தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள படம் ‘லால் சலாம்’.
இந்த படம் பிப்ரவரி 9ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் ‘லால் சலாம்’ படக்குழுவினர் சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியதாவது…
‘லால் சலாம்’ படத்தின் கதையை முழுவதுமாக சொல்ல முடியாது. சொன்னால் சுவாரஸ்யம் போய்விடும்.
ஆனாலும் கொஞ்சம் சொல்கிறேன்.. தேர் திருவிழா என்ற ஒரு கிராமம். அந்த கிராமத்தில் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. அந்த கிரிக்கெட் போட்டியில் ஒரு பிரச்சனை எழுகிறது.. அந்த பிரச்சனையில் ஒரு அரசியல் இருக்கிறது. அது என்ன?என்பதுதான் படத்தின் கதை.
ஒரு விளையாட்டு விளையாட்டாக இருக்கும் போது பிரச்சனை இல்லை. ஆனால் அந்த விளையாட்டு போட்டியாக மாறும்போது பணம் விருதுக்கு ஒரு கட்டத்தில் போட்டி பொறாமை ஏற்படுகிறது. பணம் உள்ளே வந்ததால் அரசியலும் வருகிறது.. அந்த அரசியல் பின்னர் என்ன ஆனது.?
நம் வாழ்க்கையில் அரசியல் இல்லை என்று சொல்ல முடியாது.. நாம் வைத்திருக்கும் ஆதார் கார்டும் ஒரு அரசியல் தான் ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு அரசியல் இருக்கிறது.. அந்த அரசியலை இந்த லால் சலாம் படம் பேசுகிறது.
ரைட்டர் விஷ்ணு ராமலிங்கம் என்பவர் தான் இந்த படத்தின் கதையை சொன்னார்.. அவர் முதலில் இரண்டு கதையை சொன்னார்.. ஒன்று காதல் கதை மற்றொன்று லால் சலாம் கதை.
ஆனால் லால் சலாம் முன்பு வைக்கப்பட்ட தலைப்பு வேறு.. ‘திசை எட்டும் பரவட்டும்’ என்ற தலைப்புதான் வைத்திருந்தோம். அதன் பின்னர் மாற்றப்பட்டது.
ஒருமுறை விஷ்ணு சொன்னார் உங்களைப் போன்ற ஒருவர் இந்த கதையை இயக்கினால் கண்டிப்பாக இது பெரிய அளவில் ரீச் ஆகும் என்றார்.. அதன் பின்னர் நடந்தது எல்லாம் நான் ‘லால் சலாம்’ படத்தில் இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்து விட்டேன்.
‘வை ராஜா வை’ என்ற படத்திற்கு பிறகு படத்தை இயக்காமல் இருந்தேன்.. என்னுடைய குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டும் என்பதால் இந்த இடைவெளி.. அதன் பின்னர் தான் இந்த படத்தை இயக்க முடிவு செய்தேன்..” என்று பேசினால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
Aishwarya Rajini speech about Lal Salaam title changed