#STR49 UPDATE : மீண்டும் சிம்பு – ரஹ்மான் வேல்ஸ் கூட்டணி.; இயக்குனர் இவரா.?

#STR49 UPDATE : மீண்டும் சிம்பு – ரஹ்மான் வேல்ஸ் கூட்டணி.; இயக்குனர் இவரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில தினங்களுக்கு முன் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தனது 25 வது படத்தை அறிவித்திருந்தது. ‘ஜீனி’ என்று பெயரிடப்பட்ட இந்த படத்தை அர்ஜுன் ஜூனியர் இயக்க ஜெயம் ரவி, கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடிக்க ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை தொடர்ந்து மீண்டும் சிம்பு – வேல்ஸ் – ஏ ஆர் ரகுமான் ஆகியோரது கூட்டணி மீண்டும் இணையுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் சிம்புவின் 49 வது படமாக உருவாகுகிறதாம்.

சமீபத்தில் சிம்புவை ‘போர் தொழில்’ பட இயக்குனர் விக்னேஷ் ராஜா சந்தித்து கதை கூறியதாக கூறப்பட்டு வந்தது.

எனவே சிம்புவின் அடுத்த படத்தை அவர்தான் இயக்குவார் என தகவல் வந்த நிலையில் தற்போது சிம்பு 49 படத்தை ‘அடங்க மறு’ இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்குவார் என தகவல்கள் வந்துள்ளன.

எனவே விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாம் எதிர்பார்க்கலாம்.

சிம்புவின் 48வது படத்தை கமலஹாசன் தயாரிக்க தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் தங்கவேல்

STR 49 movie update Again Vels and ARR Combo

டென்பின் பவுலிங் இறுதிப்போட்டி : பரிசுகளை வழங்கிய ‘தீராக் காதல்’ இயக்குநர்

டென்பின் பவுலிங் இறுதிப்போட்டி : பரிசுகளை வழங்கிய ‘தீராக் காதல்’ இயக்குநர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை எழும்பூரில் உள்ள DU பவுலில் நடைபெற்ற 3வது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டியின் இறுதிப்போட்டியில் முன்னாள் மாநில சாம்பியன் யூசுப் ஷபீர், கணேஷ்.என்.டி-யை (384-355) வீழ்த்தினார் சாம்பியன் பட்டம் வென்றார்.

இரண்டு சுற்றுகளில் ஒட்டுமொத்த பின்ஃபால் அடிப்படையில் விளையாடிய இறுதிப் போட்டியில் கணேஷ், யூசுப்பை (177-170) விட 7 பின்கள் முன்னிலையுடன் முதல் சுற்றை முடித்தார்.

2வது சுற்றில் யூசுப் 178 புள்ளிகளுடன் மீண்டும் ஆதிக்கம் செலுத்தினார். இதன் மூலம் 29 பின்களின் ஒட்டுமொத்த பின்ஃபால் வித்தியாசத்தில் கணேஷை யூசுப் ஷபீர் வீழ்த்தினார்.

முந்தைய நாள், இரண்டு சுற்றுகளின் ஒட்டுமொத்த பின்ஃபால் அடிப்படையில் விளையாடிய முதல் அரையிறுதியில், முதல் நிலை வீரரான யூசுப் ஷபீர் நான்காம் நிலை வீரரான அக்ரமுல்லா பைக்-ஐ இரண்டு கேம் நாக் அவுட்டில் 78 பின்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

யூசுப் ஷபீர் போட்டியின் 2வது மற்றும் 3வது சுற்றில் 18 சுற்றுகளின் தகுதி புள்ளிகளை சராசரியாக 187.06 (பின்ஃபால் 3367) இல் முடித்தார்.

2வது அரையிறுதியில் இரண்டாம் நிலை வீரரான ஆனந்த் பாபு, மூன்றாம் நிலை வீரரான கணேஷ் என்.டி-யை எதிர்த்து விளையாடினார்.

கணேஷ் 32 பின்கள் வித்தியாசத்தில் ஆனந்தை (389-357) தோற்கடித்து இறுதிப் போட்டியில் தனது இடத்தை உறுதி செய்தார்.

சிறப்புப் பரிசுகள்:
6 கேம் பிளாக்கில் அதிகபட்ச சராசரி: கணேஷ்.என்.டி (199.00)
18 ஆட்டங்களுக்குப் பிறகு அதிகபட்ச சராசரி: யூசுப் ஷபீர் (187.06)

இப்போட்டியின் நிறைவு விழாவில் ’அதே கண்கள்’, ‘பெட்ரோமாக்ஸ்’, ‘தீராக் காதல்’ போன்ற படங்களை இயக்கியிருக்கும் ரோகின் வெங்கடேஷன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

செந்தில் குமார்.என்
போட்டி இயக்குநர்
அலைபேசி : 9840318181

நிர்வாக அலுவலகம்: ரஜ்னி’ஸ் கோதண்டா கிரஹா அப்பார்ட்மெண்ட்ஸ்
G-1, பழைய எண்: 55, புதிய எண்: 83, 10வது அவென்யூ, அசோக் நகர்,
சென்னை – 600 083.
தொலைபேசி :+91-9840318181
மின்னஞ்சல்: [email protected]

Ten pin bowling competition Theera Kadhal director participated

RRR பட நடிகருடன் இணையும் விஜய்சேதுபதி.; ஹிட் இயக்குநருடன் மீண்டும் கூட்டணி

RRR பட நடிகருடன் இணையும் விஜய்சேதுபதி.; ஹிட் இயக்குநருடன் மீண்டும் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் தனுஷ்.. தமிழ் சினிமா தாண்டி தெலுங்கு ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார்.

இதே வழியை பின்பற்றி நடிகர் விஜய் சேதுபதியும் தமிழ் மலையாளம் தெலுங்கு ஹிந்தி ஆகிய நேரடி படங்களில் நடித்து வருகிறார்.

‘காந்தி டாக்ஸ்’ மற்றும் ‘ஜவான்’ ஆகிய ஹிந்தி படங்களில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. மேலும் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான சைரா நரசிம்ம ரெட்டி & உப்பெனா ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் ஆர் ஆர் ஆர் பட நடிகர் ராம்சரனின் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் விஜய் சேதுபதி.

இந்த படத்தை ‘உப்பெனா’ இயக்குநர் புஜ்ஜி பாபு இயக்க இதில் ராம் சரண் ஹீரோவாக நடிக்கிறார்.

விளையாட்டை மையப்படுத்தி உருவாகவுள்ள இது ராம்சரணின் 16 வது படமாகும்.

Ramcharan and Vijay Sethupathi movie updates

ரஜினி ஸ்டைல்.. தமன்னா டான்ஸ்.; 20 மில்லியனை தாண்டி கலக்கும் ‘காவாலா..’

ரஜினி ஸ்டைல்.. தமன்னா டான்ஸ்.; 20 மில்லியனை தாண்டி கலக்கும் ‘காவாலா..’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஜெயிலர்’.

‘எந்திரன்’, ‘பேட்ட’, ‘அண்ணாத்த’ படங்களை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் 4வது படம் இது.

பான் இந்தியா வெளியீடாக தயாராகியுள்ள இந்த படத்தில் மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், சுனில் என பிற மொழிகளை சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

கதாநாயகியாக தமன்னா நடிக்க, முக்கிய வேடங்களில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்னா மேனன், வசந்த் ரவி, நாக பாபு, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பேட்ட, தர்பார் என சூப்பர்ஸ்டார் ரஜினியின் முந்தைய இரண்டு படங்களில் ஹிட் பாடல்களை கொடுத்த அனிருத் இந்த படத்திற்கு இசையமைப்பதன் மூலம் 3வது முறையாக அவருடன் இணைந்துள்ளார்.

ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் கடந்த ஜூன் 6-ம் தேதி மாலை இந்த படத்தில் இருந்து ‘காவாலா’ என்கிற லிரிக் பாடல் வெளியானது.

வெளியாகி மூன்று நாட்களே ஆன நிலையில் கிட்டத்தட்ட 20 மில்லியன் பார்வையாளர்கள் யூட்யூப்பில் இந்த பாடலை பார்த்து ரசித்துள்ளனர்.

அது மட்டுமல்ல spotify-யில் இந்த பாடல் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஸ்ட்ரீம்களை பெற்றுள்ளது.

அனிருத்தின் அதிரடி இசை, அருண்ராஜா காமராஜின் பாடல் வரிகள், பாடகி ஷில்பா ராவின் காந்தக் குரல், தமன்னாவின் நளினமான நடனம், சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிக்னேச்சர் ஸ்டைல், ஜானி மாஸ்டரின் நடன வடிவமைப்பு என எல்லாமாக சேர்ந்து இந்த பாடலுக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்துள்ளது.

Jailer first single Kaavaalaa crosses 20M views

‘விஜய் 68’ படத்தில் இணையும் சிம்பு – தனுஷ் பட பிரபலம்.?!

‘விஜய் 68’ படத்தில் இணையும் சிம்பு – தனுஷ் பட பிரபலம்.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

ஜூலை 10 ஆம் தேதி நேற்றுடன் ‘லியோ’ படத்தில் தனக்கான காட்சிகளை விஜய் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

தற்காலிகமாக ‘தளபதி 68’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் 2024 -ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.

இந்நிலையில், ‘தளபதி 68’ படத்திற்கு ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவாளராக பணியாற்றவுள்ளதாக கூறப்படுகிறது.

சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’, தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ போன்ற படங்களுக்கு சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவாளராக பணியாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சித்தார்த்தா நுனி

Cinematographer Siddhartha Nuni to work as cinematographer for ‘thalapathy 68’

‘லியோ’ அப்டேட் கொடுத்த டைரக்டர்.; விஜய் ஷூட்டிங்கை நிறைவு செய்த லோகேஷ்

‘லியோ’ அப்டேட் கொடுத்த டைரக்டர்.; விஜய் ஷூட்டிங்கை நிறைவு செய்த லோகேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு விட்டது.

எனவே படத்தின் ஷூட்டிங்கை விறுவிறுப்பாக நடத்தி வருகிறார் லோகேஷ் கனகராஜ். அதேசமயம் பாலிவுட் ஹாலிவுட் என பல சினிமா பிரபலங்களை இந்த படத்தில் இணைத்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று ஜூலை 10 ஆம் தேதி விஜய்க்கான படக் காட்சிகளை முடித்து விட்டதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்்

இத்துடன் ஒரு புகைப்படத்தையும் அவர் பகிர்ந்திருக்கிறார்.

இன்னும் விஜய் இல்லாத சில காட்சிகளை லோகேஷ் படமாக இருக்கிறார்.

அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தில் திரிஷா, மன்சூர் அலிகான், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

அதில், “இரண்டாவது பயணத்தை மீண்டும் சிறப்பானதாக மாற்றியதற்கு நன்றி அண்ணா” என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

Vijay’s portions in Lokesh Kanagraj’s ‘Leo’ wrapped up completely

More Articles
Follows