ரஜினியின் 2.0 பட டைட்டிலை மாற்றி சீனாவில் வெளியிடும் லைகா

ரஜினியின் 2.0 பட டைட்டிலை மாற்றி சீனாவில் வெளியிடும் லைகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini (1)ரஜினிகாந்த், அக்சய்குமார், ‌ஷங்கர், லைகா ஆகியோரது கூட்டணியில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகி கடந்த ஆண்டு நவம்பர் 29-ந் தேதி வெளியான படம் 2.0.

இப்படம் ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் அளவுக்கு அமைந்திருந்தது.

இப்படத்தை உலகமெங்கும் வெளியிட்டனர். அனைத்து இடத்திலும் வசூல் வேட்டையாடியது.

தற்போது உலகளவில் மிகப் பெரிய மக்கள் தொகையை கொண்டுள்ள சீனாவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ஆனால் படத்லைப்பை மாற்றி ரிலீஸ் செய்கின்றனர்.

இப்படத்திற்கு பாலிவுட் ரோபோ 2.0 ரிசர்கென்ஸ் (பாலிவுட் ரோபோ 2.0வின் எழுச்சி) எனப் பெயரிட்டுள்ளனர்.

மேலும் சீன ரசிகர்களை கவர்வதற்காக கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகளும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாம்.

ரஜினி தெளிவா இருக்கார்; மக்கள் சக்தி தீர்மானிக்கும்.. – விவேக்

ரஜினி தெளிவா இருக்கார்; மக்கள் சக்தி தீர்மானிக்கும்.. – விவேக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajiniகோவில்பட்டி அருகே நடந்த ஒரு கோயில் திருவிழாவில் நடிகர் விவேக் கலந்துக் கொண்டார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது…

கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்தாலும் பொதுமக்கள் என்ற மகா சக்தி முன்புதான் கூட்டணி வைத்துள்ளனர்.

மக்கள் தீர்மானிப்பவர்கள் தான் ஆட்சிக்கு வர முடியும். தேர்தல் முடிவை கணிக்க முடியவில்லை. இதுவும் சுவாரஸ்யமாகவே உள்ளது. எல்லோரையும் போல நானும் காத்திருக்கிறேன்.

பின்னர் ரஜினி குறித்து கூறியதாவது…

இந்த தேர்தலில் ரஜினி போட்டியிடவில்லை என்பதால் அவர் பின் வாங்கிவிட்டார் என்று அர்த்தமில்லை.

முதலில் இருந்தே சட்டமன்ற தேர்தலில் தான் நிற்க போகிறேன் என அவர் சொன்னார். அவர் தெளிவாக இருக்கிறார்.” என பேசினார் விவேக்.

வடிவேலு-சக்தி சிதம்பரம் இணையும் பேய் மாமா பட டூப்ளிகேட் போஸ்டர்?

வடிவேலு-சக்தி சிதம்பரம் இணையும் பேய் மாமா பட டூப்ளிகேட் போஸ்டர்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vadivelu and Sakthi Chidambaram team up for Pei Mamaசினிமாவில் நடிப்பதை வடிவேலு சில காலம் வடிவேலு நிறுத்தி வைத்திருந்தாலும் அவர் இல்லாத காமெடி சேனல்களே இல்லை எனலாம்.

இன்று வரை அவர் அடித்த ஜோக்குகளே மீம்ஸ்களாக வலம் வருகின்றன.

இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு சக்தி சிதம்பரம் இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்துக்கு ‘பேய் மாமா’ என்று பெயர் வைத்திருக்கிறார்களாம்.

இது தொடர்பாக ஒரு போஸ்டரும் வெளியானது. ஆனால் அது பொய்யான போஸ்டர் என்று சொல்லப்படுகிறது.

எனவே விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம்.

இதற்கு முன்பே என்னம்மா கண்ணு, காதல் கிறுக்கன், இங்கிலீஷ்காரன் உள்ளிட்ட பல படங்களில் வடிவேலுவை இயக்கியிருந்தார் சக்தி சிதம்பரம் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Vadivelu and Sakthi Chidambaram team up for Pei Mama

ப்ரேக் அப் காதலிகளுடன் இணையும் சிம்பு; நேற்று நயன்தாரா; இன்று ஹன்சிகா

ப்ரேக் அப் காதலிகளுடன் இணையும் சிம்பு; நேற்று நயன்தாரா; இன்று ஹன்சிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Again Simbu and Hanshika team up in Mahaசினிமாவில் இணைந்து நடிக்கும் நடிகர் நடிகைகள் நிஜத்திலும் காதலிப்பது உண்டு. சிலரது காதல் திருமணம் வரை செல்கிறது.

அதன்பின்னர் சில திருமண உறவுகள் நீடிக்கிறது. ஆனால் பலர் விவகாரத்தும் பெறுகின்றனர்.

சிலரது காதல் திருமணத்திற்கு முன்பே விரிசலை சந்திக்கிறது. நடிகர் சிம்புவின் காதல் அப்படிதான் பல முறையானது.

முதலில் நயன்தாராவை காதலித்தார் சிம்பு. இவர்கள் வல்லவன் படத்தில் இணைந்து நடித்தனர். அதன்பின்னர் சில பிரச்சினைகளால் இருவரும் பிரிந்தனர்.

இருந்தாலும் இது நம்ம ஆளு என்ற படத்தில் ஜோடி போட்டு நடித்தனர்.

அதன்பின்னர் வாலு படத்தில் நடித்த போது ஹன்சிகாவை காதலித்தார் சிம்பு. இந்த காதலிலும் விரிசல் ஏற்பட இருவரும் பிரிந்தனர்.

தற்போது மீண்டும் ஹன்சிகாவுடன் இணைந்து மகா என்ற படத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு.

ஸ்ரீகாந்த், ஹன்சிகா நடித்துவரும் இந்தப் படத்தில், முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.

‘ஷோயப்’ எனும் கேரக்டரில் நடிக்க 10 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

சிம்பு மற்றும் ஹன்சிகா நடிக்கும் காட்சிகள் இஸ்தான்புல் நாட்டில் படமாக்கப்பட உள்ளது.

இந்த ‘மஹா’ பட போஸ்டரில் ஹன்சிகாவின் புகை பிடிக்கும் டிசைன் வெளியானதால் கோர்ட்டில் வழக்கு நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Again Simbu and Hanshika team up in Maha

கார்த்தியை ‘கைதி’யாக மாற்றும் ‘மாநகரம்’ பட இயக்குநர்

கார்த்தியை ‘கைதி’யாக மாற்றும் ‘மாநகரம்’ பட இயக்குநர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karthi next movie titled Kaidhi Directed by Lokesh Kanagarajகார்த்தி நடித்து அண்மையில் வெளியான படம் தேவ். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இதனை தொடர்ந்து தற்போது ‘மாநகரம்’ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் கார்த்தி.

இப்படத்தில் கார்த்திக்கு ஜோடி இல்லை என தெரிய வந்துள்ளது.

தற்போது வரை 80% சூட்டிங் முடிவடைந்த நிலையில், விரைவில் பர்ஸ்ட் லுக்கை வெளியிட உள்ளனர்.

இப்படத்திற்கு கைதி என தலைப்பிடப்பட உள்ளதாக தெரிகிறது.

ஓர் இரவில் நடக்கும் சம்பவத்தை மையப்படுத்தி இப்படத்தை இயக்கி வருகிறாராம் லோகேஷ்.

இந்த படத்தை முடித்துவிட்டு ரெமா டைரக்டர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் கார்த்தி.

Karthi next movie titled Kaidhi Directed by Lokesh Kanagaraj

அம்பேத்கர் பெயரில் படம்; ரஞ்சித்துடன் இணையும் ஜோதி நிஷா

அம்பேத்கர் பெயரில் படம்; ரஞ்சித்துடன் இணையும் ஜோதி நிஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ranjith to collaborate with Bollywood director on film about BR Ambedkarபரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு என்ற பெயரில் அடுத்த படத்தை தயாரித்து வருகிறார் ரஞ்சித்.

இதனையடுத்து மும்பையைச் சேர்ந்த இயக்குநர் ஜோதிநிஷாவுடன் இணைந்து மற்றொரு படத்தை தயாரிக்கிறார் ரஞ்சித்.

இப்படத்தை கிரவுட் பண்டிங் மூலம் படத்தை தயாரிக்கிறார்களாம்.

இதற்காக 2 மாதங்களில் ரூ.60 லட்சத்தை திரட்ட திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பா.ரஞ்சித் கூறியுள்ளதாவது…

“நீலம் ப்ரொடக்‌‌ஷன்ஸ் நிறுவனத்தின் அடுத்த கூட்டணியை அறிவிக்கிறோம் ஜோதிநிஷாவின் முதல் படமான ‘பி.ஆர்.அம்பேத்கர் நவ் அண்ட் தென்’ இப்படம் வரலாறு படைக்கும். இப்படத்தில் பணிபுரிவது மிகவும் மகிழ்ச்சி” என கூறியுள்ளார்.

Ranjith to collaborate with Bollywood director on film about BR Ambedkar

More Articles
Follows