தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் வைத்து, ‘லியோ’ படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடந்து வருகிறது.
லியோ படத்தை முடித்த லோகேஷ் கனகராஜ் யாரை வைத்து படம் இயக்கப் போகிறார் என்பதுதான் இப்போது பலரின் கேள்வியாகவும் இருக்கிறது.
கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் தொடங்கப் போவதாக ஏற்கனவே கூறப்பட்டது.
ஆனால், கைதி 2 படத்திற்கு முன், ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் ஒரு படத்தை இயக்கப்போகிறார் என்றும், அதனை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ரஜினிகாந்தின் சம்பளம் குறித்து புதிய பேச்சு எழுந்துள்ளது.
லியோ படத்திற்கு விஜய் தற்போது 130 கோடி ரூபாய் அளவிற்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அஜித்தும் 100 கோடி ரூபாய்க்கு மேல் வாங்க ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும், சம்பள விஷயத்தில் ரஜினிதான் எப்போதும் முதலிடத்தில் இருக்கிறார்.
தர்பார், அண்ணாத்த படத்தின் தோல்விக்குப் பிறகு ஜெயிலர் படத்திற்கு 80 முதல் 90 கோடி ரூபாய் சம்பளமாகப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், ஜெயிலர் படம் கண்டிப்பாக ஹிட்டாகும் என்பதாலும், லோகேஷ் இயக்கும் படத்துக்கு தயாரிப்பு நிறுவனங்களிடம் அதிக டிமாண்ட் இருப்பதாலும், அந்த படத்துக்கு ரூ. 160 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி, தான் நம்பர் 1 என்பதை ரஜினிகாந்த் நிரூபிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
lokesh kanagarajs directorial in this much crore salary for rajini