இயக்குநர் பாலாவின் மகளும் நடிகையுமான ரஞ்சனா தயாரிக்கும் 2 படங்கள்

இயக்குநர் பாலாவின் மகளும் நடிகையுமான ரஞ்சனா தயாரிக்கும் 2 படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘துப்பறிவாளன்’, ‘இரும்புத்திரை’, ‘அண்ணாத்த’, ‘டைரி’, ‘நட்பே துணை’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரஞ்சனா நாச்சியார்.

ராமநாதபுரம் சமஸ்தானம் ராஜா பாஸ்கர சேதுபதியின் பேத்தியான இவர் இயக்குநர் பாலாவின் உடன்பிறந்த அண்ணன் மகள் ஆவார்..

பொறியியலில் எம்.எஸ்.சி, எம் டெக் மற்றும் எல்எல்பி (ஹானர்ஸ்) என மிகப்பெரிய படிப்புகளை படித்துவிட்டு சினிமா மீது உள்ள ஆர்வத்தால் தமிழ் திரையுலகில் நுழைந்தவர் தான் ரஞ்சனா நாச்சியார்.

ரஞ்சனா நாச்சியார்

‘துப்பறிவாளன்’ படத்தில் அறிமுகமான இவர் அதன்பிறகு நல்ல கதையும்சம் மற்றும் கதாபாத்திரம் கொண்ட படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

ரஜினிகாந்துடன் நடித்த ‘அண்ணாத்த’ மற்றும் அருள்நிதி நடித்த ‘டைரி’ ஆகிய படங்கள் இவரை இன்னும் அதிக அளவில் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தன.

இந்த நிலையில் நடிப்பை தொடர்ந்து அடுத்ததாக தயாரிப்புத் துறையிலும் அடியெடுத்து வைத்துள்ளார் ரஞ்சனா நாச்சியார்.

தற்போது ஸ்டார் குரு ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ள ரஞ்சனா நாச்சியார் ஒரே சமயத்தில் இரண்டு படங்களைத் தயாரிக்கும் துணிச்சலான முடிவையும் எடுத்து *தமிழ்த் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்*.

இதில் ஒரு படத்தை ‘குட்டிப்புலி’ புகழ் நகைச்சுவை நடிகரும் ‘பில்லா பாண்டி’, ‘குலசாமி’, ‘கிளாஸ்மேட்ஸ்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநருமான சரவண சக்தி இயக்குகிறார்.

இன்னொரு படத்தை விஜய் டிவி புகழ் நடிகரான அறிமுக இயக்குநர் சங்கர பாண்டியன் இயக்குகிறார். இரண்டு படங்களுமே கிராமத்து கதைக்களத்தில் உருவாக இருக்கின்றன.

திரைப்படத் தயாரிப்பில் இறங்கியது குறித்து நடிகை ரஞ்சனா கூறும்போது…

“மிகப்பெரிய குடும்பத்திலிருந்து சினிமாவிற்கு வந்தபோதும் கூட சினிமாவில் பெரிய அளவில் உன்னால் ஜெயிக்க முடியாது என்று தான் பலரும் கூறினார்கள். ஆனால் ஒரு நடிகையாக நல்ல இடத்தைப் பிடித்துள்ள நான் அடுத்ததாக படம் இயக்கவும் முடிவெடுத்துள்ளேன்.

அதன் முதற்கட்டமாக படங்களைத் தயாரித்து அதுபற்றிய நுணுக்கங்களை முழுவதும் அறிந்து கொள்வதற்காகவே தயாரிப்பு நிறுவனம் துவங்கி படங்களைத் தயாரிக்க முடிவு செய்தேன்.

பெரும்பாலும் ஆண்களே ஒரு படத்தை தயாரித்து முடித்த பின்னர்தான் அடுத்த படத்தை ஆரம்பிப்பார்கள், ஆனால் பெண்களாலும் வெற்றிகரமாக சாதிக்க முடியும் என்பதற்காகவே நான் ஒரே நேரத்தில் இரண்டு படங்களைத் தயாரிக்கும் துணிச்சலான முடிவை எடுத்துள்ளேன்.

இந்த இரண்டு படங்களிலும் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்” என்று கூறினார்.

Actress Ranjana Nachiyar stuns producer She produces 2 movies

தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய்.; வில்லங்கத்தை விலைக்கு வாங்கும் ரசிகர்கள்

தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய்.; வில்லங்கத்தை விலைக்கு வாங்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஜூன் 17ஆம் தேதி நடிகர் விஜய் கல்வி விருது விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் 1500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கினார் நடிகர் விஜய்.

இந்த நிகழ்வில் விஜய்யின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

“அம்பேத்கர், காமராஜர் ஆகியோரை மாணவர்கள் படிக்க வேண்டும்.. ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது.. சிறந்த தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.” என பல்வேறு கருத்துக்கள் பற்றி பேசி இருந்தார் விஜய்.

அவரின் அரசியல் வருகைக்கு அடித்தளமாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல.

இந்த நிலையில் வருகிற ஜூன் 22 ஆம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது.

எனவே விஜய் ரசிகர்கள் பலவிதமான வாசகங்களைக் கொண்டு பேனர்கள் போஸ்டர்கள் அடித்து தற்போதே தயாராகி வருகின்றனர்.

புதுச்சேரியில் உள்ள விஜய் ரசிகர்கள் அடித்துள்ள போஸ்டர் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த போஸ்டரில் நடிகர் விஜய் படம் இடம் பெற்றுள்ளது. அவருக்கு அருகே தமிழக முதலமைச்சர் ச ஜோசப் விஜய் என்று டிசைன் செய்துள்ளனர்.

தேவையில்லாமல் வில்லங்கத்தை விஜய் ரசிகர்கள் விலை கொடுத்து வாங்குவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tamilnadu CM Vijay fans poster goes viral

சிங்கத்தை சீண்டாதப்பா.. என் ரூட்டு மாறாதப்பா..; லியோ-வில் விஜய் பாடிய பாடல் புரோமோ

சிங்கத்தை சீண்டாதப்பா.. என் ரூட்டு மாறாதப்பா..; லியோ-வில் விஜய் பாடிய பாடல் புரோமோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்

இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க விஜய்யுடன் மன்சூர் அலிகான், த்ரிஷா, மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

லோகேஷின் முந்தைய படத்தை போன்று இதிலும் எல்சியு இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

வருகிற ஜூன் 22ம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு முதல் பாடலை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.

நா ரெடி…’ என குறிப்பிட்டுள்ள அந்த பாடல் பற்றி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று ஜூன் 20ஆம் தேதி மாலை நா ரெடி பாடல் புரோமோவை வெளியிட்டுள்ளனர்.

அந்த பாடல் வீடியோ லிங்க் இதோ…

நா ரெடி தான் வரவா..
அண்ணா இறங்கி வரவா… என்று இந்த பாடல் தொடங்குகிறது.

இந்தப் பாடலை பாடியவர் உங்கள் #விஜய் எனவும் வாசகம் இடம் பெற்றுள்ளது.

Leo #NaaReady Promo is here!

https://t.co/THQz04oVyU

ThalapathyVijay’s leo movie naaready song promo release

கமல் படத்தில் டப்பிங் பணிகளை தொடங்கிய நடிகர் சித்தார்த்

கமல் படத்தில் டப்பிங் பணிகளை தொடங்கிய நடிகர் சித்தார்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் தனக்கான டப்பிங் பகுதிகளை கமல்ஹாசன் ஏற்கனவே முடித்துள்ளார்.

இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் டப்பிங் பணிகளை சித்தார்த் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

actor siddharth started his dubbing for indian 2 movie

”கேப்டன் மில்லர்’ படத்தில் சிவராஜ்குமார் சூட் அப்டேட்.; தனுஷ் பிறந்தநாளில் சர்ப்ரைஸ்

”கேப்டன் மில்லர்’ படத்தில் சிவராஜ்குமார் சூட் அப்டேட்.; தனுஷ் பிறந்தநாளில் சர்ப்ரைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் பிரியங்கா மோகன், நிவேதிதா சதிஷ், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தனுஷ் பிறந்தநாளான ஜூலை 28ம் தேதி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ‘கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பை நடிகர் சிவராஜ்குமார் நிறைவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ‘கேப்டன் மில்லர்’ படத்தை அக்டோபர் மாதத்தில் படம் ரிலீஸ் ஆகும் என படக்குழு ஏற்கனவே தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேப்டன் மில்லர்

dhanush’s captain miller movie shivarajkumar wrapped up his shooting

ரஜினிகாந்த் 171 படத்தில் KGF நடிகர்.; லோகேஷ் போடும் செம ஸ்கெட்ச்

ரஜினிகாந்த் 171 படத்தில் KGF நடிகர்.; லோகேஷ் போடும் செம ஸ்கெட்ச்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது.

இந்த நிகழ்வில் ரஜினி, தமன்னா உள்ளிட்டோர் பங்கேற்ற கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.

தற்போது ‘ஜெயிலர்’ படத்தின் டப்பிங் பணிகளில் ரஜினிகாந்த் ஈடுபட்டுள்ளார்.

மேலும் தன் மகள் ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’ படத்திலும் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இந்த படங்களை அடுத்து ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்கும் ‘தலைவர் 170’ படத்தில் நடிக்க உள்ளார் ரஜினி.

இந்த படங்களை முடித்துவிட்டு ‘தலைவர் 171’ படத்தில் ரஜினி நடிக்க உள்ளார். இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்குவார் எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் ‘கே ஜி எஃப்’ நடிகர் யஷ் நடிப்பார் என தகவல்கள் வந்துள்ளன.

KGF fame Actor Yash will be part of Rajini 171

More Articles
Follows