ஜெயிப்பது யார்.? ரஜினி – விஜய்க்காக மாறாத சன் பிக்சர்ஸ் அஜித்துக்காக மாறுமா.?

ஜெயிப்பது யார்.? ரஜினி – விஜய்க்காக மாறாத சன் பிக்சர்ஸ் அஜித்துக்காக மாறுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைக்கா தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கும் ‘விடாமுயற்சி’ படத்தில் நடிக்க உள்ளார் அஜித்.

இதன் படப்பிடிப்பு ஜூன் இறுதியில் அல்லது ஜூலை மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது.

இந்த படத்தை முடித்துவிட்டு முதன்முறையாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் கைகோர்க்க உள்ளார் அஜித் என தகவல்கள் வந்துள்ளன.

இதனை இயக்குநர் சிவா இயக்கவுள்ளார்.

சிவா இயக்கிய வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களில் நடித்திருக்கிறார் அஜித்.

மேலும் ரஜினி நடித்து சன் பிக்சர்ஸ் தயாரித்த ‘அண்ணாத்த’ படத்தையும் சிவா இயக்கியிருந்தார்.

ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ் உள்ளிட்ட நடிகர்களின் படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆனால் அஜித் நடிப்பில் எந்த படத்தையும் தயாரிக்கவில்லை.

இதற்கு முக்கிய காரணம் தன்னுடைய பட பூஜையிலோ அல்லது இசை வெளியீட்டு விழாவிலோ பட ப்ரோமோஷன் விழா நிகழ்ச்சியிலோ அஜித் பங்கேற்க மாட்டார் என்பதால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அஜித் படத்தை தயாரிக்கவில்லை.

ஆனால் ரஜினி, விஜய், சூர்யா ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் இசை வெளியீட்டு விழாக்களில் கலந்து கொள்வார்கள். மேலும் சன் டிவி தங்கள் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம்.

தற்போது முதன்முறையாக சன் பிக்சர்ஸ் உடன் அஜித் இணையவுள்ளார்.

எனவே அஜித்துக்காக தன் கொள்கையை மாற்றிக் கொள்ளுமா.? சன் பிக்சர்ஸ் என பொருத்திருந்து பார்க்கலாம்.

Will Sun pictures change their formula for Ajith

‘லியோ’ பட போஸ்டரில் தம்மடிக்கும் விஜய்..; சத்யராஜ் விளக்கம்

‘லியோ’ பட போஸ்டரில் தம்மடிக்கும் விஜய்..; சத்யராஜ் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோவையில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்றார் நடிகர் சத்யராஜ்.

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்கள் கேட்ட கேள்விக்கு.. ‘லியோ’ பட போஸ்டரில் விஜய் புகைபிடிப்பது போன்ற டிசைன் படம் இடம்பெற்றது குறித்த கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு சத்யராஜ் பதில் அளிக்கையில்…

“தாங்கள் ஏற்று கேரக்டருக்கு ஏற்ப சில விஷயங்களை நடிகர்கள் செய்துதான் ஆகவேண்டியுள்ளது.

நான் வில்லனாக நடித்த போது புகைப்பிடிக்கும் காட்சியில் நடிக்க வேண்டியிருந்தது. நடிப்பு வேறு தனிப்பட்ட வாழ்க்கை வேறு.” என்றார் சத்யராஜ்.

Sathyraj talks about Vijays smoking poster in LEO

இளைஞர்களின் நம்பிக்கை விஜய்.; அவரே சொல்லல.. நான் ஏன் சொல்லனும்? – சத்யராஜ்

இளைஞர்களின் நம்பிக்கை விஜய்.; அவரே சொல்லல.. நான் ஏன் சொல்லனும்? – சத்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோவை மாவட்டத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார் நடிகர் சத்யராஜ்.

அப்போது நடிகர் விஜய்யின் கல்வி விருது குறித்த கேள்விகளை சத்யராஜிடம் கேட்டனர் செய்தியாளர்கள்.

அதற்கு அவர் பதிலளிக்கையில்..:

“அரசியலுக்கு வருவது பற்றி விஜய் வெளிப்படையாக எதையும் சொல்லவில்லை.

அவரே சொல்லாதபோது நான் அது குறித்து பேசுவது நன்றாக இருக்காது.

தலைவர்கள் அம்பேத்கர், பெரியார், காமராஜர் பற்றி படிக்க வேண்டும் என்ற விஜய்யின் கருத்தை வரவேற்கிறேன்.

சிறந்த மாணவ. மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக விஜய் செய்தது நல்ல விஷயம். இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார் விஜய்.” இவ்வாறு சத்யராஜ் பதிலளித்தார்.

Sathyraj open talk about Vijays politics

திருமணமாகி 11 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தைக்கு அப்பாவானார் ராம்சரண்

திருமணமாகி 11 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தைக்கு அப்பாவானார் ராம்சரண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ராம்சரண். இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ஆவார்.

‘ஆர் ஆர் ஆர்’ படத்தில் இடம்பெற்ற நாட்டுக்கூத்து என்ற பாடல் ஆஸ்கர் விருதை வென்றதன் மூலம் உலகம் முழுவதும் தெரிந்த நடிகரானார் ராம்சரண்.

ராம்சரணுக்கு கடந்த 2012ஆம் ஆண்டு அப்போலோ குழுமத்தின் நிறுவனர் பிரதாப் ரெட்டியின் பேத்தி உபாசனாவுடன் திருமணம் நடைபெற்றது.

திருமணம் ஆகி 11 ஆண்டுகளை நெருங்கி வரும் நிலையில் இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.

இந்த நிலையில் இன்று (ஜூன் 20) அதிகாலையில் ராம்சரண் – உபாசனா தம்பதிக்கு ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.

இத்தகவலை மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

மேலும் தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ராம்சரண்

Ramcharan became father of girl baby after 11 years of marriage

LCU வில் 10 படங்கள்.. Miss You Vijay..; லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்

LCU வில் 10 படங்கள்.. Miss You Vijay..; லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு வாரம் மட்டுமே விஜய்க்கான காட்சிகளை படமாக்க இருக்கிறாராம்.

அதன் பின்னர் விஜய் இல்லாத காட்சிகளை படமாக்க இருக்கிறாராம் இயக்குநர்.

இந்த நிலையில் ‘லியோ’ படம் குறித்து லோகேஷ் தன் சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளதாவது…

“இந்த LCU யூனிவர்ஸ் முயற்சித்ததற்கு நடிகர்கள், தயாரிப்பாளரகளுக்கு நன்றி. ஆனால் அது எளிதான காரியமில்லை. என்ஓசி வாங்க வேண்டும் என நிறைய குழப்பங்கள் உண்டு.

ஆனால் எல்சியு-வில் 10 படங்கள் இயக்கிவிட்டு அதிலிருந்து வெளியேறிவிடுவேன்.

எல்சியு-வில் ‘லியோ’ வருமா என்பதை அறிய 3 மாதங்கள் காத்திருங்கள்

‘லியோ’ படத்தில் விஜய்யுடன் பணியாற்றியது மகிழ்ச்சி. சூட்டிங் முடிந்தவுடன் விஜய்யை மிஸ் செய்வது கஷ்டம்.” என்றார்.

Will Leo movie be in LCU Lokesh open talk

‘மாமன்னன்’-க்கு வந்த சோதனை; ரிலீஸ்க்கு தடைக்கோரி மனு; என்ன செய்வார் உதயநிதி.?

‘மாமன்னன்’-க்கு வந்த சோதனை; ரிலீஸ்க்கு தடைக்கோரி மனு; என்ன செய்வார் உதயநிதி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘மாமன்னன்’.

‘மாமன்னன்’ படம் இந்த மாதம் ஜூன் 29ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றன.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், ‘மாமன்னன்’ படத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என ஒஎஸ்டி ஃபிலிம்ஸ் நிறுவன உரிமையாளர் ராம சரவணன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவரது மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆனந்தி, பாயல் ராஜ்புத் , யோகிபாபு நடிக்க ‘ஏஞ்சல்’ என்ற படத்தை தயாரிக்க முடிவெடுக்கப்பட்டது.

கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கி 80 சதவிகித படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டன.

20 சதவிகித படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ள சூழலில், ஏஞ்சல் படத்தை நிறைவு செய்யாமல் ‘மாமன்னன்’ படத்தில் நடித்துள்ளார்.

மேலும், உதயநிதி ‘மாமன்னன்’ படமே தனது கடைசி படம் என்று கூறியுள்ளார்.

ஒப்பந்தப்படி இன்னும் எட்டு நாட்கள் கால்ஷீட் தராமல் புறக்கணித்துவருவதால் ‘ஏஞ்சல்’ படத்தின் எஞ்சிய படப்பிடிப்பை நிறைவு செய்து தர வேண்டும், ரூ.25 கோடியை இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் அவரது மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

producer filed a petition on chennai high court to ban udhayanidhi’s maamannan

More Articles
Follows