நான் பார்த்து வளர்ந்த பையன் விஜய்.; எனக்கு போட்டி இல்லை – ரஜினிகாந்த்

நான் பார்த்து வளர்ந்த பையன் விஜய்.; எனக்கு போட்டி இல்லை – ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள படம் ‘லால் சலாம்’.

இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த், தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ஜனவரி 26 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்ற ரஜினி பேசியதாவது…

‘ஜெயலர்’ விழாவில் நான் பேசிய காக்கா கழுகு பிரச்சனை தற்போது வரை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. நான் விஜய் குறித்து பேசியதாக கருத்துக்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது.

நடிகர் விஜய் எனக்கு முன்னாள் வளர்ந்த பையன், நடிகர் விஜயை சின்ன வயதிலிருந்தே பார்த்து வருகிறேன்.

தர்மத்தின் தலைவன் படப்பிடிப்பின் போது விஜய்யின் தந்தை என்னிடம் வந்து, என்னுடைய பையன் படித்து வருகிறான், அவனுக்கு நடிப்பின் மீது ஆர்வம் அதிகமாக உள்ளது. நீங்கள் கூறுங்கள் அவன் படித்துவிட்டு வந்தவுடன் நடிக்க வேண்டுமென தெரிவித்தார். நானும் விஜய் அழைத்து அட்வைஸ் செய்தேன்.

அதன் பிறகு விஜய் நடிப்பிற்கு வந்து உழைப்பால் உயர்ந்து உள்ளார். தற்போது நன்றாக நடித்து வருகிறார். தற்போது சமூக சேவைகள் செய்து அரசியலுக்கு வரும் முயற்சியில் உள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

தற்போது விஜய்க்கும் எனக்கும் போட்டி என கூறுவது மிகவும் கவலை அளிக்கிறது. அவரும் மேடையில் எனக்கு போட்டி நான் தான் என கூறியுள்ளார். எனக்கு போட்டி என்னுடைய படங்கள்தான் என்பதை நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன்..

நடிகர் விஜய் எனக்கு போட்டியாக நினைத்தால் அது எனக்கு மரியாதை இல்லை.. நானும் விஜய்க்கு போட்டியா நினைத்தால் அவருக்கும் மரியாதை இல்லை.. தயவுசெய்து என்னுடைய மற்றும் அவருடைய ரசிகர்கள் காக்கா கழுகு கதையை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று பேசினார்.

ரஜினிகாந்த்

Superstar made conclusion for Rajini and Vijay fans war

மனைவி செல்போனில் ஸ்பை ஆப் இன்ஸ்டால் செய்த கணவன்

மனைவி செல்போனில் ஸ்பை ஆப் இன்ஸ்டால் செய்த கணவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அதோமுகம் என்ற பழந்தமிழ் வார்த்தைக்கு மறைத்து வைத்திருக்கும் முகம் என்று பொருள்.

மனிதர்கள் மறைத்து வைத்திருக்கும் கோர முகங்கள் சில சமயங்களில் வெளிவரும் போது எந்தவிதமான வினோதங்கள், அசம்பாவிதங்கள் நிகழ்கிறது என்பதை அதோமுகம் புதிய கோணத்தில் திரைப்படமாக வடிவமைத்துள்ளனர்.

ஊட்டி, குன்னூர் மற்றும் அதை சுற்றிய பகுதிகளில் கதைகளம் அமைத்து படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.

மலைகள், குளிர், மிஸ்ட் ஆகியவையுடன் டெக்னாலஜியுடன் கூடிய சஸ்பென்ஸ் திரில்லாராக படம் உருவாகியுள்ளது.

ஹீரோ தனது மனைவி மொபைல் போனில் அவருக்கு தெரியாமல் ஒரு ஸ்பை அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்ததால் அவனது வாழ்க்கை தலைகீழாக மாறுவது தான் கதை.

இதை சுற்றி பல திருப்பங்களுடன் கூடிய திரைக்கதையை வடிவமைத்து அதோமுகம் படத்தை உருவாக்கியுள்ளார்கள்.

கதையின் நாயகனாக சித்தார்த் எஸ். பி. கதையின் நாயகி சைத்தன்யா ஆகியோர் அறிமுகமாகிறார்கள்.

இவர்களுடன் அனந்த் நாக், சரித்திரன், நக்லைட்ஸ் கவி, வர்கீஸ், பிபின் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் அருண்பாண்டியன் நடித்திருக்கிறார்.

இத்திரைப்படத்தின் இயக்குனர் சுனில் தேவ், ஒளிப்பதிவு அருண் விஜயகுமார், எடிட்டர் விஷ்ணு விஜயன், பின்னணி இசை சரண் ராகவன், பாடல்கள் மணிகண்டன் முரளி என புதுமுக டெக்னிஷியன்கள் இணைந்து இந்த திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இதுவரை பட வினியோக வியாபாரத்தில் இருந்து வந்த ரீல் பெட்டி நிறுவனம் தரிகோ பிலிம் நிறுவனத்துடன் இணைந்து இத்திரைப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

நடிகர்கள் :

எஸ்.பி.சித்தார்த், சைதன்ய பிரதாப், அருண் பாண்டியன், மாத்யூ வர்கீஸ், ஆனந்த் நாக், J S கவி, பிபின் குமார், சரித்திரன்

படக் குழுவினர்:

எழுத்து & இயக்கம்: சுனில் தேவ்
ஒளிப்பதிவு: அருண் விஜய்குமார்
பாடல்கள்: மணிகண்டன் முரளி
பின்னணி இசை: சரண் ராகவன்
கலை இயக்குனர்: சரவணா அபிராமன்
படத்தொகுப்பு: விஷ்ணு விஜயன்
ஒலி வடிவம்: திலக்ஷன் (Noise Nexus)
ஒலி கலவை: T. உதயகுமார் (Knack Studios)
ஒப்பனை: நரசிம்மா, அம்மு பி ராஜ், சுப்ரமணி (அருண் பாண்டியன்)
பாடல்: சுனில் தேவ்
கிராபிக்ஸ்: Fix It In Post Studios
கலரிஸ்ட்: K. அருண் சங்கமேஸ்வர்
வண்ணம்: Firefox Studios
மக்கள் தொடர்பு – ஆர்.குமரேசன்

Husband installed Spy app in wife mobile Adhomugam storyline

மீரா மஹதி இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் டூயட் பாடும் தீரஜ் – ஸ்மிருதி

மீரா மஹதி இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் டூயட் பாடும் தீரஜ் – ஸ்மிருதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை (ஜனவரி 25, 2024)* – _ நடிகர் சூர்யா, Air Flick Production நிறுவனத்தின் தயாரிப்பில், நடிகர் தீரஜின் நடிப்பில் உருவாகியுள்ள ‘டபுள் டக்கர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.

சிறந்த கதைகள் கொண்ட தரமான படங்களுக்கு, விமர்சகர்கள் மற்றும் பொது பார்வையாளர்களிடம் எப்போதும் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.

குறிப்பாக, அனைத்து வயதினரும் ரசிக்கும் வகையிலான படங்களை, ரசிகர்கள் கொண்டாடத் தவறியதேயில்லை. இந்தப் புத்தாண்டு தமிழ் ரசிகர்களுக்கு, ஏற்கனவே இதுபோன்ற அற்புதமான திரைப்படங்களை வழங்கி வரும் நிலையில், நடிகர் தீரஜ் நடிப்பில் அடுத்ததாக “டபுள் டக்கர்” திரைப்படம், இந்த வரிசையில் இணைகிறது.

ஃபேண்டஸி அம்சங்களுடன் வயிறு வலிக்க சிரித்து மகிழும்படியான பொழுதுபோக்கு திரைப்படமாக, இப்படத்தினை அறிமுக இயக்குநர் மீரா மஹதி இயக்கியுள்ளார்.

நடிகர் சூர்யா, தனது சமூக வலைத்தள பக்கத்தில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு, ஒட்டுமொத்த குழுவிற்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

நடிகர் தீரஜ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், இரண்டு அழகான அனிமேஷன் கதாபாத்திரங்கள் அவருடன் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளது.

இது பார்வையாளர்களுக்கு மிகப்புதுமையான சினிமா அனுபவமாக இருக்கும். நடிகை ஸ்ம்ருதி வெங்கட் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில், கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், யாஷிகா ஆனந்த், காளி வெங்கட், கருணாகரன், முனிஷ்காந்த், சுனில் ரெட்டி, ஷாரா ஆகியோருடன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

சார்ட் பஸ்டர் ஹிட் ஆல்பங்களை தந்த பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகர், ‘டபுள் டக்கர்’ படத்திற்கு இசையமைக்கிறார்.

வித்யாசாகர் இசையில், மெல்லிசை மற்றும் இளமைத் துள்ளல்களின் சரியான கலவையாக பாடல்கள் இருக்கும் என்பது உறுதி.

இப்படத்திற்கு கௌதம் ஒளிப்பதிவு செய்கிறார், வெற்றி எடிட்டிங் பணியை கவனிக்கிறார், சேது ராமலிங்கம் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

‘டபுள் டக்கர்’ படத்தை Air Flick Production நிறுவனம் தயாரிக்கிறது, சந்துரு இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இப்படத்தினை இந்த கோடையில், உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Dheeraj and Smruthi Venkat starrer Double Tukker

ரஜித் நடிப்பில் 1983 – 2023 காலக்கட்டங்களை இணைக்கும் ஃபேண்டஸி காதல்

ரஜித் நடிப்பில் 1983 – 2023 காலக்கட்டங்களை இணைக்கும் ஃபேண்டஸி காதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

போஸ்ட் production மற்றும் கார்பரேட், விளம்பர பட சேவைகளை வழங்கி கொண்டு இருக்கும் நிறுவனம் பிளாக் அண்ட் ஒயிட் மீடியா Solutions Private Limited நிறுவனத்தின் முதல் தயாரிப்பு ‘புரொடக்‌ஷன்ஸ் நம்பர் 1’! – ஃபேண்டஸியான காதல் கதையாக உருவாகிறது.

அறிமுக இயக்குநர் வீஜெ மீனாட்சி சுந்தரம் இயக்கத்தில், ரஜித் மேனன் நடிப்பில் உருவாகும் ஃபேண்டஸி காதல் கதை!

பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடெட் (Black and White Media Solutions Private Limited) நிறுவனம் சார்பில் ஜூட் ஆனந்த்.டே (D Jude Anantth) தயாரிப்பில், உருவாகும் புதிய படத்தின் அறிவிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.

விளம்பர படங்கள் & கார்ப்பரேட் திரைப்படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இயக்குநர் வீஜெ. மீனாட்சி சுந்தரம், இப்படத்தின் மூலம் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

1983 மற்றும் 2023 என இரண்டு காலக்கட்டங்களை இணைக்கும் கதையை காதல் மற்றும் ஃபேண்டஸியாக சுவாரஸ்யமாகவும், ஜனரஞ்சகமாகவும் சொல்ல இருப்பதாக தெரிவித்த இயக்குநர், தற்போது படத்தின் அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. படம் பற்றி மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும், என்றார்.

இதில் கதாநாயகனாக தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வரும் ரஜித்.CR நடிக்கிறார்.

இவருக்கு ஜோடியாக முன்னணி நடிகையை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

விருது பெற்ற கன்னட திரைப்படமான ‘கோழி எஸ்ரூ’ படத்தின் ஒளிப்பதிவாளர் பிரான்சீஸ் ராஜ்குமார்.ஏ (Francis Rajkumar A) ஒளிப்பதிவு, இசைத்துறையில் பல வருட அனுபவம் வாய்ந்த ஷீன் எல்.க்ளஃபோர்ட் (Shean L.Cleford) இசை, ‘யாத்திசை’ மற்றும் ‘ஞானசெருக்கு’ ஆகிய படங்களுக்கு படத்தொகுப்பு செய்த மகேந்திரன் கணேசன் படத்தொகுப்பு, என பலம் வாய்ந்த தொழில்நுட்ப கலைஞர்களைக் கொண்டு தரமான படமாகவும், கமர்ஷியல் ரீதியாக பிரமாண்டமாகவும் இப்படம் உருவாக உள்ளது.

கொடைக்கானலில் உள்ள கிராமம் ஒன்றில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு பிப்ரவரி கடைசி அல்லது மார்ச் முதல் வாரத்தில் படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்துள்ளது.

ரஜித் மேனன்

Rejith starring Fantasy Love story

கடவுளுக்கு மெட்டு போட்ட ஸ்ரீகாந்த் தேவா.; யோகிபாபு & நட்டி பாராட்டு

கடவுளுக்கு மெட்டு போட்ட ஸ்ரீகாந்த் தேவா.; யோகிபாபு & நட்டி பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

யோகிபாபு மற்றும் நட்டி வெளியிட்ட பக்தி பரவசமூட்டும் ‘முருகனே செல்ல குமரனே’ பாடலை தைப்பூசத்தை முன்னிட்டு வர்ஷேனியம் ரிகார்ட்ஸ் உலகமெங்கும் வெளியிடுகிறது*

சமீபத்தில் தேசிய விருது பெற்று தமிழ் திரையுலகுக்கு பெருமை சேர்த்த பிரபல இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, முருகப்பெருமான் குறித்த பக்தி பரவசமூட்டும் பாடல் ஒன்றுக்கு முதல் முறையாக இசையமைத்துள்ளார்.

தேசிய விருது பெற்ற இயக்குந‌ர் பவண் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலை தைப்பூசத்தை முன்னிட்டு வர்ஷேனியம் ரிகார்ட்ஸ் உலகமெங்கும் வெளியிடுகிறது.

முன்னதாக, ஆடியோவாகவும், வீடியோவாகவும் சிறப்பாக உருப்பெற்றுள்ள இந்த பாடலை பிரபல நடிகரும் முருக பக்தருமான யோகிபாபுவும், பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் நட்டியும் வெளியிட்டனர்.

‘சூப்பர் சிங்கர்’ வெற்றியாளர் ஸ்ரீநிதா மற்றும் சூப்பர் சிங்கர் ‘செல்லக்குட்டி பேபி’ அக்ஷரா லஷ்மி பாடியுள்ள ‘முருகனே செல்ல குமரனே’ பாடல் உலகெங்கும் வாழும் முருக பக்தர்கள் மெய் சிலிர்த்து கொண்டாடும் வகையில் உருவாகியுள்ளது.

யோகிபாபு மற்றும் நட்டி

இந்த பாடலைப் பற்றி ஸ்ரீகாந்த் தேவா கூறுகையில்…

“வர்ஷேனியம் ரிகார்ட்ஸ் மூலம் வெளியாக உள்ள ‘முருகனே செல்ல குமரனே’ பாடல் முருக கடவுளின் பாடல்களில் வரும் காலங்களில் முக்கிய இடத்தை பெறும். முருகப்பெருமானைப் பற்றி குழந்தைகள் கூட பக்தியோடு பாட வேண்டும் என்ற நோக்கத்தில் எளிய மெட்டில், எளிய தமிழில் இதை உருவாக்கியிருக்கிறோம். இந்த பாடலை கேட்டு தைப்பூசத்தில் முருகனை தரிசனம் செய்து, முருக பக்தியில் எந்நாளும் திளைத்திடுவோம்,” என்றார்.

பாடலை எழுதிய இயக்குநர் பவண், “இந்த வாய்ப்பை மிகப்பெரிய பாக்கியம் என்றே சொல்ல வேண்டும். சொல்ல சொல்ல இனிக்கும், அள்ள அள்ள அருளும் முருகப்பெருமானை பற்றிய அருமையான பாடல் அவன் அருளாலே மிகவும் சிறப்பாக உருப்பெற்றுள்ளது. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா,” என்றார்.

நடிகர் யோகிபாபுவும், நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டியும் வர்ஷேனியம் ரிகார்ட்ஸ் லேபிளில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையில் உருவாகியுள்ள ‘முருகனே செல்ல குமரனே’ பாடலை வெளியிட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.

யோகிபாபு மற்றும் நட்டி

Srikanth Deva composes a song on Lord Muruga for the first time

தேவா பாரு.. தேவா பாரு..; இசை காற்றில் வருட ரெடியான தேனிசைத் தென்றல்

தேவா பாரு.. தேவா பாரு..; இசை காற்றில் வருட ரெடியான தேனிசைத் தென்றல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ALVI Digitech மற்றும் Giant Films இணைந்து வழங்கும் “தேனிசைத் தென்றல்” தேவாவின் இசைக்கச்சேரி முதல்முறையாக கோயம்புத்தூரில்.

கோயம்புத்துரில் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி, மக்களின் மனம் கவர்ந்த நமது தேனிசை தென்றல் தேவாவின் இசைக்கச்சேரி நடைபெறவுள்ளது. ALVI Digitech மற்றும் Giant Films நிறுவனங்கள் இணைந்து, மிகப் பிரம்மாண்டாமான முறையில், கோயம்புத்தூரின் கொடிசியா மைதானத்தில், இந்நிகழ்ச்சியை நடத்தவுள்ளது.

தமிழ் சினிமா வரலாற்றில் பல ப்ளாக்பஸ்டர் இசை ஆல்பங்களை வழங்கி, கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்தவர்
“தேனிசை தென்றல் “ தேவா.

கானா என்றாலே தேவா எனும் பெயர் மட்டுமே நினைவுக்கு வரும், அந்தளவிற்கு தமிழ் சினிமா இசையில் எளியோர்களின் இசையை கேட்கச் செய்த ஆளுமையாளர். மெல்லிசையிலும் தன்னை மிஞ்ச ஆளில்லை என்பதை நிரூபித்து, இன்னிசைத் தென்றல் எனப் பெயரெடுத்தவர்.

பல கோடி ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், இன்னிசைக் கச்சேரி நிகழ்ச்சியை தமிழகமெங்கும் துவங்கியிருக்கிறார் தேனிசைத் தென்றல் தேவா. சென்னை, பாண்டிச்சேரியில் வெற்றிகரகமாக இசை நிகழ்ச்சியை முடித்த நிலையில், அடுத்ததாக கோயம்புத்தூரில் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி இசை நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார்.

ALVI Digitech மற்றும் Giant Films நிறுவனங்கள் இணைந்து இந்த இசை நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்தவுள்ளன.

இந்த இசை நிகழ்ச்சியில் திரை இசை பிரபலங்கள் சபேஷ் முரளி, அனுராதா ஶ்ரீராம், SPB சரண், உண்ணி மேனன்,
மற்றுன் விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் பாடகர்கள் உட்பட பல பிரபல இசை கலைஞர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

தேனிசைத் தென்றல் தேவாவின் ரசிகர்களுக்கு, இனிப்பான செய்தியாக வந்துள்ள இந்த இசை நிகழ்ச்சி, இப்போதே ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை விதைத்துள்ளது. இசையமைப்பாளர் தேவா அவர்களுக்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைத்து வயதிலும் பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு. இன்றும் சமூக வலைதளங்களான யூடுயூப், இன்ஸ்டா,

ஸ்பாட்டிஃபை என அனைத்து தளங்களில் அவரது பாடல்களுக்கு பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த இசை நிகழ்ச்சி இப்பொழுதே ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

கோயம்புத்துரில் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட் மற்றும் நிகழ்ச்சி குறித்தான விவரங்கள், பிப்ரவரி மாத இறுதியில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும்.

“தேனிசைத் தென்றல்" தேவா

Thenisai Thendral Deva Live in concert at Coimbatore

More Articles
Follows