கிராம வழிபாடுகளில் ‘வா சாமீ…’ நிச்சயம் ஒலிக்கும்..; ‘அண்ணாத்த’ பாடலாசிரியர் ஆனந்தம்

கிராம வழிபாடுகளில் ‘வா சாமீ…’ நிச்சயம் ஒலிக்கும்..; ‘அண்ணாத்த’ பாடலாசிரியர் ஆனந்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் இடம்பெற்ற “வா சாமி” பாடல் மூலம் திரையுலகின் கவனிப்பை தன் பக்கம் இழுத்துள்ளார் பாடலாசிரியர் கவிஞர் அருண்பாரதி.

இவர் ஏற்கனவே விஸ்வாசம் திரைப்படத்தில் பாடல்கள் எழுதியுள்ள இவர், இதே கூட்டணியில் மீண்டும் ஒரு ஹிட் நம்பர் கொடுத்துள்ளார்.

இது குறித்து பாடலாசிரியர் அருண்பாரதி நம்மிடம் கூறும் போது…

“வா சாமி” பாடலை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் கிராமங்களில் இந்தப் பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் பெரும் தெய்வங்களுக்கு தரப்படும் முக்கியத்துவம் சிறு தெய்வங்களுக்கு தரப்படுவதில்லை. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நம் குல தெய்வங்களுக்கு பாடல் எழுதியது மகிழ்ச்சியளிக்கிறது. மறந்து போன சிறு தெய்வ வழிபாட்டை நினைவு கூறும் வகையிலும், வேட்டைக்கு செல்லும் குலசாமியின் பெருமை சொல்லும் வகையிலும் இந்தப் பாடலை எழுதியுள்ளேன்.

நொச்சிபட்டி திருமூர்த்தி, கீழக்கரை சம்சுதீன் போன்ற மாற்றுத் திறனாளிகளை இந்தப் பாடல் மூலம் அறிமுகம் செய்து இசையமைப்பாளர் இமான் மக்கள் மனதில் பெரும் உயரத்திற்கு சென்றுவிட்டார்.

இனி கிராமங்களில் கருப்பசாமி, கோவிந்தசாமி, சுடலைமாட சாமி, மதுரை வீரன் சாமி என்று யாருக்கு வழிபாடு நடத்தினாலும் அங்கு இந்த வாசாமி பாடல் நிச்சயம் இருக்கும் என்று நம்புகிறேன்.

மண்வாசத்தோடு கூடிய இந்தப் பாடலை எழுத வாய்ப்பளித்த இயக்குநர் சிவா மற்றும் இசையமைப்பாளர் இமான் ஆகியோருக்கு நான் நன்றிக் கடன்பட்டுள்ளேன் என்று கூறினார்.

மேலும் அருண்பாரதி தற்போது பிச்சைக்காரன்- 2, காக்கி, கடமையை செய், கார்பன், நா நா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதி வருவதோடு, விரைவில் உரைநடையில் எழுதி வரும் தன் புத்தகங்கள் வெளிவர இருப்பதாகவும் கூறினார்.

Vaa Saamy lyric writer talks about his experience in Annaatthe

2 பேர் செய்யும் காதலை 50 பேர் செய்றாங்க.. சினிமாவில் நான் நடிக்க தேவையில்ல – கமல் ஓபன் டாக்

2 பேர் செய்யும் காதலை 50 பேர் செய்றாங்க.. சினிமாவில் நான் நடிக்க தேவையில்ல – கமல் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மகிழ் மன்றம் மற்றும் டம்மீஸ் ட்ராமா வழங்க ஶ்ரீவத்சன் நடித்து இயக்கிய “விநோதய சித்தம்” மேடை நாடகம் நேற்று (5-11-2021) நாரத கான சபாவில் நடைபெற்றது. நாடகம் அரங்கேறிய மேடையில் உலக நாயகன் கமல்ஹாசன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது,…

“நான் இங்கு வந்ததற்கு மிக முக்கிய காரணம் KB சார் தான்.அவரையும் என்னையும் தனியாக பிரிக்க முடியாது. எனக்கு கிடைக்காத பாக்கியம் திரு ஶ்ரீவத்சன் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. KB சாருக்கு அவர் கதை எழுதியிருக்கிறார். அவருக்கு நிறைய கதை சொல்லியிருக்கிறேன் ஆனால் எழுதியதில்லை.

ஒரு நூல் கொடுத்தால் போதும் அதை அழகான துணியாக மாற்றிவிடுவார் KB சார். இன்னொரு காரணம் நானும் TKS நாடகக் குழுவிலிருந்து வந்தவன். ஒரு முறை பள்ளியில் மாடியில் இருந்து விழுந்து விட்டேன். அதை அப்போது, பையன் பிழைத்து கொண்டானா என TKS குழுவில் விசாரிக்க, களத்தூர் கண்ணம்மாவில் நடித்த பையன் என்று சொல்லியிருக்கிறார்கள்.

என்னை நாடகத்தில் நடிப்பியா எனக் கேட்டு நாடகக் குழுவில் சேர்த்துக் கொண்டார்கள். அப்படித்தான் நாடக குழுவில் இணைந்தேன். எல்லோரும் நாடகத்திலிருந்து சினிமாவுக்கு போவார்கள், ஆனால் நான் சினிமாவில் இருந்து நாடகத்திற்கு வந்தேன்,

அந்த நாடகங்கள் பேரனுபவமாக இருந்தது. மீண்டும் என்னை சினிமாவை நோக்கி தள்ளி விட்டது நாடகம் தான். மீண்டும் நாடக மேடைக்கு வர நிறைய ஆசைப்பட்டேன், யாரும் என்னை இணைத்து கொள்ளவில்லை. நாடக மேடை என்பது மிகச்சிறப்பானது ஶ்ரீவத்சன் எடுத்துக்கொண்ட முயற்சி மிகச்சிறப்பானது.

சினிமாவில் பாட்டு பாடுவார்கள், பாம் போடுவார்கள், இரண்டு பேர் செய்ய வேண்டிய காதலை 50 பேர் செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் இங்கு தனியாக ரசிகனுக்கும் சிந்தனைக்குமான தொடர்பு இருக்கும். நான் நாடகத்தின் ரசிகன் என்பது தான் எனது முதல் தகுதி. நிஜமான திறமையை அடையாளப்படுத்துவது நாடக மேடை தான்.

சினிமாவில் நான் நடிக்க கூட தேவையில்லை, ஹோலோகிராம் மூலம் என் போன்ற உருவத்தை கொண்டு வந்து விட முடியும் அந்தளவு டெக்னாலஜி வந்துவிட்டது. ஆனால் இங்கு மேடையில் நிகழ்வது தான் நிஜமான திறமை.

ஒரே ஒரு தடவை பார்த்த சோ அவர்களின் நாடகத்தின் ஒவ்வொரு காட்சியும் எனக்கு இப்போதும் ஞாபகமிருக்கிறது.

எனக்கு நல்ல நாடகங்கள் பார்க்க மிகவும் பிடிக்கும். மீண்டும் நாடகங்கள் நடிக்க ஆசை. இவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கண்டிப்பாக வேறு மேடை ஏற உள்ளேன். அரசியல் மேடை இல்லை.

மும்பையில் சசிகபூர் அவர்கள் பிரித்வி தியேட்டர் என ஒன்றை நிறுவியிருக்கிறார்கள். அது போல் ஒன்றை இங்கு அமைக்க ஆசைப்படுகிறேன். இந்த நாடகத்தை பொறுத்த வரையில் நிறைய சொல்ல வேண்டும்.

எனது உத்தம வில்லனில் ஒரு பாடல் வரும் சாகாவரம் போல் சோகம் உண்டோ என்ற பாடல் அந்த பாடலின் மேம்பட்ட வடிவமாகத் தான் இந்த நாடகம் உள்ளது. மரணத்துடனான அழகான உரையாடலாக இந்த நாடகம் அமைந்துள்ளது. இந்த உரையாடலை நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும். நம் அனைவருக்குமான தேதி நிச்சயிக்கப்பட்ட ஒன்று. வீடு கட்டும் போது கழிவறை பற்றி சிந்திக்க மாட்டோம்.

வாழ்கைக்கு இருக்கும் மரியாதை மரணத்திற்கு தரப்பட வேண்டும், அதை இந்த நாடகம் செய்துள்ளது. என்னுடைய பிறந்தநாள் சிறப்பாக இதை அரங்கேற்றியதாக கூறியதற்கு நன்றி. நாம் அனைவரும் உணர வேண்டிய உண்மையை அழகாக மென்மையாக எடுத்துரைக்கிறது இந்த நாடகம். இந்த நாடகத்தை அரங்கேற்றுவதும், அதில் நான் கலந்து கொள்வதும் மகிழ்ச்சி. இதில் கலந்து கொண்டவர் ஒத்திகைக்கு போகவில்லை என்றால் நாடகத்தை நிறுத்தி விடுவார்கள் என்று சொன்னார், ஒத்திகை நாம் அந்த படைப்புக்கு தரும் மரியாதை.

ஒத்திகையை நம்பும் வாத்தியார் எனக்கு கிடைத்தார். அதனால் அதன் அருமை எனக்கு தெரியும். நான் இயக்கும் படத்தை எத்தனை முறை பார்ப்பீர்கள் என்று கேட்டார்கள். ஒரு முறை நிஜத்தில் எண்ணிப் பார்த்தேன், நிஜமாகவே 100, 150 முறை பார்ப்பேன். டப்பிங், ரெக்கார்டிங் என மீண்டும் மீண்டும் புசித்து, சாப்பிட்டுவிட்டு தான் உங்களுக்கு தருவேன்.

நீங்கள் வெற்றி பெற வைப்பதற்கு பார்ப்பதை விட அதிக முறை நான் பார்ப்பேன். இங்கு இந்த நாடகத்தில் விமர்சனம் என்பதே இல்லை, அத்தனை பேரும் அருமையாக செய்துள்ளார்கள். நடித்தவர்கள் அனைவருக்கும் என் பாராட்டுக்கள். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் இணையத்தில் பார்க்க முடிகிற காலத்தில் இங்கு நேரில் வந்து ரசிக்கும் ரசிகர்களுக்கு நன்றி. அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.

சமீபத்தில் சமுத்திரகனி இயக்கத்தில் ZEE5 ஒடிடி தளத்தில் வெளியான “விநோதய சித்தம்” திரைப்படம், ரசிகர்களிடையேயும் விமர்சகர்களிடையேயும் மிகப்பெரும் பாராட்டுக்களை குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது..

Kamal Haasan praises Vinodhaya Sitham drama

முதல்வர் வழங்கியது பட்டா அல்ல நம்பிக்கை.. இது மறக்கமுடியாத தீபாவளி – சூர்யா

முதல்வர் வழங்கியது பட்டா அல்ல நம்பிக்கை.. இது மறக்கமுடியாத தீபாவளி – சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக கோயில்களில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானத்தில் தங்கள் சமூகம் அவமதிக்கப்படுவதாக நரிக்குறவச் சமூகத்தைச் சேர்ந்த அஸ்வினி என்பவர் தெரிவித்து இருந்தார்.

இது தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் மாமல்லை தலஷயனப் பெருமாள் கோயில் அன்னதானத்தில் நரிக்குறவச் சமூகத்தைச் சேர்ந்த அஸ்வினியுடன் அமர்ந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உணவருந்தினார்.

இதனை பலரும் பாராட்டினர்.

இந்த நிலையில் தீபாவளி அன்று குறவர் மற்றும் இருளர் பழங்குடியின மக்களுக்கான 4.5 கோடி ரூபாய் நலத்திட்ட உதவிகளைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இந்த விழாவில் முதல்வருக்கு ஊசிமணி மாலை அணிவித்து அஸ்வினி மரியாதை செலுத்தினார்.

அதன்பின்ர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அஸ்வினி வீட்டுக்கும் சென்றார்.

இதன் புகைப்படங்கள், வீடியோக்களைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்.

அதில் “அஸ்வினிக்கு மறுக்கப்பட்டது உணவு அல்ல, மரியாதை” என்று குறிப்பிட்டார்.

தமிழக முதல்வரின் ட்வீட்டை குறிப்பிட்டு நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எளிய பழங்குடி மக்களின் இல்லம் தேடிச் சென்று வழங்கியிருப்பது வெறும் பட்டா அல்ல, புதிய நம்பிக்கை.

காலங்காலமாகத் தொடரும் எளிய மக்களின் இன்னல்களுக்கு, நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை அளித்துள்ளது. மேலும், எளிய மக்களின் தேவை அறிந்து உடன் செயலில் இறங்கிய வேகம் எங்களைப் பிரமிக்க வைக்கிறது.

இந்த தீபாவளித் திருநாளை மறக்கமுடியாத நன்னாளாக மாற்றிய முதல்வருக்கு உளமார்ந்த நன்றி”.

இவ்வாறு நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

மேலும், ‘ஜெய் பீம்’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனமும் தங்களது ட்விட்டர் பதிவில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளது.

எளியமக்களின் தேவை அறிந்து உடன் செயலில் இறங்கிய வேகம் எங்களை பிரமிக்க வைக்கிறது. இந்த தீபாவளி திருநாளை மறக்கமுடியாத நன்னாளாக மாற்றிய மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு உளமார்ந்த நன்றி.
அன்புடன்,
சூர்யா

என பதிவிட்டுள்ளனர்.

Actor Suriya thanked Tamil Nadu CM Mk Stalin

விஜய்சேதுபதிக்கு தேசிய விருது பெற்றுத்தந்த இயக்குனருடன் இணையும் அஜித்.?

விஜய்சேதுபதிக்கு தேசிய விருது பெற்றுத்தந்த இயக்குனருடன் இணையும் அஜித்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து வலிமை படத்திற்காக மீண்டும் அதே கூட்டணியுடன் இணைந்தார் அஜித்.

இந்த படத்தை வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வருகிறார்.

யுவன் இசையமைப்பில் உருவாகும் இந்த படத்தில் நாயகியாக ஹீமாகுரேஷி மற்றும் வில்லனாக கார்த்திகேயா நடித்து வருகின்றனர்.

இந்த படத்தை முடித்துவிட்டு மீண்டும் இதே கூட்டணியுடன் அஜித் இணைவார் என தகவல்கள் வந்த நிலையில் அஜித்தின் 62வது படத்தை தியாகராஜன் குமாரராஜா இயக்கவுள்ளதாக புதிய தகவல் வந்துள்ளது.

ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் போன்ற வித்தியாசமான படங்களை இயக்கியவர் தியாகராஜன் குமாரராஜா.

சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கை வேடத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு 2019கான சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. அதற்கு காரணமான இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவை சந்தித்து ஆசி பெற்றார் விஜய்சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது.

Ajith to team up with this critically acclaimed director ?

ரெண்டே நாளில் 110 கோடியை அள்ளிய ‘அண்ணாத்த’.; பழைய ரெக்கார்டுகளை உடையப்பா பாக்ஸ் ஆபிஸில் புதுசாதனை படையப்பா என ரசிகர்கள் வாழ்த்து

ரெண்டே நாளில் 110 கோடியை அள்ளிய ‘அண்ணாத்த’.; பழைய ரெக்கார்டுகளை உடையப்பா பாக்ஸ் ஆபிஸில் புதுசாதனை படையப்பா என ரசிகர்கள் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி நேற்று முன்தினம் தீபாவளியை முன்னிட்டு ’அண்ணாத்த’ படம் ரிலீசானது.

சிவா இயக்கிய இப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமான நட்சத்திர பட்டாளத்துடன் தயாரித்து இருந்தது. இப்படத்திற்கு இமான் இசையமைத்து இருந்தார்.

உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 2500-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது. வெளிநாடுகளில் மட்டும் இதுவரை இல்லாத அளவிற்கு 1200 திரையரங்குகளில் வெளியாகி தமிழ் சினிமாவில் புதிய சாதனையை அண்ணாத்த படம் நிகழ்த்தியது.

தமிழகத்தில் அதிகாலை 4.00 மணி முதல் சிறப்பு காட்சிகள் தொடங்கியது. அன்றைய தினத்தில் கொட்டும் மழையிலும் ரசிகர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் படம் பார்க்க வந்திருந்தனர்.

படத்திற்கு 70% பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் 30% நெகட்டிவ் விமர்சனங்களே வந்த வண்ணம் உள்ளன. ரஜினி நடிப்பு மற்றும் ஆக்சனை காட்சிகளை யாரும் குறை சொல்லவில்லை. ஆனால் படத்தின் கதை பார்த்து பழக்கப்பட்ட பழைய கதை என கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் தான் அண்ணாத்த படத்தின் வசூல் வேட்டைகள் தெரிய வந்துள்ளது.

அண்ணாத்த படம் வெளியான அன்றைய தினத்தில் தமிழகத்தில் மட்டும் ரூ. 34.92 கோடியை அள்ளியுள்ளது. இது முதல் நாள் வசூலில் புதிய சாதனை என சினிமா வல்லுனர்களே தெரிவித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனமும் தங்கள் இணைய பக்கங்களில் இதை உறுதி செய்துள்ளனர்.

(சில தியேட்டர்களில் டிக்கெட்டுக்கள் 500 முதல் 1200 ரூபாய் வரை விற்கப்பட்டது இந்த கணக்கில் வராது என்பது குறிப்பிடத்தக்கது. அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே இதில் அடங்கும்),

இந்த நிலையில் படம் ரிலீசாகி இரண்டு நாட்கள் ஆன நிலையில் 2வது நாள் வசூல் நிலவரமும் தெரிய வந்துள்ளது.

உலகளவில் முதல்நாளில் மட்டும் ரூ 70.5 கோடியை வசூலித்துள்ளது. 2வது நாளில் (நவம்பர் 5) மட்டும் ரூ 42 கோடியை வசூலித்துள்ளது. ஆக மொத்தம் ரூ 112 கோடியை இரண்டே நாளில் அண்ணாத்த அள்ளியுள்ளது ஒட்டுமொத்த திரையுலகத்தை ஆச்சர்யப்படுத்தி ஆனந்தப்படுத்தி உள்ளது.

இதுபோன்ற சாதனைகளை சூப்பர் ஸ்டார் ஒருவரால் மட்டுமே செய்ய முடியும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பழைய ரெக்கார்டுகளை உடையப்பா பாக்ஸ் ஆபிஸில் புதுசாதனை படையப்பா என ரஜினி ரசிகர்களும் வாழ்த்தி வருகின்றனர்.

Annaatthe 2 days box office collection details here

தளபதியுடன் மீண்டும் ஜாலியாக ஜார்ஜியா பறக்கும் ‘பீஸ்ட்’ டீம்..

தளபதியுடன் மீண்டும் ஜாலியாக ஜார்ஜியா பறக்கும் ‘பீஸ்ட்’ டீம்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே ஜோடியாக நடித்து வருகின்றனர்

இவர்களுடன் வில்லனாக டைரக்டர் செல்வராகவன் நடிக்க முக்கிய கேரக்டரில் யோகிபாபு நடித்து வருகிறார்.

அனிருத் இசையமைக்க இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் தொடங்கினர். பின்னர் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதியிலேயே திரும்பினர்.

அதன்பின்னர் சென்னை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தினர்.

தற்போது சென்னையிலுள்ள கோகுலம் ஸ்டுடியோவில் பிரமாண்ட செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது.

தற்போது வரை பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு 80% நிறைவு செய்துள்ளதாம்.

இந்த நிலையில் இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக மீண்டும் ஜார்ஜியா நாட்டிற்கு பறக்கவுள்ளது பீஸ்ட் படக்குழு.

அங்கு வில்லன்களுடன் விஜய் போடும் பைட் காட்சிகளை படமாக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Beast team going to georgia to shoot big fight scene

More Articles
Follows