2.0 முன்பதிவில் மட்டும் ரூ. 1 கோடி..; சீனாவிலும் ‘ரஜினி’ டா…

2.0 முன்பதிவில் மட்டும் ரூ. 1 கோடி..; சீனாவிலும் ‘ரஜினி’ டா…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinis 2pointO making records in Reservation in Chinaலைகா, ஷங்கர், ரஜினிகாந்த், அக்ஷய்குமார் உள்ளிட்ட திரையுலக ஜாம்பவான்கள் இணைந்த படம் ‘2.0’.

ரூ. 500 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்த படம் கடந்தாண்டு உலகமெங்கும் வெளியாகி ரூ. 700 கோடியை வசூலித்தாக கூறப்பட்டது.

இந்த நிலையில் வருகிற செப்டம்பர் 6ம் தேதி சீனா நாட்டில் மட்டும் 56000 திரைகளில் (47000 தியேட்டர்களில்) வெளியாக உள்ளது.

இதற்கான முன்பதிவு கடந்த வாரமே ஆரம்பமாகிவிட்டது.

இதுவரையில் நடந்துள்ள முன்பதிவில் மட்டும் ரூ 1 கோடியை வசூலித்துள்ளதாம்.

ஒரு படத்தின் முன்பதிவிற்கே இந்த வசூல் என்பது சூப்பர் ஸ்டார் ரஜினியால் மட்டுமே நிகழும்….

சீனாவிலும் ரஜினிக்கு ரசிகர்கள் உள்ளனர் என்பது இந்திய சினிமாவிற்கே பெருமைதானே..

Rajinis 2pointO making records in Reservation in China

அழியும் அமேசான் காடுகள்.; போராளிகளை போற்றும் ஓவியர் ஏபி.ஸ்ரீதர்

அழியும் அமேசான் காடுகள்.; போராளிகளை போற்றும் ஓவியர் ஏபி.ஸ்ரீதர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Artist AP Sridhar encourages Amazon rain forest rescue volunteersஉலகிலேயே மிக பெரிய காடுகளாக அமேசான் காடுகள் விளங்குகிறது.

உலகின் ஒட்டுமொத்த தேவையில் 20 சதவீத ஆக்சிஜன் அமேசான் காடுகளின் மூலம்தான் பெறப்படுகிறது.

இந்த காடுகள் கடந்த சில நாட்களாக தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

காட்டுத்தீயால் பல்லாயிரக்கணக்காக ஏக்கர்கள் நிலப்பரப்பில் உள்ள மரங்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் தீக்கிரையாகி வருகிறது.

இந்த காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இச்சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த காட்டுத்தீ யை கட்டுப்படுத்த ஏராளமான தீயணைப்பு வீரர்கள், இராணுவ விமானங்கள், தன்னார்வலர்கள் மற்றும் லாப நோக்கற்ற அமைப்புகள் ஒன்றிணைந்து போராடுகின்றனர்.

இந்நிலையில், பிரபல ஓவியர் ஏ.பி. ஸ்ரீதர் தனது ஓவியங்கள் மூலம், உலகை அழிவில் இருந்து காக்க போராடும் மனிதநேயம் மிக்க வீரர்களை போற்றவும், அவர்களின் தைரியம், துணிச்சல் மற்றும் விடாமுயற்சியை ஊக்குவிக்கும் விதமாக ஓவியங்களை வரைந்து வருகிறார்.

இவை அனைவரின் பாராட்டுக்களையும் பெறும் என்பதில் ஐயமில்லை.

Artist AP Sridhar encourages Amazon rain forest rescue volunteers

Artist AP Sridhar encourages Amazon rain forest rescue volunteers

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனியுடன் நடிக்கும் அல்லு சிரிஷ் !!

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனியுடன் நடிக்கும் அல்லு சிரிஷ் !!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)தெலுங்குத் திரையுலகின் பிரபல நாயகன் அல்லு சிரிஷ் , மீண்டும் கோலிவுட்டுக்கு திரும்பியுள்ளார். விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய்மில்டன் இயக்கவுள்ள படத்தில் மிக முக்கியமான பாத்திரம் ஒன்றில் நடிக்க உள்ளார் அல்லு சிரிஷ். இப்படத்தினை கமல் போரா (Shanti Telefilms), லலிதா தனஞ்செயன் (BOFTA Media Works), மற்றும் பிரதீப் குமார் (Diya Movies)ஆகியோர் Infiniti Film Ventures சார்பில் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தினை எழுதி இயக்குவதோடு ஒளிப்பதிவையும் மேற்கொள்கிறார் விஜய் மில்டன்.

தயாரிப்பாளர் Infiniti Film Ventures கமல் போரா கூறியது
“இந்தப்படத்தின் மூலம் சிறப்பான பல விசயங்கள் இணைவது எனக்கு பெரு மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் அளிக்கிறது. விஜய் ஆண்டனியும், விஜய் மில்டனும் இணையும் இப்படம் Infiniti Film Venturesக்கு மிகச்சிறந்த ஒன்றாக அமையுமென்று நம்புகிறேன். தற்போது தெலுங்கு திரையுலக பிரபலம் அல்லு சிரிஷ் இப்படத்தில் இணைந்திருப்பது படத்திற்கு மேலும் வலு கூட்டியுள்ளது. நாங்கள் கதை கேட்ட கணத்திலேயே இந்தப்படத்தின் நாயக பாத்திரத்தின் வலிமை புரிந்தது. மேலும் அத்துடன் இணைந்திருக்கும் அனைத்து பாத்திரங்களும் கதைக்கு வலு சேர்ப்பதாகவும் படத்தை பரபரவென நகர்த்தி செல்வதாகவும் இருந்தது. அல்லு சிரிஷ் கதாப்பாத்திரம் ஆச்சர்யம் தரக்கூடிய ஒரு பாத்திரமாக இப்படத்தில் இருக்கும் அவர் இந்தப்பாத்திரத்தை ஏற்றது படக்குழுவிற்கு உற்சாகத்தை அளித்துள்ளது. அவருடைய சினிமா வாழ்க்கையை கூர்ந்து நோக்கினால், அவர் தன் பாத்திரங்களை வெகு கவனமாகவும் தரமான படங்களை மட்டுமே செய்து வருவது தெரியும். இந்தப்படம் அவரது படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இதுவரை இல்லாத பெயரை அவருக்கு பெற்றுத்தரும்” என்றார்.

அல்லு சிரிஷ் தனது பாத்திரம் பற்றி கூறியது..
“இந்தப்படத்தில் நான் ஏற்றிருக்கும் பாத்திரம் ஒரு அப்பாவி கிராமத்து மனிதன், மற்றும் ஒரு மதிப்புமிக்க குடுமபத்திலிருந்த வந்த மனிதனின் பாத்திரம்”. சற்றே சிரிப்புக்கு பின் ” இதற்கு மேல் சொன்னால் நான் படம் பற்றிய தகவல்களை உளறிவிடுவேன்” என்றார்.

இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடந்து வருகின்றன. ஷீட்டிங்க் நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. ஒரே கட்டமாக கோகர்னா, தியூ – தாமன் ஆகிய கடற்கரை பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. படத்தில் பணியாற்றவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழிநுடப் கலைஞர்கள் தேர்வு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

‘வாழ்க விவசாயி’ படம் என்னை வாழவைக்கும் : நடிகர் அப்புகுட்டி

‘வாழ்க விவசாயி’ படம் என்னை வாழவைக்கும் : நடிகர் அப்புகுட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectவிவசாயிகள் சம்பந்தப்பட்ட கதையுடன் உருவாகி இருக்கும் ‘வாழ்க விவசாயி ‘படம் தன்னை வாழவைக்கும் என்று நடிகர் அப்புகுட்டி கூறுகிறார்.

இன்று நாட்டில் பற்றி எரிகிற பிரச்சினையாக வடிவெடுத்து நிற்கிறது விவசாயிகள் சார்ந்த பிரச்சினை. இதை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் தான் ‘வாழ்க விவசாயி’.விவசாயிகள் வாழ்ந்தால் தான் நாடு வாழும் என்கிற கருத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருக்கிறது .மேலோட்டமாக இல்லாமல் முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்த பிரச்சினைகளை அலசுகிற இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார் தேசிய விருது நடிகர் அப்புக்குட்டி .படம் பற்றிய அனுபவங்களைப் பெருமையுடன் அப்புக்குட்டி இங்கே பகிர்ந்து கொள்கிறார் இப்படி

.”எனக்கு ‘அழகர்சாமியின் குதிரை’ படம் பரவலான பாராட்டுகளையும் புகழையும் தேடித் தந்தது. அதற்குப் பிறகு தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்ற தெளிவையும் கொடுத்தது .நல்ல கதையம்சம் கொண்ட படத்தில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன்.இது மாதிரி கதையில் நான் நடிக்க வேண்டும் என்று நான் விரும்பிய ஒரு கதையாக ‘வாழ்க விவசாயி ‘கதை அமைந்திருக்கிறது . அந்த கதையைச் சொன்னபோதே இதில் நாம் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்துவிட்டது .எனக்கு மிகவும் பிடித்த கதை .நான் ஆசைப்பட்டு விரும்பி நடித்த கதை. இயக்குநர் P.L.பொன்னிமோகன் சொன்ன கதை மட்டும் பிடித்து இருந்தால் போதுமா? இதை தயாரிக்க நல்ல தயாரிப்பாளர் வேண்டுமே. அப்படி ஒரு நல்ல தயாரிப்பாளராக பால் டிப்போ கதிரேசன் கிடைத்தார். படத்தின் மீது எனக்கு நம்பிக்கை வரும்படி விரைவாகவே எனக்கு முன் பணம் கொடுத்தார். படம் தொடங்கப் பட்டது. இயக்குநர் மோகன் சொன்னபடியே கதையை அழகாகப் படமாக்கியிருக்கிறார் .

ஒரு கிராமத்தில் விவசாயம் செய்யும் மக்களுடன் நாமும் வாழ்ந்த உணர்வைப் படம் பார்க்கும் ஒவ்வொருவரும் உணர்வார்கள். நானும் ஒரு விவசாயின் மகன். எனக்கும் விவசாயம் தெரியும். நாற்று நடுவது ,களை எடுப்பது, கதிர் அடிப்பது , அறுவடை செய்வது வரை எனக்கும் எல்லா வேலைகளும் தெரியும் .எனவே இந்தப் படத்தில் நடிப்பது மிகவும் சுலபமாகவும் மகிழ்ச்சியாக இருந்தது .” என்றார்.

அப்புகுட்டி தன் படத்தின் கதாநாயகி பற்றிக் கூறும்போது ,

“கதையைக் கேட்டவுடன் படமெடுப்பது என்று முடிவானது .உடன் எனக்குள் அடுத்த கேள்வி வந்தது .யார் கதாநாயகி ?அவர் எப்படி இருப்பார்? என்பது தான் அது .ஏனென்றால் என் உயரத்துக்கு அவர்களும் சரியாக இருக்க வேண்டுமே என்கிற கவலை எனக்கு.

நாயகி வசுந்தரா என்றார்கள். எனக்கு தூக்கிவாரிப்போட்டது .அவர் என்னை விட உயரமாக இருப்பாரே .என்னைவிட நிறமாக இருப்பாரே என்று மீண்டும் கவலை . அவர் ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் நடித்தது எனக்குப் பிடித்திருந்தது ‘பேராண்மை’யிலும் நன்றாக நடித்திருந்தார் .ஆனால் அவரைப் பற்றி நான் கவலைப்பட்டது பயந்தது எல்லாமே படப்பிடிப்பில் மாறிவிட்டது .அவர் உயரம் தெரியாத படியும் நிறம் தெரியாத படியும் சரி செய்து மாற்றங்கள் செய்து மேக்கப்பில் நிறத்தைக் குறைத்து எனக்கு ஜோடியாக நடிக்க வைத்துவிட்டார்கள் . வசுந்தரா ஒரு அர்ப்பணிப்புள்ள நடிகை .அவர் வழக்கமான கதாநாயகி கிடையாது. அவருக்கும் இந்தப் படம் நல்ல பெயரைத் தேடித் தரும். தன்னால் முடிந்த உழைப்பையும் அர்ப்பணிப்பையும் காட்டியிருக்கிறார். கதையின்படி எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். நான் இரண்டு குழந்தைகளுக்கு தந்தை .வினோத், சந்தியா என்ற அந்த இரண்டு குழந்தைகளும் நன்றாக நடித்திருக்கிறார்கள் “என்றவர் படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்தார் .

“ஒரு நாள் ஒரு பரணில் கதாநாயகன் கதாநாயகி நாங்கள் இருவரும் ஏறி அமர்ந்து பேசிக்கொண்டு கொண்டிருப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. ஆர்ட்டைரக்டர் அந்தப் பரணை நன்றாகத்தான் தயார் செய்து இருப்பதாக கூறினார். முதல் நாள் நல்ல மழை பெய்திருந்தது .பாண் நனைந்து ஈரம் சொட்டச் சொட்ட இருந்தது. முதலில் அதில் நான் ஏறினேன் .அடுத்து வசுந்தரா ஏறிய போது அந்தப் பரண் சரிந்து விழுந்தது. நான் விழுந்து என் மேல் அவர் விழுந்தார். என் மேல் அவர் விழுந்ததைப் பார்த்து எனக்கு பதற்றமாகவும் பயமாகவும் இருந்தது.

ஆபத்துக்கு பாவம் இல்லை என்று அவரை நான் பிடித்துக்கொண்டேன் . தவறாக நினைத்துக் கொள்வாரோ என்று பயந்தேன். ஆனால் நீங்கள் “நல்ல வேளை என்னை காப்பாற்றி விட்டீர்கள். நான் உங்கள் மேல் விழுந்திருக்காவிட்டால் எனக்கு இந் நேரம் அதிகமாக அடிபட்டிருக்கும்” என்றார். எனக்கு அப்பாடா என்றிருந்தது .

இந்தப் படம் விவசாயம் பற்றிய படம் தான். நம் அனைவருக்கும் பிடித்த கதையாக இருக்கும். ‘வாழ்க விவசாயி ‘படம் என்னை வாழ வைக்கும் படமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படம் விவசாயிகளை திரும்பிப்பார்க்க வைக்கும் படம் என்று சொல்வதைவிட எல்லா மக்களையும் விவசாயிகள் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு படமாக இருக்கும் என்று உறுதியாகக் கூறலாம். ஒரு விவசாயியாக நான் வாழ்ந்திருக்கும் இந்தப் படம் எனக்கு நல்ல பெயரைத் தேடித் தரும் என்று உறுதியாக நம்புகிறேன்” என்று கூறினார் பெருமையாக .

நடிகர்கள் அப்புக்குட்டி, வசுந்தரா, ஹலோ கந்தசாமி, ஸ்ரீகல்கி, முத்துராமன், திலீபன், மதுரை சரோஜா, குழந்தை நட்சத்திரங்கள் சந்தியா, வினோத், ஆனந்தரூபிணி மற்றும் விஜயன், கராத்தே கோபாலன்

எழுத்து இயக்கம் – P.L.பொன்னிமோகன்,

இசை – ஜெய்கிருஷ்.K,

ஒளிப்பதிவு – K.P.ரதன் சந்தாவத்,

படத்தொகுப்பு – பா.பிரவின் பாஸ்கர்,

கலை – R. சரவண அபிராமன் B.f.a,

நடனம் – காதல் கந்தாஸ்,

பாடல்கள் – யுகபாரதி, மணி அமுதவன், தமயந்தி, ஒலிக்கலவை G.தரணிபதி d.f.t, மக்கள் தொடர்பு – சக்தி சரவணன்

தயாரிப்பு “பால்டிப்போ”K.கதிரேசன்

ரஜினிக்காக விஸ்வாச கூட்டணி அமைக்கும் சிவா-இமான்

ரஜினிக்காக விஸ்வாச கூட்டணி அமைக்கும் சிவா-இமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Imman compose music for Rajini movie in Siva directionலைகா தயாரிப்பில் முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இப்படத்தை முடித்துவிட்டு தனிக்கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும் இரண்டு படங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் ஒரு படத்தை சிவா இயக்கவுள்ளதாக தெரிகிறது.

அஜித் நடித்த வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களை இயக்கி அதே சிவா தான்.

இப்படத்திற்கு இமான் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Imman compose music for Rajini movie in Siva direction

சூர்யா தனுஷ் & சிவகார்த்திகேயன் வழியில் விஜய் தேவரகொண்டா

சூர்யா தனுஷ் & சிவகார்த்திகேயன் வழியில் விஜய் தேவரகொண்டா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Deverakonda follows Suriya Dhanush Sivakarthikeyan formulaஅர்ஜுன் ரெட்டி மற்றும் கீதா கோவிந்தம் ஆகியவை தெலுங்கு படங்களாக இருந்தாலும் அதன் வெற்றியால் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானவர் விஜய் தேவரகொண்டா.

எனவே இவரது சமீபத்திய படங்கள் நோட்டா, டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்கள் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

தற்போது இவரும் படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு உள்ளர்.

கிங் ஆப் தி ஹில் என்ற நிறுவனத்தை தொடங்கி மீக்கு மாத்திரமே சொப்தா என்ற படத்தை தயாரிக்கிறார்.

இவரது பெல்லி சூப்புலு என்ற படத்தை இயக்கிய தருண் என்பவரை தனது முதல் தயாரிப்பில் நாயகனாக்கி அழகு பார்க்கிறார்.

ஷாமிர் சுல்தான் என்பவர் படத்தை இயக்கவுள்ளார்.

தமிழில் சினிமாவின் இளம் நாயகர்களான சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரும் மற்ற நடிகர்கள் நடிக்கும் படங்களை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Vijay Deverakonda follows Suriya Dhanush Sivakarthikeyan formula

More Articles
Follows