ஐஸ்வர்யா ரஜினியின் ‘லால் சலாம்’ சூட்டிங் அப்டேட் கொடுத்த விஷ்ணு விஷால்

ஐஸ்வர்யா ரஜினியின் ‘லால் சலாம்’ சூட்டிங் அப்டேட் கொடுத்த விஷ்ணு விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ‘லால் சலாம்’ படத்தின் மூலம் மீண்டும் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

இப்படத்தில் ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜீவிதா ராஜசேகரும் ‘லால் சலாம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

33 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிகையாக வரவுள்ள ‘லால் சலாம்’ படத்தில் அவர் ரஜினிகாந்தின் தங்கையாக நடிப்பதாக கூறப்படுகிறது.

விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் முடிவடைந்தது.

இந்நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் இன்று தொடங்கியது.

மேலும், இப்படத்தின் இரண்டாவது ஷெட்யூல் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியுள்ளதாக நடிகர் விஷ்ணு விஷால் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Vishnu Vishal begin the next schedule of ‘Lal Salaam’ in Mumbai

பொன்னியின் செல்வன் 2 வில் நடித்த இள வயது குந்தவை யார் தெரியுமா ?

பொன்னியின் செல்வன் 2 வில் நடித்த இள வயது குந்தவை யார் தெரியுமா ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொன்னியின் செல்வன் 2 படத்தில் இள வயது குந்தவையாக நடிகை நிலா என்பவர் நடித்திருந்தார்.

தமிழ் சீரியல் நடிகர்களான கவிதா பாரதி மற்றும் கன்யா பாரதியின் ஒரே மகள் நிலா என்பது தற்போது தெரிய வந்துள்ளது. ‘சித்தி’ நாடகத்தை இயக்கி புகழ் பெற்றவர் கவிதா பாரதி என்பது குறிப்பிடத்தக்கது. ஜோதிகாவின் ‘ராட்சசி’ யிலும் நடித்துள்ளார். ‘தெய்வம் தந்த வீடு’, ‘அன்பே வா’, தொடர்களில் நடித்து பிரபலமானவர் கன்யா பாரதி.

கேரளாவில் படித்துக் கொண்டிருக்கும் நிலா, தீவிர தணிக்கைக்குப் பிறகு இளம் குந்தவை வேடத்திற்குத் தேர்வு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Can you guess who the young Kundavai in ‘Ponniyin Selvan 2’ is?

மனோபாலா மறைவுக்கு நேரில் வராத ரஜினி – கமல் – அஜீத்; நெட்டிசன்கள் கண்டனம்..!

மனோபாலா மறைவுக்கு நேரில் வராத ரஜினி – கமல் – அஜீத்; நெட்டிசன்கள் கண்டனம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான மனோபாலா உடல் நலக்குறைவால் நேற்று காலமானார்.

மனோபாலாவுக்கு தற்போது 69 வயது. இவருக்கு கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

மனோபாலா நேற்று மே 3-ம் தேதி மதியம் சிகிச்சை பலனின்றி காலமானார்.

40 ஆண்டுகளாக சினிமாவில் துறையில் மனோபாலா பல நடிகர் நடிகைகளின் உடன் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார்.

நடிகர்கள் விஜய், கவுண்டமணி, பாக்யராஜ், மோகன், விஜய்சேதுபதி, சரத்குமார், நடிகைகள் ராதிகா, பூர்ணிமா பாக்யாராஜ், கோவை சரளா, இயக்குனர்கள் மணிரத்தினம், ஷங்கர் உள்ளிட பலர் மனோபாலா உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்நிலையில், பிரபல நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் குமார் இவர்கள் மனோபாலா உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்த வரவில்லை.

இதனால், பிரபல நடிகர் மனோபாலா மறைவுக்கு ரஜினி, கமல், அஜித் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்த வராததால் நெட்டிசன்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Rajini, Kamal, Ajith   did not attend the funeral of Manobala

பிக் பாஸ் 7 எப்போது ஆரம்பம் ? தொகுத்து வழங்க போவது யார் ?

பிக் பாஸ் 7 எப்போது ஆரம்பம் ? தொகுத்து வழங்க போவது யார் ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பிக் பாஸ் தமிழ் 7’ நிகழ்ச்சியின் முதற்கட்ட பணிகள் ஏற்கனவே விஜய் டிவியால் ஏற்கெனவே ஆரம்பிக்கபட்டதாக சொல்லப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் ஜூலை மாதம் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தொடங்கிவிட்டதாகவும், போட்டியாளர்களுக்கான ஆடிஷன்கள் தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொகுப்பாளராக கமல்ஹாசன், ‘பிக் பாஸ் தமிழ் 7’ இல் தொடர்வார் என்று கூறப்படுகிறது.

ஜூன் மாத இறுதியில் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அதன் பிறகு நடிக்கவுள்ளார்.

When will ‘Bigg Boss Tamil 7’ start, who will be the host?

நடிகர் சரத்பாபு எப்படி இருக்கிறார்.? உண்மையை சொல்லும் உறவினர்

நடிகர் சரத்பாபு எப்படி இருக்கிறார்.? உண்மையை சொல்லும் உறவினர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பழம்பெரும் தென்னிந்திய திரைப்பட நடிகர்களில் ஒருவர் சரத் பாபு.

71-வயதான சரத்பாபு உடல்நலக் குறைவு காரணமாக மார்ச் மாதம் சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை மேற்கொண்டார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் அவரை ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கே தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

நடிகர் சரத்பாபு கடந்த மாதம் 20-ஆம் தேதி ஐதராபாத்தில் கச்சிபௌலி எனும் இடத்தில் உள்ள தனியார் அனுமதியில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார்.

சரத்பாபுவின் சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

இப்படியொரு சூழலில் நேற்று அவர் உயிரிழந்து விட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.

கமல், குஷ்பு உள்பட பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சரத்பாபுவின் சகோதரர் மகன் ஆயுஷ் தேஜாஸ், உண்மை நிலையை விளக்கியுள்ளார்.

”அவர் முழுமையாக குணமடைந்து வருகிறார். அவரைப் பற்றி வெளியான தகவல்கள் பொய்யானவை. சமூக வலைதளங்களில் வரும் செய்திகள் எதையும் நம்பவேண்டாம். ஐசியு பிரிவில் இருந்து அவரை வேறு அறைக்கு மாற்றியுள்ளனர். விரைவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசுவார் என நம்புகிறேன்.” என்று தெரிவித்து இருக்கிறார்.

How is actor Sarathbabu? A relative who tells the truth

அஜித் – சூர்யா ஆகியோருடன் சேர்த்து 1000 படங்களுக்கு நடனமைத்த சம்பத்ராஜ் மரணம்

அஜித் – சூர்யா ஆகியோருடன் சேர்த்து 1000 படங்களுக்கு நடனமைத்த சம்பத்ராஜ் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய திரையுலகில் 1000+க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியவர் சம்பத்ராஜ்.

இவருக்கு தற்போது வயது 54் ஆகிறது.

இவர் நடன இயக்குனராக பணிபுரிந்த படங்களில் சில…

சரிகமபதநி
சின்ன ஜமீன்
மதுமதி
அமராவதி
காதல் கோட்டை
வான்மதி
நம்ம அண்ணாச்சி
என் சுவாச காற்று
ஹானஸ்ட் ராஜ்
ஊட்டி
அதர்மம்
உள்ளே வெளியே
புள்ள குட்டிக்காரன்
உயிரிலே கலந்தது
கோலங்கள்
சாது
காதலே நிம்மதி
மகா பிரபு
மக்களாட்சி

இந்த நிலையில் சம்பத்ராஜ் உடல்நல குறைவால் காலமானார்.

அவரின் இறுதி மரியாதை இன்று 4.5.23 மாலை 3 மணியளவில் No 34 கனகதாரா நகர் மெயின்ரோடு வளசரவாக்கம் சென்னையில் நடைபெறுகிறது

தொடர்புக்கு
Harish kumar 9025706720

Ramanaji 8015767737

choreographer Sambhathraj paseed away

More Articles
Follows