‘லால் சலாம்’ எங்கள் வாழ்வு.. சந்தோஷம் நம் தேர்வே – ஐஸ்வர்யா ரஜினி

‘லால் சலாம்’ எங்கள் வாழ்வு.. சந்தோஷம் நம் தேர்வே – ஐஸ்வர்யா ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ‘லால் சலாம்’ படத்தின் மூலம் மீண்டும் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய வேடங்களில் நடிக்க, ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முன்னதாகவே தொடங்கியது.

இந்த நிலையில், ‘லால் சலாம்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

முதல் ஷூட்டிங் ஷெட்யூல் முடிவடைந்ததை அறிவித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படக்குழுவினர் உடன் வீடியோ ஒன்றை எடுத்து அதை பகிர்ந்துள்ளார்.

மேலும் அதில், “கடந்த 34 நாட்களும் எங்கள் வாழ்வு இதுதான். இப்பொழுது முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளோம். இதை உருவாக்கி தந்த என் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. உங்கள் ஒத்துழைப்பினால் தான் எந்தவித தடங்கலும் இல்லாமல் இதனை நாம் முடித்து இருக்கிறோம். சந்தோஷம் என்பது நாம் எப்படி இருக்க வேண்டும் என்று நாமே தேர்ந்தெடுப்பது தான்” பதிவிட்டுள்ளார்.

Lal Salaam’s first shooting schedule wrapped up

3வது முறையாக இணையும் விஷ்ணு விஷால் – ராம்குமார் கூட்டணி

3வது முறையாக இணையும் விஷ்ணு விஷால் – ராம்குமார் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷ்ணு விஷால் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் ’லால் சலாம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகிய இருவரும் கிரிக்கெட் வீரர்கள் ஆக நடிக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விஷ்ணு விஷால் இயக்குனர் ராம்குமார் உடன் இணையும் திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

’முண்டாசுப்பட்டி’ ’ராட்சசன்’ ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களை அடுத்து மீண்டும் விஷ்ணு விஷால் – ராம்குமார் 3வது முறையாக இணைய இருப்பதாக அறிவிக்கப்பட்டதால் இப்படம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி உள்ளது.

மேலும், விஷ்ணு விஷால் நடித்த ’மோகன்தாஸ்’, ’ஆர்யான்’ மற்றும் ’இடம் பொருள் ஏவல்’ ஆகிய மூன்று திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

Director ramkumar teamsup with vishnu vishal for 3rd time

விக்ரம் பிறந்தநாளில் ‘தங்கலான்’ விருந்தளிக்கும் ஸ்டுடியோ கிரீன்

விக்ரம் பிறந்தநாளில் ‘தங்கலான்’ விருந்தளிக்கும் ஸ்டுடியோ கிரீன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சீயான் விக்ரம் நடிப்பில் ரஞ்சித் இயக்கி வரும் திரைப்படம் ‘தங்கலான்’.

இதில் நடிகை பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கோலார் தங்க வயலை மையப்படுத்தி இந்த படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

KGF பகுதியை அடுத்து இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவுள்ளது.

இப்படத்தின் 80% படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் நடிகர் விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 17-ம் தேதி படத்தின் வீடியோ Witness a slice of flesh காட்சி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Get ready for something powerful and rustic from the world of #Thangalaan!

Witness a slice of flesh on #ChiyaanVikram’s birthday
17th April, 2023

@Thangalaan @chiyaan @beemji @kegvraja @StudioGreen2 @officialneelam @parvatweets @MalavikaM_ @PasupathyMasi @DanCaltagirone https://t.co/cTAGb7rDry

Thangalan special glimpse will be released on Vikrams birthday

கேரளாவில் ஆரத்தி பொடி ஒரு வுமன் ஐகான்.. – மாஸ்டர் மகேந்திரன்

கேரளாவில் ஆரத்தி பொடி ஒரு வுமன் ஐகான்.. – மாஸ்டர் மகேந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருண் கார்த்திக் இயக்கத்தில் மகேந்திரன், ஸ்ரீனி, ஆர்த்தி பொடி, காவ்யா அறிவுமணி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘ரிப்பப்பரி’.

ஏப்ரல் 14ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் மாஸ்டர் மகேந்திரன் பேசியதாவது…

“இந்த பங்ஷனுக்கு வந்த பிறகு தான் நிறைய டேலண்ட் உள்ளவர்கள் படத்தில் வேலை பார்த்துள்ளார்கள் எனத் தெரிந்துகொண்டேன்.

அவர்களின் மற்ற திறமைகள் இங்கே பார்த்தபோது, வியப்பாக இருந்தது. இந்தப்படத்தில் ஒவ்வொருவரையும் தனித்தனியாகச் சொல்லவேண்டும். தொழில்நுட்ப குழுவில், அத்தனை பேரும் கடினமாக உழைத்துள்ளார்கள். சகோதரர் நரேன் அவர்களுக்கு நன்றி.

ஆர்த்தி கேரளாவில் ஒரு வுமன் ஐகான். மிக நன்றாக நடித்திருக்கிறார். அவருக்குக் கேரளாவில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. மாரி, ஶ்ரீனி இருவரும் அட்டகாசமாக நடித்துள்ளனர்.

இயக்குநர் அருண் கார்த்தி மிகச்சிறந்த நண்பர். படத்தை வித்தியாசமான ரசனையில் அழகாக உருவாக்கியிருக்கிறார். ஏப்ரல் 14 ல் படம் வருகிறது உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

மாஸ்டர் மகேந்திரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் ஆரத்தி பொடி, காவ்யா அறிவுமணி, ஶ்ரீனி, நோபிள் ஜேம்ஸ், மாரி முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

AK THE TALESMAN நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் Na. அருண் கார்த்திக் இப்படத்தினை தயாரித்து இயக்குகிறார். திவாரகா தியாகராஜன் இசையமைக்க, தளபதி ரத்தினம் ஒளிப்பதிவு செய்துள்ளார். முகேன் வேல் எடிட்டிங் பணிகளைச் செய்துள்ளார்.

ஏப்ரல் 14 ஆம் தேதி உலகமெங்கும் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது “ரிப்பப்பரி” திரைப்படம்.

Actor Mahendran praises aarthi podi

சின்னத்திரையில் கொடுத்த ஆதரவை பெரியத்திரையிலும் கொடுங்க.; காத்திருக்கும் காவ்யா

சின்னத்திரையில் கொடுத்த ஆதரவை பெரியத்திரையிலும் கொடுங்க.; காத்திருக்கும் காவ்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருண் கார்த்திக் இயக்கத்தில் மகேந்திரன், ஸ்ரீனி, ஆர்த்தி பொடி, காவ்யா அறிவுமணி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘ரிப்பப்பரி’.

ஏப்ரல் 14ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகை காவ்யா பேசியதாவது…

“இது தான் என் முதல் திரைப்பட மேடை. வாய்ப்பு தந்த இயக்குநர் அருண் கார்த்தி அவர்களுக்கு நன்றி. இந்தப்படத்தில் பாரதி எனும் கேரக்டர் பண்ணியிருக்கிறேன்.

மாஸ்டர் மகேந்திரன் என் நண்பர், ஆனால் இப்படத்தில் ஶ்ரீனி உடன் தான் எனக்கு அதிக போர்ஷன் இருந்தது. எனக்கு எல்லோரும் ஆதரவாக இருந்தார்கள்.

இங்கு இருக்கும் அனைவருமே சூப்பராக வேலை பார்த்திருக்கிறார்கள். படம் நன்றாக வந்துள்ளது. சின்னத்திரையில் எனக்குக் கிடைத்த வரவேற்பு போலவே, பெரிய திரையிலும் நீங்கள் ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன். நன்றி.

பாடகர் சிபி ஶ்ரீனிவாசன் பேசியதாவது…

இப்படத்தில் ஒரு பாட்டியின் குரலில் ஒரு பாடல் பாடியிருக்கிறேன், அது ஒரு சந்தோஷமான ஆக்ஸிடெண்ட். இந்தப்படத்தில் மூன்று பாடல்கள் பாடியுள்ளேன். உங்கள் ஆதரவை எனக்கும் படத்திற்கும் தாருங்கள் நன்றி.

நடிகை ஆரத்தி பொடி பேசியதாவது…

“இது என் முதல் தமிழ்ப்படம், இது ரொம்ப இன்ரஸ்டிங்கான மூவி. கதை கேட்ட போதே எனக்குப் புரிந்தது. உங்களுக்கும் படம் பார்க்கும் போது நிறைய ஆச்சரியம் தரும்.

இப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநருக்கு நன்றி. உங்கள் ஆதரவைத் தந்து, படத்தை வெற்றி பெறச்செய்யக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.” என்றார்.

Kavya Arivu mani seeking support for her movie

வாழ்க்கையில் முதன் முறையாக காவ்யா அறிவுமணியுடன் காதல்.. – நடிகர் ஶ்ரீனி

வாழ்க்கையில் முதன் முறையாக காவ்யா அறிவுமணியுடன் காதல்.. – நடிகர் ஶ்ரீனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருண் கார்த்திக் இயக்கத்தில் மகேந்திரன், ஸ்ரீனி, ஆர்த்தி பொடி, காவ்யா அறிவுமணி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘ரிப்பப்பரி’.

ஏப்ரல் 14ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர் ஶ்ரீனி பேசியதாவது…

இந்தப்படத்தில் வாய்ப்பளித்த இயக்குநர் AKவுக்கு நன்றி. படத்தில் பேயாக வருவது நான் தான். நிறையப் படங்கள் அடுத்தடுத்து வருகிறது. இந்தப்படத்தில் பேயாக நடித்தது சவாலாக இருந்தது. நல்ல படம் செய்திருக்கிறோம். இந்தப்படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி.

எனக்கு ஜோடியாக காவ்யா நடித்திருக்கிறார். என் சினிமா வாழ்க்கையில் முதல் முறையாக இந்தப்படத்தில் கொஞ்சமாகக் காதலிக்க வைத்திருக்கிறார் இயக்குநர், அவருக்கு நன்றி. படம் நல்ல எண்டர்டெயினராக இருக்கும்.” என்றார்.

Actor Srini about his love portion in movie

More Articles
Follows