150 பாடகர்கள் அறிமுகம்.. பலரது வாழ்வில் ‘அணையா விளக்காக’ மாறிய இமானின் இசை பயணம்

150 பாடகர்கள் அறிமுகம்.. பலரது வாழ்வில் ‘அணையா விளக்காக’ மாறிய இமானின் இசை பயணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசை தமிழர் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு கலை வடிவம். நமக்கு நெருக்கமான மொழியும், இசையும் சேரும் போது எத்தகைய நெஞ்சையும் கரைய செய்து விடும்.

தமிழர்களின் நெஞ்சங்களை தான் இசை மூலம் நிறைய செய்தவர் டி.இமான். தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குறிய இசையமைப்பாளர்களில் ஒருவர் டி. இமான். பெரிய படமோ, சின்ன படமோ இவரது பாடல்களே அந்த படத்திற்கு தனி அந்தஸ்தை கொடுத்து விடும்.

இருபது ஆண்டுகள் என்ற அசாதாரணமான இமானின் இசைப் பயணத்தில் 100 மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து 150 புதிய பாடகர்களை அறிமுகப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை.

2002 ஆம் ஆண்டு இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார் டி.இமான். இந்த இருபது ஆண்டுகளில் எந்த ஆடம்பரமும், ஆர்ப்பாட்டமும் இல்லாத அற்புதமான இசை பயணம் இவருடையது. மெலடியா?, குத்துப்பாடலா? எதிலுமே தனித்து நிற்கக் கூடிய ஒலி வடிவத்தை தனது தனித்த அடையாளமாக்கிக் கொண்டிருக்கிறார்.

அவரது இசையின் வடிவம் “மாஸ்+கிளாஸ்” என சமமாக பயணித்து. அடுத்தடுத்த வெற்றிகளை இமானுக்குத் தந்து கொண்டு இருக்கிறது.

‘பள்ளி படிக்கும்போதே கிபோர்டு பிளேயராக தனது இசை பணியை துவங்கி நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பியானா வாசித்து. பிறகு இசையமைப்பாளர் ஆதித்யன், ஹாரிஸ் ஜெயராஜின் தந்தை உள்ளிட்ட சில இசையமைப்பாளர்களிடம் பணியாற்றி, சுமார் 250 க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களுக்கும் இசையமைத்தது. என இமானின் இசை மீதான காதல் மெட்டுக்குள் அடங்காதது.

இந்த இருபது வருட இசை பயணத்தில் தனக்கு என தனி இடத்தை உருவாக்கியது மட்டும் அல்ல இமானின் சாதனை. நல்ல குரல் எங்கு இருந்தாலும் தேடி சென்று அந்த கலைஞர்களுக்கான அங்கீகாரத்தையும் உருவாக்கி கொடுத்து இருக்கிறார். இதுவரை 150 க்கும் மேற்பட்ட புதிய குரல்களை எனது இசையில் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அவர்களில் 80 சதவீதத்திற்கும் மேல் தமிழர்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நொச்சிப்பட்டியைச் சேர்ந்த கண் பார்வை தெரியாத திருமூர்த்தி என்பவர் விஸ்வாசம் படத்தில் வரும் ‘கண்ணான கண்ணே’ பாடலை பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் பார்த்து.

அவரை கூட்டி வந்து சீறு, அண்ணாத்தே படத்தில் பட வைத்தார் இமான். வைக்கம் விஜயலட்சுமியை என்னமோ எதோ படத்தில் புதிய உலகை ஆள போகிறேன் என்ற பாடல் மூலம் தமிழில் முதலில் பட வைத்தார்.

வேடந்தாங்கல் கிராமத்தில் புத்தர் கலை குழுவில் பறை இசைத்து கிராமிய பாடல்கள் பாடி கொண்டு இருந்த நாட்டுபுற பாடகரான மகிழினி தமிழ்மாறனை கும்கி படத்தின் கையளவு நெஞ்சத்துல பாடல் முலம் திரைக்கு அறிமுகப்படுத்தினர்.

வருத்தபடாத வாலிபர் சங்கம் படத்துல ஊதா கலரு ரிப்பன் பாடல் மூலம் ஹரி ஹர சுதன் அறிமுகபடுத்தினார். நாட்டுபுற பாடகரான செந்தில் கணேஷ் சீமாராஜா படத்தில் பயன்படுத்தி இருப்பார்.

இப்படி திறமையானவர்களை அடையாள படுத்தும் இமானின் பட்டியலில் தற்போது புதிதாக சேர்த்து இருப்பவர் ஸ்வஸ்திகா சுவாமிநாதன் இது குறித்து இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் வளர்ந்து வரும் பாடகரான ஸ்வஸ்திகா சுவாமிநாதனின் ஆத்மார்த்தமான குரலில் யுக பாரதி வரிகளில் உருவாகி உள்ள ‘அணையா விளக்கு..’ பாடலை தான் இசையில் விரைவில் வெளியாக இருக்கும் பப்ளிக் திரைப்படத்தில் கேட்க ஆவலுடன் இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார்.

ஏற்கனவே பப்ளிக் படத்தின் போஸ்டர்கள் sneak peakகள் இணையத்தில் வைரல் ஆகின. தற்போது இந்த படத்தின் இசை குறித்தும் அதில் இடம் பெற்று உள்ள பாடல் மற்றும் சிங்கர் குறித்தும் இமான் ட்விட் செய்து இருப்பது படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

Introduction of 150 singers .. Imaan’s musical journey that has become the ‘light’ of many people

தமிழக மக்களை மயக்கிய ‘மாயோன்’.; தெலுங்கில் 350 தியேட்டர்களில் வெளியிட முடிவு

தமிழக மக்களை மயக்கிய ‘மாயோன்’.; தெலுங்கில் 350 தியேட்டர்களில் வெளியிட முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் ‘மாயோன்’ படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தெலுங்கில் படத்தை மிக பிரம்மாண்டமாக வெளியிட உள்ளனர்.

தமிழ் சினிமாவில் சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன், ராதாரவி கேஎஸ் ரவிக்குமார் உட்பட பலர் நடிப்பில் அருண்மொழி மாணிக்கம் அவர்களின் திரைக்கதை மற்றும் தயாரிப்பில் என் கிஷோர் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள திரைப்படம் மாயோன்.

அறிவியலும் ஆன்மீகமும் ஒன்றோடு ஒன்று கலந்தது என்பதை மையக் கருவாகக் கொண்டு உருவாக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் குடும்பத்துடன் கொண்டாடும் படமாக இடம் பிடித்துள்ளது.

மேலும் பார்வையற்றவர்களுக்கான பிரத்தியேகமாக ஆடியோ டிஸ்கிரிப்ஷனுடன் படம் வெளியாகியதும் மக்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றது.

தமிழகத்தில் கிடைத்த வரவேற்பு காரணமாக இந்த படத்தை வரும் ஜூலை 7ஆம் தேதி தெலுங்குவில் மிக பிரம்மாண்டமாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்த படத்தை பார்த்த தெலுங்கு விநியோகிஸ்தர் இந்த படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி பெறும் என படத்தை 350க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிட போவதாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை போலவே தெலுங்கிலும் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Maayon team decided to release in 350 theaters in Telugu

தியேட்டர்களில் மல்லிகை பூ வாசம்.; மாமனிதனுக்கு பெண்களின் மகத்தான ஆதரவு

தியேட்டர்களில் மல்லிகை பூ வாசம்.; மாமனிதனுக்கு பெண்களின் மகத்தான ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி நேற்று உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் “மாமனிதன்”.

இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதன் முறை கூட்டணி அமைத்து இசையமைத்திருக்கின்றனர்.

யுவன்ஷங்கர் ராஜா தனது YSR நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார்.

“மாமனிதன்” திரைப்படம் பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் ஆதரவையும் வரவேற்பையும் பெற்ற நிலையில், மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படமாக அமைந்திருப்பதால் பெண்கள் குடும்பம் சகிதமாக வந்து இப்படத்தை பார்க்க துவங்கியுள்ளனர்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு தியேட்டர்களில் மல்லிகை பூ வாசம் மணப்பதாக தியேட்டர் உரிமையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நேற்று மாலை மற்றும் இரவு நேரக் காட்சிகளில் பெண்களின் கூட்டம் பல திரையரங்குகளில் அலைமோதியது.

அனைவருக்குமான படமாக ”மாமனிதன்” வந்திருப்பதால், ஒருமுறையாவது இப்படத்தை காண வேண்டும் என்ற ஆவல் அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.

சமீப காலமாக வந்த படங்களில், குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படமாக ”மாமனிதன்” இருப்பதால், பெண்கள் கூட்டம் திரையரங்கில் அலைமோதி வருகிறது.

இப்படத்தை தமிழ்நாடு மற்றும் கேரளாவில் ஸ்டூடியோ 9 சார்பில் ஆர் கே சுரேஷ் வெளியிட்டுள்ளார்.

Female fans supports and praises Maamanithan film

ஆண்களுக்கு இணையாக பெண்கள்.; எஸ் ஜே சூர்யா விஜய் ஆண்டனி சுந்தர் சி முன்னிலையில் ரெஜினா ஓபன் டாக்

ஆண்களுக்கு இணையாக பெண்கள்.; எஸ் ஜே சூர்யா விஜய் ஆண்டனி சுந்தர் சி முன்னிலையில் ரெஜினா ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆன்யா’ஸ் டுடோரியல் இணைய தொடர். இயக்குநர் பல்லவி கங்கி ரெட்டி இயக்கத்தில் ரெஜினா கஸண்ட்ரா, நிவேதிதா சதீஷ் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இத்தொடர் ஒரு புதுமையான ஹாரர் தொடராக உருவாகியுள்ளது.

‘பாகுபலி’ படத்தை தயாரித்த ஆர்கா மீடியா ஒர்க்ஸ் இத்தொடரை தயாரித்துள்ளது. ஜூலை 1 அன்று வெளியாகவுள்ள இந்த இணைய தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு படக்குழுவினர், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்..

தயாரிப்பாளர் சோபு ஆர்லகண்டா கூறியதாவது..

இது தான் எங்களது முதல் தமிழ் படைப்பு, அதில் ஆஹா உடன் இணைந்தது மகிழ்ச்சி. பெரிய படமோ, சின்ன படமோ எங்களுக்கு கதை தான் முக்கியம். அந்த வகையில் ஆன்யா’ஸ் டுடோரியல் சிறப்பாக வந்துள்ளது. இந்த தொடரின் கதையை கேட்டவுடன், கதையில் இருந்த டிராமா எங்களை கவர்ந்தது. இயக்குனர் பல்லவி கங்கி ரெட்டி உடைய இயக்கத்தில் வரும் முதல் படைப்பு இது. ரெஜினா கஸண்ட்ரா, நிவேதிதா இந்த தொடருக்குள் வந்தது எங்களுக்கு மகிழ்ச்சி. அவர்கள் இருவரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். நாங்கள் ஆஹா உடன் பயணிப்பதில் மகிழ்ச்சி.

நடிகை நிவேதிதா சதீஷ் கூறியதாவது..

இந்த தொடர் எனக்கு மிகவும் நெருக்கமான தொடர். இது போன்ற பெரிய படைப்பில் இருப்பது எனக்கு மகிழ்ச்சி. இந்த தொடரில் எனது திறமையை காட்டுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருந்தது. ஒரு பெண்கள் குழுவில் பயணித்தது மகிழ்ச்சி. படத்தின் ஒட்டுமொத்த குழுவும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

திரைத்துறையில் அறிமுகமான போது பல இடங்களில் நான் நிராகரிக்கபட்டுள்ளேன், இப்போது அதையெல்லாம் கடந்து இப்படி ஒரு முக்கியமான தொடரில் நடித்திருப்பது மகிழ்ச்சி, உங்கள் அனைவருக்கும் இந்த தொடர் பிடிக்கும் என நினைக்கிறேன்.

எழுத்தாளர் சௌமியா கூறியாதாவது..

இந்த தொடர் இப்போது இருக்கும் இந்த பெரிய வரவேற்பு, நாங்கள் இந்த கதையை உருவாக்கும் போது இல்லை. முதலில் எந்த நோக்கமும் இல்லாமல் தான் கதையை உருவாக்க ஆரம்பித்தோம், பின்னர் தீவிரமான கதையாக இது மாற ஆரம்பித்தது. பின்னர் தயாரிப்பாளரை சந்தித்து கதையை கூறியபோது, அவருக்கு பிடித்திருந்தது. பின்னர் நடிகர்கள் உள்ளே வந்தார்கள். எல்லாம் வேகமாக நடப்பதாய் இருந்தது. தொடரும் சிறப்பாக வந்துள்ளது. ஒரு நல்ல படைப்பாக தொடர் உருவாகியுள்ளது உங்கள் அனைவருக்கும் இந்த தொடர் பிடிக்கும் என்று நம்புகிறேன் நன்றி.

இயக்குநர் பல்லவி கங்கி ரெட்டி கூறியதாவது..

டிரெய்லரை பார்த்து ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை இருக்கும். நான் ஆஹாவில் பணிபுரிந்துள்ளேன்.
ஆஹா சிறந்த கதைகளை எப்போதும் எடுக்க விரும்புவார்கள். ஆஹா தமிழில் சிறந்த பணிகளை செய்துவருகிறார்கள், தெலுங்கை விட பெரிய வெற்றியை ஆஹா தமிழ் பெரும் என நான் நம்புகிறேன்.

இந்த தொடர் உருவாக காரணமாக இருந்த தயாரிப்பு நிறுவனம் ஆர்கா மீடியா ஒர்க்ஸ்க்கு நன்றி. இந்த தொடரை இரு மொழிகளில் உருவாக்கினோம். அதற்கு நிறைய உழைப்பு தேவைப்பட்டது. படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களும், நடிகர்களும் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர். ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் இந்த இடத்தில் நன்றியை கூறிகொள்கிறேன்.

அல்லு அரவிந்த் அவர்களுக்கு நன்றி, என் வாழ்கையில் முக்கியமான நபர் அவர். தொடர் சிறப்பாக வந்துள்ளது, உங்களுக்கு பிடித்தமானதாக இருக்கும் என நான் நம்புகிறேன்.

நடிகை ரெஜினா கஸண்ட்ரா கூறியதாவது..,

ஆர்கா மீடியா ஒர்க்ஸ் ஓடிடிக்கு வந்தது பெரிய விஷயம். இந்த படைப்பில் நான் இருப்பது மகிழ்ச்சி. அஜித் மற்றும் அல்லு அரவிந்த் சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்யா’ஸ் டுடோரியல் போன்ற சைக்காலஜிகள், திரில்லர் கதைகள் வருவது மகிழ்ச்சி, நான் நடித்த மது கதாபாத்திரத்தை கண்டிப்பாக தவற விடக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தேன்.

பல்லவி போன்ற திறமையான ஆட்கள் சினிமாவிற்கு வருவது மகிழ்ச்சி. நான் அறிமுகமான போது திரைத்துறையில் பெண்கள் மிக குறைவாக இருந்தார்கள் இன்று இந்த மேடையில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் இருப்பது மகிழ்ச்சி. பல பெண்கள் இணைந்து இந்த தொடர் தயாரிப்பில் பணியாற்றியுள்ளனர்.

ஒளிப்பதிவாளர் விஜய் சக்ரவர்த்தி தான் இந்த தொடரின் முக்கியமான தூண், அவரது பணிகள் கதாபாத்திரத்தின் குணங்களை பிரதிபலிக்கும் படி இருக்கும். இந்த தொடர் உங்கள் அனைவரையும் கவரும் நன்றி.

நடிகர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கூறியதாவது..,

பெரிய ஓடிடி நிறுவனங்களுடன் போட்டியிடும் ஆஹாவிற்கு வாழ்த்துகள். இந்த தொடரை இயக்கிய பல்லவி கங்கி ரெட்டிக்கு, வாழ்த்துகளை கூறிக்கொள்கிறேன். படத்தை இயக்குவதே பெரிய சவாலான விஷயம், தொடரை இயக்குவது பெரிய விஷயம். ஒளிப்பதிவாளர் விஜய் சக்ரவர்த்தி அவர் சிறப்பான விஷுவல்களை கொடுக்க கூடியவர்.

சிறு வயதில் பேயை பார்க்க ஆசைப்பட்டு பல விசயங்கள் செய்துள்ளேன், இந்த தொடரில் பேயை சுவாரஸ்யமாக காட்டியிருப்பார்கள் என நம்புகிறேன் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

நடிகர் SJ சூர்யா கூறியதாவது..,

அல்லு அரவிந்த் உடைய வேகம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய குழுவும், திறமைமிக்க ஆட்கள் நிறைந்த குழுவாக இருக்கிறார்கள். முருகதாஸ் சார் டீமில் உள்ள எனர்ஜிடிக்கான நபர் பல்லவி. அவர் இயக்கிய தொடரின் விழாவிற்கு நான் வந்தது எனக்கு பெருமையான விஷயம்.

ரெஜினா எப்போதும் தன்னுடைய அழகையும், திறமையும் தொடர்ந்து கச்சிதமாக தக்கவைத்து கொண்டுள்ளார். நிவேதிதா, ரெஜினா கஸண்ட்ரா இருவரும் இந்த தொடருக்கு பொருத்தமான தேர்வு, இருவரது முக அமைப்பும் சகோதரிகள் போல் அப்படியே இருக்கிறது. எழுத்தாளரை தமிழுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி. விஜய் ஆண்டனி பேயை பார்க்க ஆசை என்றார் ஒரு படம் எடுத்து தோல்வியடைந்தால் எல்லா பேயையும் பார்த்து விடலாம் ஒரு தோல்வி எல்லாவற்றையும் கற்றுத்தரும். பாகுபலி போன்ற படைப்பை எடுத்த ஒரு நிறுவனம், தமிழில் ஒரு சீரிஸ் செய்வது மகிழ்ச்சியாக உள்ளது.

பெரும் திறமை வாய்ந்த நபர்கள் இணைந்து இந்த தொடரை உருவாக்கி இருப்பது மகிழ்ச்சி. இந்த தொடர் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகள்.

நடிகர், இயக்குனர் சுந்தர் சி கூறியதாவது..,

ஆஹா தமிழுக்கு எனது வாழ்த்துகள், அவர்கள் மூலமாக புது திறமையாளர்களும், கதைகளும் உருவாவது மகிழ்ச்சி. அல்லு அரவிந்த் ஓடிடியை இவ்வளவு துரிதமாக ஆரம்பித்து, அதில் வெற்றிகண்டுள்ளது மகிழ்ச்சி. நானும் விரைவில் ஆஹா தமிழுடன் பணிபுரிய விருப்படுகிறேன்.

ஒரு ஹாரர் தொடரை எழுதுவது சுலபமான காரியம் அல்ல, ஏனென்றால் ஒவ்வொரு எபிசோடுக்கும் நிறைய உணர்வுபூர்மான காட்சிகளை வைக்க வேண்டும். டிரெய்லரை பார்க்கும் போது, ஈர்க்கும் வகையில் உள்ளது. ஒளிப்பதிவாளர் உடைய பணி சிறப்பாக உள்ளது, ரெஜினா கஸண்ட்ரா போன்ற சிறந்த நடிகர்கள் இந்த தொடரில் இணைந்திருப்பது மகிழ்ச்சி.

நடிகை நிவேதிதா மிகச்சிறந்த தொடர்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த தொடரில் அவரது நடிப்பு சிறப்பாக உள்ளது. ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் எனது வாழ்த்துகள்.

Regina’s speech at Anya’s tutorila press meet

சாய் பல்லவியின் ‘கார்கி’ படத்தில் இணைந்த சூர்யா – ஜோதிகா

சாய் பல்லவியின் ‘கார்கி’ படத்தில் இணைந்த சூர்யா – ஜோதிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் சாய் பல்லவி. நடிப்பு, நடனம், என ரசிகர்களை கவர்ந்த சாய் பல்லவி, அதையடுத்து வரிசையாக முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது சாய்பல்லவி நடிப்பில் ’கார்கி’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

சாய் பல்லவியின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் தலைப்பு போஸ்டரை வெளியிட்டனர். இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலானது.

இந்நிலையில் சாய்பல்லவி கார்கி படத்தின் முக்கியமான அறிவிப்பு வெளியாகும் என்று பகிர்ந்திருந்தார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருந்தனர். இந்த காத்திருப்புக்கு பதிலளிக்கும் விதமாக பிளாக்கி ஜெனி & மை லிஃப்ட் புட் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து கார்கி படத்தை சூர்யா, ஜோதிகா அவர்களின் 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளனர்

இது குறித்து படக்குழுவினர் வெளியிட்ட அறிக்கையில்…

“வாழ்க்கையின் அதிசய நிகழ்வுகள் பல நேரங்களில் நாம் எதிர்பாராத போதே நடந்து விடுகின்றது. அப்படி எங்களுக்கு நடந்த அதிசயம் தான் சூர்யா, ஜோதிகா எங்கள் படத்தில் இணைந்து இருப்பது. சூர்யாவும், ஜோதிகாவும் கார்கியை பார்வையாளர்களுக்கு கொண்டு செல்வதை விட எங்களுக்கு பெருமகிழ்ச்சி ஏதும் இல்லை.

இவை அனைத்திற்கும் உறுதுணையாக நின்று செயல்படுத்திய எனது விநியோகஸ்தர் சக்திவேலன் அவர்களுக்கும், ராஜசேகர பாண்டியன் அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி’ என்று மகிழ்ச்சியை பகிர்ந்து இருக்கிறார்கள்.

கார்கி

Surya Jothika’s 2D Entertainment to launch Sai Pallavis GARGI

ஆறு மாதங்களுக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது.; நாய் நடித்த ‘777 சார்லி’ படத்தை பாராட்டிய ரஜினி & உதயநிதி

ஆறு மாதங்களுக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது.; நாய் நடித்த ‘777 சார்லி’ படத்தை பாராட்டிய ரஜினி & உதயநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரக்‌ஷித் ஷெட்டி நடிப்பில் கன்னட சினிமா இயக்குநர் கிரண்ராஜ் இயக்கிய படம் ‘777 சார்லி’.

முதலில் கன்னடத்தில் உருவான இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு கடந்த (ஜூன்) 10ம் தேதி வெளியானது.

வெளியான முதல் நாள் முதலே விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படம் விமர்சனத்தை நம் தளத்தில் ஏற்கெனவே பார்த்தோம்.

777 சார்லி விமர்சனம் 3.5/5..; ஒரு நாய(ய்)கன் உதயமாகிறான்

நாய்க்கும் கதாநாயகனுக்கும் இடையே உள்ள அழகான பாசத்தை இந்தப்படம் சொல்வதாக அமைந்திருந்தது.

இந்த படத்தை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பார்த்தார். அதை தொடர்ந்து அடுத்த 6 மாதங்களுக்கு இப்படத்தின் டிக்கெட்டுகளுக்கு ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படமாட்டாது என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

இப்படத்தை பார்த்த ரஜினிகாந்த் படக்குழுவினரை தொலைப்பேசியில் அழைத்து பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவு செய்திருந்ததார் நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி.

அந்த பதிவில்…‘ ஒரு அற்புதமான நாள்! ரஜினிகாந்த் சாரிடமிருந்து போன் பால் வந்தது.

777 சார்லி படத்தை பார்த்து பிரமித்து போனதாக தெரிவித்தார். படத்தின் தரத்தை பற்றியும் ஆக்கத்தை பற்றியும் பாராட்டினார்.

ஆன்மீக ரீதியான கிளைமேக்ஸ் காட்சி பற்றியும் நெகிழ்ச்சியுடன் பாராட்டினார்.

சூப்பர் ஸ்டாரிடமிருந்து இப்படியொரு பாராட்டை பெறுவது அற்புதமாக உள்ளது. மிக்க நன்றி ரஜினி சார்’ என பதிவிட்டுள்ளார்.

இதே போல நடிகர், தயாரிப்பாளர், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ‘777 சார்லி’ படத்தை பாராட்டியுள்ளார்.

பரம்வாஹ் ஸ்டூடியோஸ் பேனரில் ஜி எஸ் குப்தா மற்றும் ரக்‌ஷித் ஷெட்டி தயாரிப்பில் கிரண்ராஜின் எழுத்து, இயக்கத்தில் உருவாகியுள்ள ‘777 சார்லி’-யை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பென்ச் பிலிம்ஸ் வெளியிட்டது.

சாகசம் நிறைந்த நகைச்சுவை திரைப்படமான ‘777 சார்லி’, சார்லி எனும் நாய்க்குட்டி மற்றும் அதன் ‘நண்பனான’ தர்மாவை சுற்றி சுழலும் கதை ஆகும்.

சங்கீதா சிருங்கேரி, ராஜ் பி ஷெட்டி, தானிஷ் சேட், பாபி சிம்ஹா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ‘777 சார்லி’-க்கு நோபின் பால் இசை அமைத்துள்ளார். அர்விந்த் எஸ் காஷ்யப் ஒளிப்பதிவை கையாள, பிரதீக் ஷெட்டி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

படக்குழுவினர்:

நடிப்பு: சார்லி, ரக்ஷித் ஷெட்டி, சங்கீதா சிருங்கேரி, ராஜ் பி ஷெட்டி, டேனிஷ் சைட், பாபி சிம்ஹா மற்றும் பலர்.

தயாரிப்பு: ஜி எஸ் குப்தா மற்றும் ரக்ஷித் ஷெட்டி

வெளியீடு: கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ்

எழுத்து & இயக்கம்: கிரண்ராஜ் கே

இசை மற்றும் பின்னணி இசை: நோபின் பால்

ஒளிப்பதிவு: அரவிந்த் எஸ் காஷ்யப்

படத்தொகுப்பு: பிரதீக் ஷெட்டி

தயாரிப்பு வடிவமைப்பு: உல்லாஸ் ஹைடூர்

ஒலிப்பதிவு: எம் ஆர் ராஜகிருஷ்ணன்

கலரிஸ்ட்: ரமேஷ் சிபி

ஆடை வடிவமைப்பாளர்: பிரகதி ரிஷப் ஷெட்டி

சண்டைக்காட்சிகள்: விக்ரம் மோர்

நாய் பயிற்சியாளர்: பிரமோத் பி.சி

வசனம்: கே என் விஜய்குமார் (தமிழ்)

பாடல்கள்: மோகன் ராஜா, மதுரகவி, முத்தமிழ் (தமிழ்)

மக்கள் தொடர்பு: நிகில் முருகன் (தமிழ்)

No GST tax for six months; Rajini and Udhayanidhi praises ‘777 Charlie’ movie

More Articles
Follows