தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ படத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது….
“இந்த மேடை நிறைய வகையில் ரொம்ப ரொம்ப ஸ்பெஷல். ’அயலான்’ வருமா வந்துவிடுமா எப்போ வரும் என்று கேள்வி வரும். பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இன்னொரு படம் ஈசியா பண்ணிவிடலாம். இது இவர்களை தாண்டி பெரிய ஆள் ஆக வேண்டும் என்று நினைத்து பண்ணியதில்லை.
இந்தப் படம் தொடங்கும் முன் பான் இந்தியா இல்லை. இது தமிழ் மக்களுக்காக பண்ணியது. நாம ஆசைப்பட்ட படம் கண்முன் தெரிகிறது. இதில் நாமும் நடித்துள்ளோம் என்பதில் சந்தோஷமாக உள்ளது. இதில் சரக்கு, புகை பிடித்தல், கிளாமர், போதைப் பொருள் கிடையாது. குழந்தைகளுக்கான விஷயங்கள் இருக்கும்.
ஏஆர் ரஹ்மானின் வெறித்தனமான ரசிகர்களில் நானும் ஒருவன். என் படத்தில் ரஹ்மான் இசை வருது என்பதை விட எனது வாழ்க்கையில் வேறு என்ன இருக்கு. படத்தை பார்த்து முதலில் சூப்பர் என்று சொன்னவர் ஏஆர். ரஹ்மான். டீசரை விட ட்ரெய்லர் இன்னும் நன்றாக இருக்கும். உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். அன்பறிவு மாஸ்டர்ஸ் போல, நானும் இரட்டையராக இருந்தால் நான் ஒருபடமும் அவர் ஒரு படமும் போய் இரட்டை சம்பளம் வாங்கலாம். எங்க ஒரு படத்திற்கு போனாலே சம்பளம் தரமாட்டேங்குறாங்க.
ரஹ்மான் சார் இசையில் நான் பாடல் எழுதியுள்ளேன். அந்த அனுபவம் மிகவும் சுவாரசியமானது. இப்படத்தில் அயலானாக நடித்த வெங்கடேஷ் நாயகனாக நடித்துள்ள மதிமாறன் திரைப்படம் இந்த வாரம் வெளியாகிறது அவருக்கும் வாழ்த்துகள். பாய்ஸ் படத்தில் சித்தார்த் அத்தனை அழகாக இருப்பார். அயலானுக்கு குரல் கொடுத்த சித்தார்த்துக்கு நன்றி. பணம் வாங்காமல் பண்ணிக் கொடுத்தார். இதுபோன்ற படங்கள் வருவது அபூர்வம்.
ஆரம்பத்தில் இருந்து இப்படத்தின் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி. இப்படம் நிச்சயம் உங்களை சந்தோஷப்படுத்தும். நீங்கள் என்னை அண்ணா என்று சொல்கிறீர்கள். சிலர் திட்டுவார்கள். நடிப்பு வரவில்லை என்பார்கள். அதை நான் காதில் வாங்குவதில்லை. என்னை பிடித்தவர்களுக்கு, அவர்களுக்கு பிடித்த படத்தை தொடர்ந்து பண்ண வேண்டும் என்று ஆசை.
என்னை வெறுப்பவர்களுக்கு நான் பதில் கூட சொல்ல விரும்பவில்லை. இந்த படத்துக்கு நான் உதவி செய்தேன் என்கின்றனர். சம்பளம் வாங்காததற்கு ஆர்த்தி மாதிரி ஒருவர் எனக்கு இருப்பதுதான் காரணம். இப்படத்திற்கு பிரச்சினை வரும்போது நம்ம ரவிக்குமார் அண்ணன்தானே என்றார். ’டாக்டர்’ சமயத்திலும் நம்ம நெல்சன் அண்ணன்தானே என்றார். ’கனா’ படத்துக்கும் அப்படியேதான்.
எல்லோரும் கொடுத்த தைரியம் தான் இப்படத்தை இங்கு கொண்டு வந்து நிறுத்த வைத்துள்ளது. கஷ்டப்பட்ட எல்லோருக்கும் இது ஒர்த் என்று தோன்றும். பணம் கொடுத்து பார்க்கும் அனைவருக்கும் இது ஒர்த் என்று தோன்றும். எனது மகன் குகன் முதலில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி இதுதான். ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நான் நடிக்கும் படம் அடுத்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளோம். ராஜ்குமார் பெரியசாமி படம் ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. இதனை முடித்துக்கொண்டு பக்கா மாஸ் என்டர்டெயின்மென்ட் படம் பண்ண உள்ளேன்” என்றார்.
I dont want give reply for my haters says Sivakarthikeyan