லயன் கிங் ரிலீஸால் விலகி ஓடும் சூப்பர் ஸ்டார் ரஜினி

லயன் கிங் ரிலீஸால் விலகி ஓடும் சூப்பர் ஸ்டார் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (7)ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, எமிசாக்சன், அக்ஷய் குமார் ஆகியோர் நடித்த படம் 2.0.

லைக்கா நிறுவனம் 500 கோடியில் தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

இப்படம் இந்தியாவில் பெரிய வெற்றியை பெறாவிட்டாலும், எவருக்கும் நஷ்டத்தை தரவில்லை.

இந்த நிலையில் இப்படம் வருகிற ஜூலை 12ல் சீனாவில் வெளியாகவுள்ளது.

இதன் வெளியீட்டு உரிமத்தை ஹெச் ஒய் மீடியா என்ற நிறுவனம் பெரும் தொகைக்கு வாங்கியுள்ளது.

நாளை ஜூன் 28ம் தேதி சிறப்பு காட்சியும், ஜூலை 12ல் படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சீனாவில் ஹாலிவுட் படமான லயன் கிங் வெளிவருவதால் 2.0 புரோமோசன் பணிகளை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த லயன் கிங் கார்டூன் படமாக வந்தபோதே சீனாவில் வசூலை வாரிக்குவித்த படமாம். எனவேதான் ரஜினி படத்திற்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஹவுஸ் ஓனர் சொல்லியும் கண்டுக் கொள்ளாத சிந்துபாத்

ஹவுஸ் ஓனர் சொல்லியும் கண்டுக் கொள்ளாத சிந்துபாத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (6)அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சிந்துபாத்’.

கடந்த வாரம் ஜூன் 21-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் பாகுபலி 2 படத்தின் விநியோகம் சம்மந்தமாக 18 கோடி ரூபாயை சிந்துபாத் படத்தின் தயாரிப்பாளர் பாக்கி வைத்திருந்த காரணத்தால் ஏற்பட்ட பஞ்சாயத்தால் அப்படம் வெளியாகவில்லை!

தற்போது அனைத்து பிரச்சினைகளும் முடிவடைந்து ‘சிந்துபாத்’ படம் இன்று ஜீன் 27ஆம் தேதி வெளியாகிறது.

இத்துடன் நாளை ‘யோகி’ பாபுவின் ‘தர்மபிரபு’, லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹவுஸ் ஓனர்’ மற்றும் ‘நட்சத்திர ஜன்னலில்’, ‘ஜீவி’, ‘காதல் முன்னேற்ற கழகம்’ ஆகிய படங்களும் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து விஜய் சேதுபதியின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக அவரிடம் ஒரு கோரிக்கை வைத்து டுவீட் போட்டார்.

”பெரிய படங்களை சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மைகள் சிறியவற்றை மூழ்கடிக்கின்றன. சிப்பாயாக எங்கள் சிறிய படத்தை காப்பாற்ற வேண்டும். ஏற்கெனவே திட்டமிடப்பட்ட படங்களுக்கு நேரத்தை கொடுக்க தயாரிப்பாளர்களிடம் கூறுங்கள். தேதியை 15 நாட்களுக்கு முன்னால் அறிவிக்கவும்” என்று பதிவிட்டார்.

ஆனால் அவற்றை எல்லாம் சிந்துபாத் கண்டுக்கொள்ளவில்லை என்றே தெரிகிறது.

நேற்று ஜுங்கா & சீதக்காதி..; இன்று சீக்குபாத்.. என்னாச்சு மக்கள் செல்வன்..?

நேற்று ஜுங்கா & சீதக்காதி..; இன்று சீக்குபாத்.. என்னாச்சு மக்கள் செல்வன்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathis Sindhubaadh getting negative reviewsமாதத்திற்கு ஒரு படம் அல்லது 2 மாதத்திற்கு ஒரு படம் என தமிழக ரசிகர்களுக்கு விருந்தளித்து வருபவர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி.

இவரது ஓரிரு படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்றாலும் ஒரு சில படங்கள் கடுமையான விமர்சனங்கள் சந்தித்து வருகிறது.

சென்ற வருடம் 96, செக்கச் சிவந்த வானம் ஆகிய படங்கள் வெற்றியை பெற்றாலும் ஜீங்கா மற்றும் சீதக்காதி படங்கள் மோசமான விமர்சனங்கள் பெற்றது.

அதுபோல் இந்தாண்டில் ரஜினியின் பேட்ட இவருக்கு கைகொடுத்த்து. ஆனால் சூப்பர் டீலக்ஸ் கலவையான விமர்சனங்கள் பெற்றது.

இந்த நிலையில் இன்று வெளியான சிந்துபாத் படம் எதிர்பார்த்த அளவில் இல்லை என்பதால் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

மக்கள் செல்வன் இனியாவது கதையிலும் திரைக்கதையிலும் கவனம் செலுத்துவாரா? என்பதை பார்ப்போம்.

Vijay Sethupathis Sindhubaadh getting negative reviews

தீராத சிக்கலில் சிந்துபாத்.; காலை 8 மணி காட்சிகள் ரத்தானது

தீராத சிக்கலில் சிந்துபாத்.; காலை 8 மணி காட்சிகள் ரத்தானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathis Sindhubaadh special shows cancelled‘பண்ணையாரும் பத்மினியும்’ மற்றும் ‘சேதுபதி’ ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் தற்போது இயக்கியுள்ள படம் ‘சிந்துபாத்’.

யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய்சேதுபதி, அஞ்சலி ஆகியோர் இப்படத்தில் இணைந்துள்ளனர்.

இப்படத்தின் வெளியீட்டு பல காரணங்களால் தள்ளிக் கொண்டே போனது.

இந்த நிலையில் இன்று இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு முன்பதிவும் நடைபெற்றது.

சென்னையில் சில அரங்குகளில் காலை 8 மணி காட்சியும் இருந்தன.

ஆனால் காலை காட்சிகள் ரத்தானது. இதனால் விஜய்சேதுபதி ரசிகர்கள் வருத்தமடைந்தனர்.

ஆனால் 10 மணி மற்றும் 11 மணி காட்சிகள் சில அரங்குகளில் திரையிடப்படும் எனத் தெரிகிறது

Vijay Sethupathis Sindhubaadh special shows cancelled

விஜய்சேதுபதி படத்தில் அமலாபாலுக்கு பதிலாக மேகா ஆகாஷ்

விஜய்சேதுபதி படத்தில் அமலாபாலுக்கு பதிலாக மேகா ஆகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (5)ரஜினியின் பேட்ட படத்தில் முக்கியமான ரோலில் அதாவது சிம்ரனின் மகளாக நடித்திருந்தார் மேகா ஆகாஷ்.

மேலும் தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா, சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன்’ ஆகிய படங்களிலும் நாயகியாக நடித்துள்ளார்.

இதில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா படம் இன்னும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் தற்போது விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ஒரு படத்தில் திடீரென கமிட் ஆகியுள்ளார்.

அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகந்த் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் முதலில் நாயகியாக அமலா பால் நடிக்கவிருந்தார். தற்போது அவர் விலகியதால் மேகா ஆகாஷ் ஒப்பந்தமாகியிருக்கிறாராம்.

கௌதம் கார்த்திக்கு சிம்பு கொடுத்த இன்ப அதிர்ச்சி

கௌதம் கார்த்திக்கு சிம்பு கொடுத்த இன்ப அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)சூர்யா, கார்த்தி நடித்த பல படங்களை தயாரித்த ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தற்போது சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கவுள்ளது என்பதை பார்த்தோம்.

இப்படம் கன்னடத்தில் உருவான ‘மப்டி’ படத்தின் ரீமேக் ஆக உருவாகவுள்ளது.

இயக்குனர் நர்த்தன் என்பவர்தான் இப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் சிம்பு ஒரு நெகட்டிவ்வான ரோலில் நடிக்கிறாராம்.

இந்நிலையில், கௌதம் கார்த்திக்கு நடிகர் சிம்பு சிறப்பு பரிசு ஒன்றை வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

ஓர் அழகான கூலிங் கிளாசை ஒன்றை கொடுத்திருக்கிறார்.

More Articles
Follows