தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த சில தினங்களாக கோலிவுட்டை மிகவும் பரபரப்பாகிய விஷயம் என்னவென்றால் இமானுக்கு சிவகார்த்திகேயன் செய்த துரோகம் தான்.
என் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக அதை வெளியே சொல்ல முடியாது என இமான் பேசியிருந்தது சிவகார்த்திகேயனின் மீதான இமேஜை ரசிகர்கள் மத்தியில் முற்றிலும் டேமேஜ் செய்துள்ளது.
இந்த நிலையில் மற்றொரு துரோகம் குறித்து பேசி உள்ளார் இசையப்பாளர் இமான்.
இவரது சமீபத்திய பேட்டியில்.. “இசை கலைஞர்கள் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். சிலர் பாதுகாப்பு வழிமுறைகளை சரியாக கடைப்பிடிக்கின்றனர்.
பெரும்பாலான மேடைக் கச்சேரிகளில் இசைக்கலைஞர்கள் முழுவதுமாக பாடுவது கிடையாது. பின்னணியில் அந்தப் பாடல் ஒலிக்கும் போது அவர்கள் வாயை மட்டும் அசைப்பார்கள். இது அந்த நிகழ்ச்சியை பார்க்க வரும் ரசிகர்களுக்கு இசை கலைஞர்கள் செய்யும் துரோகம்” என பேசி உள்ளார் இமான்.
Live Music Concert issue Imman open talk