தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினி நடித்த ‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு சூர்யா படத்தை இயக்கிய வருகிறார் சிவா.
சூர்யா நடிப்பில் 42வது படமாக உருவாகும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் சூர்யா 5 வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.
சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீஷா பதானி நடிக்க, ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படம் 3டி பீரியாடிக் டிராமாவாக 10 மொழிகளில் உருவாக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் சென்னையில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் செட் அமைக்கப்பட்டு ஆக்சன் காட்சிகளை படமாக்கினர்.
மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் புதிய தகவல் கிடைத்துள்ளன.
மார்ச் முதல் வாரத்தில் இதே EVP சிட்டியில் பீரியட் காட்சிகளை எடுக்கவுள்ளனர்.
ஏப்ரல் இறுதிக்குள் படப்பிடிப்பு பணிகளை முடிக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம்.
Suriya 42 Super Update.: Siva set up a grand set in EVP City