ரஜினி பெரிய தயாரிப்பு நிறுவனத்துடன் இரண்டு படங்களில் ஒப்பந்தம்..!

ரஜினி பெரிய தயாரிப்பு நிறுவனத்துடன் இரண்டு படங்களில் ஒப்பந்தம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் வருகிறார்.இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படம், இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை அடுத்து பெரிய தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸுடன் ரஜினி இரண்டு பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

மேலும், அந்த நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன், துணைத் தலைவர் பிரேம்சிவசாமி மற்றும் தயாரிப்புத் தலைவர் ஜிகேஎம் தமிழ்குமரன் ஆகியோர் இன்று ரஜினியின் இல்லத்தில் சந்தித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

லைகா நிறுவனம், ரஜினியின் ‘2.0’ மற்றும் ‘தர்பார்’ ஆகிய இரு படங்களில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

ரஜினி

rajini joins lyca productions new movie

ஹிருத்திக் ரோஷன் மற்றும் தீபிகா படுகோன் நடித்துள்ள ‘ஃபைட்டர்’ படத்தின் முதல் போஸ்டர் வெளியானது

ஹிருத்திக் ரோஷன் மற்றும் தீபிகா படுகோன் நடித்துள்ள ‘ஃபைட்டர்’ படத்தின் முதல் போஸ்டர் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவின் 75வது குடியரசு தினத்தை கொண்டாடும் வகையில், Viacom18 Studios மற்றும் Marflix Pictures ஆக்‌ஷன் நிரம்பிய ஃபைட்டர் படத்தை 25 ஜனவரி 2024 அன்று வெளியிட உள்ளது. இந்திய விமானப்படை விமானிகளாக ஹிருத்திக் ரோஷன் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் ஃபைட்டரில் நடிக்கவுள்ளனர். இப்படத்தில் அனில் கபூரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்தியாவின் ஆயுதப் படைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இப்படம், குடியரசு தின வார இறுதியில் ரிலீஸாகவுள்ளது.

பாலிவுட்டில் மீண்டும் இறங்கும் இயக்குனர் அட்லீ – நடிகர் யார் ?

பாலிவுட்டில் மீண்டும் இறங்கும் இயக்குனர் அட்லீ – நடிகர் யார் ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் அட்லீ, விஜய்யை வைத்து ‘தெறி’ , ‘மெர்சல்’ , ‘பிகில்’ என தொடர்ந்து மூன்று வெற்றிப் படங்களை இயக்கியவர்.

இவர் தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தை தயாரித்து நடித்துள்ளார்.

அட்லீ இன்னொரு பாலிவுட் டாப் ஹீரோ உடன் கூட்டணி சேர இருப்பதாக கூறப்படுகிறது.

அது பாலிவுட்டின் சூப்பர் ஹீரோ ‘சல்மான் கான்’. நடிகர் மற்றும் இயக்குனருக்கு இடையே ஆரம்பகட்ட பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

கூடிய விரைவில், பாலிவுட்டில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ உள்ளார் அட்லீ.

சல்மான் கான்

Atlee joins with salman khan

நடிகர் அஜித்துடன் இணைந்த உதயநிதி ஸ்டாலின்; ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் அஜித்துடன் இணைந்த உதயநிதி ஸ்டாலின்; ரசிகர்கள் உற்சாகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் விநியோக வியாபாரத்தில் முன்னணி நிறுவனம் ரெட் ஜெயன்ட்.

இதன் நிறுவனர் நடிகரும் எம்எல்ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

இந்த நிலையில் அஜித்தின் ‘துணிவு’ பட தமிழ்நாடு வெளியிட்டு உரிமையை இந்த நிறுவனம் பெற்றுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘துணிவு’ திரைப்படம் 2023 பொங்கல் தினத்தில் வெளியாகிறது.

வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியார் நடித்துள்ளார்.

போனி கபூர் தயாரிக்க நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இதன் டிவி உரிமையை கலைஞர் டிவி பெற்றுள்ளது. ஓடிடி டிஜிட்டல் உரிமையை நெட் ப்ளிக்‌ஸ் பெற்றுள்ளது.

‘வலிமை’ பட தோல்விக்கு பிறகு ‘துணிவு’ படம் வருவதால் அஜித் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

thunivu

சமூக ஊடகங்களைப் பற்றி மனம் திறந்த சன்யா மல்ஹோத்ரா

சமூக ஊடகங்களைப் பற்றி மனம் திறந்த சன்யா மல்ஹோத்ரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்றைய காலகட்டத்தில், பிரபலங்கள் தங்கள் ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பதை சமூக ஊடகங்கள் எளிதாக்கியுள்ளன. சமீபத்திய ஊடக உரையாடலில், நடிகை சன்யா மல்ஹோத்ரா தனது தனியுரிமையின் மீது கட்டுப்பாட்டை வைத்திருப்பதால், அவரது சமூக ஊடக இருப்பு உண்மையில் அவரது வாழ்க்கை முறையை பாதிக்காது என்று பகிர்ந்து கொண்டார்.

“இன்றைய நாளில் மக்கள் தனியுரிமையைப் பெறும்போது நான் அதை விரும்புகிறேன், அது கட்டுப்படுத்தக்கூடியது. . திறமை மற்றும் கடின உழைப்புக்கு எந்த ஆதரவும் இல்லை என பதிவிட்டுள்ளார்.

விஜய் – லோகேஷ் படத்தில் இரண்டு பிக் பாஸ் போட்டியாளர்கள்..!?

விஜய் – லோகேஷ் படத்தில் இரண்டு பிக் பாஸ் போட்டியாளர்கள்..!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வம்சி இயக்கத்தில் உருவாகும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்தை தில் ராஜூ தயாரிக்க தமன் இசையமைத்து வருகிறார்.

இந்த படம் பொங்கலுக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னரே ஜனவரி 11ம் வெளியாகும் என கூறப்படுகிறது.

அடுத்ததாக, விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படம் ‘தளபதி 67’. விரைவில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

மேலும், இப்படத்தில் ‘பிக் பாஸ் 5யின்’ டைட்டில் வின்னர் ராஜு மற்றும் ‘பிக் பாஸ் 6’ மைனா நந்தினி இருவரும் நடிகையுள்ளார்கள்.

raju and myna nandhini

raju and myna nandhini joining vijay’s thalapathy67

More Articles
Follows