சினிமா பட்ஜெட்டில் ரஜினிக்கு அடுத்த இடத்தை பிடித்த விஜய்

Vijay got 2nd place after Rajini Bigil movie budget newsஹிந்தி சினிமாவுக்கு உலகளவில் மார்கெட் உள்ளது. எனவே மிகப்பெரிய பட்ஜெட்டில் படங்கள் உருவாகும்.

அண்மைக்காலமாக தமிழ் & தெலுங்கு சினிமாவுக்கும் உலகளவில் மார்கெட் இருப்பதால் மிகப்பெரிய பட்ஜெட்டில் படங்கள் உருவாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ படம்தான் இதுவரையில் தயாரிக்கப்பட்ட படங்களில் அதிக பட்ஜெட் படமாக இருக்கிறது.

லைகா தயாரித்த இந்த படத்தின் பட்ஜெட் ரூ. 450 கோடி என்றனர்.

இந்த நிலையில் ஷங்கரின் உதவியாளர் அட்லி இயக்கியுள்ள பிகில் படம் தமிழ் சினிமாவில் 2வது இடத்தை பிடித்துள்ளது.

விஜய் நடித்துள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் ரூ. 180 கோடியில் தயாரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிஜிட்டல் உரிமை மட்டும் 45 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளதால் படத்தின் வியாபாரமும் களைகட்டி வருகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கும் சமயத்தில் பிசினஸ் முழு விவரம் தெரிய வரும் என எதிர்பார்க்கலாம்.

Vijay got 2nd place after Rajini Bigil movie budget news

Overall Rating : Not available

Latest Post