தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னை கெருகம்பாக்கம் பகுதியில் நேற்று பள்ளி மாணவர்கள் பஸ்ஸில் தொங்கிக்கொண்டு சென்றனர். இந்த பேருந்து பின்னால் காரில் சென்ற நடிகை ரஞ்சனா இதனை படம் பிடித்து உள்ளார்.
ஒரு கட்டத்தில் அவர் பேருந்தை நிறுத்த சொல்லி டிரைவரையும் கண்டக்டரையும் திட்டியுள்ளார். மாணவர்கள் இப்படி தொங்கிக் கொண்டே சென்றால் அவர்கள் மரணம் அடைந்தால் யார் பொறுப்பு? என்று திட்டினார்.
மாணவர்கள் சொல் பேச்சை கேட்பதில்லை என கண்டக்டர் சொல்ல தன்னை போலீஸ் என்று சொல்லிக் கொண்டு மாணவர்களை தாக்கியுள்ளார் நடிகை ரஞ்சனா.
மேலும் கண்டக்டரை நாய் நாய் என்று திட்டியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதனையடுத்து அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அப்போதும் தன்னுடைய காரில் தான் வருவேன் போலீஸ் வாகனத்தில் ஏற மாட்டேன் என நடிகை ரஞ்சனா வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் ஒரு வழியாக போலீஸ் ஜீப்பில் ஏறி சென்றார் நடிகை ரஞ்சனா.
ரஞ்சனா குறித்த விவரங்கள் இதோ..
போலீஸ் என்று கூறிக்கொண்டு சென்னையில் அரசுப் பேருந்தை நிறுத்தி, பொது இடத்தில் பள்ளி மாணவர்களைத் தாக்கியதாக பாஜகவை சேர்ந்த திரைப்பட நடிகை ரஞ்சனா நாச்சியார் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இவர் தனது மகள் மீது மாமனார், மாமியார் தாக்குதல் நடத்தியதாக கடந்தாண்டு மாங்காடு காவல் நிலையத்தில் ரஞ்சனா நாச்சியார் போக்சோ வழக்கு கொடுத்திருந்தார்.
இப்போது அவரே பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவர்களை அடித்து தண்டித்த விவகாரம் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது.
சமூக ஆர்வத்தில் ஆளாளுக்கு சட்டத்தைக் கையில் எடுத்தால்…
சட்டம் எதற்கு? போலீஸ் எதற்கு?
நீதிமன்றம் எதற்கு? நிர்வாகம் எதற்கு? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
இயக்குநர் பாலாவின் உடன்பிறந்த அண்ணன் மகள் நடிகை ரஞ்சனா நாச்சியார்.
இவர் ‘துப்பறிவாளன்’, ‘இரும்புத்திரை’, ‘அண்ணாத்த’, ‘டைரி’, ‘நட்பே துணை’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
டைரி படத்தில் இவர் பேசிய, “போலீஸ்னா அடிப்பீங்களா” என்ற வசனமும் பிரபலமானது.
*நடிகை ரஞ்சனா செய்தது சரியா தவறா கமெண்டில் பதிவு செய்யுங்கள்.?*
Attack on Students Actress Ranjana arrested