed over a cheque for Rs.1 Crore to Apollo Hospitals

ஷாருக்குடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நயன்தாரா – விக்னேஷ் ஜோடி

ஷாருக்குடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நயன்தாரா – விக்னேஷ் ஜோடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை நயன்தாரா. இவர் தமிழ் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்கிறார்.

தற்போது ஷாருக்கான் உடன் இணைந்து ‘ஜவான்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகிறது.

சமீபத்தில் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் ‘ஜவான்’ பட ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நடைபெற்றது.

இதில் ஷாருக், அட்லி, விஜய் சேதுபதி, யோகி பாபு, அனிருத் உள்ளிட்ட பல கலைஞர்கள் பங்கேற்றனர். ஆனால் இதில் நாயகியாக நடித்திருந்த நயன்தாரா பங்கேற்கவில்லை.

இந்த நிலையில் இன்று செப்டம்பர் 5ஆம் தேதி ஷாருக்கான் மற்றும் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளனர் .

அவர்கள் திருப்பதி கோயிலில் சென்று வந்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Sharukh Nayanthara Vickky thirupathi temple visit

ஹிந்தி நடிகரை கண்டு கொண்ட நயன்தாரா தமிழ் நடிகரை கண்டுக்கலையே

ஹிந்தி நடிகரை கண்டு கொண்ட நயன்தாரா தமிழ் நடிகரை கண்டுக்கலையே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சில தினங்களுக்கு முன்பு இன்ஸ்ட்டாகிராம் என்ற சமூக வலைதள பக்கத்தில் இணைந்தார் நடிகை நயன்தாரா.

அவர் இணைந்தது முதல் அவரது ரசிகர்கள் பலரும் அவரைப் பின் தொடர்ந்தனர். இந்த அக்கௌண்டில் தனக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளின் படத்தை பகிர்ந்திருந்தார்.

மேலும் இதோ வந்துட்டேன்னு சொல்லு என்ற ரஜினியின் கபாலி பட டயலாக்கையும் பகிர்ந்து இருந்தார்.

இதனைத் தொடர்ந்து ‘ஜவான்’ படத்தில் ட்ரெய்லரை பகிர்ந்தார் நயன்தாரா. ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 3 தேதி வெளியான ‘இறைவன்’ பட ட்ரைலரை நயன்தாரா பகிரவில்லை.

‘ஜவான்’ மற்றும் ‘இறைவன்’ ஆகிய இரு படங்களிலும் நாயகி நயன்தாரா தான்.

ஷாருக்கான் பட டிரைலரை பகிர்ந்த நயன்தாரா ஜெயம்ரவி பட ட்ரைலரை மட்டும் பகிராதது ஏன் என ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Nayanthara support Hindi Actors not Tamil actors

அர்ஜுன் – ஐஸ்வர்யா இணைந்த ‘தீயவர் குலைகள் நடுங்க’ பட சூட்டிங் அப்டேட்

அர்ஜுன் – ஐஸ்வர்யா இணைந்த ‘தீயவர் குலைகள் நடுங்க’ பட சூட்டிங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஆக்சன் கிங்’ அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘தீயவர் குலைகள் நடுங்க’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு படக் குழுவினர் அறிவித்திருக்கிறார்கள்.

அறிமுக இயக்குநர் தினேஷ் இலட்சுமணன் இயக்கத்தில் உருவாகி வரும் முதல் திரைப்படம் ‘தீயவர் குலைகள் நடுங்க’.

இதில் ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ், ‘பிக் பாஸ்’ அபிராமி, ராம்குமார், ஜி. கே. ரெட்டி, லோகு, எழுத்தாளரும், நடிகருமான வேல.ராமமூர்த்தி, தங்கதுரை, பிராங்க் ஸ்டார் ராகுல், ஒ. ஏ. கே. சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

தீயவர் குலைகள் நடுங்க

சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் ஆசிவகன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை லாரன்ஸ் கிஷோர் மேற்கொள்ள, நவநீதன் சுந்தர்ராஜன் வசனம் எழுத,கலை இயக்கத்தை அருண்சங்கர் துரை கவனித்திருக்கிறார்.

இன்வெஸ்டிகேசன் ஆக்சன் திரில்லராக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்திருக்கிறது என படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்திருக்கிறார்கள்.

தீயவர் குலைகள் நடுங்க

இதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தொடங்கி இருக்கிறது.

ஏற்கனவே வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், விரைவில் அடுத்தடுத்து இப்படத்தின் மோஷன் போஸ்டர், சிங்கிள் ட்ராக் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘ஆக்சன் கிங்’ அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்முதலாக இணைந்திருப்பதால் இப்படத்திற்கு பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.‌

தீயவர் குலைகள் நடுங்க

First time Arjun and Ishwarya Rajesh join hands together

More Articles
Follows