JUST IN மனைவியை விவாகரத்து செய்தார் இசையமைப்பாளர் இமான்

JUST IN மனைவியை விவாகரத்து செய்தார் இசையமைப்பாளர் இமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோலிவுட்டில் முன்னனி இசையமைப்பாளர்களில் ஒருவர் இமான்.

இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

அண்மையில் ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்துக்கு இசையமைத்து இருந்தார்.

இந்த நிலையில் தனது மனைவியை விவாகரத்து செய்யவுள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அவரின் ட்விட்டர் பதிவில்…

“வாழ்க்கை நம்மை பல்வேறு பாதைகளுக்கு இட்டுச் செல்லும். அந்த வகையில் எனது மனைவி மோனிகா ரிச்சர்டும் நானும் சட்டரீதியாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம். இனி நாங்கள் கணவன்-மனைவி இல்லை.

எனது நலன் மீது அக்கறை கொண்டவர்கள், இசை ரசிகர்கள், ஊடகத்துறையினர் அனைவரும் எங்கள் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளித்து, வாழ்க்கையில் நாங்கள் முன்னோக்கிச் செல்ல உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் புரிதலுக்கும், அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி” என பதிவிட்டுள்ளார்.

இமான்-மோனிகா ரிச்சர்ட் இருவருக்கும் கடந்த 2008ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Music composer D Imman announces divorce

புத்தாண்டில் விக்ரம் & துருவ் ரசிகர்களுக்கு ‘மகா(ன்)’ விருந்து

புத்தாண்டில் விக்ரம் & துருவ் ரசிகர்களுக்கு ‘மகா(ன்)’ விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் – அவரது மகன் துருவ் இணைந்து நடித்துள்ள படம் ‘மகான்’.

இவர்களுடன் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இதன் சூட்டிங் கொடைக்கானலில் தொடங்கி, டார்ஜிலிங், நேபாளம் எல்லை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து முடிந்தது.

இந்த நிலையில் 2022 பொங்கலுக்கு ’மகான்’ திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான அறிவிப்பை புத்தாண்டு தினத்தில் ‘மகான்’ பட டீசருடன் பட வெளியீட்டுத் தேதியை அறிவிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Vikram’s Mahaan release date announcement is here

வைரலாகும் ‘வலிமை’ ஸ்டில்ஸ்..; அஜித் படத்தை வாங்கிய ‘பிக்பாஸ்’ முகேன் படத்தயாரிப்பாளர்

வைரலாகும் ‘வலிமை’ ஸ்டில்ஸ்..; அஜித் படத்தை வாங்கிய ‘பிக்பாஸ்’ முகேன் படத்தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் 2022 பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது.

போனிகபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார்.

இப்படத்திலுள்ள நாங்க வேற மாரி & அம்மா பாடல் ஆகியவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்த நிலையில் செங்கல்பட்டு ஏரியா ரிலீஸ் உரிமையை பிரபல தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் வாங்கியுள்ளார்.

இவர் பிக்பாஸ் முகேன்ராவ் நடித்த ‘வேலன்’ என்ற திரைப்படத்தை தயாரித்தவர் ஆவார்.

சீனு ராமசாமி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான ’இடிமுழக்கம்’ என்ற படத்தையும் தயாரித்துள்ளார் கலைமகன் முபாரக்.

இன்று மாலை முதலே வலிமை பட ஸ்டில்கள் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Valimai theatrical rights bagged by Mugen film producer

ஹாலிவுட் படங்களை எவ்ளோ நாள் உதாரணம் காட்டுவது.? ஆர்ஆர்ஆர் விழாவில் அஜித் பற்றி பேசிய சிவகார்த்திகேயன்

ஹாலிவுட் படங்களை எவ்ளோ நாள் உதாரணம் காட்டுவது.? ஆர்ஆர்ஆர் விழாவில் அஜித் பற்றி பேசிய சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் ‛ஆர்ஆர்ஆர்’.

இப்படம் 2022 ஜனவரி 7ல் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் நேற்று படக்குழுவினர் சென்னை வந்தனர்.

இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்றார்.

விழாவில் அவர் பேசியதாவது :

‛நிறைய ரத்தம் சிந்தி இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி உள்ளோம். அதை படத்திலும் கொண்டு வந்துள்ளனர்.

இந்த மொத்த படக்குழுவும் ஒட்டு மொத்த இந்தியாவாக படத்தை கொண்டு வந்துள்ளனர்.

ஆகவே வடக்கு, தெற்கு என படத்தை பிரிக்காமல் ஒட்டு மொத்த இந்திய படமாக பார்க்கணும்.

எவ்வளவு நாள் தான் ஹாலிவுட் படங்களை உதாரணம் காட்டி நாம் பேசுவது, நம்ம படத்தை பார்த்தீங்களா என நாம் கேட்க வேண்டாமா. ?

இந்த பட அறிவிப்பு வெளியானதில் இருந்து இந்திய சினிமாவின் பெருமை என்று தான் பார்க்கிறேன். நான் ஆர்ஆர்ஆர் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிடுவேன்.

ஆர்ஆர்ஆர் படம் மட்டுமின்றி அஜித்குமாரின் வலிமை படமும் வெளியாகிறது. அதனால் இந்த ஆண்டு ஒரு சிறப்பான ஆண்டாக அமையும்.” என்றார் சிவகார்த்திகேயன்.

Sivakarthikeyan talks about Ajith at RRR movie pre release event

சூர்யா-பிரியங்கா ஜோடியை பார்த்தாலே ‘உள்ளம் உருகுதய்யா…’

சூர்யா-பிரியங்கா ஜோடியை பார்த்தாலே ‘உள்ளம் உருகுதய்யா…’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’.

சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

2022 பிப்ரவரி 4ஆம் தேதி இப்படம் இந்திய மொழிகளில் திரைக்கு வரவுள்ளது.

தற்போது ‘எதற்கும் துணிந்தவன்’ பட இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

சில தினங்களுக்கு முன் இப்பட முதல் பாடலான ‘வாடா தம்பி…’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் கவர்ந்தது.

இந்த நிலையில் அடுத்த பாடலான ‘உள்ளம் உருகுதே… உன்ன உன்ன உத்து பாக்கையிலே…’ நேற்று மாலை வெளியானது.

யுகபாரதி எழுதியுள்ள இந்த பாடலை பிரதீப் குமார், வந்தனா சீனிவாசன் மற்றும் பிருந்தா மாணிக்கவாசகன் ஆகியோர் பாடியுள்ளனர்.

இந்த பாடல் தொடர்பான போஸ்டர்களில் சூர்யா மற்றும் பிரியங்காவின் தோற்றங்களை பார்த்தால் நிச்சயம் நம் ‘உள்ளம் உருகுதய்யா..’ என்பார்கள்..

வரலாற்று கால உடைகள் பின்னணியில் இந்த போஸ்டர்கள் இடம்பெற்றுள்ளன.

தற்போது இந்த பாடல் இணையங்களில் வைரலாகி வருகிறது.

Suriya – Priyanka’s Ullam urugudhaiya song goes viral

GOOD BOY RAMCHARAN… BAD BOY Jr. NTR..; சென்னையில் RRR அரங்கை அதிரவைத்த தெலுங்கு ரசிகர்கள்..

GOOD BOY RAMCHARAN… BAD BOY Jr. NTR..; சென்னையில் RRR அரங்கை அதிரவைத்த தெலுங்கு ரசிகர்கள்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாகுபலி படத்திற்கு பிறகு இயக்குனர் ராஜமௌவுலி இயக்கும் படங்கள் என்றாலே இந்தியளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தற்போது ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்கும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

மேலும் இந்தியா முழுவதும் இந்த படக்குழுவினர் புரோமோசன் பணிகளில் ஈடுபடுவதால் இதன் எதிர்பார்ப்பு தினம் தினம் அதிகரித்து வருகிறது.

‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், ஸ்ரேயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மரகதமணி இசையமைத்துள்ளார். மதன்கார்க்கி தமிழில் வசனங்களை எழுதியுள்ளார்.

இந்த படத்தை உலகம் முழுவதும் 2022 ஜனவரி 7ஆம் தேதி வெளியிடவுள்ளனர்.

இந்த நிலையில் ‘ஆர்ஆர்ஆர்’ பட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னை நந்தம்பாக்கத்தில் CHENNAI TRADE CENTRE நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சிவகார்த்திகேயன், உதயநிதி, தயாரிப்பாளர்கள் தானு, ஆர்பி சௌத்ரி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

இந்த விழாவுக்கு திருப்பதி. சித்தூர், நெல்லூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வந்திருந்தனர்.

அவர்கள் தங்கள் கைகளில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், பேனர்களை வைத்திருந்தனர். ஜெய் என்டிஆர்.. ஜெய் ராம் சரண் என கூச்சல் போட்டப்படியே இருந்தனர்.

எனவே இந்த நிகழ்ச்சி சென்னையிலும் நடந்தாலும் ஆந்திரா தெலுங்கானாவிலும் இருக்கிறோமோ என்ற உணர்வே நமக்கு ஏற்பட்டது.

விழா மேடையில் தொகுப்பாளர்கள் மணிக்கணக்கில் பேசிக் கொண்டே இருந்தாலும் ரசிகர்களின் கூச்சல் விண்ணை முட்டியது.

ராம் சரண் மற்றும் என்டிஆர் இருவருமே தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

இந்த நிலையில் ராஜமௌலியிடம் தொகுப்பாளர்கள் யார் நல்ல பையன்..? யார் கெட்ட பையன்? என இரண்டு ஹீரோக்கள் பற்றி கேட்டனர்.

அதற்கு ராம் சரண் நல்ல பையன்… சொல் பேச்சு கேட்பவர்.. ஜீனியர் என்டிஆர் கெட்ட பையன் கோவப்படுவார். சொல்பேச்சு கேட்கமாட்டார் என ராஜமௌலி சிரித்தப்படியே தெரிவித்தார்.

RRR movie pre release event high lights

More Articles
Follows