இந்தாளு எப்படி இவ்ளோ படிச்சாரு.. ஸ்கூலுக்கே போகாம.; கமல் பற்றி ஏஆர்.ரஹ்மான்

இந்தாளு எப்படி இவ்ளோ படிச்சாரு.. ஸ்கூலுக்கே போகாம.; கமல் பற்றி ஏஆர்.ரஹ்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவை இந்திய அளவில் பிரபலமாக செய்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் கமல்ஹாசன்.

இன்று நவீன திரையுலகத்தில் எந்த ஒரு தொழில்நுட்பம் வந்தாலும் அதை தனது படத்தில் முன்பே பயன்படுத்தி இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். எனவே தான் இவருக்கு உலகநாயகன் என்ற செல்ல பெயரும் உண்டு.

சினிமாவைப் பொறுத்தவரை கமலுக்கு தெரியாத விஷயங்களே இல்லை என்னும் அளவுக்கு இவர் திரையுலகினர் மத்தியிலும் உயர்ந்து நிற்கிறார்.

இந்த நிலையில் கமலின் பெருமையை பற்றி ஒரு தனியார் நிகழ்ச்சியில் கமல் முன்னிலையில் ஏ ஆர் ரகுமான் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

அவரது பேச்சில்… “கமல்ஹாசன் ஒரு பல்கலைக்கழகம்.. இந்த ஆளு எப்படி இவ்ளோ படிச்சியிருக்காரு அதுவும் ஸ்கூலுக்கே போகாம..

அவர் எது பண்ணாலும் அதுல உண்மையும் இருக்கும் நேர்மையும் இருக்கும்.. அவர் கூட இருந்தா நம இளமையா இருப்போம்” என பேசினார் ஏஆர். ரஹ்மான்.

AR Rahman praises Kamal Haasan in the recent event

#arrahman #KamalHaasan

நடிகை பூர்ணாவின் வீட்டில் புதுவரவு.. மகிழ்ச்சியில் குடும்பத்தினர் .

நடிகை பூர்ணாவின் வீட்டில் புதுவரவு.. மகிழ்ச்சியில் குடும்பத்தினர் .

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பூர்ணா என்றழைக்கப்படும் நடிகை ஷம்னா காசிம் டிசம்பரில் தனது யூடியூப் சேனலில் அவர் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.

அதற்கு பிறகு நடைபெற்ற அவரின் வளைகாப்பின் படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.

தங்கம் மற்றும் விலையுயர்ந்த கற்களால் அலங்கரிக்கப்பட்ட மெரூன் பட்டுப் புடவையை அணிந்திருந்தார் அவர் .

இதனிடையே திங்கள்கிழமை இரவு துபாயில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இதனால் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர்.

Actress Shamna Kasim blessed with a baby boy

JUST IN ராக் ஸ்டார் ரமணியம்மாள் காலமானார்.; வாழ்க்கை குறிப்பு இதோ..

JUST IN ராக் ஸ்டார் ரமணியம்மாள் காலமானார்.; வாழ்க்கை குறிப்பு இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜீ டீவி யில் ஒளிபரப்பான சரிகம என்னும் பாடல் நிகழ்ச்சி மூலம் தமிழகளவில் பிரபலமானார் பாடகி ரமணியம்மாள்.

ரமணியம்மாள் என்னும் 64 வயதாகும் இந்தப் பெண்மணியின் குரலை பல சினிமா பிரபலங்களும் பாராட்டி உள்ளனர்.

நாட்டுப்புற பாடல்களை பாடி வரும் ரமணிக்கு ராக்ஸ்டார் ரமணி என்று பட்டமும் அளிக்கப்பட்டது.

இவர் முறையாக சங்கீதம் கற்கவில்லை என்றாலும் இவரின் குரலில் மயங்காதவர்களே இல்லை எனலாம்.

இவருக்கு சின்னத்திரை புகழின் உச்சத்தை கொடுத்தாலும் 15க்கும் மேற்பட்ட பாடல்களை சினிமாவில் பாடியிருக்கிறார்.

விஜய் சேதுபதி நடித்த ஜூங்கா, விஷால் நடித்த சண்ட கோழி போன்ற படங்களிலும் இவர் பாடியிருக்கிறார்.

மேலும் பரத் நடித்த காதல், ஜீவா நடித்த தெனாவட்டு, கரண் நடித்த காத்தவராயன் படங்களிலும் பாடியுள்ளார்.

கிஷோர் சினேகா நடித்த 2013 இல் வெளியான ‘ஹரிதாஸ்’ படத்தில் வரும் வெள்ள குதிரை என்ற பாடலை பாடியுள்ளார்.

ஆட்டீசம் (autism) நோய் கொண்ட தனது மகனுக்கு ஒரு தாய் பாடும் பாடலாக அந்த பாடலை தன் இனிமையான குரலில் பாடியிருப்பார் ரமணியம்மாள்.

இந்த நிலையில் இன்று ஏப்ரல் 4ம் தேதி அவர் வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார்.

Rock star Ramani ammaal passed away

சூப்பர் ஸ்டாரின் பாராட்டை பெற்ற நானியின் ‘தசரா’

சூப்பர் ஸ்டாரின் பாராட்டை பெற்ற நானியின் ‘தசரா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நானியின் ‘தசரா’ திரைப்படம் ரூ.100 கோடி வசூலிக்கும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் , பிரபலங்கள் தொடர்ந்து அதற்கு நல்ல விமர்சனங்களை அளித்து வருகின்றனர்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கிய இப்படம் தான் மிகவும் பெருமைப்படக்கூடிய படம் என்று தனது பாராட்டை தெரிவித்தார்.

அவர் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பையும் பரவலாக பாராட்டினார்.

இதனால் படக்குழு மிகவும் சந்தோசத்தில் உள்ளது.

Super Star praises on Nani’s mass hit ‘Dasara’

CSK வெற்றியை கொண்டாடிய LGM.; சிவகார்த்திகேயன் சதீஷ் & கீர்த்தியும் பார்வையிட்டனர்

CSK வெற்றியை கொண்டாடிய LGM.; சிவகார்த்திகேயன் சதீஷ் & கீர்த்தியும் பார்வையிட்டனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று ஏப்ரல் 3.. சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது.

இந்த போட்டியை நேரடியாகக் காண தோனி என்டர்டெய்ன்மென்ட் குழுவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

விறுவிறுப்பான படப்பிடிப்பு பணிகளுக்கிடையே தோனியின் தயாரிப்பில் உருவாகும் ‘எல். ஜி. எம்’ பட குழுவினர் இன்ப அதிர்ச்சியுடன் இந்த போட்டியை காண வருகை தந்தனர்.

தோனியின் சாதுரியமான அதிரடி ஆட்டத்தால் சென்னை அணியை வெற்றி பெற செய்த தருணத்தை நேரில் கண்டு ரசித்த படக்குழுவினர், தோனியின் மாயாஜால வித்தையை மெய் மறந்து ரசித்து பாராட்டினர்.

எம். எஸ். தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், தனது முதல் தமிழ் திரைப்படமாக ‘எல். ஜி. எம்’ எனும் திரைப்படத்தைத் தயாரித்து வருகிறது.

இந்த திரைப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். அவரே இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். முழு நீள குடும்ப பொழுதுபோக்கு சித்திரமாக தயாராகி வரும் இந்த திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண், நதியா, இவானா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருவதால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனிடையே நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் போட்டியை நேரில் கண்டு ரசித்த ‘எல். ஜி. எம்’ பட குழுவினருடன் தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் வணிக பிரிவின் தலைவரான விகாஸ் ஹசிஜா மற்றும் கற்பனை திறன்மிகு படைப்பின் தலைவரான பிரியான்சு சோப்ரா உடனிருந்தனர்.

மேலும் நடிகர்கள் சிவகார்த்திகேயன் சதீஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவரும் இந்த போட்டியை கண்டு ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

LGM celebrating CSK win.; Sivakarthikeyan Satish & Keerthy also visited

24 மணி நேரம் கமல்ஹாசனுடன் இருக்க ஆசைப்படும் இளம் நடிகை

24 மணி நேரம் கமல்ஹாசனுடன் இருக்க ஆசைப்படும் இளம் நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1970 – 80-களில் நடிகர் கமல்ஹாசன் மீது கல்லூரி மாணவிகள் பலரும் ஆசை கொண்டனர். அவருக்கு ஏராளமான பெண் ரசிகைகள் இருந்த காரணத்தினால் அவருக்கு ‘காதல் மன்னன்’ என்ற பெயர் அப்போது இருந்தத.

மேலும் கமல் படங்களில் முத்தக் காட்சி தவறாமல் இடம்பெறும். சினிமா மட்டுமில்லாமல் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் காதல் மன்னன் ஆகவே திகழ்ந்தார் கமல்ஹாசன்.

திருமணத்தை தாண்டியும் பல பெண்களுடன் உறவில் இருந்தார் கமல்ஹாசன்.

சிம்ரன் கௌதமி, பூஜா குமார் என பல நடிகைகள் கமலின் காதல் வலையில் சிக்கியவர் தான்.

இந்த நிலையில் கமல் குறித்து ஒரு நடிகை தன் ஆசையை தெரிவித்துள்ளார்.

கோப்ரா மற்றும் வேலன் படங்களில் நடித்தவர் மீனாட்சி கோவிந்தராஜன். இவரின் சமீபத்தில் பேட்டியில்..

“தனக்கு நடிகர் கமல்ஹாசனை மிகவும் பிடிக்கும். அவரின் ஒரு படத்திலாவது இணைந்து நடிக்க வேண்டும்.

மேலும் ஒரு நாள் முழுக்க கமல்ஹாசனின் உதவியாளராக இருந்து அவர் படத்திற்காக என்னென்ன செய்கிறார்? என்பதை பார்க்க வேண்டும் என தன் ஆசையை தெரிவித்துள்ளார் மீனாட்சி.

A young actress who wants to be with Kamal Haasan for 24 hours

More Articles
Follows