தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள படம் ‘லால் சலாம்’.
இந்த படம் பிப்ரவரி 9ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் ‘லால் சலாம்’ படக்குழுவினர் சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் விஷ்ணு விஷால் பேசியதாவது…
இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்த ஐஸ்வர்யா ரஜினி க்கு நன்றி.. எனக்கு அரசியல் எதுவும் தெரியாது. ஆனால் சமீபத்தில் நான் போட்ட ஒரு பதிவு இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது..
இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்ற உள்ளதாக தகவல்கள் வந்தன. சிறு வயது முதலே இந்தியா என்பதை நாம் கேட்டு வருகிறோம்.. இப்போது ஏன் இந்த மாற்றம் என ஒரு பதிவிட்டேன். அப்படி என்றால் நீ ஒரு ஆன்ட்டி இந்தியனா நீ ஒரு இந்து விரோதியா? என பல விரோதிகளை பேசி இருந்தனர்.
இங்கு ஒரு கருத்தை சொல்ல முடியவில்லை. ஒருவர் ஒரு கருத்தை சொன்னால் மற்றவர்களுக்கு அதில் உடன்பாடு இல்லை என்றால் அந்த கருத்தை மதிக்க வேண்டும்.. ஆனால் அவரை தாக்குவதையே குறியாக உள்ளனர்.
முக்கியமாக தல தளபதி என்பது குறித்து பேசினால் ஒருவரை பிடிக்கும் என்று சொல்ல முடியவில்லை.. சொன்னால் மற்றொரு தரப்பு எதிர்க்கிறது. ஒரு கருத்தை இங்கு பதிவிட முடியவில்லை.
‘லால் சலாம்’ படம் இது குறித்து தான் பேசுகிறது.. இங்கே பலருக்கும் பல கருத்துக்கள் இருக்கும். ஒவ்வொருவரின் கருத்துக்கும் கருத்துரிமையும் சுதந்திரமும் உள்ளது அதை மதிக்க வேண்டும் என்ற கருத்தை பேசி இருக்கிறது.”
என்றார் விஷ்ணு விஷால்.
Vishnu Vishal speech about Rajini Vijay Ajith