தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ‘ஜெயிலர்’ படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியானது.
உலகளவில் ரூ. 625 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி செப்டம்பர் 7 தேதி ஜெயிலர் படம் அமேசான் ப்ரைம் தளத்தில் ரிலீஸ் ஆகிறது. பொதுவாகவே சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படங்கள் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகும்.
ஆனால் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்திற்கு விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு ரஜினி நடிப்பில் சிவா இயக்கிய ‘அண்ணாத்த’ படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்திருந்தது. அந்த படத்தை 21 நாட்களில் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்திருந்தனர். தற்போது ‘ஜெய்லர்’ படம் ரிலீசாகி 28 நாட்களுக்குப் பின்னர் தான் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Rajinis Jailer OTT release on 7th September 2023