இறைவன் முற்றுப்புள்ளி வைப்பான்..; சிவகார்த்திகேயன் துரோகம் குறித்து இமான் கருத்து

இறைவன் முற்றுப்புள்ளி வைப்பான்..; சிவகார்த்திகேயன் துரோகம் குறித்து இமான் கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’, ‘நம்ம வீட்டு பிள்ளை’ என வெற்றி படங்களில் சிவகார்த்திகேயன் – இமான் இணைந்து பணிப்புரிந்தனர்.

ஆனால் சமீப காலமாக சிவகார்த்திகேயன் படங்களுக்கு இசை அமைப்பதை தவிர்த்து வந்தார் இமான். இதனையடுத்து “சிவகார்த்திகேயன் தனக்கு செய்தது மிகப்பெரிய துரோகம்.. இனிமேல் இந்த ஜென்மத்தில் இணைந்து பணிபுரிய மாட்டேன்..” என பேசியது கோலிவுட்டை பரபரப்பாக்கியது.

சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக இமானின் முன்னாள் மனைவி மோனிகா கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் சிவகார்த்திகேயன் தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

இந்த நிலையில் ஒரு படப்பூஜையில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் இமான். அப்போது இந்த சர்ச்சைகளுக்கு பதில் அளித்து இருந்தார்..

அப்போது அவர் பேசும்போது..

இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு ஒன்றும் இல்லை. மனிதர்களைத் தாண்டி சரி தவறு எல்லாம் இறைவனுக்கு தெரியும் என்பதை நம்புவன் நான். எனவே எல்லாவற்றிற்கும் இறைவன் முற்றுப்புள்ளி வைப்பார் என நம்புகிறேன்” என்றார் இமான்.

Imman open talk about Sivakarthikeyan betrayal

ரசிகர்கள்தான் பிளடி ஸ்வீட்..; விஜய் சொன்ன காக்கா – கழுகு – யானை கதை இதான்

ரசிகர்கள்தான் பிளடி ஸ்வீட்..; விஜய் சொன்ன காக்கா – கழுகு – யானை கதை இதான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்த ‘லியோ’ வெளியாகி 12 நாட்களைக் கடந்துள்ள நிலையில் வெற்றி விழா மிகப்பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய் பேசியதாவது

“என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா.. நண்பிகள்.. உண்மைய சொல்லணும்னா நீங்க தான் என்னை உங்க நெஞ்சுல குடி வச்சிருக்கீங்க.. நான் குடியிருக்கும் கோயில்..

இது கொஞ்சம் சினிமா டயலாக் மாறி தெரியலாம்… நீங்க காட்டுற அன்புக்கு, என் உடம்ப செருப்பா தச்சு உங்களுக்கு போட்டாக் கூட பத்தாது.. நீங்க எல்லாம் பிளடி ஸ்வீட்” என பேச ஆரம்பித்தார் விஜய்.

பின்னர் வழக்கம்போல குட்டி கதை சொன்னார்.

ஒரு காட்டுக்கு 2 பேர் வில், அம்பு வச்சிக்கிட்டு வேட்டைக்குச் போனாங்க… அந்தக் காட்டில் சிங்கம், புலி போன்ற மிருகங்களுடன் காக்கா, கழுகு போன்றவை இருந்தன.

ஒரு வேடன் தனது வில்லால் முயல் ஒன்றை அம்பெய்தி கொன்றான். மற்றொரு வேடனோ யானைக்கு குறி வைத்தான். ஆனாலும் அவனால் யானையை வீழ்த்த முடியவில்லை.

இப்போது சொல்லுங்கள் இதில் யார் ஜெயித்தவர்.? என்னை பொருத்தவரை யானையைக் கூறி வைத்தவனே வெற்றி பெற்றவன். அவனது நோக்கம் பெரியதாக உள்ளது இப்போது வெற்றி இல்லை என்றாலும் பின்னர் வெற்றி வரும்.

Small aim is crime என அப்துல் கலாம் சொல்லியிருக்கிறார். பாரதியார், பெரிதினும் பெரிது கேள் என சொல்லியுள்ளார். ஆகவே, பெரிய விஷயத்தையே குறிக்கோளாக கொள்ள வேண்டும்” என்று விஜய் குட்டிக்கதை கூறினார்.

சோஷியல் மீடியாவில் சமீப காலமாக ரசிகர்கள் கோபப்படுவதை கண்டித்தார் விஜய்.

“நமக்கு நிறைய பெரிய வேலைகள் இருக்கு, தேவையில்லாமல் சோஷியல் மீடியாவில் கோபப்பட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம்” என பேசினார்.

Actor Vijay kutty story at Leo success event

நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்.; திரையுலகினர் – ரசிகர்கள் இரங்கல்

நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்.; திரையுலகினர் – ரசிகர்கள் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத காமெடி நடிகர் நடிகர்களில் ஒருவர் டி எஸ் பாலையா. இவர் மறைந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இவரது மகன் ரகு பாலையாவும் சினிமாவில் நடித்து வருகிறார்.

தனது இயற்பெயரை ஜூனியர் பாலையா என்று மாற்றிக்கொண்டு பல படங்களின் நடித்து வந்தார்.

1975-ல் ‘மேல்நாட்டு மருமகள்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நடித்து வந்தார். முக்கியமாக பாக்யராஜ் படங்களில் இவரது காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது.

மேலும் சுந்தரகாண்டம், கோபுர வாசலிலே, வின்னர், கும்கி ஆகிய படங்களிலும் இவரது நடிப்பு பேசப்பட்டது.

‘சாட்டை’ படத்தில் பள்ளி தலைமை ஆசிரியராக நடித்திருந்தார்.்இந்த கேரக்டரும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

சினிமா மட்டுமல்லாமல் ‘சித்தி’ மற்றும் ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ உள்ளிட்ட டிவி சீரியல்களில் நடித்து வந்தார்.

இறுதியாக ‘என்னங்க சார் உங்க சட்டம்?’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு நடிப்புக்கு ஓய்வு கொடுத்து வந்திருந்த நிலையில் இன்று நவம்பர் 2ஆம் தேதி காலமானார் ஜூனியர் பாலையா. சென்னை வளசரவாக்கத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

ஜூனியர் பாலையாவின் மறைவு திரையுலகினர் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகினர் ஜூனியர் பாலையா மறைவுக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Comedy Actor Junior Balaiya passes away

ரஜினியின் அடுத்த குட்டி ஸ்டோரி.; காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஐஸ்வர்யா-வின் மெகா ட்ரீட்

ரஜினியின் அடுத்த குட்டி ஸ்டோரி.; காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஐஸ்வர்யா-வின் மெகா ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமலுக்கு ரஜினி போட்டி… அஜித்துக்கு விஜய் போட்டி என்ற நிலை மாறி தற்போது ரஜினிக்கு போட்டி விஜய் என்ற அளவில் சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் ரஜினிக்கு எதிராக கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

விஜய்யே இதை பற்றி கருத்து எதுவும் தெரிவிக்காத நிலையில் ரஜினி பேசும் மேடைப் பேச்சும் விஜய் பேசும் மேடைப் பேச்சையும் ஒன்றோடு ஒன்றாக ஒப்பீடு செய்து சமூக வலைத்தளங்களில் மோதிக் கொள்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற ‘ஜெயிலர்’ பட இசை வெளியீட்டு விழாவில் கழுகு – காக்கா கதை குறித்து பேசி இருந்தார் ரஜினிகாந்த். இது விஜய்யை குறிப்பிடுவதாக ரசிகர்கள் சர்ச்சையான கமெண்ட்டுகளை பதிவிட்டு வந்தனர்.

நேற்று நடந்த ‘லியோ’ படத்தின் வெற்றி விழாவில் யானை கதையை பேசியிருந்தார் விஜய்.

இந்த நிலையில் ரஜினியின் அடுத்த மேடைப்பேச்சு என்னவாக இருக்கும்? என ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘லால் சலாம்’ படம் அடுத்த 2024 பொங்கல் தினத்தில் வெளியாகிறது. ஐஸ்வர்யா ரஜினி இயக்கியுள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷால் – விக்ராந்த் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர்.

மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார் ரஜினி. மேலும் முக்கிய வேடத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் நடித்துள்ளார்.

ரகுமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

இந்த நிலையில் ‘லால் சலாம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 2 அல்லது 3ம் வாரத்தில் சென்னையில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெறும் என தகவல்கள் வந்துள்ளன.

நிச்சயம் இதில் தன் மகள் ஐஸ்வர்யாவுக்காக ரஜினிகாந்த் கலந்துக் கொண்டு மேடையேறி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஞானவேல் இயக்கும் ‘தலைவர் 170’ படத்தில் ரஜினிகாந்த் தற்போது பிஸியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajinis next stage speech at Lal Salaam Audio launch

உயரப் பறந்தாலும் கழுகு கீழே வந்துதான் ஆகனும்.. – ரத்னகுமார்.; பதிலடி கொடுக்கும் ரஜினி ரசிகர்கள்

உயரப் பறந்தாலும் கழுகு கீழே வந்துதான் ஆகனும்.. – ரத்னகுமார்.; பதிலடி கொடுக்கும் ரஜினி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கழுகு – காக்கா கதை குறித்து பேசி இருந்தார் நடிகர் ரஜினிகாந்த்.

கழுகு – காக்கா எப்போது தொந்தரவு செய்து கொண்டே இருக்கும்.்ஆனால் கழுகு மேலே உயர பறந்து பறந்து கொண்டே இருக்கும் என்று பேசி இருந்தார். ரஜினி தன்னை கழுகாகவும் அவர் வேறு ஒரு நடிகரை காக்கா என சொன்னதாகவும் சிலர் தகவல்களை பரப்பி வந்தனர்.

விஜய் ரசிகர்கள் தாங்களாகவே தங்கள் நடிகரைப் பற்றி எடுத்துக் கொண்டு சமூக வலைத்தளங்களில் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் ‘லியோ’ படத்தின் வெற்றி விழா மேடையில் ரத்தினகுமார் பேசியதாவது…

“என்னதான் கழுகு உயரே பறந்து கொண்டு இருந்தாலும் பசிக்காக கீழே வந்து தான் ஆக வேண்டும்” என பேசினார்.

இதனையடுத்து ரஜினியை அவர் தாக்கி விட்டார் என விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

இந்த நிலையில் ரஜினி ரசிகர்கள் இதற்கும் சமூக வலைத்தளங்களில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.. கழுகு வேட்டையாட தான் கீழே வரும்” என கழுகு புகைப்படங்களை பதிவிட்டு விஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Eagle and Crow story Rajini Vijay fans fights goes viral

தல ஒருத்தர் தான்.; சூப்பர் ஸ்டார் யார்.? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்

தல ஒருத்தர் தான்.; சூப்பர் ஸ்டார் யார்.? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை நேரு ஸ்டேடியத்தில் விஜய் நடித்த ‘லியோ’ படத்தின் வெற்றி விழா ரசிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது.

சமீபகாலமாக சூப்பர் ஸ்டார் பட்ட த்திற்கு விஜய் போட்டி இடுகிறார் என பரவலாக பேசப்பட்டது. மேலும் ‘வாரிசு’ பட தயாரிப்பாளர், நடிகர் சரத்குமார் ஆகியோர் விஜய்யை சூப்பர்ஸ்டார் ரேஞ்சுக்கு பேசி இருந்தனர்.

இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடும் மன உளைச்சலை உண்டாக்கியது. மேலும் விஜய் ரசிகர்களும் இதனை ட்ரெண்ட் செய்து ரஜினி ரசிகர்களை வெறுப்பேற்றி வந்தனர்.

ஆனால் விஜய் ஏதும் மறுப்பு தெரிவிக்காத நிலையில் நேற்று லியோ வெற்றி விழாவில் சூப்பர் ஸ்டார் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் விஜய்.

அவர் பேசும்போது…

புரட்சி தலைவர் ஒருத்தர்தான்.. நடிகர் திலகம் ஒருத்தர்.., புரட்சி கலைஞர் கேப்டன் ஒருத்தர் தான், உலக நாயகன் ஒருத்தர்தான், சூப்பர் ஸ்டார் ஒருத்தர்தான், தல ஒருத்தர்தான்…தளபதி க்கு அர்த்தம் தெரியுமா… நீங்க மன்னர்கள் நீங்க ஆணையிடுற விஷயங்களை நான் செய்யற நான் தளபதி” என்றார்.

Vijay end game for Superstar controversy

More Articles
Follows