2.0 பட 6வது ரிலீல் என்ன அதிசயம்..? ஏஆர். ரஹ்மான் சர்ப்ரைஸ் ட்வீட்

AR Rahman surprise tweet about 2point0 movie 6th reelலைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘2.0’.

ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் 3D டிரைலரை மிகப்பிரம்மாண்டமான முறையில் சென்னையில் வெளியிட்டனர்.

ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் கடந்த நவம்பர் 3-ஆம் தேதியன்று வெளியிட்டனர்.

இம்மாதம் இறுதியில் நவம்பர் 29-ஆம் தேதி இப்படத்தை லைகா நிறுவனம் உலகமெங்கும் வெளியிடவுள்ளது.

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான், ‘2.0’வின் ஆறாவது ரீல் காட்சிகளுக்கான மிக்சிங் வேலைகளை செய்து வருவதை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த ட்வீட்டில் Mixing reel 6 #2point0 OMG ,.emotional and sci-fi Epic ! என்று குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களோ தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர்.

தன் படங்கள் என்றாலும் ஏதாவது பாடல், டிரைலர் வெளியிட்டு தேதியை பற்றிதான் ட்வீட் செய்வார்.

தற்போது அவராகவே முன் வந்து ‘2.0’ பட காட்சிகள் குறித்து பதிவிட்டுள்ளது இந்திய சினிமாவை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

எனவே ரசிகர்கள் எதிர்பார்க்கும் சர்ப்ரைஸ் நிச்சயம் இருக்கும் என நம்பலாம்.

AR Rahman surprise tweet about 2point0 movie 6th reel

Overall Rating : Not available

Related News

ஹிந்தி சினிமாவுக்கு உலகளவில் மார்கெட் உள்ளது.…
...Read More
லைகா, ஷங்கர், ரஜினிகாந்த், அக்ஷய்குமார் உள்ளிட்ட…
...Read More
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, எமிசாக்சன், அக்ஷய்…
...Read More
ரஜினிகாந்த், அக்சய்குமார், ‌ஷங்கர், லைகா ஆகியோரது…
...Read More

Latest Post