இமான் இசையில் எஸ்பிபி-க்கு ‘அண்ணாத்த’.. வாணி ஜெயராமுக்கு ‘மலை’.; படக்குழு இரங்கல்

இமான் இசையில் எஸ்பிபி-க்கு ‘அண்ணாத்த’.. வாணி ஜெயராமுக்கு ‘மலை’.; படக்குழு இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல திரை இசை பாடகி பின்னணி பாடகி வாணி ஜெயராம் இன்று காலமானார். அவரின் மரணத்தில் சந்தேகம் உள்ள நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் வாணி மறைவுக்கு ‘மலை’ படக்குழுவினர் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.

அதில்….

பிரபல பழம்பெரும் பாடகி ‘பத்ம பூஷன்'” திருமதி. வாணி ஜெயராம் அவர்களின் திடீர் மறைவு தமிழ் சினிமா உலகிற்கும் , இசை உலகிற்கும் பெரும் இழப்பு.

வாணி ஜெயராம் அவர்கள் கடைசியாக சில படங்களில் பாடியிருந்தார் . அதில் இசையமைப்பாளர் D. இமான் இசையில் ‘மலை’ திரைப்படத்திற்கு பாடியது அவர் பாடிய இறுதி திரை இசைப்பாடலாகும்.

லெமன் லீப் கிரியேசன்ஸ் தயாரிப்பில் யோகி பாபு , மற்றும் லஷ்மி மேனன் நடிப்பில் இந்த படம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது.

இந்த படத்தின் இசை விழாவை பெரும் விமரிசையாக நடத்தவும்,
“பத்மபூஷன்” திருமதி.வாணி ஜெயராம் அவர்களை கவுரவிக்கும் விதமாகவும் தனிப்பெரும் பாராட்டு விழாவாகவும் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருந்த நிலையில் , அவரின் திடீர் மறைவு படக்குழுவினருக்கு
பெரும் சோகத்தையும் , அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இமான் இசையில் அவர் பாடிய பாடல் உள்ளத்தை வருடும் படி வாழ்வில் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாகவும், இந்த பாடலை அவருக்கு காணிக்கையாக்குவதாகவும் படக்குழுவினர் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

கூடுதல் தகவல்….

ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தில் தன் கடைசி பாடலை பாடியிருந்தார் எஸ்பி பாலசுப்பிரமணியம்.. இந்த படத்திற்கும் இமான் இசை அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Malai condolence message for Vani Jayaram death

அட்லியின் வாரிசை சந்தித்த ஷாருக்கான் …!

அட்லியின் வாரிசை சந்தித்த ஷாருக்கான் …!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷாருக்கான் ‘பதான்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார்.

அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.

இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

ஷாருக்கான் கடந்த இரண்டு வாரங்களாக சமூக வலைத்தளங்களில் தனது ரசிகர்களுடன் தொடர்ந்து உரையாடி வருகிறார்.

மேலும், ஷாருக்கான் சமீபத்திய ட்விட்டரில், என்னிடம் எதையும் கேட்கும் அமர்வில், நயன்தாரா, விஜய் சேதுபதி, அனிருத் ரவிச்சந்தர் மற்றும் அட்லி ஆகியோருடன் தனது பணி அனுபவத்தைப் பற்றி பேசினார்.

இதற்கிடையில், ஷாருக்கான் அட்லியின் ஆண் குழந்தையை சந்தித்தாரா என்று ஒரு ரசிகர் கேட்டார்.

ஷாருக்கான், அட்லீ மற்றும் பிரியாவின் குழந்தையை சந்தித்ததாகவும், அவர்களின் மகன் ஆரோக்கியமாகவும் இனிமையாகவும் இருப்பதாக கூறினார்.

ஷாருக்கானின் தனது ட்வீட்டில், “ஆம் அவர் மிகவும் இனிமையானவர், மாஷா அல்லாஹ் ஆரோக்கியமாக இருக்கிறார்.

Shah Rukh Khan meets Atlee’s baby boy

தளபதி விஜய்யின் வாரிசு OTT ரிலீஸ் தேதியில் மாற்றம்?

தளபதி விஜய்யின் வாரிசு OTT ரிலீஸ் தேதியில் மாற்றம்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வாரிசு இந்த மாதம் OTT தளங்களுக்கு வர இருப்பதாக தகவல் வெளியானது.

முன்னதாக, வாரிசு அமேசான் பிரைம் வீடியோவில் பிப்ரவரி 10-ம் தேதி திரையிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், வாரிசு பிப்ரவரி 22 முதல் இந்தியாவில் Amazon Prime மற்றும் வெளிநாடுகளில் SunNXT இல் ஸ்ட்ரீமிங் செய்யத் தொடங்கும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சுமார் 290 கோடிகளை வசூலித்தது . ரசிகர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Is there a change in Thalapathy Vijay’s Varisu OTT release date?

BREAKING 18 மொழிகளில் பாடிய பத்ம பூஷண் வாணி ஜெயராம் காலமானார்.; வாழ்க்கை குறிப்பு

BREAKING 18 மொழிகளில் பாடிய பத்ம பூஷண் வாணி ஜெயராம் காலமானார்.; வாழ்க்கை குறிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் உட்பட 19 மொழிகளில் பாடல்களை பாடியவர் வாணி ஜெயராம்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட 18 மொழிகளில் 10,000-க்கு அதிகமான பாடல்களை இவர் பாடியுள்ளார்,

இந்தாண்டு 2023 குடியரசு தினத்தன்று மத்திய அரசின் பத்மபூஷன் விருது வாணி ஜெயராமுக்கு அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் வாணி ஜெயராம் சற்றுமுன் காலமானார். வயது 78.

படுக்கை அறையில், கீழே விழுந்து நெற்றியில் அடிபட்டு உயிரிழந்ததாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தகவல்.

அவரது வாழ்க்கை வரலாறு..:

1945 – நவம்பர் 30-ம் தேதி வேலூரில் ‘கலைவாணி’ என்ற வாணி ஜெயராம் பிறந்தார்.

சென்னை ராணி மேரிக் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தார். பின்னர் பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்தார்..

இசை மீது அதிகம் ஆர்வம் கொண்டதால் இசையை முறையாக பயின்றார்.

வாணியின் இசை ஆர்வத்தை அறிந்த கணவர் ஜெயராம் அமைந்ததால் உஸ்தாத் அஹ்மத் கானிடம் முறையாக ஹிந்துஸ்தானி இசை கற்றார்.

1971 ஆம் ஆண்டு குட்டி GUDDI என்ற இந்தி படத்தில் பாடகியான அறிமுகமானவர். இதில் வசந்த் தேசாயின் இசையில் ‘போலே ரே பப்பி ஹரா’ என்ற ‘மியான் மல்ஹார்’ ராகத்தை பாடி திரையுலகில் அறிமுகமானார்.

தமிழில் 1974 ஆம் ஆண்டு தீர்க்க சுமங்கலி படத்தில் …’ மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ…” பாடல் பாடி ரசிகர்களிடையே பிரபலமானார்.

வாணிஜெயராம் மூன்று முறை சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் இடம்பெற்ற ‘ஏழு ஸ்வரங்களுக்குள்’ ‘சங்கராபரணம்’ படத்தில் இடம்பெற்ற ‘மானஸ ஸஞ்சரரே’, ‘ஸ்ருதிலயாலு’ தெலுங்குப் படத்தில் இடம்பெற்ற ‘ஆலோகயே ஸ்ரீ பாலகிருஷ்ணம்’ ஆகிய பாடல்களுக்காக 3 முறை சிறந்த பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றவர் இவர்.

மேலும் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மற்றும் குஜராத் மொழிகளில் சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

இவரது குரலில் ஒலித்த பல இனிமையான பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம்… அதில் சிலவற்றை காண்போம்…

மீனவ நண்பன்’ படத்தில் இடம்பெற்ற ‘பொங்கும் கடலோசை’.

‘அவன்தான் மனிதன்’ படத்தில் இடம்பெற்ற ‘எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது’…

‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்தில் ‘ஒரே நாள் உனை நான்’…

‘சாவித்திரி’ படத்தில் ‘வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன்’…

‘சிறை’ படத்தில் ‘நான் பாடிக்கொண்டே இருப்பேன்’

‘சவால்’ படத்தின் ‘நாடினேன்.. நம்பினேன்’…

‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தில் ‘கட்டிக் கரும்பே கண்ணா’…

‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’ படத்தில் ‘நானே நானா’..

‘மயங்குகிறாள் ஒரு மாது’ படத்தில் ‘ஒருபுறம் வேடன்.

‘காலங்களில் அவள் வசந்தம்’ படத்தில் ‘மணமகளே உன் மணவறைக் கோலம்’…

‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்தில் ‘என்னுள்ளே ஏதோ’…

BREAKING Padma Bhushan Vani Jayaram who sang in 18 languages ​​passed away

‘விடுதலை’ படத்தின் முதல் சிங்கிள் இந்த தேதியில் வெளியாகிறதா?

‘விடுதலை’ படத்தின் முதல் சிங்கிள் இந்த தேதியில் வெளியாகிறதா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷின் குரலில் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள புதிய பாடல் ஒன்று விரைவில் இணையத்தில் வெளியாக உள்ளது. இது வேறு யாருமல்ல, பிரபல இயக்குனர் வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தின் முதல் சிங்கிள்.

பிப்ரவரி 8 ஆம் தேதி ஆல்பத்தின் முதல் பாடலை வெளியிடுவதன் மூலம் விளம்பரங்களைத் தொடங்க தயாரிப்பு திட்டமிட்டுள்ளது. சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய வேடங்களில் நடித்துள்ள விடுதலை, பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது. ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் பேனரின் கீழ் எல்ரெட் குமார் இப்படத்தை தயாரித்துள்ளார்.

The first single from Vetrimaaran’s ‘Viduthalai’ to be launched on this date?

ஆன்லைன் சூதாட்டத்திற்கு ஆப்பு வைக்க வரும் ‘விழித்தெழு’

ஆன்லைன் சூதாட்டத்திற்கு ஆப்பு வைக்க வரும் ‘விழித்தெழு’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகங்கை நகர்மன்றத் தலைவர் சி.எம்.துரை ஆனந்த் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘விழித்தெழு’.

இப்படத்தை தமிழ்ச் செல்வன் இயக்கியிருக்கிறார்.

ஆன்லைன் சூதாட்ட மோசடி மற்றும் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.

இதில் நாயகனாக முருகா அசோக், நாயகியாக காயத்ரி ரெமோ நடித்துள்ளனர்.

மேலும் பருத்திவீரன் சுஜாதா, சரவணசக்தி, வினோதினி, வில்லு முரளி, ரஞ்சன், சேரன் ராஜ், மணிமாறன், சாப்ளின் பாலு, சுப்பிரமணியபுரம் தனம் ,நெஞ்சுக்கு நீதி திருக்குறளி, காந்தராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

விழித்தெழு படத்தின் இசையமைப்பாளராக நல்லதம்பியும், படத்தொகுப்பாளராக எஸ்.ஆர்.முத்துக்குமார் பணியாற்றியுள்ளனர்.

சில வாரங்களுக்கு முன் ‘விழித்தெழு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நக்கீரன் ஆசிரியர் மற்றும் இயக்குநரும் நடிகருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகிய இருவரும் வெளியிட்டு வாழ்த்துத் தெரிவித்து இருந்தனர்.

இப்படம் அடுத்த மார்ச் மாதம்3ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Vizhithezhu based on online gambling and social awareness

More Articles
Follows