ரஜினி ஸ்டைல்.. தமன்னா டான்ஸ்.; 20 மில்லியனை தாண்டி கலக்கும் ‘காவாலா..’

ரஜினி ஸ்டைல்.. தமன்னா டான்ஸ்.; 20 மில்லியனை தாண்டி கலக்கும் ‘காவாலா..’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஜெயிலர்’.

‘எந்திரன்’, ‘பேட்ட’, ‘அண்ணாத்த’ படங்களை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் 4வது படம் இது.

பான் இந்தியா வெளியீடாக தயாராகியுள்ள இந்த படத்தில் மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், சுனில் என பிற மொழிகளை சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

கதாநாயகியாக தமன்னா நடிக்க, முக்கிய வேடங்களில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்னா மேனன், வசந்த் ரவி, நாக பாபு, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பேட்ட, தர்பார் என சூப்பர்ஸ்டார் ரஜினியின் முந்தைய இரண்டு படங்களில் ஹிட் பாடல்களை கொடுத்த அனிருத் இந்த படத்திற்கு இசையமைப்பதன் மூலம் 3வது முறையாக அவருடன் இணைந்துள்ளார்.

ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் கடந்த ஜூன் 6-ம் தேதி மாலை இந்த படத்தில் இருந்து ‘காவாலா’ என்கிற லிரிக் பாடல் வெளியானது.

வெளியாகி மூன்று நாட்களே ஆன நிலையில் கிட்டத்தட்ட 20 மில்லியன் பார்வையாளர்கள் யூட்யூப்பில் இந்த பாடலை பார்த்து ரசித்துள்ளனர்.

அது மட்டுமல்ல spotify-யில் இந்த பாடல் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஸ்ட்ரீம்களை பெற்றுள்ளது.

அனிருத்தின் அதிரடி இசை, அருண்ராஜா காமராஜின் பாடல் வரிகள், பாடகி ஷில்பா ராவின் காந்தக் குரல், தமன்னாவின் நளினமான நடனம், சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிக்னேச்சர் ஸ்டைல், ஜானி மாஸ்டரின் நடன வடிவமைப்பு என எல்லாமாக சேர்ந்து இந்த பாடலுக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்துள்ளது.

Jailer first single Kaavaalaa crosses 20M views

‘விஜய் 68’ படத்தில் இணையும் சிம்பு – தனுஷ் பட பிரபலம்.?!

‘விஜய் 68’ படத்தில் இணையும் சிம்பு – தனுஷ் பட பிரபலம்.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

ஜூலை 10 ஆம் தேதி நேற்றுடன் ‘லியோ’ படத்தில் தனக்கான காட்சிகளை விஜய் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

தற்காலிகமாக ‘தளபதி 68’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் 2024 -ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.

இந்நிலையில், ‘தளபதி 68’ படத்திற்கு ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவாளராக பணியாற்றவுள்ளதாக கூறப்படுகிறது.

சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’, தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ போன்ற படங்களுக்கு சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவாளராக பணியாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சித்தார்த்தா நுனி

Cinematographer Siddhartha Nuni to work as cinematographer for ‘thalapathy 68’

‘லியோ’ அப்டேட் கொடுத்த டைரக்டர்.; விஜய் ஷூட்டிங்கை நிறைவு செய்த லோகேஷ்

‘லியோ’ அப்டேட் கொடுத்த டைரக்டர்.; விஜய் ஷூட்டிங்கை நிறைவு செய்த லோகேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு விட்டது.

எனவே படத்தின் ஷூட்டிங்கை விறுவிறுப்பாக நடத்தி வருகிறார் லோகேஷ் கனகராஜ். அதேசமயம் பாலிவுட் ஹாலிவுட் என பல சினிமா பிரபலங்களை இந்த படத்தில் இணைத்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று ஜூலை 10 ஆம் தேதி விஜய்க்கான படக் காட்சிகளை முடித்து விட்டதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்்

இத்துடன் ஒரு புகைப்படத்தையும் அவர் பகிர்ந்திருக்கிறார்.

இன்னும் விஜய் இல்லாத சில காட்சிகளை லோகேஷ் படமாக இருக்கிறார்.

அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தில் திரிஷா, மன்சூர் அலிகான், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

அதில், “இரண்டாவது பயணத்தை மீண்டும் சிறப்பானதாக மாற்றியதற்கு நன்றி அண்ணா” என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

Vijay’s portions in Lokesh Kanagraj’s ‘Leo’ wrapped up completely

நான் வில்லனா வந்தா ஒரு ஹீரோவும் நிக்க முடியாது.; ஷாருக்கானுக்கு அட்லி கொடுத்த பன்ச் டயலாக்

நான் வில்லனா வந்தா ஒரு ஹீரோவும் நிக்க முடியாது.; ஷாருக்கானுக்கு அட்லி கொடுத்த பன்ச் டயலாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோலிவுட் இயக்குனர் அட்லி இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள படம் ‘ஜவான்’. முதன்முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இப்பட ட்ரைலர் இன்று ஜூலை 10ஆம் தேதி வெளியானது. இந்த ப்ரிவ்யூ என்று அழைக்கப்படும் இந்த வீடியோவில்… இதுவரை பார்த்திராத அவதாரங்களில் SRK-ன் பல்வேறு தோற்றங்களை காணலாம்.

வெடித்து சிதறும் ஆக்‌ஷன் காட்சிகள், பிரமாண்டமான பாடல்கள் மற்றும் பிரபலமான ரெட்ரோ ட்ராக் “பாட்டு பாடவா” பாடலுடன் SRK இன் அசத்தலான நடிப்புடன் ப்ரிவ்யூ முழுவதும் பல ஆச்சரியங்கள் நிறைந்துள்ளது.

மேலும் ‘ஜவான்’ படத்தில், கிராமியவிருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட, இசை கலைஞரான ராஜா குமாரியின் ‘தி கிங் கான் ராப், ஒரு உயர் ஆற்றல் மற்றும் வசீகரிக்கும் பாடல், இந்த ப்ரிவ்யூவில் இடம்பெற்றுள்ளது.

இதில் மொட்டை பாஸ் ஆக நடித்துள்ளார் ஷாருக்கான். நான் வில்லனாக வந்தால் ஒரு ஹீரோவும் என் எதிரே நிற்க முடியாது என பன்ச் டயலாக் பேசியுள்ளார். மேலும் பல பன்ச் டயலாக்குகள் இதில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜவான்

இப்படத்தில் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்துள்ளனர்,

ஷாருக்கான் முதல் தீபிகாபடுகோன் , நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர், இவர்களுடன் சான்யா மல்ஹோத்ரா, பிரியாமணி, கிரிஜா ஓக், சஞ்சீதா பட்டாச்சார்யா, லெஹர் கான், ஆலியா குரேஷி, ரிதி டோக்ரா, சுனில் குரோவர் மற்றும் யோகி பாபு ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்கள்.

ஜவான் திரைபடத்தை ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. தமிழ் இயக்குநர் அட்லீ இதனை இயக்கியுள்ளார்.

கௌரி கான் & கவுரவ் வர்மா இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளார்கள்.

இப்படம் இந்தி, தமிழ் & தெலுங்கு மொழிகளில் செப்டம்பர் 7, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

ஜவான்

Shahrukh Atlees combo Jewan prevue is here

Tamil – https://bit.ly/JawanPrevue_Tamil

Hindi : https://bit.ly/JawanPrevue_Hindi

Telugu : https://bit.ly/JawanPrevue_Telugu

உண்மையாக போற கதைகளை படமாக்க போகிறேன்.; கமல் படம் குறித்து வினோத்

உண்மையாக போற கதைகளை படமாக்க போகிறேன்.; கமல் படம் குறித்து வினோத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித்தின் ‘துணிவு’ படத்தை தொடர்ந்து கமல்ஹாசனின் #KH233 வது படத்தை இயக்க உள்ளார் வினோத்.

இந்த படம் பற்றிய அறிவிப்பு சில தினங்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக வீடியோவாக வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்புக்கு முன்னர் விவசாயிகளுடன் செய்தியாளர்களை கமல் மற்றும் வினோத் சந்தித்தனர்.

எனவே இந்த படம் விவசாயம் பற்றியதாக இருக்கும் என தகவல்கள் வந்திருந்தன.

இந்த நிலையில் இந்தப் படம் குறித்து தன்னுடைய சமீபத்திய பேட்டியில் வினோத் கூறியிருப்பதாவது…

கமலின் #KH233 விவசாயம் படம் இல்லை, அவரிடம் இரண்டு மூன்று கதைகள் பேசினோம். அவர் சொன்ன கதைகள் ரொம்பவே இன்ரஸ்டிங்காக இருந்தது.

அந்த கதைக்கு திரைக்கதை எழுதி படமாக்குகிறோம். தமிழில் நிறைய உண்மை கதைகள் படமாக்கப்பட்டது.

நான் இனி உண்மையாக போற கதைகளை படமாக்க போகிறேன் – ஹச் வினோத்.”

இவ்வாறு வினோத் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தை குறுகிய கால தயாரிப்பாக உருவாக்க கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார்.

Director H Vinoth speaks about KH233

JUST IN இயக்குநர் மடோன் அஸ்வினுக்கு சிவகார்த்திகேயன் என்ற 2வது விருது – மிஷ்கின்

JUST IN இயக்குநர் மடோன் அஸ்வினுக்கு சிவகார்த்திகேயன் என்ற 2வது விருது – மிஷ்கின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து உருவாகியுள்ள ‘மாவீரன்’ படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ஒரே நேரத்தில் தமிழ் – தெலுங்கில் இந்த படம் வெளியாகிறது. சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு பரத் ஷங்கர் என்பவர் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் இன்று ஜூலை 10ஆம் தேதி சென்னை தாஜ் ஹோட்டலில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மடோன், சிவகார்த்திகேயன், சரிதா, அதிதி, மிஷ்கின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது மேடையில் மிஷ்கின் பேசும்போது..

“திறமையான இளம் இயக்குனர்கள் பலர் வருகிறார்கள். மடோன் அஸ்வின் முதல் படத்திலேயே (மண்டேலா) மிகப்பெரிய தேசிய விருதை வென்றார்.

தற்போது அவரது இரண்டாம் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருப்பது அவருக்கு மற்றொரு விருது. இந்த படத்தில் முழுக்க முழுக்க நான் ஒரு வில்லனாக நடித்துள்ளேன். படம் சிறப்பாக வந்துள்ளது.”

என்று பேசினார் மிஷ்கின்.

Sivakarthikeyan is 2nd award for Madon says Mysskin

More Articles
Follows