தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஐடி வேலை.. ஆனாலும் ‘ஹாஃப் பாட்டில்’ ஆசை..; ரவீனாவுடன் இணைந்த எழில்வாணன்
*”ஹாஃப் பாட்டில்” ஆல்பம் பாடலின் பத்திரிகையாளர் சந்திப்பு!!*
ES Production & Macha Swag Dance தயாரிப்பில், தீபன் மற்றும் வைபவ் இசையில், எழில்வாணன் வடிவமைத்து உருவாக்கியிருக்கும் ஆல்பம் பாடல், ”ஹாஃப் பாட்டில்”.
இன்றைய கால இளைஞர்களின் காதலையும் ஊடலையும் மையமாகக் கொண்டு இப்பாடல் உருவாகியுள்ளது. எழில்வாணன் EV, பிக்பாஸ் ரவீனா & ரேணுகா (சிறப்பு தோற்றம் ) இணைந்து நடித்துள்ளனர். மான்சி & EV இணைந்து நடன அமைப்பைச் செய்துள்ளனர்.
இணையத்தில் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இப்பாடலின் குழுவினர் பத்திரிகை ஊடக நண்பர்களை சந்தித்தனர்
*இயக்குநர், நடிகர், எழில்வாணன் EV பேசியதாவது….*
இந்த பாடலை விளம்பரப்படுத்தும் பொருட்டு பிரபலங்கள் யாரையாவது அழைக்கச் சொன்னார்கள் எனக்கு பேர் தெரிந்த பிரபலம் நீங்கள் தான் அதனால் தான், உங்களை அழைத்து உங்கள் முன்னிலையில் பாடலை விளம்பரப்படுத்துகிறோம்.
இந்த மேடைக்கு நான் வந்திருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் முருகன் அண்ணா, சுரேந்தர் அண்ணா, விஜய் அண்ணா இந்த மூவரும் தான் காரணம், எல்லா இடத்திலும் இவர்கள் எனக்காக நின்றிருக்கிறார்கள். எந்த ஒரு காரியம் என்றாலும் உன்னால் முடியும் செய் எனத் தைரியம் தந்திருக்கிறார்கள்.
நான் அமெரிக்காவில் ஐடி துறையில் வேலை பார்த்து வருகிறேன், இந்த துறை மீதான காதலில் தான் இதைச் செய்ய ஆரம்பித்தேன், யார் வேண்டுமானாலும் எந்த துறையில் வேண்டுமானாலும் அவர்கள் விரும்பினால் சாதிக்கலாம் என்பதற்கான எடுத்துக்காட்டாகத் தான் இதைச் செய்கிறேன்.
என் படக் குழுவினர் எனக்கு மிக உறுதுணையாக இருந்தார்கள். தீபக் மற்றும் வைபவ் இருவரும் எனக்கு இரண்டாவது முறையாக இசையமைக்கிறார்கள். எடிட்டர் கலைவாணனும் நானும் இணைந்து இரண்டாவது முறையாக பணியாற்றுகிறோம்… அவர் எனக்கு ஒரு மேஜிக் (Work) எடிட்டிங் செய்து கொடுப்பார் அது அவ்வளவு அழகாக இருக்கும் அவருக்கும் எனது நன்றி…
இரண்டு வருடங்கள் முன்பே இதற்கான நடன அமைப்பை உருவாக்கி விட்டேன், இந்த பாடலுக்கு ரவீனா சரியாக இருப்பார் என்று அவரை அணுகினேன்.. அவர் உடனடியாக பண்ணலாம் என ஒத்துக் கொண்டு செய்தார். இந்த பாடலின் கரு காதல் தான், காதலர்களுக்கு இடையில் பிரச்சனைகள் வரும்போது மனம் விட்டுப் பேசினால் எந்த ஒரு பிரச்சனையையும் தீர்த்துவிடலாம். அதைத்தான் ஒரு கருவாக வைத்து இந்த பாடலை உருவாக்கி இருக்கிறோம். உங்கள் அனைவருக்கும் இந்த பாடல் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன் எல்லோரும் பாடலுக்கு ஆதரவு தாருங்கள் நன்றி.
*நடிகை ரவீனா பேசியதாவது*
எங்களை ஆதரிக்க வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி. இந்த ஆல்பம் பாடலின் ஷூட்டிங் வெறும் சில மணி நேரங்களிலேயே முடிந்துவிட்டது. அத்தனை திட்டமிடலுடன் நடந்து முடிந்தது. ஷூட் ரொம்ப ஜாலியாக நடந்தது. எப்போதும் உடன் நடிக்கும் நடிகர்கள் கலைஞர்கள் நம்மை காம்போர்ட்டபிளாக வைத்துக் கொண்டால் நாம் சிறப்பாக வேலை செய்வோம், அந்த வகையில் இந்த படக்குழுவினர் என்னை மிகச்சிறப்பாகப் பார்த்துக்கொண்டனர். எழில்வாணன் மிகத் திறமைசாலி இந்த பாடலின் முழு வேலைகளையும் அவரே செய்துவிட்டார் இந்த துறையின் மீதான காதலில் அவர் அமெரிக்காவிலிருந்து இங்கு வந்து, இதைச் செய்து வருகிறார்.
சினிமாத்துறை மீது காதலுடன் இருப்பவர்கள் உருவாக்கியிருக்கும் படைப்பில் நானும் இருக்கிறேன் என்பது எனக்கு மகிழ்ச்சி. இந்த டீமில் வேலை என்னுடன் வேலை பார்த்த அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப்பாடல் மிகச்சிறப்பாக வந்துள்ளது. விரைவில் இணையத்தில் வெளியாகும்..உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
நடிப்பு : எழில்வாணன் EV, பிக்பாஸ் ரவீனா & ரேணுகா
கருத்து, பாடல் மற்றும் இயக்கம் – எழில்வாணன் EV
இசை: தீபன் மற்றும் வைபவ்
நடன அமைப்பு: மான்சி & எழில்வாணன் EV
எடிட்டர்: கலைவாணன் (SK21 எடிட்டர்)
தயாரிப்பு – ES Production & Macha Swag Dance
Ezhilvaanan and Bigboss raveena in Half Bottle Album