ரூ.500 கோடியை அள்ளியது 2.0; தமிழ் சினிமாவிற்கு ரஜினி தந்த பெருமை

Proud moment for Tamil Cinema Rajinis 2pointO collected Rs 500 croresபிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா ரூ. 550 கோடியில் 2.0 படத்தை தயாரித்து கடந்த நவம்பர் 29ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் 15000 தியேட்டர்களில் வெளியிட்டது.

ஷங்கர் இயக்கிய இப்படத்தில் ரஜினிகாந்த், அக்சய்குமார், எமிஜாக்சன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

ஏஆர். ரஹ்மான் இசையைமக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இப்படம் வெளியானது முதல் உலகமெங்கும் நல்ல வசூல் வேட்டை செய்து வருகிறது.

தற்போது ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில் உலகமெங்கும் ரூ. 500 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் தமிழ் சினிமா வரலாற்றில் ரூ 500 கோடியை கடந்த நடிகர் என்ற பெருமையை நடிகர் ரஜினியும் இயக்குனர் என்ற பெருமையை ஷங்கர் ஆகிய இருவரும் பெற்று தந்துள்ளனர்.

இதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு உலகளவில் பெருமை தேடித் தந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Proud moment for Tamil Cinema Rajinis 2pointO collected Rs 500 crores

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Latest Post